No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Sunday, January 15, 2017

மனநல பாதிப்பில் உள்ள அவலங்கள்!


இது எனக்கு சமூக வலைத்தளத்தின் மூலம் வந்த தகவல். இதன் முக்கியத்துவம் கருதி இப்பக்கத்தில் பகிர்கிறேன்.    

***************

"வெற்றிச் செல்வன்'’ படத்தின் முக்கியக் காட்சிகளை 20 நாட்களுக்கும் மேலாக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ருத்ரன். அந்த அனுபவங்களைக் கேட்கலாம் எனச்சென்றால்...

"எனது படத்தைப் பற்றி எதுவும் பேசத் தேவையில்லை. ஆனால், கீழ்ப்பாக்கத்தில் நடைபெறும் கொடுமைகளை உங்கள் பத்திரிகை மூலமாகப் பேச வேண்டும். அங்கு நடைபெறும் அவலங்களை நேரில் பார்த்து அதிர்ந்து போய்விட்டேன். அங்கு நோயாளிகளுக்கு மனநல சிகிச்சை வழங்கப்படுவதைவிட, அவர்களை மென்மேலும் மன நோயாளிகளாக ஆக்குவதற்கான செயற்பாடுகள்தான் அதிகமாக நடைபெறுகின்றன’’ எனப் படபடத்தபடி பேச ஆரம்பித்தார் ருத்ரன்.

"அவன் இவன்’' உட்பட பாலாவின் சில படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. "யாவரும் நலம்'’ படத்தில் இயக்குநர் விக்ரம் குமாரின் உதவியாளராக நான் பணியாற்றியபோது லொகேஷன் பார்ப்பதற்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன்.

அப்போது நான் சந்தித்த ஒரு நபர்தான் எனது "வெற்றிச் செல்வன்' படத்திற்கான ஆரம்ப விதையாக இருந்தார். நான் சந்தித்த அந்த நபர் காமராஜரின் ஆட்சியில் அமைச்சராக இருந்த கக்கனின் மகன் நடராஜ மூர்த்தி.

நேர்மையான அரசியல்வாதியாக கக்கனை எங்களுக்குத் தெரியும். ஆனால், அவரின் மகன் நடராஜ மூர்த்தி கீழ்ப்பாக்கம் மருத்துவ மனையில் சுமார் 30 வருடங்களாக அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில் கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்கிறார் என்றால் அது, தமிழருக்கு எவ்வளவு பெரிய அவமானம்???

அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சரியான முறையில் நடத்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை. அவர் சொன்ன சில கதைகளை வைத்துத்தான் இந்தப் படத்தை எடுத்தேன்.

கீழ்ப்பாக்கத்தில் சுமார் 3000 பேர் வரை இருக்கிறார்கள். அதில் சுமார் 500 பேருக்கு மேல் முற்றிலும் குணமானவர்கள். ஆனால், அவர்களை அழைத்துச் செல்ல யாருமே இல்லாததால், இன்னும் அங்கேயே இருந்து மேலும் மேலும் மனச் சிதைவுக்கு உள்ளாகிறார்கள்.

கீழ்ப்பாக்கத்தில் படப்பிடிப்பு நடத்த என்னிடம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை அன்பளிப்பாக மருத்துவமனை நிர்வாகம் கேட்டது. அந்தப் பணத்தில் நோயாளிகளுக்கு ஏதாவது செய்கிறேன் எனக் கேட்டபோது, அதற்கு அனுமதிக்கவில்லை.

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கூட எங்களைப் போல சாதாரணமான மனிதர்கள் தானே...

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் எல்லா நோயாளிகளும் இரவு ஆறு மணிக்கே இரும்புக் கதவுகளின் பின்னால் அடைக்கப்படுகிறார்கள். அந்த இரும்புக் கதவுகள் ஆங்கிலேயர் காலத்தில் செய்யப்பட்டவை. சிறிதளவு காற்றுகூட அந்தக் கதவு வழி புகமுடியாமல் முழுவதுமாக மூடி இருக்கும். நான் அங்கு பார்த்த பெரும்பாலான நோயாளிகள் தங்களைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளை அவிழ்த்து விடுமாறு கதறுவார்கள். ஆனால், கேட்பதற்கு யாரும் இல்லை.

பறவைக்கு கூட தான் விரும்பிய இடம் எல்லாம் பறக்க முடியும். ஆனால், அங்கிருப்பவர்களால் அந்த வாசலைத்தாண்டி எங்குமே போக முடியாது.

சமைப்பது, துணி துவைப்பது, உட்பட அங்குள்ள சகல வேலைகளையும் நோயாளிகள் தான் செய்கிறார்கள். தோட்ட வேலைகளைக் கூட அவர்கள்தான் செய்கிறார்கள். சும்மா ஒரு லாஜிக்கிற்காக கேட்கிறேன், அவர்கள் மனநலம் சரியில்லாதவர்கள் என்றால் அவர்கள் கைகளில் கடப்பாறை போன்ற கூரிய ஆயுதங்களைக் கொடுக்கலாமா?

அங்கு இருக்கும் காவலர்கள் எல்லாம் அடியாட்கள் போல இருப்பார்கள். ஒரு சிறிய தவறு செய்து விட்டால் கூட நோயாளி களை தூக்கிப் போட்டு ரத்தம் வரும் வரைக்கும் மிதிப்பார்கள்.

ஒரு நோயாளிக்கு அவர் விரும்பிய உணவை நான் வாங்கிக் கொடுத்ததற்காக, அவரை எனது கண்ணிற்கு முன்னால் அவர் மயக்கமாகும் வரைக்கும் அடித்தார்கள். இன்றுவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பத்திரிகையாளர்கள் யாருமே செல்ல முடியாது. பத்திரிகையாளர்கள் சென்றால் அவர்கள் அங்கு நடக்கும் அநீதிகளை வெளி உலகிற்கு அடையாளம் காட்டி விடுவார்கள் என்றுதான் அவர்களை நிர்வாகம் அனுமதிப்பதில்லை.

அங்கு நடக்கும் கொடுமைகளுக்குப் பதிலாக அந்த நோயாளிகளை கருணைக் கொலை செய்து விடலாம்.

நான் பார்த்த ஒரு நோயாளி சுமார் 10 வருடங்களாக அங்குள்ள யாருடனும் பேசுவது இல்லை. அங்கு நடக்கும் கொடுமைகளால் மனம் உடைந்து அவர் பேசுவதில்லை எனச் சொன்னார்கள்.

தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட வேண்டும். ஊடகங்கள் இந்த நோயாளிகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். குரல் கொடுத்தால் என்னைப் போன்ற 3000 சக மனிதர்கள் நல்வாழ்வு பெறுவார்கள் என முடித்துக்கொண்டார். 

***************** 

சமூக வலைத்தளத்தில் வந்ததாலேயே, இத்தகவல் உண்மையென நம்பிவிட முடியுமா... இதனை ஒரு பதிவாக பதிந்தது எந்த விதத்தில் நியாயமாகும் என்ற கேள்விகள் உங்களுக்கு எழலாம். 

ஒரு தகவலை படிக்கும்போதே, அது எந்த அளவிற்கு உண்மை என்பதை என்னால் உணர முடியும். இப்படி உணருவதற்கு முன்னால், அதனை ஆராய்ந்தும் இருப்பேன். 

மனநலம் குன்றியவர்களை எப்படி குணப்படுத்த வேண்டும் என்பதையும்; ஆனால் அப்படி குணப்படுத்தாமல், தூக்க மாத்திரைகளை கொடுத்துக் கொடுத்து, எப்படி நிரந்தர நோயாளிகளாகவே வைத்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி, ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலில் எழுதி உள்ளேன். 

ஆமாம், அரசின் அமைப்புக்கள் மட்டுமல்ல; அரசு சாராத ஃபண்டு அமைப்புக்களும் கூட, தங்களை நிரந்தரமாக நிலைப்படுத்திக் கொண்டுதான் பிழைப்பை நடத்த வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட வேலைகளைத்தான் செய்கின்றன. 

இதனால்தான், எந்தவொரு அமைப்பும் அதன் நோக்கத்திற்கு நேர் எதிராகத்தான் செயல்படும் என்பதை, ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலில் ஆணித்தரமாக நிறுவியுள்ளேன்.

மனநோயாளிகள் எல்லோரும், உண்மையான மனநோயாளிகள் கிடையாது என்பதை, அவர்கள் அத்தியாவசியமான ஆடைகளை அணிவதில் இருந்து அறிந்து கொள்ள முடியும். ஆனாலும், இதில் ஏதோவொரு வகையில் இன்பம் அடைகிறார்கள்.

ஆனால், இவர்கள் ஏதோவொரு காரணத்திற்காக, மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, நடிக்க ஆரம்பித்து, பின் அந்நடிப்பில் இருந்து வெளிவர முடியாமல் நிரந்தரமாக சிக்கிக்கொண்டு அல்லல்படுகிறார்கள் என்பதே உண்மை!

இவர்கள் இதனை மனநல மருத்துவமனையில் சேர்ந்தப் பிறகு தன் தவறை  உணர்ந்து, தப்பித்தவறி நடிப்பை கைவிட்டு, உறவினரோடு சேர்ந்து வாழ முற்பட்டாலும், உறவுகளும் அழைத்துச் செல்ல உடன்பட்டாலும், அதுவரை உண்ட மாத்திரைகளின் பக்க விளைவுகளால் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியாது.

ஆகவே, உங்களது குடும்பத்தில் ஒருவரோ அல்லது தெரிந்தவரோ இப்படிச் செய்தால், இதுகுறித்த எச்சரிக்கையை அவர்களுக்கு விடுத்து இயல்பான வாழ்க்கைக்கு உதவிடுங்கள்.

இந்த விசயத்திலும் நான் பல்வேறு விதங்களில் ஆராய்ந்து, சிலரை இயல்பு வாழ்கைக்கு மீட்டுள்ளேன், சிலரை மீட்க முடியாமல் கைவிட்டுள்ளேன்.

இதில் மிகமிக முக்கியமாக தன் வழக்கை தானே நடத்துபவர்கள், சரியான புரிதல் மற்றும் தெளிவில்லாமல் புலம்பலாக நடந்து கொண்டால், நிதிபதிகள் தங்களின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பைத்தியக்கார முத்திரையை குத்தி விடுவார்கள்.

இதுபற்றி நீதியைத்தேடி... சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி நூலில் எழுதி உள்ளேன். இதை எல்லாம் கவனமாக படித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்; புலம்பல் இல்லாத புலமையோடு வழக்கை நடத்த முடியும். எச்சரிக்கை! 

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)