No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Friday, January 6, 2017

எரிபொருள் முகவாண்மைகளின் கொள்ளையும் முடங்கும்!


ஏஜென்சி என்பதற்கு தமிழில் முகவாண்மை என்று பெயர். இந்த ஏஜென்சியில் அனைவருக்கும் எமர்ஜென்சியானது கேஸ் ஏஜென்சிகளே ஆகும்.

நம்முடைய சட்ட ஆராய்ச்சியாளர் திரு. வாரண்ட் பாலா அவர்கள், தனது ஏழாவது நூலான ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் கழகம், வாரியம் (கார்ப்பரேஷன், போர்டு) என முடியும் தன்னாட்சி உற்பத்தி துறைகளில்தான் அதிக ஊழல்கள் நடக்கும் என்பதை, நமக்கு தெளிவுபட சொல்லி உள்ளார்.

இதிலும் குறிப்பாக, இதுபோன்ற கழகங்களும், வாரியங்களும் முழுமையான அரசும் இல்லாத, முழுமையான தனியாரும் இல்லாத, அவ்வப்போது ஆளும் அரசியல்வாதிகளின் தொழிற்சாலைகள் என்பதையும், இந்நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அரசுமல்லாத, தனியாருமல்லாத அரைகுறை ஊழியர்கள் என்பதையும் தெளிவுபட எடுத்துரைத்து உள்ளார்.  

இப்படியெல்லாம் சட்டத்தில் பொருள் இல்லாததைக்கூட, சட்டப்படியே ஆராய்ந்து, அதிலுள்ள உண்மைகளை எடுத்துச் சொல்ல இவர் ஒருவரால் மட்டுந்தான் முடிகிறது என்பது, எற்கெனவே பல்வேறு வழிகளில் நிரூபிக்கப்பட்டதுதான்.  

இப்படிப்பட்ட கழகங்கள், வாரியங்கள் எவையெவை என்ற பட்டியலிட்டு பார்த்தால், அவ்வப்போது விலையேற்றம் செய்யப்படும் பெட்ரோல், டீசல், எரிவாயு உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களும் ஒன்று என்பதும் நமக்கு நன்கு புலப்படும்! 

எனவே, ஊழலை ஒழிக்க விரும்புவோர், கழகம் மற்றும் வாரியங்களில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கேற்ப, நேற்று சம்பவம் ஒன்றை நேர் நிகழ்வில் காண நேர்ந்தது.    

ஆமாம், சுமார் மூன்று வருடங்களுக்கு மேலாக, நம்முடைய எரிபொருள் உருளையை இணைய வழியில் புக் செய்ய வசதி செய்யப்பட்டிருந்தும், நம்மைப் போன்ற பெரும்பாலானோர் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

ஆனால், இன்றோ கறுப்புப்பண ஒழிப்பில் ஏற்பட்ட பணத்தட்டுப்பாட்டால், எதையெல்லாம் இணைய வழியில் வாங்க முடியும் என யோசிக்க ஆரம்பித்ததன் விளைவு, ஏரி வாயுவையும் இணைய வழியில் பதிவு செய்ய நேரிட்டது.

ஆனால், இணைய இணைப்பின் சொதப்பல் காரணமாக வங்கிக்கணக்கில் இருந்து, பணம் போனதே ஒழிய, சிலிண்டருக்கான கோரிக்கை பதிவாக வில்லை. ஒருநாள் கழித்தும் பணமும் திரும்பாததால், நேரடியாக சென்று பதிவு செய்யலாம் என ஏஜென்சிக்கு சென்றபோதுதான், இந்த அதிர்ச்சியான தகவல் தெரிந்தது.

ஆமாம், நான் ஏஜென்சிக்கு சென்றிருந்தபோது, வீடுகளுக்கு எரிவாயுவை ஒப்படைக்கும் ஊழியத்தில் உள்ள அனுபவமில்லாத வாலிபன் அழுது கொண்டிருந்தான். என்ன பிரச்சினை என்று கேட்டேன்.

அவன் டெலிவரி செய்த ஒவ்வொரு சிலிண்டருக்கும், சிலிண்டருக்கு ரூபாய் 20 வீதம் ஏஜென்சியில் கமிஷன் கேட்கிறார்களாம். ஆனால், இவனுக்கோ வெகுசிலர் மாத்திரந்தான் கையில் கிடைத்த சில்லரைகளை கொடுத்திருக் கிறார்கள்.

இதைச் சொன்னாலும் கேட்காமல், டெலிவரி செய்ததற்காக இவனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தைப் பிடித்துக் கொண்டார்களாம்.

இப்படியொரு விசயம் ஏஜென்சிகளில் நடக்குமென நான் மட்டுமல்ல நீங்களுங்கூட எதிர்பார்த்து இருக்க மாட்டீர்கள். நமக்கு டெலிவரி செய்பவர்கள் ஏன் கூடுதலான தொகையை நம்மிடம் கேட்டு வாங்குகிறார்கள் என்பதற்கான காரணமும் எனக்கு புரிந்தது.

பலரும் இணைய வழியில் பதிவு செய்தும், பணம் செலுத்தியும் விடுவதால், வழக்கமாக டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு போதிய லஞ்ச வருமானம் கிடைக்கவில்லை என்பதும், ஆகையால் ஏஜென்சிகளுக்கு கமிஷன் கொடுக்க முடியாமல், வேலையை விட்டு நின்று விடுவதும், புதிதாக ஊழியர்கள் சேர்வதும், ஏஜென்சியே அவர்களை கமிஷன் வாங்க தூண்டுவதாகவும் தெளிவாக தெரிகிறது.

ஏஜென்சிகளை கேள்வி கேட்டால், அரசியல்வாதிகளுக்கு கொடுத்ததைத்தான் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வசூல் செய்கிறோம் என்பார்கள். 

எனவே, ஏஜென்சிகளையே ஒழித்துக்கட்ட என்ன வழியென்று யோசிக்க வேண்டும் அல்லது இணைய வழியில் பதிவு செய்தும், பணம் செலுத்தியும் ஏஜென்சிகளின் கொள்ளையை நாமே முடக்க முடியும்.


மேலும், ஏஜென்சிகளுக்கு பாடம் கற்பிக்க டெலிவரி செய்வதற்கான குறிப்பிட்ட தொகையை குறைத்துக் கொள்ளும் வசதியை, இணையத்தில் ஏற்படுத்தி வாடிக்கையாளர்களே நேரில் பெற்றுக் கொள்ளும் படியும் செய்யலாம்.
 
ஆமாம், திரு. வாரண்ட் பாலா, தன் நூல்களில் எதற்கெல்லாம் கரும்புள்ளி வைக்கிறாரோ, அதெல்லாம் விரைவிலேயே நீக்கப்பட்டும், சுத்தம் செய்யப்பட்டும் விடுகின்றன என்பதற்கு பலப்பல உண்மை சம்பவங்கள் உண்டு. அந்த வகையில், இந்த ஏஜென்சிகளுக்கும் விரைவில் சுத்தம் செய்யப்படும் என நம்புவோம். 
  
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)