பைத்தியக்காரர்கள், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள சக்தியற்றவர்களாகவும், தங்களுடைய உறவினர்கள் அல்லது நண்பர்களால் கவனிக்கப்படாமலும், ஊரில் திரிந்துக் கொண்டிருக்கும் போதாவது அவர்கள் அபாயத்துக்கிடமாயிருக்கும் போதும் அது குறித்து காவலருக்கு மட்டுமல்லாது அந்தக் கிராம அதிகார வரம்புள்ள சம்பந்தப்பட்ட நீதிபதிக்கும் உடனே அறிக்கை அனுப்ப வேண்டியது கிராம நிர்வாக அலுவலரது கடமையாகும்.
இப்படிப்பட்ட பைத்தியக்காரர்களைக் காவலர்கள் தங்கள் பொறுப்பில் எடுத்துக் கொள்ளும் வரை அவர்களைக் கிராம நிர்வாக அலுவலர்கள் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என கிராம நிர்வாக ஊழியர்கள் மற்றும் குடிமக்கள் நடைமுறை நூலின் அத்தியாயம் 3 பிரிவு 7 அறிவுறுத்துகிறது.
இதன்படி, இப்படி திரிபவர்கள் மட்டுமா பைத்தியக்காரர்கள்?
இச்சட்ட கடமையை செய்யாத கிராம நிர்வாக ஊழியர்களும், இதுபற்றிய போதிய விழிப்பறிவுணர்வு இல்லாது இருக்கும் மக்களுந்தான்!
ஆமாம், உங்களுக்காக செய்யப்படும் வேலைக்காக தனியொரு ஊழியருக்கு நீங்கள் கூலி கொடுப்பது போலவே, உங்களது வரிப்பணத்தில் இருந்து கூலி வாங்கும் அரசூழியர்களையும் சட்டப்படி வேலை வாங்க வேண்டியது, உங்களின் கடமைதான் என்பதை குறிக்கும் விதமாகவே, ‘குடிமக்கள் நடைமுறை நூல்’ என்றும் தலைப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தனியார் நிறுவன முதலாளிகள், தங்களது ஊழியர்களை செம்மையாக வேலை வாங்குவது போலவும், அப்படிச் செய்யா விட்டால் வேலையை விட்டு அனுப்புவது போலவும், இனியாவது உங்களது அரசூழியர்களை வேலை வாங்கி உங்களது சட்டக் கடமைகளை நடைமுறைப்படுத்துவீர்களா, என்பதே என்னிடம் எஞ்சி நிற்கும் கேள்வி?!
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment