No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Friday, December 30, 2016

இரத்தத்தில் தேவை எச்சரிக்கை! எச்சரிக்கை!!


சில மாதங்களுக்கு முன்பு, நம் வாசகர் ஒருவரை சந்திக்க நேர்ந்தபோது, அவரது நண்பரின் மகனுக்கு கோவை கிட்னி சென்டரில் கிட்னியை மாத்துகிறார்கள் என்றும், அப்படியே அவனுக்கு உரிய ‘பி நெகட்டீவ்’ வகை இரத்தத்தின் தட்டுப்பாட்டில் சிக்காமல் இருக்க..,

அவனது இரத்தத்தை எந்த வகை இரத்தத்தோடும் பொருந்தக்கூடிய ‘ஓ வகை’ இரத்தமாக மாற்றப் போகிறார்கள் என்றும், இதற்காக சில இலட்ச ரூபாய்களை திரட்டுவதற்காக, மாற்று அறுவை சிகிச்சையை பத்து நாள்களுக்கு தள்ளி வைத்துள்ளார்கள் என்றார். 

இதனை கேட்ட எனக்கு, இவர்களது மடத்தனத்தை எண்ணி சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை. 

அறிமுகமில்லாத சம்பந்தப்பட்ட அவனின் தந்தையிடம்  இதுபற்றி சொன்னால், ‘அதனை அவர் காதில் வாங்கும் மனநிலையிலேயே இல்லை’ என்பதை உணர்ந்து, நம் வாசகரிடம் மட்டும், இப்படியெல்லாம் செய்ய முடியாது என்று சில விளக்கங்களைச் சொன்னேன். 

ஆனால், நண்பரான இவர் சொன்னாலே, கேட்கும் மன நிலையில் இல்லை என்று கூறிவிட்டு, இவரால் இயன்ற பண உதவியைச் செய்தார். 

மாற்று அறுவை சிகிச்சை முடிந்த பிறகு, ‘இரத்தத்தை மாற்றி விட்டார்களா’ என்று நம்ம வாசகரிடம் கேட்டேன். ‘அதென்னமோ மாற்றினோம்; ஆனால், மாறவில்லை என்று சொல்லி விட்டார்களாம்’ என்றார். 

இயற்கை நிர்ணயித்த இரத்த வகையை, இவர்கள் மாற்றினால் என்னவாகும் என்பதற்கு, உண்மையில் நடந்த சம்பவம் ஒன்றே இருக்கிறது. இதுபற்றிய செய்தி, சுமார் ஒரு மாதங்களுக்கு முன்பு தொல்லைக்காட்சிகளில் விளக்கமாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆனால், இணையத்தில் தேடியதில் தீக்கதிர் நாளிதழ் செய்தி மட்டுமே கிடைத்தது, இதோ!  
   

18 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவமிருந்து, நன்னிலம் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற தாய்க்கு, ‘பி பாசிடிவ்’ வகை இரத்தத்தை ஏற்றுவதற்கு பதிலாக, ‘பி நெகட்டீவ்’ வகையை ஏற்றியதால், கோமா நிலைக்கு சென்றதான செய்தி, திருவாரூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையால் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. 

எனக்கு தெரிய, இரத்தம் செலுத்துவதில் உள்ள கோளாறுகள் குறித்து, இப்படியொரு செய்தி இந்தியாவில் வெளியாகி உள்ளது, இதுவே முதல் முறையாகும். 

இதுமட்டுமல்ல; இப்படி இன்னும் பல அதிர்ச்சிகரமான உண்மை செய்திகள் ஆதாரப்பூர்வமாக இனி வருங்காலங்களில் வெளிவரும் என்பதை எனது தொலைநோக்கு ஆராய்ச்சியில் அறிந்தே இருந்தேன்.  

ஆமாம், உண்மையில் இதையெல்லாம் நான் ஆராய்ந்து சுமார் நான்காண்டுகளுக்கு முன்பே எழுதிய, ‘இரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை’ கட்டுரையிலேயே எழுதி இருப்பேன்.  

ஆனால், இதில் சச்சரவு ஏற்பட்டால், அறிவியல் பூர்வமாக நிரூபிக்க வேண்டி இருக்கும். இதற்காக, ஆங்கில மருத்துக் கொள்ளை யர்களின் உதவியைத்தான் நாட வேண்டி இருக்கும். அவர்களது தொழிலுக்கு பாதகமான உண்மைகளை அவர்கள் வெளிப்படுத்த மாட்டார்கள் அல்லவா?

ஆகையால்தான், அக்கட்டுரையின் இறுதியில், 

‘‘இரத்ததானம் உடலுக்கு நல்லது என்றால், முதலில் அதை மருத்துவர்களுக்கு கட்டாயமாக்க வேண்டும். உனக்கேன் அவர்கள் மீது அவ்வளவு அக்கறை என்று சந்தேக கண்ணோட்டத்தோடோ அல்லது வேண்டா வெறுப்பாகவோ பார்க்காதீர்கள்.

ஏனெனில், அவர்கள் உடல் நலத்தோடு இருந்தால்தானே நாமும் உடல் நலத்தோடு இருக்க முடியும்! அதுவரை, மருத்துவர்கள் உண்டு கொழுப்பதற்கு உணர்ச்சி வயப்பட்டோ அல்லது புண்ணியம் தேடியோ தேவையில்லாமல் இரத்ததானம் செய்வதை தவிர்ப்போம்.

மாறாக, வி(ஆ)பத்தில் சிக்கும் உற்றார், உறவினர், நண்பர்களின் தேவைக்கு ஏற்ப இரத்ததானம் செய்து புண்ணியம் தேடிக் கொள்வதோடு, தானத்திற்கு பின் நமது உடல் நலனில் தகுந்த அக்கரை கொள்வோம். நமக்காக அடுத்தவர் தானம் செய்வதை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்போம். மருந்தில்லா மகிழ்ச்சி வாழ்வு வாழ்வோம்’’ 

என்று சூசகமாகவும், அதே நேரத்தில் எல்லோரும் புரிந்துக் கொள்ளும் விதத்திலும், என் முடிவைச் சொல்லி இருந்தேன்.

இந்தத் தலைப்பை (‘இரத்ததானம்: மக்களை மதி மயக்கி ஏமாற்றும் மருத்துவத்துறை’) கூகுளில் பதிவிட்டால், பலரும் பல தளங்களில் பதிவிட்டு இருப்பதைப் படிக்கலாம்.

அக்கு ஹீலர்கள் நடத்தும் வகுப்புக்களில், இதனை எல்லோருக்கும் அச்சிட்டே வழங்குவதாக, அவர்களும், வேறு பலருங்கூட சொல்கிறார்கள். இதைப்பற்றி முழுமையாக அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்காக இத்தகவலைச் சொல்கிறேன். இதனை இப்பொழுதாவது புரிந்துக் கொள்ளுங்கள். 

ஆமாம், இரத்தம் கொடுப்பவர்களுக்கு சில தீர்க்கக்கூடிய பிரச்சினைகள் என்றால், யாருடைய இரத்தம் என்றே தெரியாமல் ஏற்றிக் கொள்பவர்களுக்கு தீர்க்க முடியாத நோய்வாய்ப் பிரச்சினைகள் எண்ணில் அடங்காதவை என்று நான் சொன்னால், சில முட்டாள்கள் நகைக்கக்கூட கூடும். 

ஆனால், இம்முட்டாள்கள் தங்களது வாகனத்திற்கான பெட்ரோல் எரிபொருளைக்கூட, வெவ்வேறு பங்குக்களில் போட்டால், வண்டியின் எஞ்சின் பழுதாகி விடுமென்று, ஒரே பங்கில் எரி பொருளை நிரப்பும் புத்திசாலிகளாக இருப்பார்கள். அவ்வளவே!  
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)