No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Monday, January 23, 2017

ஜல்லிக்கட்டுக்கான நிரந்தர தீர்வை, சட்டப்படி பெறுவது எப்படி?
குறிப்பு: மிக எளிதாகப் பிரிண்ட் எடுத்துக் கொடுக்க வசதியாகவே, இப்படி படமாக கொடுக்கப்பட்டு உள்ளது.  
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Sunday, January 22, 2017

விளக்கம் சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்!
ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்திற்கு, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் என தொலைக்காட்சிகளில் தெரிவிக்கிறார்கள். ஆகையால், இதிலென்ன சட்ட சிக்கல் இருக்கிறது என என்னிடம் கேள்வி எழுப்புகிறார்கள்?  

உண்மையில், தொல்லைக் காட்சிகளுக்கு சட்டந் தெரியாது என்பதோடு, ஒவ்வொரு தொல்லைக்காட்சியும், நேரடியாகவோ அல்லது பினாமியாகவோ ஏதோவொரு அரசியலைச் சார்ந்தே இருக்கிறது என்பது ஊரறிந்த இரகசியந்தான்! 

ஆகையால், தவறான செய்தியை மக்களுக்கு சொல்லி, மக்களின் அறவழிப் போராட்டத்தை திசை திருப்பப் பார்க்கிறார்கள் என்றே கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், அறவழிப் போராட்டம் ஐயத்திற்கு இடமில்லாத வகையில் வெல்லும் என்பதை, அரசியல் வியாதிகளின் ஊடகங்கள் அறியாதவை அல்ல. வென்று விட்டால், அரசியல் செய்ய ஆயுதம் இல்லாமல் போய்விடுமே என்கிற அக்கறையைத் தவிர வேறொன்றுமில்லை! இளைஞர்களும், மாணவர்களும் கூடவே பொதுமக்களும், தன்னெழுச்சியோடு இணைந்து முன்னெடுத்துள்ள அறவழிப் போராட்டத்திலேயே எவ்வளவு அரசியல் செய்கிறார்கள் என்பதை அறியாதவர்களா, நீங்கள்? 

இதற்கு, சிலரின் கேள்வி ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒளிபரப்பி ஆதரவும் தருகிறார்களே என்று இருந்தால், ஆதரவு தரவில்லை என்றால் அவர்களுக்குத்தான் நஷ்டம் என்பதோடு, இது நிச்சயம் குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடும் கதைதான்! 

இந்திய சாசன கோட்பாடு 213 இன்கீழான, ஆளுநரின் அதிகார அவசர சட்டம் எப்படி ஜனாதிபதியின் ஒப்புதலை பெற்றதாகும் என விளக்கம் சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

இல்லையெனில், 21-01-2017 அன்று குடியரசுத் தலைவரே ஒப்புதல் அளித்து விட்ட ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்திற்கு மீண்டும் 23-01-2017 அன்று எதற்காக, தமிழக சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பப் போவதாக சொல்கிறார்கள் என விளக்கம் சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Saturday, January 21, 2017

அவசரச் சட்டம் என்றால் என்ன?


ஆறு வாரத்துக்கு மட்டுமே அமலில் இருக்கக்கூடிய நிலையில்லாத சட்டம். இதனை அறு வாரத்துக்கு உள்ளாக நிலைப்படுத்த, அரசு முயற்சிக்க வேண்டும். 


இல்லையேல், காலாவதியாகி விடும். நிலைப்படுத்த மேற்கொள்ளும் முயற்சி வெற்றியோ அல்லது தோல்வியோ கூட அடையும். 

அவசர சட்டத்தில் சட்டப் பிரச்சினைகள் இருப்பதாக எவராலும் வழக்கு தொடுக்கப்பட்டால், ஆறு வாரத்துக்கு முன், எப்போது வேண்டுமானாலும்  நிதிபதிகளால் தடை விதிக்கப்படலாம். 

ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தில், பல்வேறு சட்டப் பிரச்சினைகள் உள்ளதால், ஓரிரு நாட்களில் கூட தடை விதிக்கப்படலாம். மேலும், இந்த அவசர சட்டத்தை மாநில அரசால் நிலைப்படுத்த முடியாது. 

இது, ஜல்லிக்கட்டுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு உள்ள போராட்டத்தை, தற்காலிகமாக கலைக்கும் ஒரு முயற்சி. 

இந்த விடயத்தில், சட்டப் பிரச்சினைகள் எதுவும் எழாதபடி, எளிதாக என்ன செய்யனும் என்பதை, ஜல்லிக்கட்டில் அரங்கேற்றப்படும் அறிவு வறுமைகள் என்ற தலைப்பில் படிக்கலாம். 

இது சட்ட ஆராய்ச்சியாளர் என்ற வகையில், எனது தெளிவான நிலைப்பாடு. அவ்வளவே!  
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

ஜல்லிக்கட்டில் அரங்கேற்றப்படும் அறிவு வறுமைகள்
சட்ட சிக்கலே இல்லாமல், மிகவும் எளிதாகவும் தெளிவாகவும் தீர்க்க வேண்டிய ஜல்லிக்கட்டு பிரச்சினையை, இவ்வளவு தூரம் பெரிதாக்கியப் பின்னுங்கூட, 

அது அப்படி, இது இப்படியென இன்னும் பில்டப் கொடுத்து சொதப்பிக்கிட்டு இருக்கிறாங்கன்னா... 

இதில் சம்பந்தப்பட்டவர்கள் முழுக்க முழுக்க 

1. அரசியல் வியாதிகள் அரசியல் ஆதாயம் தேடுறாங்க...

2. நிதிபதிகள், நிதி ஆதாயம் தேடுறாங்க... 

3. சட்ட அதிகாரத்தில் இருப்பவர்கள் அனைவரும், அடிப்படை சட்டங்கள் ஐந்தில் அளவற்ற அறிவு வறுமையில் இருக்கிறாங்க...

4. இதன் மூலம், இதெல்லாம் சாதாரண விசயமல்ல; சட்ட விசயம். ஆகவே ரொம்பவே கஷ்டமென சொல்லாமல் சொல்லி, மக்களுக்கு சட்டத்தைப் பற்றிய பயத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்து கிறார்கள். 

ஆமாம், இந்திய சாசன கோட்பாடு 254(2) இன்படி, மாநில அரசு இதுதொடர்பான சட்டத்தை இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றால்தான் செல்லும். 

இல்லையெனில், மத்திய அரசின் சட்டத்துக்கு எதிரானது என்று செல்லாதது ஆகிவிடும். 

இதனை, இந்திய சாசன கோட்பாடு 255 இன்படி, மாநில அரசு சட்டம் கொண்டு வருவதற்கு முன்பே, தானே முன்வந்துங்கூட குடியரசுத் தலைவர் முன் கூட்டியே ஒப்புதலை வழங்க முடியும்.   

சட்ட ஆராய்ச்ச்சியாளர் என்ற என் நிலைப்பாட்டில், இதில் புடுங்குவதற்கு வேறு ஒரு ஆணியும் இல்லை. 

இதில், நாம் மிக முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டியது, அமைப்பு அல்லது அதிகாரம் என்று வந்து விட்டால், எளிதாக முடிக்க வேண்டிய காரியத்தை, அது ஒவ்வொன்றும் எப்படி எல்லாம் சுற்றி வளைத்து கடினமாக்கு என்பதைத் தான்! 
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Monday, January 16, 2017

வங்கியின் சேவை குறைபாடுகளை களைவது எப்படி?


சுமார் பத்தாண்டுகளுக்கு முன், சென்னையில் இயங்கி வரும் ரிசர்வ் வங்கியில், நம் வாசகர் ஒருவரின் மகன் நான் கொடுத்த யோசனை களின்படி கட்டுரையெழுதி பரிசுக்கு தேர்வாகி இருந்தான்.

இவன் யாரென்றால், தான் செய்த குற்றத்தில் இருந்து தப்பிப்பதற்காகவே சட்டம் படிக்கிறார்கள். தன்னால், படிக்க இயலாதபோது தங்களின் குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள் என்று, நீதியைத்தேடி... சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில் நூலில் எழுதி இருப்பேன். 

ஆமாம், அப்பையன்தான் இவன். இன்று பொய்யன்! 

இதனாலேயே இவனது அப்பா தண்டனையில் இருந்து தப்பித்திருப்பார் என எண்ணி விடாதீர்கள்!! 

ஆமாம், நான் நியாயமாகச் சொன்ன யோசனைகளை ஏற்காமல் கேட்க கூடாத சில பைத்தியங்களிடம் ஆலோசனையை கேட்டு வாதாடியதால், கூட்டாளிகளுக்கு ஏழு வருட தண்டனையை கொடுத்த நிதிபதி, இவருக்கு மட்டும் அதிகபட்ச தண்டனையாக பத்து வருடம் கொடுத்தார். 

இதில் கொடுமை என்னவென்றால், இதற்காகத்தான் அதிகபட்ச தண்டனையை கொடுக்கிறேன் என்று சொல்லியே கொடுத்தார். இதனை என்னிடம் சொல்லி புலம்பிய போதுதான், அப்பைத்தியக் காரர் சொன்ன ஆலோசனைகள், செய்த செயல்கள் எப்படி எல்லாம் தவறு என விளக்கினேன். 

இதனால், இவரின் மகள் திருமணங்கூட பாதிக்கப்பட்டதாக நினைவு. தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்து பிணையில் வந்தார். பின் என்ன ஆனது என்று தெரியாது. 

சரி நம்ம விசயத்துக்கு வருவோம். 

இவனைப் போலவே, மாநிலம் முழுவதிலும் இருந்து பலர் தேர்வாகி வந்திருந்தார்கள். ஆகையால், நானும் வரவேண்டுமென, அவ்வாசகர் என்னையும் அழைத்தார். நானும் சென்றேன். 

அப்போது, அரசுப் பள்ளியில் படித்த தாமஸ் என்பவர் தலைமை பொறுப்பில் இருந்ததாக நினைவு. அந்நிகழ்ச்சியில் என்னை பேச சொன்னார்கள். நான் வேறு என்னத்த பேசப் போறேன்? 

சட்ட விழிப்பறிவுணர்வைப் பற்றி பேசினேன். தாமஸ் ஆச்சரியப்பட்டார். தனது தனித்தொடர்பு எண்ணை கூட கொடுத்தார். நாம் போறது இதுக்கு மட்டும் இல்லியே!

அதனால், எனக்கு அறிமுகமான அவ்வங்கியின் ஊழியர் ஒருவரிடம், புதிய தகவல் எதுவும் கிடைக்குமா என சில தகவல்களை தெரியாதது போலவே போட்டு வாங்கினேன். ஆனால், அப்படி ஒன்றும் கிடைக்கவில்லை. 

வங்கி தொடர்பான சேவைகள் கடன் பெறுவது, கிரிடிட் கார்டு உள்ளிட்ட எதிலும், உங்களுக்கு சந்தேகங்களோ, குறைகளோ இருந்தால், அதுகுறித்து அவ்வங்கியின் தலைமைக்கு புகார் செய்வதை விட, அந்தந்த மாநிலத்தில் இயங்கும் ரிசர்வ் வங்கியிடம் கேட்டால், தெளிவான பதிலை, நீங்கள் எழுதும் மொழியிலேயே சொல்வார்கள்.

அதே நேரத்தில் நம் புகாரை முன்வைத்து, அனைத்து வங்கி களையும் கண்காணிக்கும் அதிகாரத்தின் கீழ் அவ்வங்கியிடம் விளக்கம் கேட்பார்கள் என்பதால், உங்களுக்கு ஏற்படும் வங்கிச்சேவை குறைபாடுகள் தீர்க்கப்படும் என்பதோடும் மீண்டும் வராது. 

இதனை எல்லாம் இதற்கு முன்பாகவே வேறொரு வாசகருக்காக சான்று நகலாக பெற்றிருக்கிறேன். பலருக்கு ஆலோசனையாகவும் சொல்லி இருக்கிறேன். ஆனால், இன்றுங்கூட இது தெரியாமல் பலர் உள்ளனர். 

மத்திய அரசின் கறுப்பப்பண ஒழிப்பு நடவடிக்கையின் காரணமாக, ஒவ்வொருவரும் வங்கியை நாட வேண்டி இருப்பதால், இந்த தகவல் மிகவும் முக்கியமானது ஆகும்.  

ஏனெனில், தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரனைப் போல, ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமாக தான்தோண்றித்தனமாக நடக்கும்போது, அதனை முடித்து வைக்க நமக்குள்ள ஒரே தீர்வு ரிசர்வ் வங்கிதான்.


ஆகையால் இதிலுள்ள தொடர்பு எண்ணையும், மின்னஞ்சல் முகவரியையும் உங்களது உலாப்பேசியில் பதிந்து வைத்துக் கொள்ளுங்கள். வங்கியில் தகராறு ஏற்படும்போது, அங்கேயே பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். அப்பொழுதுதான் வங்கித் தொழிலாளர்களின் கொட்டம் அடங்கும். 

ஆமாம், வங்கி என்பது பெரும்லாபம் கொழிக்கும் தொழிற்சாலை. ஆகையால், அதன் நிர்வாகமும், தொழிலாளர்களும் அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைக்க மறுத்து, உங்களின் அதிருப்தியை அரசின் மீது திசை திருப்ப பார்க்கலாம்.      

மிகமிக எளிதாக தீர்க்க வேண்டிய இத்தகவல்கள் எல்லாம் தெரியாததால்தான் கிரிடிட் கார்டால் பாதிக்கப்பட்டோர் சங்கம், கல்விக்கடன் வாங்கி தரும் புரோக்கர்கள் என்று ஒரு கூட்டம் ஏய்த்துப் பிழைக்கிறது என்றால், வங்கிகளின் அடாவடிகளை சமூக வலைத்தளத்தில் ஏற்றி சிற்றின்பம் அடையும் கூட்டமும் இருக்கிறது.  

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

சட்ட சந்தேகம் கேட்கலாம்; ஆலோசனை கூடாது!


நான் யாருக்கும் சட்ட ஆலோசனை சொல்லமாட்டேன். அதாவது எனக்கு தெரிந்த ஆலோசனைகளை நூல்களில் சொல்லி இருக்கேன். ஆகையால், நூலில் சொல்லியுள்ள ஆலோசனை விளக்கத்தில் புரியாதவை எதுவும் இருந்தால், அதுகுறித்து சந்தேகம் கேட்கலாம் என்பதும்.., 

அந்நூலை எழுதியவன் என்ற வகையில், சந்தேகங்களை தெளிவு படுத்த வேண்டியது என் கடமை என்பதே, என் நிபந்தனை!

ஆனால், இப்படி யாரும் சந்தேகம் கேட்டதில்லை. கேட்கவும் வாய்ப்பில்லாத அளவிற்கு எளிய புழங்கு தமிழில் எழுதி உள்ளேன். இதனை பத்திரிகைகள் பல வரவேற்று மதிப்புரையில் எழுதி உள்ளன. 

இப்புழங்கு தமிழும் தெரியாததால், முதல் முறையாக வாசகர் இஸ்மாயில் சிங் என்பவர் இன்று மின்னஞ்சல் மூலம் சந்தேகம் கேட்டுள்ளார். 


இதுவும் கூட, தானொரு ஆங்கில அடிமை எனவும், ஆகையால் தமிழில் தகராறு என்பதையும் ஒப்புக்கொண்டே கேட்டுள்ளார். ஆகையால், சொல்கிறேன்.   

இதற்கெல்லாம் அந்தந்த இடத்திலேயே அல்லது வேறு எங்காவது ஓரிடத்தில் விளக்கம் சொல்லி இருப்பேன் அல்லது அந்த இடத்திற்கு என்ன பொருள் வரும் என யோசித்தால், எளிதில் கண்டு பிடித்து விடலாம். நானும் இப்படித்தான் உட்பொருளை அல்லது அதன் கருப்பொருளை பிடிப்பேன். 

இதைத்தான் உங்களுக்கும் ஆலோசனையாக சொல்கிறேன் என்பதோடு இப்படி பிடிக்க ஆரம்பித்து படிக்க ஆரம்பித்தால்தான், புரியாத எதுவுங்கூட எளிதில் புரியும். பின் அதில் உங்களின் சிந்தனை, நீங்களே வியக்கும் அளவிற்கு இருக்கும்.  

இதுதவிர, உலாப்பேசி, விழிப்பறிவுணர்வு, மாற்றுத்திறனாளி, திருநங்கை போன்ற சில வாங்கியங்களை நானே உருவாக்கியும் பயன்படுத்தியும் வருகிறேன். இவையுங்கூட, உள்ளார்ந்த பொருளுடன் புரியும் விதத்திலேயே இருக்கும்.  

சரி, வாசகர் இஸ்மாயில் சிங் கேட்டுள்ள வாக்கியங்களுக்கான பதில் இதுதான்!

பற்றுகை = பிடி, பிடித்தல், சட்டத்தில் ஜப்தி

உறுதிமொழி பத்திரம் = நாமே ஒப்பமிடும் அவிடாவிட் 

கடப்பாடு ஆவணம் = சட்டப்படி நம்மை கட்டுப்படுத்தும் ஒப்பந்த ஆவணம். இது அமலில் உள்ள சட்ட விதிகளுக்கு எதிராக இருந்தால் செல்லாது.  

மோதல் சாவுகள் = காவலூழியர்களுக்கும் ரவுடிகளுக்கும் இடையே நடக்கும் சண்டையில், காவலூழியர்களால் நடத்தப்படும் கொலை. ஆனால், அவர்களோ தற்காப்புக்காக செய்யப்பட கொலை என்பார்கள். 

உண்மையில், இது முற்றிலும் திட்டமிட்டு அறங்கேற்றப்படும் கொலை என்பதை பல்வேறு விதங்களில் ஆராய்ந்துதான் பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி நூலில் எழுதி உள்ளேன். 

இதன் பிறகுதான், இக்கொலையை செய்வதற்கென பிரத்தியே கமாக காவலூழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவது தெரிந்தது. அவர்கள் அப்படியொரு பிரம்மிக்கும் தோற்றத்தில் இருக்கிறார்கள். இந்த விசயம் காவலூழியத்தில் உள்ள காவலர்களுக்கே தெரியாது. 

மேலும், இதுபோன்ற சம்பவங்களை அரங்கேற்றும் போது அது மக்களின் நடமாட்டம் இல்லாத (ரவுடிகள் பதுங்கும்) பகுதியாக பார்த்துக் கொள்வார்கள் அல்லது அருகில் மக்கள் வசிப்பவர்களாக இருந்தால், அவர்களை வீட்டுக்குள் இருக்கச் சொல்லி விட்டு, சுட்டுத்தள்ளும் காரியத்தை அரங்கேற்றி விடுவார்கள். 

ஆனால், அரிவாளால் ரவுடி தாக்கியதால், சுட்டேன் என பெரும்பாலும் கையில் சும்மாவே ஒரு கட்டைப்போட்டுக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் காவலூழியர் வேறு; உண்மையில் சுட்டுத் தள்ளியவர் வேறாக இருப்பார்கள்.  

இதனால், தன்னை யார் சுட்டது என்பதை செத்தவனா வந்து சொல்ல முடியும்? 

மக்களுக்கு ரவுடிகளின் மீது உள்ள அச்சத்தை, காவலூழியர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொ(ல், ள்)கிறார்கள். 

இதனை அரசுக்கும் ஆதாரமில்லாத செய்தியாக தெரிவித்து விடுவார்கள். அரசின் சம்மதம் இருந்தால்தான் செய்யமுடியும். இல்லாமல் செய்து விட்டால், அரசே கொலை வழக்கை பதிந்து, சம்பந்தப்பட்ட காவலூழியரை கைது செய்து விடும்.   

இதனை என்கவுண்டர் என்கிறார்கள். ஆனால், சட்ட விதிகளில் இப்படியொரு வார்த்தை இல்லை. இதைத்தான் தமிழில் மோதல் சாவுகள் சரியா என கேள்வி எழுப்பி உள்ளேன்.  

இதில், நாம் பார்க்கும் தொப்பை காவலூழியர்களா, இவ்வளவு தூரம் ரவுடிகளை குறிபார்த்து சுடுகிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு இருக்கத்தான் செய்தது. 

ஆனால், என்னுடைய கெட்ட பழக்கமே, உறுதியாக தெரிந்த ஒன்றை எழுதுவதுதானே! 

குறிப்பு: 

1. இவ்வாக்கியங்கள் எந்த நூலில், எந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆகையால், பொதுவான விளக்கத்தை கொடுத்து உள்ளேன். சில இடங்களுக்கு இது மாறுபடலாம் அல்லது வேறு வார்த்தையில் சொல்லி இருப்பேன். 

2. இப்படி, ஆக்கப்பூர்வமான சந்தேகங்களை கேட்கும்போது, நானும் ஆக்கப்பூர்வமான அப்டேட் தகவலை சொல்ல முடியும். 

3. ஆலோசனை கேட்டு எரிச்சல் ஊட்டினால், எரிந்து விழுவதை தவிர வேறு வழியில்லை. இனி யார் ஆலோசனை கேட்டாலும், அவர்களை எச்சரிக்கவே இப்பதிவு.  
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Sunday, January 15, 2017

மனநல பாதிப்பில் உள்ள அவலங்கள்!


இது எனக்கு சமூக வலைத்தளத்தின் மூலம் வந்த தகவல். இதன் முக்கியத்துவம் கருதி இப்பக்கத்தில் பகிர்கிறேன்.    

***************

"வெற்றிச் செல்வன்'’ படத்தின் முக்கியக் காட்சிகளை 20 நாட்களுக்கும் மேலாக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் ருத்ரன். அந்த அனுபவங்களைக் கேட்கலாம் எனச்சென்றால்...

"எனது படத்தைப் பற்றி எதுவும் பேசத் தேவையில்லை. ஆனால், கீழ்ப்பாக்கத்தில் நடைபெறும் கொடுமைகளை உங்கள் பத்திரிகை மூலமாகப் பேச வேண்டும். அங்கு நடைபெறும் அவலங்களை நேரில் பார்த்து அதிர்ந்து போய்விட்டேன். அங்கு நோயாளிகளுக்கு மனநல சிகிச்சை வழங்கப்படுவதைவிட, அவர்களை மென்மேலும் மன நோயாளிகளாக ஆக்குவதற்கான செயற்பாடுகள்தான் அதிகமாக நடைபெறுகின்றன’’ எனப் படபடத்தபடி பேச ஆரம்பித்தார் ருத்ரன்.

"அவன் இவன்’' உட்பட பாலாவின் சில படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. "யாவரும் நலம்'’ படத்தில் இயக்குநர் விக்ரம் குமாரின் உதவியாளராக நான் பணியாற்றியபோது லொகேஷன் பார்ப்பதற்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன்.

அப்போது நான் சந்தித்த ஒரு நபர்தான் எனது "வெற்றிச் செல்வன்' படத்திற்கான ஆரம்ப விதையாக இருந்தார். நான் சந்தித்த அந்த நபர் காமராஜரின் ஆட்சியில் அமைச்சராக இருந்த கக்கனின் மகன் நடராஜ மூர்த்தி.

நேர்மையான அரசியல்வாதியாக கக்கனை எங்களுக்குத் தெரியும். ஆனால், அவரின் மகன் நடராஜ மூர்த்தி கீழ்ப்பாக்கம் மருத்துவ மனையில் சுமார் 30 வருடங்களாக அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில் கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்கிறார் என்றால் அது, தமிழருக்கு எவ்வளவு பெரிய அவமானம்???

அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சரியான முறையில் நடத்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை. அவர் சொன்ன சில கதைகளை வைத்துத்தான் இந்தப் படத்தை எடுத்தேன்.

கீழ்ப்பாக்கத்தில் சுமார் 3000 பேர் வரை இருக்கிறார்கள். அதில் சுமார் 500 பேருக்கு மேல் முற்றிலும் குணமானவர்கள். ஆனால், அவர்களை அழைத்துச் செல்ல யாருமே இல்லாததால், இன்னும் அங்கேயே இருந்து மேலும் மேலும் மனச் சிதைவுக்கு உள்ளாகிறார்கள்.

கீழ்ப்பாக்கத்தில் படப்பிடிப்பு நடத்த என்னிடம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை அன்பளிப்பாக மருத்துவமனை நிர்வாகம் கேட்டது. அந்தப் பணத்தில் நோயாளிகளுக்கு ஏதாவது செய்கிறேன் எனக் கேட்டபோது, அதற்கு அனுமதிக்கவில்லை.

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கூட எங்களைப் போல சாதாரணமான மனிதர்கள் தானே...

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் எல்லா நோயாளிகளும் இரவு ஆறு மணிக்கே இரும்புக் கதவுகளின் பின்னால் அடைக்கப்படுகிறார்கள். அந்த இரும்புக் கதவுகள் ஆங்கிலேயர் காலத்தில் செய்யப்பட்டவை. சிறிதளவு காற்றுகூட அந்தக் கதவு வழி புகமுடியாமல் முழுவதுமாக மூடி இருக்கும். நான் அங்கு பார்த்த பெரும்பாலான நோயாளிகள் தங்களைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளை அவிழ்த்து விடுமாறு கதறுவார்கள். ஆனால், கேட்பதற்கு யாரும் இல்லை.

பறவைக்கு கூட தான் விரும்பிய இடம் எல்லாம் பறக்க முடியும். ஆனால், அங்கிருப்பவர்களால் அந்த வாசலைத்தாண்டி எங்குமே போக முடியாது.

சமைப்பது, துணி துவைப்பது, உட்பட அங்குள்ள சகல வேலைகளையும் நோயாளிகள் தான் செய்கிறார்கள். தோட்ட வேலைகளைக் கூட அவர்கள்தான் செய்கிறார்கள். சும்மா ஒரு லாஜிக்கிற்காக கேட்கிறேன், அவர்கள் மனநலம் சரியில்லாதவர்கள் என்றால் அவர்கள் கைகளில் கடப்பாறை போன்ற கூரிய ஆயுதங்களைக் கொடுக்கலாமா?

அங்கு இருக்கும் காவலர்கள் எல்லாம் அடியாட்கள் போல இருப்பார்கள். ஒரு சிறிய தவறு செய்து விட்டால் கூட நோயாளி களை தூக்கிப் போட்டு ரத்தம் வரும் வரைக்கும் மிதிப்பார்கள்.

ஒரு நோயாளிக்கு அவர் விரும்பிய உணவை நான் வாங்கிக் கொடுத்ததற்காக, அவரை எனது கண்ணிற்கு முன்னால் அவர் மயக்கமாகும் வரைக்கும் அடித்தார்கள். இன்றுவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பத்திரிகையாளர்கள் யாருமே செல்ல முடியாது. பத்திரிகையாளர்கள் சென்றால் அவர்கள் அங்கு நடக்கும் அநீதிகளை வெளி உலகிற்கு அடையாளம் காட்டி விடுவார்கள் என்றுதான் அவர்களை நிர்வாகம் அனுமதிப்பதில்லை.

அங்கு நடக்கும் கொடுமைகளுக்குப் பதிலாக அந்த நோயாளிகளை கருணைக் கொலை செய்து விடலாம்.

நான் பார்த்த ஒரு நோயாளி சுமார் 10 வருடங்களாக அங்குள்ள யாருடனும் பேசுவது இல்லை. அங்கு நடக்கும் கொடுமைகளால் மனம் உடைந்து அவர் பேசுவதில்லை எனச் சொன்னார்கள்.

தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட வேண்டும். ஊடகங்கள் இந்த நோயாளிகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். குரல் கொடுத்தால் என்னைப் போன்ற 3000 சக மனிதர்கள் நல்வாழ்வு பெறுவார்கள் என முடித்துக்கொண்டார். 

***************** 

சமூக வலைத்தளத்தில் வந்ததாலேயே, இத்தகவல் உண்மையென நம்பிவிட முடியுமா... இதனை ஒரு பதிவாக பதிந்தது எந்த விதத்தில் நியாயமாகும் என்ற கேள்விகள் உங்களுக்கு எழலாம். 

ஒரு தகவலை படிக்கும்போதே, அது எந்த அளவிற்கு உண்மை என்பதை என்னால் உணர முடியும். இப்படி உணருவதற்கு முன்னால், அதனை ஆராய்ந்தும் இருப்பேன். 

மனநலம் குன்றியவர்களை எப்படி குணப்படுத்த வேண்டும் என்பதையும்; ஆனால் அப்படி குணப்படுத்தாமல், தூக்க மாத்திரைகளை கொடுத்துக் கொடுத்து, எப்படி நிரந்தர நோயாளிகளாகவே வைத்திருக்கிறார்கள் என்பதைப் பற்றி, ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலில் எழுதி உள்ளேன். 

ஆமாம், அரசின் அமைப்புக்கள் மட்டுமல்ல; அரசு சாராத ஃபண்டு அமைப்புக்களும் கூட, தங்களை நிரந்தரமாக நிலைப்படுத்திக் கொண்டுதான் பிழைப்பை நடத்த வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட வேலைகளைத்தான் செய்கின்றன. 

இதனால்தான், எந்தவொரு அமைப்பும் அதன் நோக்கத்திற்கு நேர் எதிராகத்தான் செயல்படும் என்பதை, ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலில் ஆணித்தரமாக நிறுவியுள்ளேன்.

மனநோயாளிகள் எல்லோரும், உண்மையான மனநோயாளிகள் கிடையாது என்பதை, அவர்கள் அத்தியாவசியமான ஆடைகளை அணிவதில் இருந்து அறிந்து கொள்ள முடியும். ஆனாலும், இதில் ஏதோவொரு வகையில் இன்பம் அடைகிறார்கள்.

ஆனால், இவர்கள் ஏதோவொரு காரணத்திற்காக, மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக, நடிக்க ஆரம்பித்து, பின் அந்நடிப்பில் இருந்து வெளிவர முடியாமல் நிரந்தரமாக சிக்கிக்கொண்டு அல்லல்படுகிறார்கள் என்பதே உண்மை!

இவர்கள் இதனை மனநல மருத்துவமனையில் சேர்ந்தப் பிறகு தன் தவறை  உணர்ந்து, தப்பித்தவறி நடிப்பை கைவிட்டு, உறவினரோடு சேர்ந்து வாழ முற்பட்டாலும், உறவுகளும் அழைத்துச் செல்ல உடன்பட்டாலும், அதுவரை உண்ட மாத்திரைகளின் பக்க விளைவுகளால் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியாது.

ஆகவே, உங்களது குடும்பத்தில் ஒருவரோ அல்லது தெரிந்தவரோ இப்படிச் செய்தால், இதுகுறித்த எச்சரிக்கையை அவர்களுக்கு விடுத்து இயல்பான வாழ்க்கைக்கு உதவிடுங்கள்.

இந்த விசயத்திலும் நான் பல்வேறு விதங்களில் ஆராய்ந்து, சிலரை இயல்பு வாழ்கைக்கு மீட்டுள்ளேன், சிலரை மீட்க முடியாமல் கைவிட்டுள்ளேன்.

இதில் மிகமிக முக்கியமாக தன் வழக்கை தானே நடத்துபவர்கள், சரியான புரிதல் மற்றும் தெளிவில்லாமல் புலம்பலாக நடந்து கொண்டால், நிதிபதிகள் தங்களின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பைத்தியக்கார முத்திரையை குத்தி விடுவார்கள்.

இதுபற்றி நீதியைத்தேடி... சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி நூலில் எழுதி உள்ளேன். இதை எல்லாம் கவனமாக படித்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்; புலம்பல் இல்லாத புலமையோடு வழக்கை நடத்த முடியும். எச்சரிக்கை! 

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Monday, January 9, 2017

எழுத்தாளர்கள் சிறந்த சீர்த்திருத்தவாதிகளாக இருக்கோணும்!


இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது என்றால், அதில் எழுத்தாளர்களுக்கு என்று நிறையவே தனிச்சிறப்புகள் இருக்கிறது. ஆனால், இத்தனித் தன்மையானது விரல்விட்டு எண்ணக்கூடிய வெகுசில எழுத்தாளர்களுக்குத்தான் இருக்கிறது.

ஆமாம், ‘எழுத்தாளர்கள்’ என்ற வார்த்தையிலேயே, ‘எழுத்தால் ஆளும் வல்லமை கொண்டவர்கள்’ என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.

இது அவர்கள் வாழும் காலத்தில் மட்டுமன்று; அவர்களது வாழ்நாள் முடிந்துங்கூட, எழுத்தின் தன்மையைப் பொறுத்து, பல்லாண்டுகள், பலநூறு ஆண்டுகள், பல்லாயிரம் ஆண்டுகள் என அவர்களது நூல்கள் வாசிக்கப்படும் வரை (வாழ், ஆள்)கிறார்கள்.

இவர்கள் வாழ்ந்து மறைந்தப் பின்னும், அவர்களது நூல்கள் வாசிக்கப்படுகிறது என்றால், ‘எழுத்தாளர்கள் தற்காலத்தையும், எதிர்காலத்தையும் உணர்ந்து எழுதியவர்கள்’ என்று பொருள்.

ஆனால், இது ஏதோவொரு கொள்கை உணர்வோடு வாழ்ந்த கொள்கை எழுத்தாளர்களுக்குதானே அன்றி, பணஞ் சம்பாதிக்க வேண்டுமென்ற கொள்ளை நோக்கோடு வாழ்ந்தவர்களுக்கு கிடையாது. ஏனெனில், அவர்கள் எழுத்தாளர்களே கிடையாது. ஆனால், இன்று இவர்கள்தான் துரதிருஷ்டவசமாக அதிகமாக இருக்கிறார்கள்.  

உண்மையாக, பொய்யர்களைப்பற்றி சத்தியவான் காந்தி 1908 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கருத்து, இன்று நூற்றாண்டை கடந்தப்பின் நம்மால் படிக்கப்படுகிறது. இதுவே, அவர் வாழ்ந்த காலத்தில் குறைவாகத்தான் இருந்திருக்கும்.

இன்னுஞ் சொல்லப்போனால், 2008 ஆம் ஆண்டில், எழுதிய நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம் நூலில், சட்ட ஆராய்ச்சியாளர் திரு. வாரண்ட் பாலா அவர்கள் காந்தியின் கருத்தை பதிவுசெய்தப் பிறகே, இதனை அதிகமாக வாசிக்கத் தொடங்கி இருக்கிறோம்.

இதன் உச்சகட்டமாக சம்பந்தப்பட்ட அப்பொய்த்தொழிலில் உள்ள பொய்யர்களையும், நிதிபதிகளையுமே, நம் நூல்களை கொடுத்தும், வாங்கியும் வாசிக்க வைத்திருக்கிறோம்.

இப்படி, ஒரு கொள்கையுள்ள எழுத்தாளரின் எழுத்துக்களை, அவரைப் பின் தொடர்ந்து வரும் கொள்கையுள்ள எழுத்தாளர்கள் தான், சமூகத்திற்கு எடுத்துச் (செ, சொ)ல்ல வேண்டி உள்ளது. இப்படித்தான் பற்பல எழுத்தாளர்கள், சமூகத்தின் சீர்த்திருத்தத் திற்காக வாழையடி வாழையாக வரிசையாக வந்துக் கொண்டே இருக்கிறார்கள்.

காந்தியவர்கள் பல கொள்கைகளை கடைப்பிடித்தவர். ஆனால், சட்டத்தொழிலில் தான் கடைப்பிடித்ததை மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. காரணம், அதற்கான அசாதாரண சூழ்நிலையும் அப்போது அவ்வளவாக நிலவவில்லை.

ஆனால், இப்போது அதற்கான தேவை, குறிப்பாக நம் தமிழ்நாட்டில் நிலவி இருக்கிறது என்பதற்கான உண்மைதான், சாதாரண தொழிலாளியான திரு. வாரண்ட் பாலா அவர்களின் வருகையும், சமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கு என்ற கொள்கை கொண்ட சட்ட ஆராய்ச்சியும், என்றால் மிகையன்று என்பது, அவரது கடமையைச் செய்! பலன் கிடைக்கும் நூலைப் படித்தால், புரியாதவர்களுக்கு கூட, மிக எளிமையாக புரியும்!

ஆமாம், எங்கெல்லாம் என்ன மாதிரியான கடமையாளர்கள் தேவையோ, அங்கெல்லாம் அப்படியே கடமையாளர்கள் இயற்கை யாகவே உருவாகிறார்கள் என்பதற்கு பல்வேறு சான்றுகளை கடமையைச் செய்! பலன் கிடைக்கும் நூலில் நிறுவியுள்ளார்.

இந்த வகையில், அடிப்படை சட்ட அறிவே இல்லாமல், பொய்யர்களும் நிதிபதிகளும் இருக்கும்போது, இவருக்கு இருக்கிற சட்டப்புலமைக்கு, இவர் விரும்பும் எந்தவொரு பதவிக்கு வேண்டுமானாலும் நேர் வழியிலேயே போகமுடியும், சுகமாய் வாழ முடியும். ஆனால், இவரோ அப்படிச் செய்யாமல், மக்களுக்கு போதிப்பதையே கடமையாக கொண்டுள்ளார்.

உண்மையில், ஒரு கொள்கையுள்ள எழுத்தாளரின் மறைவுக்குப் பின்னர், அரசாங்கம்தான் அவரது நூல்களை நாட்டின் உடைமையாக அறிவித்தும், அதற்கு பரிசுத்தொகை கொடுத்தும் கௌரவப்படுத்தும்.

ஆனால், இவரோ, சமூகத்திற்கு சட்டத்தை போதிப்பதே கொள்கை என்ற இலட்சிய நோக்கோடு, தான் எழுதிய நூல்களையே பொதுவுடைமை என முன்னோடியாக அறிவித்து, நம்மையெல்லாம் கெளரவப் படுத்தி  உள்ளார் என்றாலும் மிகையன்று!

உலகச் சமூகத்தின் பல்வேறு பங்களிப்புச் சீர்த்திருத்தங்களில், தமிழர்களின் பங்கும், வழிகாட்டுதலும் அலாதியானது. இதனை சுதந்திரப் போராட்ட நிகழ்வில் காந்தியும் ஒப்புக்கொண்டு உள்ளார். இதுபோல, சமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கும் நாமே வித்திட்டு இருக்கிறோம். 

ஆமாம், நம் சட்ட விழிப்பறிவுணர்வு மற்றும் விமர்சனங்களால், உள்ளகை நெல்லிக்கனியாக நமக்கு தெரிந்து என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை, எடுத்துக்கூறி அனைத்து அச்சு ஊடகங்களுக்கும், ‘‘மநு வரையுங்கலை!’’ நூலை மதிப்புரைக்காக ஒரு மாதத்திற்கு முன்பே எழுதி அனுப்பிய கடிதம் இதோ!

ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.

நம் சமூகம் சரியானதொரு சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற வேண்டுமென்கிற அடிப்படையில், சட்ட ஆராய்ச்சியாளர் திரு. வாரண்ட் பாலா அவர்களின் நூல்களை ‘மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 4000 க்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் அனைத்து நீதிமன்றங்களுக்கும்’ தொடர்ந்து வழங்கி வருகிறோம். 

இந்த வகையில், இத்துடன் இணைக்கப்பட்டுள்ள எங்களின் ஏழாவது வெளியீடான ‘‘மநு வரையுங்கலை!’’ நூலையும் கொடுத்துள்ளோம். இந்நூலுக்கான தங்களின் மதிப்புரையை வழங்கிடுமாறும் கோருவதை கடமையாக கருதுகின்றோம். 

வெளியீடு: கேர் சொசைட்டி, 53, ஏரித்தெரு, ஓசூர் - 635109. 

இந்நூலின் நன்கொடை ரூ.400. உலாப்பேசி எண் 9842909190.

இணையப்பக்கம் www.neethiyaithedy.org

*************** 

எங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக் கொள்கை நோக்கம் எந்த அளவிற்கு, சென்னை உயர்நீதிமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு உள்ளது என்பதை, ஒருசில உண்மை சம்பவங்களின் மூலம் உள்ளங்கை நெல்லிக்கனியாக உங்களுக்கு எடுத்து உரைக்க விரும்புகிறோம். இது நீங்கள் எழுதும் மதிப்புரைப் புரிதலுக்கு பேருதவியாய் இருக்குமென நம்புகிறோம். அவ்வளவே!


1. இம்மநு வரையுங்கலையின் பக்கம் 392 முதல் 414 வரையில் கொடுப்பட்டுள்ள 02-05-2014 தேதியிட்ட மநுவில் சொல்லப்பட்டுள்ளபடி, ‘‘சென்னை உயர்நீதிமன்றம் முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்ய காவலர்களுக்கு உத்தரவிட இயலாது’’ என்பதை  27-09-2016 அன்று ஒப்புக்கொண்டது. இதுகுறித்த நாளிதழ்களில் வெளியான செய்திகளை இணைத்து உள்ளோம்.

2. (வழக்கறிஞ, பொய்ய)ர்களின் ஒழுங்கீனங்களைக் கட்டுப்படுத்த, சென்னை உயர்நீதிமன்றம் கொண்டு வந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து அவர்கள், நாடு முழுவதும் நீதிமன்ற புறக்கணிப்பு செய்தபோது, வழக்காளிகளையே வழக்காட அழைக்க வேண்டு மென்ற எங்களது 25-07-2016 தேதிய கோரிக்கைக்குப் பிறகு, 04-08-2016 தேதியில் அப்படி அறிவித்தது குறித்த நாளிதழ் செய்திகள் என இரண்டையும் இணைத்துள்ளோம். 
3. 2010 ஆம் ஆண்டில் நாங்கள் வெளியிட்ட, ‘‘நீதியைத்தேடி... சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி?’’ நூலில், ‘‘திருநங்கைகள் காவலராக சிறப்பு தகுதி பெற்றவர்கள்’’ என்ற தலைப்பில், பக்கங்கள் 212 முதல் 220 வரையில் எழுதியதும் சென்னை உயர்நீதி மன்றத்தால் நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

4. பொதுவாக, எல்லோரையும் அரசூழியர்கள் என குறிப்பிடுவது தவறு. சட்ட விதிகளின்படி, அரசின் நேரடி துறைகளில் ஊழியம் புரிபவர்களை ‘அரசூழியர்கள்’ என்றும், அரசின் அதிகாரம் பெற்றத் துறைகளில் ஊழியம் புரிபவர்களை, ‘‘பொது ஊழியர்கள்’’ என்றும் சொல்வதே சரியானது. 

மற்றபடி, ‘கழகம், வாரியம் ஆகியவற்றில் ஊழியம் புரிபவர்கள் அரசூழியர்கள் அல்லர்’ என்பது, இந்நூலின் பக்கங்கள் 74 முதல் 86 வரை தெளிவாக எடுத்துரைக்கப்பட்டு உள்ளது.

5. மேலும், சட்ட விதிகளில் இல்லாத புதிய சட்டப் பிரச்சினைகளுக்கும் உடனே நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் ஏற்படுத்தப்பட்ட, ‘‘நீதிப்பேராணை வழக்குக்களால் தான், நீதி சமாதி ஆக்கப்படுகிறது’’ என்பது, இந்நூலின் 2-வது அத்தியாயம் முழுவதும் விரிவாக எழுதப்பட்டு உள்ளது. 

இதனை நல்லதொரு உண்மையோடு எடுத்துக்காட்டும் விதமாக, ‘நிதிபதி சந்துரு, தான் விசாரித்த நீதிப்பேராணை வழக்கு ஒன்றில், திரித்து எழுதிய தீர்ப்பை விமர்சித்து அவருக்கு எழுதிய கடிதமானது’ பக்கம் 471 முதல், 493 வரையில் தொகுக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இவர் ஓய்வு பெற்றப்பின், ‘தன்னைவிட உத்தமர் யாருமில்லை என்பதைப் போல காட்டிக்கொண்டு ஊடகங்களில் உலா வர, இவரை நீதி நாயகம் உள்ளிட்ட பல்வேறு கௌரவப் பெயர்களில் அழைத்து நீதிக்கு தலைக்குனிவை ஏற்படுத்துகி(றா, றீ)ர்கள்’. 

இதுபற்றி இயன்றால் கேட்டுச் சொல்லுவீர்கள்; இல்லையேல், உண்மையைத் தெரிந்து கொண்டு அதற்கேற்வாறு செயல்படு வீர்கள் என்பதற்காகவே, இத்தகவலை உங்களுக்குச் சொல்கிறோம். அவ்வளவே! 

இப்படி, மேலும் பற்பல சட்ட சங்கதிகளை ஆராய்ந்து, ஆதாரப்பூர்வமாக நூல் முழுவதும், தொலைநோக்கு பார்வையில் எழுதியுள்ளார், சட்ட ஆராய்ச்சியாளரும், மநு வரையுங்கலை! நூலின் ஆசிரியரும் ஆன திரு. வாரண்ட் பாலா!! 

எனவே, நம் சமூகம் சரியானதொரு சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற இயன்றவரை நூல் முழுவதையும் படித்து, தங்களின் மதிப்புரையை வழங்கிட கேர் சொசைட்டியின் சார்பாக கோருகிறேன். நன்றி!

இணைப்புகள்: மநு வரையுங்கலை! நூல் மற்றும் இக்கடிதத்தில் சுட்டிக்காட்டி உள்ள சங்கதிகளுக்கான ஆதாரச் சான்றுகள். 

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Friday, January 6, 2017

இனி நீங்கள் கடிதம் எழுத வேண்டி இருக்காது!


வழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்களுக்கான முகநூல் குழுவை ஆரம்பித்ததன் நோக்கத்தில், சட்ட ஆர்வலர்கள் அனுபவம் பெறும் பொருட்டு, நாளிதழ் அறிவிப்பில் உள்ளவருக்கு கடிதம் எழுதி, அறிவை விருத்தி செய்து கொள்ள வேண்டும் என்பதும் ஒன்று. 

ஆனால் Mee Rajendran என்பவர் மட்டுமே கடிதம் எழுதினார். அது திரும்பி வந்த கடிதத்தையும், அதற்கு கர்நாடக உயர்நீதி மன்றத்துக்கு அனுப்பிய மனுவையுங்கூட பதிவிட்டேன்.

ஆனால், கடிதம் எழுதுவதாக சொன்ன மற்றவர்கள் யாரும் எழுதியதாக தெரியவில்லை. இதற்கான செலவைகூட நாங்களே ஏற்கத் தயாராய் இருந்தும் யாரும் முன்வரவில்லை 

இதனை உறுதிப்படுத்தவும், ஒரு முகவரிக்கே பலரும் கடிதம் எழுதுவதை தவிர்க்கவும், கடிதம் எழுதுபவர்கள், அதுகுறித்த தகவலை, அந்தந்த நாளிதழ் பதிவில் பின்னூட்டமாக பதிவிடச் சொன்னேன். ஆனால், இப்படி யாரும் எழுதியதாக பதிவிடவில்லை. 

ஓரிருவரைத் தவிர, நாளிதழில் வரும் விளம்பரங்களை கூட மற்றவர்கள் பதிவிடவில்லை. ஆகையால், பலரும் நாளிதழ் களைக்கூட படிப்பதில்லை அல்லது படித்தாலும் பதிவிட முன்வர வில்லை என்றே முடிவுசெய்ய வேண்டியுள்ளது. 

இந்த நிலையில்தான், சொன்னால் செய்வதற்கு தயாராக உள்ள சென்னை வாழ் வாசகர் திரு. சதீஷ்குமார், திரு. ஹேமந்த் போன்ற ஓரிருவரை சென்னை முகவரிக்கு அனுப்பி தகவல் சொன்னதையும் பதிந்தேன்.


இதில், இந்த அறிவிப்பில் உள்ளபடி தெருவே இல்லை என்பதையுங் கூட, அப்பகுதிக்கான வட்டார அஞ்சலகத்தில் உறுதிப்படுத்தியதன் அடிப்படையில் பதிந்தேன். சாட்சிய சட்டப்படியான சான்றுக்காக அன்றே, இம்முகவரிக்கு கடிதம் எழுதியாச்சி! 


மக்களிடையே இக்குழுவின் நோக்கத்தை திறம்பட எடுத்துச் (செ, சொ)ல்லும்  பொருட்டு மேற்பார்வை செய்யவும் பலருக்கு அனுமதி அளித்தோம். அப்படியுங்கூட, யாரும் அளவாககூட ஆர்வங் காட்டவில்லை. குறைந்தபட்சம், இக்குழுவிற்காக எங்களால் நேரம் ஒதுக்க இயலாது என்பதை கூட தெரிவிக்கவில்லை, ஏனோ?!

இதையெல்லாம், நாங்கள் ஏற்கெனவே பல்லாண்டுகளாக ஆராய்ந்தும், அறிந்தும், கடந்தும் வந்தவர்கள்தான் என்பதால், மக்களின் மனதில் இன்னும் மாற்றம் வரவில்லை என்பதையே உறுதிப்படுத்திக் கொண்டோம்.   

ஆகவே, உங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கும் நிமிடத்தில் நாமே எழுதி விடலாம் என்ற முடிவுக்கு வந்து, இனி கடிதம் எழுதும் வேலையை திரு. அய்யப்பனே நேரடியாகவோ அல்லது வேறு உதவியாளர்களின் மூலமாகவோ செய்வார் என்று..,  

அதற்கான ஏற்பாடுகளை செய்து முதல் கடிதத்தை 01-1-2017 அஞ்சல் செய்துவிட்ட நிலையில், இதில் எதிர்பாராத திருப்பமாக 03-01-2017 அன்று முகநூல் வாசகர் திரு. ம.பி. தாமோதரன் கடிதம் எழுத தேவையான அஞ்சலட்டையை வாங்கி விட்டதாகவும், தனக்கு கடிதம் எழுதும் வேலையை தொடர்ந்து தரவேண்டும் என்றும் தன்னார்வத்தோடு  கேட்டுக் கொண்டார்.


சரி, இவரால் எழுத முடியாத போது, திரு. அய்யப்பன் எழுத வேண்டும் என்ற புரிதலின் அடிப்படையில் பகிர்ந்து கொடுத்தாகி விட்டது. நாங்கள் வருவார்கள் என எதிர்பார்த்தது இப்படிப்பட்ட ஓரிரு ஆர்வலர்களைத்தான்!

ஆகையால், இனி நீங்கள் யாரும் மிகவும் சிரமப்பட்டு கடிதம் எழுத வேண்டி இருக்காது என்பதை, உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.    

சென்னை சதீஷ், ஹேமந்த் போன்று நேரில் தகவல் சொல்ல முயல்பவர்கள் அதுகுறித்து தனது நிலைப்பாட்டை அந்தந்த பதிவிலேயே பின்னூட்டமாக பதிவிட்டால், அதற்கு மட்டும் கடிதம் எழுதுவதை தவிர்ப்பார்கள். 

வழக்குக்கள் குறித்து பல்வேறு நாளிதழ்களில் வரும் விளம்பரங்களில் நடக்கும் முறைகேடுகளை, இதுபோன்ற சமூக வலைத்தளத்தின் வழியாக ஆவணப்படுத்தி, இதனை அடுத்த கட்ட சட்ட நடவடிக்கைக்கு தக்கதொரு சாட்சியமாக பயன்படுத்தி, 

நாளிதழ் அறிவிப்புக்கான சட்ட விதியையே நீக்கத்தேவையான அல்லது ஒழுங்குப்படுத்த தேவையான அடுத்தடுத்த சட்ட நடவடிக்கையை, இதுபோன்ற விளம்பரங்களை சட்ட அறியாமை யாலும், சமூகப் பொறுப்பு இல்லாமலும் வெளியிடும் காலை, மாலை நாளிதழ்களில் ஆரம்பித்து  அனைத்து மட்டத்திலும் மேற்கொள் வதற்காக.., 

இக்குழு தேவையான காலத்திற்கு மட்டும் அல்லது நாளிதழ் விளம்பரங்களைப் பதிவிடும் ஆர்வலர்கள் மற்றும் கடிதம் எழுதும் ஆர்வலர்கள் விரும்பும் வரை இயங்கும். 

எனவே, இதுதொடர்பான உங்களின் பதிவுகள், பின்னூட்டங்கள், கடிதங்கள் திரும்பி வருதல் என எதுவாக ஆயினும், வழக்கக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் என்ற முகநூல் குழுவில் மட்டும் பகிரவும். 

சமூகத்திற்கு தேவையென நினைத்தால், இக்குழுவில் பகிரப் படும் மிகமுக்கிய சங்கதிகள் அனைத்தையும் தொகுத்து, இதே தலைப்பில் வழிகாட்டும் சிறு நூலொன்றை வெளியிடுவோம். அவ்வளவே! 

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

எரிபொருள் முகவாண்மைகளின் கொள்ளையும் முடங்கும்!


ஏஜென்சி என்பதற்கு தமிழில் முகவாண்மை என்று பெயர். இந்த ஏஜென்சியில் அனைவருக்கும் எமர்ஜென்சியானது கேஸ் ஏஜென்சிகளே ஆகும்.

நம்முடைய சட்ட ஆராய்ச்சியாளர் திரு. வாரண்ட் பாலா அவர்கள், தனது ஏழாவது நூலான ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் கழகம், வாரியம் (கார்ப்பரேஷன், போர்டு) என முடியும் தன்னாட்சி உற்பத்தி துறைகளில்தான் அதிக ஊழல்கள் நடக்கும் என்பதை, நமக்கு தெளிவுபட சொல்லி உள்ளார்.

இதிலும் குறிப்பாக, இதுபோன்ற கழகங்களும், வாரியங்களும் முழுமையான அரசும் இல்லாத, முழுமையான தனியாரும் இல்லாத, அவ்வப்போது ஆளும் அரசியல்வாதிகளின் தொழிற்சாலைகள் என்பதையும், இந்நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அரசுமல்லாத, தனியாருமல்லாத அரைகுறை ஊழியர்கள் என்பதையும் தெளிவுபட எடுத்துரைத்து உள்ளார்.  

இப்படியெல்லாம் சட்டத்தில் பொருள் இல்லாததைக்கூட, சட்டப்படியே ஆராய்ந்து, அதிலுள்ள உண்மைகளை எடுத்துச் சொல்ல இவர் ஒருவரால் மட்டுந்தான் முடிகிறது என்பது, எற்கெனவே பல்வேறு வழிகளில் நிரூபிக்கப்பட்டதுதான்.  

இப்படிப்பட்ட கழகங்கள், வாரியங்கள் எவையெவை என்ற பட்டியலிட்டு பார்த்தால், அவ்வப்போது விலையேற்றம் செய்யப்படும் பெட்ரோல், டீசல், எரிவாயு உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களும் ஒன்று என்பதும் நமக்கு நன்கு புலப்படும்! 

எனவே, ஊழலை ஒழிக்க விரும்புவோர், கழகம் மற்றும் வாரியங்களில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதற்கேற்ப, நேற்று சம்பவம் ஒன்றை நேர் நிகழ்வில் காண நேர்ந்தது.    

ஆமாம், சுமார் மூன்று வருடங்களுக்கு மேலாக, நம்முடைய எரிபொருள் உருளையை இணைய வழியில் புக் செய்ய வசதி செய்யப்பட்டிருந்தும், நம்மைப் போன்ற பெரும்பாலானோர் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

ஆனால், இன்றோ கறுப்புப்பண ஒழிப்பில் ஏற்பட்ட பணத்தட்டுப்பாட்டால், எதையெல்லாம் இணைய வழியில் வாங்க முடியும் என யோசிக்க ஆரம்பித்ததன் விளைவு, ஏரி வாயுவையும் இணைய வழியில் பதிவு செய்ய நேரிட்டது.

ஆனால், இணைய இணைப்பின் சொதப்பல் காரணமாக வங்கிக்கணக்கில் இருந்து, பணம் போனதே ஒழிய, சிலிண்டருக்கான கோரிக்கை பதிவாக வில்லை. ஒருநாள் கழித்தும் பணமும் திரும்பாததால், நேரடியாக சென்று பதிவு செய்யலாம் என ஏஜென்சிக்கு சென்றபோதுதான், இந்த அதிர்ச்சியான தகவல் தெரிந்தது.

ஆமாம், நான் ஏஜென்சிக்கு சென்றிருந்தபோது, வீடுகளுக்கு எரிவாயுவை ஒப்படைக்கும் ஊழியத்தில் உள்ள அனுபவமில்லாத வாலிபன் அழுது கொண்டிருந்தான். என்ன பிரச்சினை என்று கேட்டேன்.

அவன் டெலிவரி செய்த ஒவ்வொரு சிலிண்டருக்கும், சிலிண்டருக்கு ரூபாய் 20 வீதம் ஏஜென்சியில் கமிஷன் கேட்கிறார்களாம். ஆனால், இவனுக்கோ வெகுசிலர் மாத்திரந்தான் கையில் கிடைத்த சில்லரைகளை கொடுத்திருக் கிறார்கள்.

இதைச் சொன்னாலும் கேட்காமல், டெலிவரி செய்ததற்காக இவனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தைப் பிடித்துக் கொண்டார்களாம்.

இப்படியொரு விசயம் ஏஜென்சிகளில் நடக்குமென நான் மட்டுமல்ல நீங்களுங்கூட எதிர்பார்த்து இருக்க மாட்டீர்கள். நமக்கு டெலிவரி செய்பவர்கள் ஏன் கூடுதலான தொகையை நம்மிடம் கேட்டு வாங்குகிறார்கள் என்பதற்கான காரணமும் எனக்கு புரிந்தது.

பலரும் இணைய வழியில் பதிவு செய்தும், பணம் செலுத்தியும் விடுவதால், வழக்கமாக டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு போதிய லஞ்ச வருமானம் கிடைக்கவில்லை என்பதும், ஆகையால் ஏஜென்சிகளுக்கு கமிஷன் கொடுக்க முடியாமல், வேலையை விட்டு நின்று விடுவதும், புதிதாக ஊழியர்கள் சேர்வதும், ஏஜென்சியே அவர்களை கமிஷன் வாங்க தூண்டுவதாகவும் தெளிவாக தெரிகிறது.

ஏஜென்சிகளை கேள்வி கேட்டால், அரசியல்வாதிகளுக்கு கொடுத்ததைத்தான் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக வசூல் செய்கிறோம் என்பார்கள். 

எனவே, ஏஜென்சிகளையே ஒழித்துக்கட்ட என்ன வழியென்று யோசிக்க வேண்டும் அல்லது இணைய வழியில் பதிவு செய்தும், பணம் செலுத்தியும் ஏஜென்சிகளின் கொள்ளையை நாமே முடக்க முடியும்.


மேலும், ஏஜென்சிகளுக்கு பாடம் கற்பிக்க டெலிவரி செய்வதற்கான குறிப்பிட்ட தொகையை குறைத்துக் கொள்ளும் வசதியை, இணையத்தில் ஏற்படுத்தி வாடிக்கையாளர்களே நேரில் பெற்றுக் கொள்ளும் படியும் செய்யலாம்.
 
ஆமாம், திரு. வாரண்ட் பாலா, தன் நூல்களில் எதற்கெல்லாம் கரும்புள்ளி வைக்கிறாரோ, அதெல்லாம் விரைவிலேயே நீக்கப்பட்டும், சுத்தம் செய்யப்பட்டும் விடுகின்றன என்பதற்கு பலப்பல உண்மை சம்பவங்கள் உண்டு. அந்த வகையில், இந்த ஏஜென்சிகளுக்கும் விரைவில் சுத்தம் செய்யப்படும் என நம்புவோம். 
  
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)