வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

Saturday, February 18, 2017
பதவி விலகல்களில் விடுபட்ட கூடுதல் தீர்வுகள்!
Monday, February 13, 2017
பதவி விலகல்களில் எழும், பல்வேறு விதமான சட்டச் சிக்கல்களும், தீர்வுகளும்!
இதற்கு முன்பாக, தொழிலாளர் சட்டத்துக்கு விரோதமாகவும், மனித உரிமைகளை மீறும் விதமாகவும், தொழிலாளியின் மனதை குழப்பும் விதமாக, வேலை கொடுக்காமல் சும்மாவே உட்கார வைத்து விடுவார்கள்.
இதில் எதிர்பார்த்தபடி, தானாகவே பதவி விலகல் கடிதத்தை கொடுக்கும் வெற்றியும் பெற்று விடுவார்கள். இது நடக்கவில்லை எனில், போக முடியாத இடத்திற்கு பணியிட மாற்றம் செய்வார்கள். அடுத்த நாளே அங்கு பணியில் சேர வேண்டும்.
இதையும் எப்படியாவது தாக்கு பிடித்து அங்கும் பணிக்கு சென்று விட்டால், பழக்கமே இல்லாத வேலையை அல்லது வெளியில் சுற்றும் வேலை கொடுத்து டார்ச்சர் செய்வார்கள்.
இதையும் வெற்றிகரமாக சமாளித்து விட்டால், தொழிலாளருக்கான நிலையாணையை அதாவது, தொழிலாளிகளுக்கு அறவே தெரிவிக்கப்படாத மற்றும் அமலில் உள்ள மத்திய, மாநில மட்டுமல்ல, இந்திய சாசனத்தையே மீறும் அவரவர்களது தான்தோண்றித்தனமான சட்ட விதிகளை மீறி விட்டதாக, குற்றச்சாற்றை வனைத்து, நல்லதொரு விபச்சாரிக்கு பிறந்த பொய்யனை (வக்கீலை) விசாரணை அதிகாரியாக (தண்டனை பரிந்துரைக்காத ஆனால், குற்றச்சாற்றுக்கள் நிருபிக்கப்பட்டு விட்டதாக கூறும் நிதிபதியாக) நியமித்து, அதற்கு கைமாறாக பெறுங்கூலி கொடுத்து கொடுத்து விடுவார்கள்.
இந்த வெற்றுச் சம்பிரதாயங்கள் எல்லாம், நிரந்தரப் பணியாளருக்கு மட்டுந்தான்; மற்றவர்களுக்கு கிடையாது. நாளையில் இருந்து வேலைக்கு வரவேண்டாம் என்று வாய்மொழியாக சொல்லி விடுவார்கள். அவ்வளவே!
விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொய்யன் வாங்கிய பெறுங்கைக்கூலிக்கு தக்கபடி எழுதிக்கொடுத்த அறிக்கையை ஆதாரமாக வைத்து, வாய்ப்புகளை வழங்கியதான ஆதாரச் சான்றுகளுக்காக, ஏன் பணி நீக்கம் செய்யக்கூடாது என விளக்கம் கேட்டுவிட்டு, தொழிலாளியை பணிநீக்கம் செய்து விடுவார்கள்.
இதிலிருந்து தப்பித்து அனுபவச் சான்று உள்ளிட்ட அனைத்தும் வேண்டுமென்ற கட்டாயத்தில் முந்திக்கொள்ள முயல்பவர்களும் வேலை பார்த்தாதான் சோறு என்ற தீணிப் பண்டாரங்களும், பணி நீக்கத்திற்கு முன்பாக, நல்ல பிள்ளையாக பதவி விலகல் கடிதத்தை கொடுத்து விட்டு, அனுபவச் சான்றைப் பெற்றுக் கொண்டு, வேறு வேலைக்கு போய் விடுவார்கள்.
பணி நீக்கம் செய்யும்போது, நல்ல ஊழியர் என அனுபவச் சான்று கொடுக்க முடியாது; அப்படிக் கொடுத்தால், மீண்டும் வேலையில் அமர்த்தச் சொல்லி சட்ட சிக்கல் வருமே!
இவை அனைத்துக்கும் முன்பாக, உன்மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளோம். ஓரிரு நாட்களில் விசாரிக்க வருவார்கள் என்றுங்கூட பயமுறுத்திப் பார்ப்பார்கள். குறைந்த ரூபாய் மதிப்பிலான பொருட்களை அவர்களாகவே உடைத்துவிட்டு, பொருட்களை சேதப்படுத்தியதாக புகார் கொடுக்கும் அக்கப்போரும் நடப்பது உண்டு.
இதனால் ஏற்படும் மன அழுத்தத்தின் காரணமாக, வெகுசிலர் தற்கொலை கூட செய்து கொள்வார்கள் அல்லது பைத்தியக்காரர்களாகவே ஆகி விடுவார்கள்.தெருக்களிலும், இன்ன பிற இடங்களிலும் கேட்பாரற்று திரியும் நபர்களில் பலர் இந்த வகையினர்தான்.
இதுபோன்ற இக்கட்டான நேரங்களில்தான் உற்ற உறவுகள் துணை நிற்க வேண்டும். ஆனால், பணப்பலனை மட்டும் எதிர்பார்த்து இருப்பவர்கள் பக்க பலமாக நிற்க மாட்டார்கள். திருமணம் செய்து கொண்டவர்களின் மனைவிகள் பிரிய நேரிடும். இப்படி ஒரே சமயத்தில் பல்வேறு பிரச்சினை களை ஆண்கள் எதிர்கொள்ள நேரிடும்.
பெண்களுக்கு இதெல்லாம் இருக்காது. இருந்தாலும் வேறுவிதமாக சமாளிப்பார்கள் என்பதோடு முடித்துக் கொள்கிறேன். நீங்கள் வேண்டு மானால், ஆராய்ந்து சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
அட, இவ்வளவு ஏன்...
தனியார் தொழிலாளருக்கு நடக்கும் இதுவே, நீதியை நிலைநாட்ட வேண்டிய நீதித்துறையிலும் நடக்கிறது என்பதற்கான அவல உண்மை தான், நிதிபதி கர்ணன்!
ஆமாம், இப்படித்தான் ஏற்கெனவே நிதிபதி கர்ணனை சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை வழங்காமல் வைத்திருந்தார்கள். பின் அவரே மனநலம் பிரச்சினையால் அப்படி யெல்லாம் தவறு செய்து விட்டேன் என வருத்தம் தெரிவிக்கும் கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பவே, கொல்கத்தா உயர்நீதிமன்ற நிதிபதி ஊழியத்தில் அமர்த்தினார்கள்.
இப்போது, அவரை நீதிமன்ற அவமதிப்பு என்ற பெயரில் மீண்டும் அதே பணி வழங்காத நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள், இந்திய சாசன அமர்வில் அங்கம் வகிக்கும் ஐந்து உச்சநீதிமன்ற நிதிபதிகளும்!
இதுபற்றி, சமூக அக்கறையுள்ள யாருமே வாயைத் திறக்கவில்லை. இதற்காக, நிதிபதி கர்ணன் செய்வதெல்லாம் சரி என சொல்லவில்லை. அவர் எழுப்பியுள்ள குற்றச்சாற்றுக்கள் குறித்து விசாரிக்க முன்வராமல், விசாரித்தால் நாம் கதையும் சேர்ந்து நாறும் என்கிற பீதியில், அவரை மட்டும் குற்றவாளியாக்க முயற்சிப்பது எப்படி சரியாகும் என்பதே, என் கேள்வி?
உச்சநீதிமன்ற நிதிபதிகளில் பலர் ஊழல்வாதிகள் என வெளிப்படையாக கொடுக்கப்பட்ட பட்டியலை, விசாரணை செய்ய துப்பிலாத நிதிபதிகள் இன்றும் கிடப்பில்தானே போட்டு வைத்திருக்கிறார்கள்?
ஆகையால், இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் நிதிபதிகள், தங்களது ஊழியத்தில் தான்தோண்றித்தனமாக நடக்கிறார்கள். எவ்வளவு சட்ட விரோதமாக நடக்க முடியுமோ அப்படியெல்லாம் நடக்கிறார்கள். குறிப்பாக ஊழல், பாலியல் பலாத்காரம் போன்றவற்றில் ஈடுபடுவதை, தங்களுக்கு கிடைத்த சிறப்பான தகுதியாகவே கருதுகிறார்கள்.
நம்பிக்கை இல்லா தீர்மானம் என்பது, திருத்தத்திற்கு உரிய ஒன்றுதான் என்றாலுங்கூட, அரசு திருத்தும் முயற்சியை மேற்கொண்டதாக தெரியவில்லை. அப்படியே திருத்தினாலும், சாசன அமர்வு என்றப் பெயரில், கூட்டுக்களவாணி நிதிபதிகள் ஒன்றுகூடி செல்லாது என அறிவித்து விடுவார்கள்.
சரி நம்ம விசயத்துக்கு வருவோம்!
பதவி விலக கட்டாயப்படுத்தப்பட்ட தொழிலாளி அதுகுறித்த மறுப்பை, அன்றோ அல்லது அடுத்த ஓரிரு நாட்களில் பதிவஞ்சலில் அனுப்பி விட்டால், தொழிலாளர் விரோதப் போக்கை கடைப்பிடித்ததாக நிர்வாகத்துக்கு சட்டச் சிக்கல் வந்து விடும்.
எதுயெது நிர்வாகம் தொழிலாளருக்கு செய்யும் விரோதம், தொழிலாளி நிர்வாகத்திற்கு செய்யும் விரோம் என்பன குறித்து, தொழிலாளர் நல்லுறவு (தகராறு) சட்டம் 1947 இல் அட்டவனைப் படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு விரோதமாக இருக்கும், அந்தந்த தொழிற்சாலை நிர்வாகத்தின் நிலையாணை செல்லாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், மேற்படி சட்டத்தின் பிரிவு 36(3) இன்படி, தொழிலாளி தானே தொழிலாளர் நீதிமன்றத்தில் வாதாடும்போது, எதிர் நிர்வாகத் தரப்பில் ‘தொழிலாளியின் அனுமதி இல்லாமல் பொய்யர்கள் வாதாட முடியாது’ என்பது மத்திய அரசின் நிலைப்பாடு.
இதன் மூலம் பொய்யர்களால் தொழாலாளிகளின் வாழ்வு சீரழிந்து விடக்கூடாது என்பது உறுதியாகிறது. ஆனால், இதனை எந்தவொரு தொழிலாளர் நிதிபதியும் தங்களுக்கு கிடைக்கும் கை கூலிக்காக பின்பற்றுவதில்லை.
இந்நிலையில், தொழிலாளியின் மீதான விசாரணைக்கு நிர்வாகம் எப்படி ஒரு பொய்யரை அமர்த்த முடியும் என்கிற சட்டப் பிரச்சினை இருக்கிறது.
ஆகையால், இப்படி எல்லாம் தடை விதிக்கும் சட்ட விதிகள் இருக்கின்றன என்பது, பொய்யர்களுக்கும், நிதிபதிகளுக்குமே தெரியாது என்னும்போது, சாதாரண மக்களுக்கு மட்டும் எப்படி தெரியவரும்?
நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பியப்பின், தொழிலாளி தனது கட்டாய பதவி விலகல் கடிதத்தை இரத்து செய்து, மீண்டும் பணியில் அமர்த்த தொழிலாளர் நீதிமன்றத்தை நாட முடியும். ஆனால், இதற்கு தொழிலாளர் சட்டத்தில் சரியான சட்டப்பிரிவு இல்லை.
ஆகையால், வேலை நீக்கம் செய்ததற்கான சட்டப்பிரிவு 2-இன் கூடுதல் சேர்க்கை 2அ - இன்படிதான் வழக்கு தொடுக்கிறார்கள் என நினைக்கிறேன். இது, வழக்கு சிக்கல்களை தவிர்க்க, வேலைக்கு வரவேண்டாம் என்று வாய்மொழியாக சொல்வது உட்பட அனைத்து விதமான வேலை இழப்பிற்கும் சாலப்பொருந்தும்.
இப்படியே, சட்டப்படி விவாகரத்தைப் பெற்ற கணவன் மனைவி இருவரும், அதன்பின் ஒருமித்த கருத்து அடிப்படையில் சேர்ந்துவாழ சட்டத்தடை இல்லை என்றாலுங்கூட, வாங்கிய விவகாரத்தை நீக்கக்கொள்ள சட்டத்தில், உரிய பிரிவு இல்லை. விவாகரத்து பெற்றவர்கள் மீண்டும் ஏன் ஒன்று சேரப்போகிறார்கள் என நினைத்து விட்டார்கள் போலும்!
இதனால், சட்டப்படி விவாகரத்து ஆனப்பின் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு தகப்பன் யார் என்ற சட்ட சிக்கல் உருவானது பற்றியும், அதனை தீர்த்த முறைகள் பற்றியும் நீதியைத்தேடி... நூல்களில் சொல்லி உள்ளேன்.
ஆங்கிலேயன் எதையுமே சட்டப்படி செய்து பழக்கப்பட்டவன். அதனால், அவனுக்கு தேவைக்கு ஏற்ப சட்டத்தை இயற்றுதல் என்பது மிகமிக எளிது. ஆனாலிது, நமக்கு அவனால் அடக்கி ஆள்வதற்காக வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது. பின் இதையே, நம் சத்தியவான் காந்தியைத் தவிர மற்ற, அறிவுவறுமை வாதிகள் நமக்கு நிரந்தமாக்கி விட்டார்கள்.
ஆகையால், நம் தேவைக்கு ஏற்ப சரியான சட்டத்தை இயற்றும் தகுதி நமக்கு இல்லவே இல்லை என்பதை, பல்வேறு உண்மைகளுடன் ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் தெளிவுபட சொல்லி உள்ளேன்.
ஆனால், ஆங்கிலேயனை விட, சட்ட சிக்கலை திட்டமிட்டு உருவாக்கும் திருட்டுப்புத்தி மட்டும் நம்மாள்களுக்கு தாராளமாய் இருக்கிறது என்பதற்கு நல்லதொரு உண்மைதான், பன்னீரின் பதவி விலகல் கடிதத்தில் எழுந்துள்ளது.
இந்திய அரசியலில் இப்படியொரு விந்தையான சட்ட சிக்கல் வந்திருப்பது, எனக்கு தெரிய இதுவே முதல்முறை. பெரும்பாலும், அந்தந்த கட்சியின் தலைவர்களோ அல்லது பொதுச் செயலாளர்களோதான் முதல்வராக இருப்பார்கள். ஆகையால், அவர்களை பதவி விலகச் சொல்லி, அக்கட்சியில் இருந்து யாரும் நிர்ப்பந்திக்க முடியாது.
இதற்கெல்லாம் எப்படி தீர்வு காணவேண்டும் என்பது, உலகிலேயே மிகப்பெரிய சாசனம் என்று சொல்லப்படும், நம் இந்திய சாசனத்தில் இல்லை. இந்திய அரசியலில் இப்படி எல்லாங்கூட, வேடிக்கையான நிகழ்வுகள் நடக்கும் என்பதை, அப்போது யாரும் யோசித்து இருக்க மாட்டார்கள். நாமும் இப்படியொரு பிரச்சினை வந்ததும்தானே யோசிக்கிறோம்!
சரி இதற்கெல்லாம் பொதுவான தீர்வுதான் என்ன?
எப்படிப்பட்ட ஒரு பதவி விலகல் கடிதத்தையும், அவர்கள் கைப்பட எழுதித்தந்தால் மட்டுமே கட்டாயம் ஏற்கப்படும் என்ற சட்ட விதியை, முதலில் பொதுவில் அமல்படுத்த வேண்டும். அதாவது, இவ்விதி சாதாரண குடிமகனில் இருந்து, இந்தியத் தலைமை ஊழியரான குடியரசுத் தலைவர் வரை என, அனைவருக்கும் கட்டாயமாக இருக்க வேண்டும்.
ஆனாலிது, தற்போது இந்திய சாசனத்தின் நிர்வாகிகளாக இருக்கும், இந்தியத் தலைமை ஊழியர், மாநில மற்றும் யுனியன் பிரதேசங்களின் தலைமை நிர்வாக ஊழியர்கள் மற்றும் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நிதிபதிகள் மற்றும் இந்தியத் தலைமை ஊழியரால் ஊழியத்தில் அமர்த்தப்படும் நபர்களுக்கு மட்டும் இருக்கிறது.
ஆனால், இவையுங்கூட கடைப் பிடிக்கப்படுவதாக தெரியவில்லை. இவர்களுக்கு அடிப்படை சட்ட விழிப்பறிவுணர்வு இருந்தால்தானே, இதை எல்லாம் தெரிந்து கடைப் பிடிப்பதற்கு?
சரி, இந்திய சாசனத்திலேயே இவர்களுக்கு இருப்பதால், ஏற்கிறோம். ஆனாலிது, சாதாரணமாக ஒவ்வொரு குடிமகனுக்கு இருக்க வேண்டும் என்பதற்கு ஏதுவாக, ஏதாவது சட்டவிதி அமலில் இருக்கிறதா என்று கேட்டால், ‘‘நியாயந்தான் சட்டம்’’ என்ற அடிப்படையில், நேரடியாக இல்லா விட்டாலுங்கூட வேறு விதமாக இருக்கிறது என்றே சொல்லுவேன்.
ஆமாம், அனைவருக்கும், அவரவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் பொருந்தக்கூடிய நீதிமன்ற சாசனமாம், இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் உறுபு 25 மற்றும் 26 இன்படி, ‘‘காவலூழியர்களின் காவலில் இருக்கும் ஒருவரால் தரப்படும் ஒப்புதல் உரையை அவருக்கு எதிராக, தக்க ஆதாரமாக நீதிமன்றத்தில் கூட பயன்படுத்த முடியாது’’.
மேலுமிது, நிர்வாகத் துறையை சேர்ந்த கிராம, வட்ட, கோட்ட, மாவட்ட நிர்வாக ஊழியர்களுக்கும் சாலப் பொருந்தும்.
ஆனால், நீதித்துறை நடுவர்களுக்கு பொருந்தாது. அதாவது, இவர்களது முன்னிலையில் கொடுக்கும் ஒப்புதல் உரை எதுவும் அப்படியே செல்லும் என்பதால், மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதுபற்றி நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களில் விரிவாகவே சொல்லி உள்ளேன்.
ஆனால், இதற்கு மாறாக ஆங்கிலேயர்களின், அராஜக ரௌலட் சட்டம் போன்ற நம் தடா, பொடா போன்ற சட்டங்களில், எந்தவொரு காவல்துறை காவலில் உள்ளவர்கள் கொடுத்த வாக்குமூலமும் செல்லும் என்று, அடிப்படை அறிவில்லாமல், அடிப்படை உரிமைகளுக்கு எதிராக மத்திய அரசே சட்டம் இயற்றி வைத்திருக்கிறது.
இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட, அடிப்படை சட்ட அறிவில்லாது, அரசின் பெறுங்கூலிக்கு மாரடிக்கும் காவலூழியர்களும், அரசுப்பொய்யர்களும், நிதிபதிகளும் ராஜீவ் படுகொலை வழக்கில், குற்றஞ் சாற்றப்பட்டவர்கள் கொடுத்த ஒப்புதல் உரை என்றப் பெயரில், மத்திய புலனாய்வு காவலூழியர்கள் திட்டமிட்டு எழுதியதையே ஆதாரமாக கொண்டு தண்டனையை வழங்கினார்கள் என்பதெல்லாம் தற்போது, ஊடகங்களின் மூலம் ஊரறிந்த இரகசியங்கள் ஆகிவிட்டன. ஆனாலும், எப்பயனும் இல்லை.
இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் வரை தண்டனை உறுதி செய்யப்பட்டு உள்ளது என்றால், அந்நிதிபதிகளும் அடிப்படைச் சட்டத்தில் முட்டாள்கள்தானே?!
இதில், குற்றஞ்சாற்றப்பட்டவர்களின் சார்பாக வாதாடிய அத்தனை அத்தனை பிரபலப் பொய்யர்களின் அடிப்படை சட்ட அறிவில்லாத பங்கும் உண்டு.
அரசு நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள ஒருவர் தந்த உரையின் மீதே சாட்சிய சட்டம் சந்தேகம் கொண்டு செல்லாது என அறிவுறுத்தும்போது, அது எப்படி தனி நபரின் அல்லது தனியாரின் கட்டுப்பாட்டில் உள்ள நபர்களுக்கு மட்டும் பொருந்தும்?
எனவே, இதில் சச்சரவு எழுந்தால், அதில் அடிப்படை முகாந்திரம் இருக்கிறதா என்பதை சரி பார்க்க தன் கையால், எழுதப்பட்ட பதவி விலகல் உள்ளிட்ட கடிதங்களே தக்க ஆதாரமாக இருக்கும்.
எப்படி எனில், ஒருவரின் எண்ணங்கள் எப்படி இருக்கிறதோ, அப்படியேதான் அவரின் செயல்பாடுகள் அமையும் என்ற அடிப்படையில், ‘ஒருவர் சாதாரண மன நிலையில் எழுதும் கையெழுத்துக்கும், ஏதோவொரு நிர்ப்பந்தத்தின் காரணமாக பதற்றமான எண்ணத்துடன் எழுதும் கையெழுத்திற்கும் இடையே வேறுபாடுகள் நிச்சயம் நிறைந்து இருக்கும்’.
இவ்வேறுபாடுகளை ஒப்பிட்டு பார்க்கும் மாத்திரத்திலேயே எளிதாக, கண்டறிய முடியும். ஆகையால், இதற்கு தடய அறிவியல் சோதனையோ அல்லது நீதிமன்ற விசாரணையோ கூட தேவைப்படாது.
ஆகையால், எழுதிக் கொடுக்கப்பட்ட கையெழுத்துக் கடிதத்தில், அதனை ஏற்பவருக்கு சந்தேகம் இருக்கும் பட்சத்தில், அதுகுறித்த விளக்கத்தை குறிப்பிட்ட கால அளவிற்குள் அளிக்க கேட்டு, அதன்பின் தரும் பதிலைப் பொறுத்து, பதவி விலகலை ஏற்பதா அல்லது ஏற்க மறுப்பதா என்பதை உறுதி செய்யலாம்.
ஒருவரின் பதவி விலகலால், அவருக்குத்தான் பாதிப்பு இருக்க முடியுமே தவிர, அப்பதவிக்கு பாதிப்பு ஒன்றும் இருக்க முடியாது. ஆகையால், பதவி விலகல் கடிதத்தை ஏற்கவும், திரும்பப் பெறவும் காலத்தை சட்டப்படி நிர்ணயம் செய்து விடலாம்.
இதனை தனியார் தொழிலாளர்களுக்கான பணி நியமண ஆணையில், ஓரிரு மாதங்களுக்கு முன்பே தெரிவிக்க வேண்டும் என்ற வகையில் குறிப்பிட்டு இருப்பார்கள். ஆனால், அதனை அவர்களே மறந்தும், மீறியும் வற்புறுத்தி வாங்கி விடுவார்கள்.
இதனை ஆதாரமாக வைத்தும் தொழிலாளர்கள் வழக்கு தொடுத்து, இழந்த பணியைத் திரும்பப் பெற முடியும். ஆனால், இதையெல்லாம் மனக் குழப்பத்தில் யோசிக்க தவறி விடுவார்கள். தொழிலாளர்களை வைத்து, வயிற்றை நிரப்பிக் கொண்டிருக்கும் தொழிற்சங்க வியாதிகளும், அறிவுவறுமை உட்பட அனைத்திலும் பொய்யர்களை போன்றவர்களே!
தனியார் நிர்வாகத்தினர் போன்று எச்சரிக்கை இல்லாமல், இந்திய சாசனத்தின் கீழான பதவியில் அமர்த்தப்படுபவர்கள், எப்போது வேண்டுமானாலும் பதவி விலகலாம் என கூறுகெட்ட தனமாக எழுதி வைத்திருக்கிறார்கள். இதுவும் கட்டாயம் திருத்தப்பட வேண்டும்.
இப்படி எல்லாம் செய்வது, சம்பந்தப்பட்ட அனைத்து அல்லது இரண்டு தரப்பினருக்குமே நல்லது என்பதோடு, இதன் மூலம் தேவையில்லாத பல்வேறு சட்டப் பிரச்சினைகளுக்கு, எடுத்த எடுப்பிலேயே, சு(ய, ப)மாய் முற்றுப்புள்ளி வைத்துவிட முடியும்.
ஆமாம், இது சுய சிந்தனையில் வாழும் உங்களின் சுயாட்சி கொள்கையில், வேறு எந்தவொரு ஆட்சியுங்கூட தலையிட முடியாமல் செய்துவிடும்.
ஆனால், விதிவிலக்காக இதனை உலகறிய தேர்தலில் தோற்றதன் காரணமாக பதவி விலகும், அரசியல் வியாதிகளின் பதவி விலகளுக் கெல்லாம் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. அவ்வளவே!
முக்கிய குறிப்புகள்:
1. தானாகவே பதவி விலக வேண்டும் என்ற நோக்கில், பணி வழங்காமலோ அல்லது பணியிட மாற்றம் உள்ளிட்ட வேறு எவ்விதத்தில் தொந்தரவு செய்தாலும், அதனை அப்படி காரணமாக ஆதாரங்கள் இருந்தால் அதையும் மேற்கோள் காட்டியும், இணைத்தும் பதவி விலகல் கடிதத்தை எழுதிக் கொடுத்து விட்டால், சம்பந்தப்பட்டவர்கள் அதனை சட்டப்படி ஏற்க முடியால் போய்விடும்.
2. ஆகையால், மீண்டும் வேலைக்கு அழைப்பார்கள். அப்படி அழைத்தால், இனி தொந்தரவு செய்ய மாட்டேன் என்ற உத்திரவாதத்தை எழுத்து மூலமாக தந்தால் வருகிறேன் என்று சொல்லி விடலாம். இல்லையெனில், வழக்கு தொடுக்கலாம். வழக்கு நடக்கும் காலத்தில், சுய தொழில் செய்வதே நல்லது.
3. ஆனானப்பட்ட டி.வி.எஸ் மற்றும் அசோக் லைலேண்ட் நிறுவனங்களுக்கு எதிராகவே, தனித் தொழிலாளிகளை கூட வழக்கு தொடுக்க வைத்து, லட்சக்கணக்கில் நஷ்டஈடு பெற்ற சாதனைகளை எல்லாம் நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களில் சொல்லி உள்ளேன்.
4. இது தொடர்பான தொழிலாளர்களுக்கான ஆலோசனைகளை ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் சொல்லி உள்ளேன்.
5. நிதிபதி கர்ணனுங்கூட இதையே கடைப்பிடிக்கலாம் என்று ஆலோசனை சொல்லி உள்ளேன். இதனை எழுதிய பிறகு, இன்றைய நாளிதழ்களை படித்தபோது, இது தொடர்பாக வந்துள்ள செய்திகளை அங்காங்கே கொடுத்து உள்ளேன். இதிலுள்ள குளறுபடிகள் குறித்து வேறெதுவும் தெரியாது.
6. இதில், ஒருசில என் ஆய்வுக் கருத்தோடு ஒத்துப்போவதை அறியலாம். முழுமை அடைய வேண்டுமென்றால், நான் இதில் முன்மொழிந்துள்ள கருத்துக்கள் சட்டமாக்க அல்லது திருத்தப்பட வேண்டும். இல்லையெனில், ‘‘நியாயந்தான் சட்டம்’’ என்ற அடிப்படையில் ஒவ்வொருவராலும் பின்பற்றப்பட வேண்டும். வழக்கம் போலவே, இதுவும் நடக்கும்; பிரச்சினை களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
7. தமிழக அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு, சட்டப்படி தீர்வு சொல்ல வேண்டுமென்ற நோக்கில் எழுத ஆரம்பிக்கப்பட்ட, இந்த ஆய்வுக் கட்டுரையில், அதற்கான தீர்வை சொல்ல இயலவில்லை. காரணம்,
8. இந்திய சாசனத்தில், இதற்கான தெளிவான வரையறைகள் எதுவும் இல்லை. ஆகையால், இதற்கான தீர்வை கோட்பாடு 160 இன்படி, இந்திய தலைமை ஊழியரின் ஆலோசனையின்படியே, தமிழக தலைமைப் பொறுப்பு ஊழியர் எடுக்க முடியும்.
9. இதில், சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பும் மிகமிக முக்கியம் என்பதால்தான், தமிழகத்தின் தலைமைப் பொறுப்பு ஊழியரும், ஒரு வாரகாலமாக முடிவெடுக்க முடியாமல் இருக்கிறார்.
இப்படியே, நாமும் இருப்போம். அவ்வளவே!
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
Tuesday, February 7, 2017
போங்கய்யா நீங்களும், உங்களின் (புண், பன்)நாக்கு விளக்கமும்!
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
Saturday, February 4, 2017
நான் சொன்னால், சொன்னதுதான்! - ஜல்லிக்கட்டு
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
Wednesday, February 1, 2017
கடிதம் எழுதும் ஆர்வலர்களின் கவனத்திற்கு...
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.