No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Thursday, December 8, 2016

ஓர் உரிமையியல் வழக்கில் நியாய(க்கரு)த்தை சொல்வது எப்படி?


சத்தியவான் காந்தி உள்ளிட்ட சிலர், ‘‘மக்கள் தங்களுடைய பிரச்சினையை தாங்களே தீர்த்துக்கொள்ள வேண்டுமே ஒழிய, பெ(ரு, று)ங்கூலிக்கு மாரடிக்கும் நிதிபதிகளை நம்பக்கூடாது; இவர்களது தீர்ப்பு ஒருபோதும் நியாயமாக இருந்து விடாது’’ என்பதை, நாசுக்காக சொல்லி உள்ளார். 

‘‘காசுக்காகவே மாரடிக்கும் இவர்களுக்கு எல்லாம் என்ன நாசுக்கு வேண்டி இருக்கிறது’’ என்பதால்தான் (ப, கொ)ச்சையாகவே எழுதுகிறேன். 

காந்தியின் கருத்துப்படி மக்கள் தங்களது பிரச்சினைகளை, தங்களுக்கு உள்ளேயே தீர்த்துக் கொள்ள முடிவதில்லை. தீர்த்துக் கொள்வதில் பல்வேறு வகையான சிக்கல்கள் இருக்கின்றன என்பதுபற்றி ‘‘மநு வரையுங்கலை’’ நூலில் எழுதி உள்ளேன். 

ஊரில் உள்ளவர்களோ அல்லது உறவினர்களோ அழைத்துப் பேசினால்கூட, கட்டப்பஞ்சயத்து செய்தார்கள், மிரட்டினார்கள் என்றெல்லாம் புகார் கொடுத்து பிரச்சினைகளை தீர்த்து வைக்க முயல்பவர்களை பிரச்சினையில் சிக்க வைத்து விடுகிறார்கள். 

ஆகையால், சமரசம் செய்து வைக்கும் ஆர்வலராக, அவ்வளவாக யாரும் முன்வருவதில்லை என்று சொல்வதை விட, எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால், நாங்கூட முன்வர தயாரில்லை என்பது தான் உண்மை!    

ஆனாலும், நம்ம தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற ஊர்களில் ஒன்றான மதுரை பாலமேடு கிராமத்தில், இப்படியொரு அதிசயம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. 

இதனை எல்லாம் நேரில் சென்றும், காவல் நிலையம் உள்ளிட்டவற்றை ஆராய்ந்தும், 2010 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட ‘‘நீதியைத்தேடி... சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி?’’ நூலில், ‘கிராமத்தில் ஓர் உச்சநீதிமன்றம்’’ என்ற தலைப்பில் எழுதி உள்ளேன்.   

சரி, நம்ம விசயத்துக்கு வருவோம். 

ஒருவர் சரியான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்றிருந்தால், நீதிமன்றத்தில் நடக்கும் எந்தவொரு வழக்கிலும் சட்ட விதிகளின்படியே தலையிட முடியும்; அவரவர்களின் கருத்துக்களைப் பதிவு செய்ய முடியும். 

இதில், வழக்காளிகளுக்குள் உள்ள பிரச்சினை குறித்த, உண்மையை ஒரு தனி நபராகவோ அல்லது குழுவாகவோ கூட பதிவு செய்து, நியாயத்தை நிலைநாட்ட ஆர்வத்துடன் வலிந்து உதவ முடியும். 

இதன் மூலம், நியாயப்படி நிதிபதிகள் என்ன தீர்ப்பெழுத வேண்டும் என்பதைக்கூட, நாம் நிர்மாணிக்க முடியும். அந்த அளவிற்கு மநுவை தர்மத்தின் அடிப்படையில் தயார் செய்ய வேண்டும். இப்படி நானுங்கூட ஒருசில வழக்குக்களில் நிர்மாணித்து இருக்கிறேன் என்ற அனுபவ மநுக்களையும் ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் தொகுத்து எழுதி உள்ளேன். 

ஆனால், நியாயமில்லாத ஒருவருக்கு சாதகமாக நின்றால், குற்ற விசாரணை முறை விதி 1973 இன் விதி 340 இன் கீழான நீதி நிர்வாகத்தைப் பாதிக்கச் செய்த குற்ற தண்டனைக்கு ஆளாக நேரிடும். 

ஆமாம், ஓர் வாகன விபத்து வழக்கில் நியாயத்தை நிலைநிறுத்த முயன்ற எனக்கு எதிராக, நீதி நிர்வாகத்தைப் பாதிக்கச் செய்த குற்றஞ் சாற்றிய திருட்டு நிதிபதி, பின்னர் என் பிடியில் இருந்து தப்பித்தால் போதும் என்று, என்னிடம் இருந்து தப்பித்ததைப் பற்றி ‘‘நீதியைத்தேடி... நூல்களில் குறிப்பாக பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி?’’ நூலில் எழுதி உள்ளேன். 

ஆகவே, பொறுக்கித்தனம் நிறைந்த நிதிபதிகளிடம், ஒருவரின் நியாயத்தை நிலைநாட்ட முயலும்போது மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  

இப்படி நமக்கு தெரியாதவருக்கும் கூட, நாம் உதவ முடியும் என்பதற்கு இம்மநுவும் சிறந்த உதாரணமாக இருக்கும். இந்த மநு உருவாக காரணம் என்ன என்பதை விளங்கிக் கொள்ள விரும்புபவர்கள், கீழ்கண்ட இரண்டு கட்டுரைகளையும் படித்து விட்டு, இதனை தொடர்ந்தால் நன்கு புரியும். 


இதுபோன்று நியாயத்துக்கு விரோதமான வழக்குக்களில், நீங்களும் தேவைக்கு ஏற்ப மநுவை அனுப்ப வேண்டும் என்பதற்காகவே, இம்மநுவை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கொடுத்து உள்ளேன். ஆனால், இம்மனுவை கர்நாடக உயர்நீதிமன்றத்துக்கு ஆங்கிலத்தில் மட்டுமே அனுப்பி உள்ளோம். 

*************************
இந்திய சாசன கோட்பாடு 51எ- இன் கீழ் எங்களின் கடமையாக தாக்கல் செய்யும் கருத்துரை

Statement of Legal Opinion in performance of our duty as per Article 51A of Indian Constitution  

பெறுதல் 

பொதுப் பதிவாளர்
கர்நாடகா உயர்நீதிமன்றம்
பெங்களூரு - 1

To

Registrar General,
High Court of Karnataka,
High Court Buildings, 
Opp. to Vidhana Soudha, Ambedkar Veedhi,
Bengaluru-560 001.
+(91)-(80)-22954864
Email-id: rghck.kar@nic.in

பொருள்: உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908 இன் கட்டளை 1 விதி 8எ இன்படி, எங்களின் கருத்துரை

Sub: Our statement of Legal Opinion as per Order 1, Rule 8A of Civil Procedure Code 1908  

பார்வை: 

1. சிஎம்பி 133 / 2015 

2. 29-11-2016 தேதியில், மதுரை தினமலர் பதிப்பில், இம்மன்றத்தின் பெயரில், ஆங்கிலத்தில் வெளியான விளம்பரம்.

3. இவ்விளம்பரத்தைப் பற்றிய எதிர்மனுதாரருக்கு நாங்கள் நல்லெண்ணத்தோடு அனுப்பிய அஞ்சல் அட்டையானது, "அப்படியொரு முகவரியே இல்லை" என்ற  இந்திய அஞ்சல்துறையின் மேற்குறிப்போடு திரும்பி வந்துள்ளது. 

Ref:

1. CMP No. 133/2015

2. A copy of advertisement in English under the name of the above Court, appeared in the daily ‘Dhinamalar’ on 29-11-2016

3. A copy of the post card that had been sent by us, on good intention to the said addressee, which has been returned, stating that ‘no such address’ exists, by the Indian Postal Department.  

அய்யா வணக்கம்.
முதலில், எங்களின் கடமை என்ன என்பதை தெரிவித்து, பார்வை 1 இல் கண்ட வழக்கு விசயத்துக்கு வருகிறோம்.   

நாங்கள் மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு, நீதியைத்தேடி... என்ற பொதுத்தலைப்பில் ஐந்து நூல்களையும், கடமையைச் செய்! பலன் கிடைக்கும் மற்றும் மநு வரையுங்களை என்ற தலைப்புகளில் சட்ட ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டு உள்ளோம். 

எங்களின் பிரதான நோக்கம், சமூகத்திற்கான சட்ட விழிப்பறிவுணர்வு மற்றும் தன் வழக்கில் தானே வாதாடுதல் ஆகியவாகும். 

ஆகையால், நான் வெளியிட்டுள்ள ஏழு நூல்களையும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்துப் பொது நூலகங்கள், உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நூலகங்கள் மற்றும் சிறைச்சாலை களுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளோம். 

Dear Sir,

Prior to speaking on the issue mentioned in ref-1, we wish to mention about our duties.
We have published five books under the general title of ‘Neethiyaithedy...’ (In Quest of Justice) and two other books namely ‘Khadamaiyai Sei Palan Kidaikkum’ (Do your duty results will follow) and ‘Manu Varayum Kalai (An Art of Drafting ) with the support of The Central Ministry of Law and Justice. 

Our prime objective is to give the society consciousness on laws and to enable them conduct their cases on their own selves.

In this connection we have donated all the seven books published by us to all the public libraries, all the courts including the Chennai High Court and also to the prisons in Tamil Nadu and Pondicherry.     

எங்களின் சட்ட ஆராய்ச்சியில், உரிமையியல் விசாரணை முறை விதி 1908 இன் கட்டளை 5 விதி 20 (1எ) இன்படி, செய்தித்தாளில் வெளியாகும் நீதிமன்ற விளம்பரங்கள் குறித்து, சம்பந்தப்பட்டவருக்கு அஞ்சல் அட்டையின் மூலம் தகவலை தெரிவிப்போம். 

In the course of our research in laws, as per Order- 5, Rule 20 (1A), of Civil Procedure Code 1908, we used to intimate the concerned parties through a post card, regarding any advertisement issued by a court.

எங்களின் தகவல் கிடைத்து, எங்களது வழிகாட்டுதலோடு, தங்களது சட்ட உரிமைகளை நிலை நாட்டிக் கொண்டவர்கள் பலர். 

There are a number of people thus benefited who could establish their right of justice through such guiding efforts by us.  

இந்த வகையில், தங்களது 11-11-2016 தேதிய உத்தரவின்படி, பார்வை 2 இல் கண்ட நாளிதழ் அறிவிப்பு 29-11-2016 அன்று வெளியாகி உள்ளது. பதினெட்டு நாட்கள் கால தாமதமாக காரணம் என்ன என்பது தெரியவில்லை.
In this connection, the notice as per your order dated 11-11-2016 had appeared in the daily on 29-11-2016 as per ref- 2. The reason for the delay of 18 days is not known.   

இந்த அறிவிப்பு குறித்து, எதிர்மனுதாரருக்கு பார்வை 3 இல் கண்டுள்ளபடியான அஞ்சலட்டையை 30-11-2016 அன்று அனுப்பினோம்.  
ஆனால், அந்த அஞ்சல் அட்டையானது, அப்படியொரு முகவரியே இல்லை என்ற இந்திய அஞ்சல்துறையின் மேற்குறிப்போடு, எங்களுக்கே திரும்பி வந்துள்ளது. 
We sent a post card as per ref- 3, as intimation, to the respondents on 30-11-2016. But the post card has been returned to us by the Indian Postal Department, stating that there is ‘no such address’. 

இதன் மூலம், அப்படியொரு முகவரியே இல்லை என்பது, இந்திய அரசின் கீழ் இயங்கும் அஞ்சல் துறையின் ஆதாரச் சான்று. இது இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் உறுபு 74 மற்றும் 76 இன்கீழ், மத்திய அரசின் சான்று நகலாகும்.

This stands as evidence provided by the Postal Department functioning under the Government of India that no such address exists. This is also a copy of documental evidence from the Central Government, as per section 74 and 76 of Indian Evidence Act 1872.     

எனவே, இந்த வழக்கில் எதிர்மனுதாரரின் சட்ட உரிமைகள் பாதிக்கப்படும் விதத்தில், எந்த விதமான உத்தரவையும் நீங்கள் பிறப்பிக்க கூடாது என்பதை, எங்களின் கடமையாக பதிவு செய்கிறோம். 

We, therefore, as per our constitutional duties, file our statement of Legal opinion that your court shall abstain from any judgment against the interest and the lawfull rights of the respondents.

ஆயிரக்கணக்கான நீதியைத்தேடி... வாசகர்களின் சார்பாக சமர்ப்பிக்கப்படுகிறது. 

This is submitted on behalf of thousands of readers of ‘‘Neethiyaithedy...’’.


நகல் சமர்ப்பிக்கப்படுகிறது: 


1. பதிவாளர், இந்திய உச்சநீதிமன்றம், புதுதில்லி. மின்னஞ்சல்  supremecourt@nic.in வழியாக2. தகவலுக்காக நீதியைத்தேடி... இணையப்பக்கம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களான முகநூல், சுட்டுரை, கட்செவியில் பகிரப்படுகிறது.  


Copy to: 

1. The Registrar, The Supreme Court of India, New Delhi. Via  Email supremecourt@nic.in

2. Shared through ‘‘Neethiyaithedy...’’ website and other social media like FaceBook, Twitter, Whatsapp etc for information  


*************************

முக்கிய குறிப்புகள்: 

1. இப்படி கடிதத்தை திரும்பப் பெற்றவர்கள், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்துக்கு மநு அனுப்பும் பட்சத்தில் அதனை பத்திரமாக வைத்திருப்பது மிக முக்கியம். ஏனெனில், நிதிபதிகள் அழைப்பாணை அனுப்பி கேட்கலாம்.

2. அப்படி அழைப்பாணை வந்தால், அதுபற்றி அந்த அழைப்பாணையில் தெளிவாக குறிப்பிட்டிருந்தால் மட்டுந்தான் கொடுக்க அல்லது அனுப்ப வேண்டும். 

3. நீங்கள் நீதிமன்றத்துக்கு வரக்கோரும் அழைப்பாணையாக இருந்தால், முன்பணமாக செலவுத் தொகையை பெற்றுக்கொள்ள உரிமையியல் விசாரணை முறை விதிகளின்படி உரிமையுண்டு.   

4 இப்படிப்பட்ட மநுக்களை நிதிபதிகளுக்கு மின்னஞ்சலில் அனுப்பினாலே போதும். இதில் கையொப்பம் தேவைப்படாது. 

5. சம்பந்தப்பட்ட நிதிபதிக்கு நேரடியான மின்னஞ்சல் இல்லாத போது, இதையே காரணமாக சொல்லி, அம்மாவட்டத்தின் நிதிபதியின் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இதன் நகலை, அதன் மேல்நிலை நீதிமன்றங்களுக்கு அனுப்புவதும் அவசியமாகும். 

6. இந்திய நீதிமன்றங்களுக்கான இந்த பிரத்தியேக இணைய இணைப்பின் வழியாக இந்தியாவின் எந்தவொரு நீதிமன்றத்தின் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட தொடர்புகளைப் பெறமுடியும்.  

7. இப்படிப்பட்ட சிறிய ஆதார ஆவணங்களை, பின் இணைப்பாக சேர்த்து அனுப்பாமல், சம்பந்தப்பட்ட அந்தந்த செய்திகளுக்கு இடையிடையே புகுத்தி விடுவது, இதுபோன்ற ஆதாரச்சான்றுகள் வரவில்லை என்று சொல்லவோ அல்லது ஆதாரத்தை மறைத்து, ‘‘நிதிபதி கேனச் சந்துருவைப் போல’’ நிதிபதிகள் வேறு விதத்தில் நியாயத்தை திரித்து எழுதுவதை தடுக்கும்.     
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)