வழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்களுக்கான முகநூல் குழுவை ஆரம்பித்ததன் நோக்கத்தில், சட்ட ஆர்வலர்கள் அனுபவம் பெறும் பொருட்டு, நாளிதழ் அறிவிப்பில் உள்ளவருக்கு கடிதம் எழுதி, அறிவை விருத்தி செய்து கொள்ள வேண்டும் என்பதும் ஒன்று.
ஆனால் Mee Rajendran என்பவர் மட்டுமே கடிதம் எழுதினார். அது திரும்பி வந்த கடிதத்தையும், அதற்கு கர்நாடக உயர்நீதி மன்றத்துக்கு அனுப்பிய மனுவையுங்கூட பதிவிட்டேன்.
ஆனால், கடிதம் எழுதுவதாக சொன்ன மற்றவர்கள் யாரும் எழுதியதாக தெரியவில்லை. இதற்கான செலவைகூட நாங்களே ஏற்கத் தயாராய் இருந்தும் யாரும் முன்வரவில்லை
ஆனால், கடிதம் எழுதுவதாக சொன்ன மற்றவர்கள் யாரும் எழுதியதாக தெரியவில்லை. இதற்கான செலவைகூட நாங்களே ஏற்கத் தயாராய் இருந்தும் யாரும் முன்வரவில்லை
இதனை உறுதிப்படுத்தவும், ஒரு முகவரிக்கே பலரும் கடிதம் எழுதுவதை தவிர்க்கவும், கடிதம் எழுதுபவர்கள், அதுகுறித்த தகவலை, அந்தந்த நாளிதழ் பதிவில் பின்னூட்டமாக பதிவிடச் சொன்னேன். ஆனால், இப்படி யாரும் எழுதியதாக பதிவிடவில்லை.
ஓரிருவரைத் தவிர, நாளிதழில் வரும் விளம்பரங்களை கூட மற்றவர்கள் பதிவிடவில்லை. ஆகையால், பலரும் நாளிதழ் களைக்கூட படிப்பதில்லை அல்லது படித்தாலும் பதிவிட முன்வர வில்லை என்றே முடிவுசெய்ய வேண்டியுள்ளது.
இந்த நிலையில்தான், சொன்னால் செய்வதற்கு தயாராக உள்ள சென்னை வாழ் வாசகர் திரு. சதீஷ்குமார், திரு. ஹேமந்த் போன்ற ஓரிருவரை சென்னை முகவரிக்கு அனுப்பி தகவல் சொன்னதையும் பதிந்தேன்.
இதில், இந்த அறிவிப்பில் உள்ளபடி தெருவே இல்லை என்பதையுங் கூட, அப்பகுதிக்கான வட்டார அஞ்சலகத்தில் உறுதிப்படுத்தியதன் அடிப்படையில் பதிந்தேன். சாட்சிய சட்டப்படியான சான்றுக்காக அன்றே, இம்முகவரிக்கு கடிதம் எழுதியாச்சி!

மக்களிடையே இக்குழுவின் நோக்கத்தை திறம்பட எடுத்துச் (செ, சொ)ல்லும் பொருட்டு மேற்பார்வை செய்யவும் பலருக்கு அனுமதி அளித்தோம்.
அப்படியுங்கூட, யாரும் அளவாககூட ஆர்வங் காட்டவில்லை. குறைந்தபட்சம், இக்குழுவிற்காக எங்களால் நேரம் ஒதுக்க இயலாது என்பதை கூட தெரிவிக்கவில்லை, ஏனோ?!
இதையெல்லாம், நாங்கள் ஏற்கெனவே பல்லாண்டுகளாக ஆராய்ந்தும், அறிந்தும், கடந்தும் வந்தவர்கள்தான் என்பதால், மக்களின் மனதில் இன்னும் மாற்றம் வரவில்லை என்பதையே உறுதிப்படுத்திக் கொண்டோம்.

ஆகவே, உங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கும் நிமிடத்தில் நாமே எழுதி விடலாம் என்ற முடிவுக்கு வந்து, இனி கடிதம் எழுதும் வேலையை திரு. அய்யப்பனே நேரடியாகவோ அல்லது வேறு உதவியாளர்களின் மூலமாகவோ செய்வார் என்று..,
அதற்கான ஏற்பாடுகளை செய்து முதல் கடிதத்தை 01-1-2017 அஞ்சல் செய்துவிட்ட நிலையில், இதில் எதிர்பாராத திருப்பமாக 03-01-2017 அன்று முகநூல் வாசகர் திரு. ம.பி. தாமோதரன் கடிதம் எழுத தேவையான அஞ்சலட்டையை வாங்கி விட்டதாகவும், தனக்கு கடிதம் எழுதும் வேலையை தொடர்ந்து தரவேண்டும் என்றும் தன்னார்வத்தோடு கேட்டுக் கொண்டார்.
சரி, இவரால் எழுத முடியாத போது, திரு. அய்யப்பன் எழுத வேண்டும் என்ற புரிதலின் அடிப்படையில் பகிர்ந்து கொடுத்தாகி விட்டது. நாங்கள் வருவார்கள் என எதிர்பார்த்தது இப்படிப்பட்ட ஓரிரு ஆர்வலர்களைத்தான்!
ஆகையால், இனி நீங்கள் யாரும் மிகவும் சிரமப்பட்டு கடிதம் எழுத வேண்டி இருக்காது என்பதை, உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னை சதீஷ், ஹேமந்த் போன்று நேரில் தகவல் சொல்ல முயல்பவர்கள் அதுகுறித்து தனது நிலைப்பாட்டை அந்தந்த பதிவிலேயே பின்னூட்டமாக பதிவிட்டால், அதற்கு மட்டும் கடிதம் எழுதுவதை தவிர்ப்பார்கள்.
வழக்குக்கள் குறித்து பல்வேறு நாளிதழ்களில் வரும் விளம்பரங்களில் நடக்கும் முறைகேடுகளை, இதுபோன்ற சமூக வலைத்தளத்தின் வழியாக ஆவணப்படுத்தி, இதனை அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைக்கு தக்கதொரு சாட்சியமாக பயன்படுத்தி,
நாளிதழ் அறிவிப்புக்கான சட்ட விதியையே நீக்கத்தேவையான அல்லது ஒழுங்குப்படுத்த தேவையான அடுத்தடுத்த சட்ட நடவடிக்கையை, இதுபோன்ற விளம்பரங்களை சட்ட அறியாமை யாலும், சமூகப் பொறுப்பு இல்லாமலும் வெளியிடும் காலை, மாலை நாளிதழ்களில் ஆரம்பித்து அனைத்து மட்டத்திலும் மேற்கொள் வதற்காக..,
இக்குழு தேவையான காலத்திற்கு மட்டும் அல்லது நாளிதழ் விளம்பரங்களைப் பதிவிடும் ஆர்வலர்கள் மற்றும் கடிதம் எழுதும் ஆர்வலர்கள் விரும்பும் வரை இயங்கும்.
எனவே, இதுதொடர்பான உங்களின் பதிவுகள், பின்னூட்டங்கள், கடிதங்கள் திரும்பி வருதல் என எதுவாக ஆயினும், வழக்கக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் என்ற முகநூல் குழுவில் மட்டும் பகிரவும்.
சமூகத்திற்கு தேவையென நினைத்தால், இக்குழுவில் பகிரப் படும் மிகமுக்கிய சங்கதிகள் அனைத்தையும் தொகுத்து, இதே தலைப்பில் வழிகாட்டும் சிறு நூலொன்றை வெளியிடுவோம். அவ்வளவே!

பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment