உங்களின் பணமோ அல்லது விலை உயர்ந்த சிறு பொருளோ, உங்களது வசிப்பிடத்தில் இருந்து காணாமல் போய் விட்டதா? கவலை வேண்டாம்!
ஆமாம், அதனை திருடியவர்களிடம் இருந்து மீட்க எளிமையான வழி...
உங்களது வசிப்பிடத்திற்கு அடிக்கடி வரும் அண்டை வசிப்பிடத்தார்களில் குறிப்பிட்ட ஒருவரே திருடி இருப்பா(ர், ள்) என நீங்கள் நம்பினால்,
நீ வந்து போன பிறகுதான் காணாமல் போய் இருக்கிறது அல்லது வேறு எங்காவது வைத்து விட்டு மறந்து விட்டேனா என்றும் தெரியவில்லை என்ற தொனியில், அத்திருடர்களையே தேடிப்பார்க்க அனுமதித்தால் போதும்.
அத்திருடர்கள், நம் திருட்டு (தன, குண)த்தை கண்டு படித்த விட்டார்கள் என்பதை உணர்ந்து, அதிலிருந்து தப்பிக்க, ‘‘எங்க தேடுனீங்க, இங்கயேதான் இருக்கு எனக்கூறி அத்திருடர்கள் திருடியதையே (உத்தமர்கள்போல கண்டு பிடித்து) கொடுத்து விடுவார்கள்’’.
குறிப்பாக, அக்கம் பக்கத்து வீடுகளில் வசிக்கும் குடும்பப் பெண்களிடம், இதுபோன்ற திருட்டுக்குணம் மிகமிக அதிகம்.
இதன் பிறகு நீங்கள் விரும்பினால், நான் தேடியபோது கிடைக்காதது, உனக்கு மட்டும் எப்படி கிடைக்கும் என கேள்வி எழுப்புவதன் மூலம், அத்திருடன் நீயே என்பதை மறைமுகமாக உணர்த்தி விடலாம்.
இதில் முக்கியமான விசயம், அவர்களை தேட அனுமதிக்கும்போது, நீங்கள் அத்திருடர்களின் அருகில் இருந்து தேடக்கூடாது. இதைவிட எளிமையான வழி கிடையாது என்பதோடு, அத்திருடர்கள் இனி உங்களது வீட்டுக்குள் நுழையவும் அச்சப்படுவார்கள்.
ஆகையால், வாய்ச் சண்டை சச்சரவு இல்லாமல், அத்திருடர்களை நட்புறவு கொண்டாடுவதில் இருந்து புறத்தே ஒதுக்கிவிட முடியும்.
அத்திருடர்கள் வாடகை வசிப்பிடதாரர்களாக இருந்தால், அவர்களின் திருட்டுக் குற்ற உணர்வால், வீட்டையே மாற்றிக் கொண்டு கூட போய் விடுவார்கள்.
இப்படியொரு சம்பவம் சில வருடங்களுக்கு முன்பு நான் வசித்த இடத்தில், நான் சொன்ன ஆலோசனையின்படி, அப்படியே அப்பட்டமாக நடந்தது.
இந்தப் பத்திரிகை செய்தியைப் படித்தபோது, ஏனோ இந்த சம்பவத்தை உங்களது பொருள் திருட்டுக்கான தீர்வாக சொல்ல வேண்டுமென தோன்றியது.
ஆமாம், இப்படி சரியான மற்றும் எளிமையான மாற்று வழிமுறைகளை யோசிப்பதை எல்லாம் விட்டுவிட்டு, காவலூழியர்களிடம் சென்றால், என்னென்ன நடக்கும் என்பது ஊரறிந்த இரகசியந்தான்.
ஆகையால், நான் எதுவுஞ் சொல்லத் தேவையில்லை. அவ்வளவே!
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment