ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்திற்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் என தொலைக்காட்சிகளில் தெரிவிக்கிறார்கள். ஆகையால், இதிலென்ன சட்ட சிக்கல் இருக்கிறது என என்னிடம் கேள்வி எழுப்புகிறார்கள்?
உண்மையில், தொல்லைக் காட்சிகளுக்கு சட்டந் தெரியாது என்பதோடு, ஒவ்வொரு தொல்லைக்காட்சியும், நேரடியாகவோ அல்லது பினாமியாகவோ ஏதோவொரு அரசியலைச் சார்ந்தே இருக்கிறது என்பது ஊரறிந்த இரகசியந்தான்!
ஆகையால், தவறான செய்தியை மக்களுக்கு சொல்லி, மக்களின் அறவழிப் போராட்டத்தை திசை திருப்பப் பார்க்கிறார்கள் என்றே கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், அறவழிப் போராட்டம் ஐயத்திற்கு இடமில்லாத வகையில் வெல்லும் என்பதை, அரசியல் வியாதிகளின் ஊடகங்கள் அறியாதவை அல்ல. வென்று விட்டால், அரசியல் செய்ய ஆயுதம் இல்லாமல் போய்விடுமே என்கிற அக்கறையைத் தவிர வேறொன்றுமில்லை!
இளைஞர்களும், மாணவர்களும் கூடவே பொதுமக்களும், தன்னெழுச்சியோடு இணைந்து முன்னெடுத்துள்ள அறவழிப் போராட்டத்திலேயே எவ்வளவு அரசியல் செய்கிறார்கள் என்பதை அறியாதவர்களா, நீங்கள்?
இதற்கு, சிலரின் கேள்வி ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒளிபரப்பி ஆதரவும் தருகிறார்களே என்று இருந்தால், ஆதரவு தரவில்லை என்றால் அவர்களுக்குத்தான் நஷ்டம் என்பதோடு, இது நிச்சயம் குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடும் கதைதான்!
இந்திய சாசன கோட்பாடு 213 இன்கீழான, ஆளுநரின் அதிகார அவசர சட்டம் எப்படி ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றதாகும் என விளக்கம் சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
இல்லையெனில், 21-01-2017 அன்று குடியரசுத் தலைவரே ஒப்புதல் அளித்து விட்ட ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்திற்கு மீண்டும் 23-01-2017 அன்று எதற்காக, தமிழக சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பப் போவதாக சொல்கிறார்கள் என விளக்கம் சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment