No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Monday, January 9, 2017

எழுத்தாளர்கள் சிறந்த சீர்த்திருத்தவாதிகளாக இருக்கோணும்!


இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது என்றால், அதில் எழுத்தாளர்களுக்கு என்று நிறையவே தனிச்சிறப்புகள் இருக்கிறது. ஆனால், இத்தனித் தன்மையானது விரல்விட்டு எண்ணக்கூடிய வெகுசில எழுத்தாளர்களுக்குத்தான் இருக்கிறது.

ஆமாம், ‘எழுத்தாளர்கள்’ என்ற வார்த்தையிலேயே, ‘எழுத்தால் ஆளும் வல்லமை கொண்டவர்கள்’ என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.

இது அவர்கள் வாழும் காலத்தில் மட்டுமன்று; அவர்களது வாழ்நாள் முடிந்துங்கூட, எழுத்தின் தன்மையைப் பொறுத்து, பல்லாண்டுகள், பலநூறு ஆண்டுகள், பல்லாயிரம் ஆண்டுகள் என அவர்களது நூல்கள் வாசிக்கப்படும் வரை (வாழ், ஆள்)கிறார்கள்.

இவர்கள் வாழ்ந்து மறைந்தப் பின்னும், அவர்களது நூல்கள் வாசிக்கப்படுகிறது என்றால், ‘எழுத்தாளர்கள் தற்காலத்தையும், எதிர்காலத்தையும் உணர்ந்து எழுதியவர்கள்’ என்று பொருள்.

ஆனால், இது ஏதோவொரு கொள்கை உணர்வோடு வாழ்ந்த கொள்கை எழுத்தாளர்களுக்குதானே அன்றி, பணஞ் சம்பாதிக்க வேண்டுமென்ற கொள்ளை நோக்கோடு வாழ்ந்தவர்களுக்கு கிடையாது. ஏனெனில், அவர்கள் எழுத்தாளர்களே கிடையாது. ஆனால், இன்று இவர்கள்தான் துரதிருஷ்டவசமாக அதிகமாக இருக்கிறார்கள்.  

உண்மையாக, பொய்யர்களைப்பற்றி சத்தியவான் காந்தி 1908 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கருத்து, இன்று நூற்றாண்டை கடந்தப்பின் நம்மால் படிக்கப்படுகிறது. இதுவே, அவர் வாழ்ந்த காலத்தில் குறைவாகத்தான் இருந்திருக்கும்.

இன்னுஞ் சொல்லப்போனால், 2008 ஆம் ஆண்டில், எழுதிய நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம் நூலில், சட்ட ஆராய்ச்சியாளர் திரு. வாரண்ட் பாலா அவர்கள் காந்தியின் கருத்தை பதிவுசெய்தப் பிறகே, இதனை அதிகமாக வாசிக்கத் தொடங்கி இருக்கிறோம்.

இதன் உச்சகட்டமாக சம்பந்தப்பட்ட அப்பொய்த்தொழிலில் உள்ள பொய்யர்களையும், நிதிபதிகளையுமே, நம் நூல்களை கொடுத்தும், வாங்கியும் வாசிக்க வைத்திருக்கிறோம்.

இப்படி, ஒரு கொள்கையுள்ள எழுத்தாளரின் எழுத்துக்களை, அவரைப் பின் தொடர்ந்து வரும் கொள்கையுள்ள எழுத்தாளர்கள் தான், சமூகத்திற்கு எடுத்துச் (செ, சொ)ல்ல வேண்டி உள்ளது. இப்படித்தான் பற்பல எழுத்தாளர்கள், சமூகத்தின் சீர்த்திருத்தத் திற்காக வாழையடி வாழையாக வரிசையாக வந்துக் கொண்டே இருக்கிறார்கள்.

காந்தியவர்கள் பல கொள்கைகளை கடைப்பிடித்தவர். ஆனால், சட்டத்தொழிலில் தான் கடைப்பிடித்ததை மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. காரணம், அதற்கான அசாதாரண சூழ்நிலையும் அப்போது அவ்வளவாக நிலவவில்லை.

ஆனால், இப்போது அதற்கான தேவை, குறிப்பாக நம் தமிழ்நாட்டில் நிலவி இருக்கிறது என்பதற்கான உண்மைதான், சாதாரண தொழிலாளியான திரு. வாரண்ட் பாலா அவர்களின் வருகையும், சமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கு என்ற கொள்கை கொண்ட சட்ட ஆராய்ச்சியும், என்றால் மிகையன்று என்பது, அவரது கடமையைச் செய்! பலன் கிடைக்கும் நூலைப் படித்தால், புரியாதவர்களுக்கு கூட, மிக எளிமையாக புரியும்!

ஆமாம், எங்கெல்லாம் என்ன மாதிரியான கடமையாளர்கள் தேவையோ, அங்கெல்லாம் அப்படியே கடமையாளர்கள் இயற்கை யாகவே உருவாகிறார்கள் என்பதற்கு பல்வேறு சான்றுகளை கடமையைச் செய்! பலன் கிடைக்கும் நூலில் நிறுவியுள்ளார்.

இந்த வகையில், அடிப்படை சட்ட அறிவே இல்லாமல், பொய்யர்களும் நிதிபதிகளும் இருக்கும்போது, இவருக்கு இருக்கிற சட்டப்புலமைக்கு, இவர் விரும்பும் எந்தவொரு பதவிக்கு வேண்டுமானாலும் நேர் வழியிலேயே போகமுடியும், சுகமாய் வாழ முடியும். ஆனால், இவரோ அப்படிச் செய்யாமல், மக்களுக்கு போதிப்பதையே கடமையாக கொண்டுள்ளார்.

உண்மையில், ஒரு கொள்கையுள்ள எழுத்தாளரின் மறைவுக்குப் பின்னர், அரசாங்கம்தான் அவரது நூல்களை நாட்டின் உடைமையாக அறிவித்தும், அதற்கு பரிசுத்தொகை கொடுத்தும் கௌரவப்படுத்தும்.

ஆனால், இவரோ, சமூகத்திற்கு சட்டத்தை போதிப்பதே கொள்கை என்ற இலட்சிய நோக்கோடு, தான் எழுதிய நூல்களையே பொதுவுடைமை என முன்னோடியாக அறிவித்து, நம்மையெல்லாம் கெளரவப் படுத்தி  உள்ளார் என்றாலும் மிகையன்று!

உலகச் சமூகத்தின் பல்வேறு பங்களிப்புச் சீர்த்திருத்தங்களில், தமிழர்களின் பங்கும், வழிகாட்டுதலும் அலாதியானது. இதனை சுதந்திரப் போராட்ட நிகழ்வில் காந்தியும் ஒப்புக்கொண்டு உள்ளார். இதுபோல, சமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கும் நாமே வித்திட்டு இருக்கிறோம். 

ஆமாம், நம் சட்ட விழிப்பறிவுணர்வு மற்றும் விமர்சனங்களால், உள்ளகை நெல்லிக்கனியாக நமக்கு தெரிந்து என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை, எடுத்துக்கூறி அனைத்து அச்சு ஊடகங்களுக்கும், ‘‘மநு வரையுங்கலை!’’ நூலை மதிப்புரைக்காக ஒரு மாதத்திற்கு முன்பே எழுதி அனுப்பிய கடிதம் இதோ!

ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.

நம் சமூகம் சரியானதொரு சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற வேண்டுமென்கிற அடிப்படையில், சட்ட ஆராய்ச்சியாளர் திரு. வாரண்ட் பாலா அவர்களின் நூல்களை ‘மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 4000 க்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் அனைத்து நீதிமன்றங்களுக்கும்’ தொடர்ந்து வழங்கி வருகிறோம். 

இந்த வகையில், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள எங்களின் ஏழாவது வெளியீடான ‘‘மநு வரையுங்கலை!’’ நூலையும் கொடுத்துள்ளோம். இந்நூலுக்கான தங்களின் மதிப்புரையை வழங்கிடுமாறும் கோருவதை கடமையாக கருதுகின்றோம். 

வெளியீடு: கேர் சொசைட்டி, 53, ஏரித்தெரு, ஓசூர் - 635109. 

இந்நூலின் நன்கொடை ரூ.400. உலாப்பேசி எண் 9842909190.

இணையப்பக்கம் www.neethiyaithedy.org

*************** 

எங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக் கொள்கை நோக்கம் எந்த அளவிற்கு, சென்னை உயர்நீதிமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு உள்ளது என்பதை, ஒருசில உண்மை சம்பவங்களின் மூலம் உள்ளங்கை நெல்லிக்கனியாக உங்களுக்கு எடுத்து உரைக்க விரும்புகிறோம். இது நீங்கள் எழுதும் மதிப்புரைப் புரிதலுக்கு பேருதவியாய் இருக்குமென நம்புகிறோம். அவ்வளவே!


1. இம்மநு வரையுங்கலையின் பக்கம் 392 முதல் 414 வரையில் கொடுப்பட்டுள்ள 02-05-2014 தேதியிட்ட மநுவில் சொல்லப்பட்டுள்ளபடி, ‘‘சென்னை உயர்நீதிமன்றம் முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்ய காவலர்களுக்கு உத்தரவிட இயலாது’’ என்பதை  27-09-2016 அன்று ஒப்புக்கொண்டது. இதுகுறித்த நாளிதழ்களில் வெளியான செய்திகளை இணைத்து உள்ளோம்.

2. (வழக்கறிஞ, பொய்ய)ர்களின் ஒழுங்கீனங்களைக் கட்டுப்படுத்த, சென்னை உயர்நீதிமன்றம் கொண்டு வந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து அவர்கள், நாடு முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்பு செய்தபோது, வழக்காளிகளையே வழக்காட அழைக்க வேண்டு மென்ற எங்களது 25-07-2016 தேதிய கோரிக்கைக்குப் பிறகு, 04-08-2016 தேதியில் அப்படி அறிவித்தது குறித்த நாளிதழ் செய்திகள் என இரண்டையும் இணைத்துள்ளோம். 
3. 2010 ஆம் ஆண்டில் நாங்கள் வெளியிட்ட, ‘‘நீதியைத்தேடி... சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி?’’ நூலில், ‘‘திருநங்கைகள் காவலராக சிறப்பு தகுதி பெற்றவர்கள்’’ என்ற தலைப்பில், பக்கங்கள் 212 முதல் 220 வரையில் எழுதியதும் சென்னை உயர்நீதி மன்றத்தால் நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

4. பொதுவாக, எல்லோரையும் அரசூழியர்கள் என குறிப்பிடுவது தவறு. சட்ட விதிகளின்படி, அரசின் நேரடி துறைகளில் ஊழியம் புரிபவர்களை ‘அரசூழியர்கள்’ என்றும், அரசின் அதிகாரம் பெற்றத் துறைகளில் ஊழியம் புரிபவர்களை, ‘‘பொது ஊழியர்கள்’’ என்றும் சொல்வதே சரியானது. 

மற்றபடி, ‘கழகம், வாரியம் ஆகியவற்றில் ஊழியம் புரிபவர்கள் அரசூழியர்கள் அல்லர்’ என்பது, இந்நூலின் பக்கங்கள் 74 முதல் 86 வரை தெளிவாக எடுத்துரைக்கப்பட்டு உள்ளது.

5. மேலும், சட்ட விதிகளில் இல்லாத புதிய சட்டப் பிரச்சினைகளுக்கும் உடனே நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஏற்படுத்தப்பட்ட, ‘‘நீதிப்பேராணை வழக்குக்களால் தான், நீதி சமாதி ஆக்கப்படுகிறது’’ என்பது, இந்நூலின் 2-வது அத்தியாயம் முழுவதும் விரிவாக எழுதப்பட்டு உள்ளது. 

இதனை நல்லதொரு உண்மையோடு எடுத்துக்காட்டும் விதமாக, ‘நிதிபதி சந்துரு, தான் விசாரித்த நீதிப்பேராணை வழக்கு ஒன்றில், திரித்து எழுதிய தீர்ப்பை விமர்சித்து அவருக்கு எழுதிய கடிதமானது’ பக்கம் 471 முதல், 493 வரையில் தொகுக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இவர் ஓய்வு பெற்றப்பின், ‘தன்னைவிட உத்தமர் யாருமில்லை என்பதைப் போல காட்டிக்கொண்டு ஊடகங்களில் உலா வர, இவரை நீதி நாயகம் உள்ளிட்ட பல்வேறு கௌரவப் பெயர்களில் அழைத்து நீதிக்கு தலைக்குனிவை ஏற்படுத்துகி(றா, றீ)ர்கள்’. 

இதுபற்றி இயன்றால் கேட்டுச் சொல்லுவீர்கள்; இல்லையேல், உண்மையைத் தெரிந்து கொண்டு அதற்கேற்வாறு செயல்படு வீர்கள் என்பதற்காகவே, இத்தகவலை உங்களுக்குச் சொல்கிறோம். அவ்வளவே! 

இப்படி, மேலும் பற்பல சட்ட சங்கதிகளை ஆராய்ந்து, ஆதாரப்பூர்வமாக நூல் முழுவதும், தொலைநோக்கு பார்வையில் எழுதியுள்ளார், சட்ட ஆராய்ச்சியாளரும், மநு வரையுங்கலை! நூலின் ஆசிரியரும் ஆன திரு. வாரண்ட் பாலா!! 

எனவே, நம் சமூகம் சரியானதொரு சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற இயன்றவரை நூல் முழுவதையும் படித்து, தங்களின் மதிப்புரையை வழங்கிட கேர் சொசைட்டியின் சார்பாக கோருகிறேன். நன்றி!

இணைப்புகள்: மநு வரையுங்கலை! நூல் மற்றும் இக்கடிதத்தில் சுட்டிக்காட்டி உள்ள சங்கதிகளுக்கான ஆதாரச் சான்றுகள். 

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)