நான் எதையெல்லாம் எழுத வேண்டுமென நினைத்து, காலங்கருதி எழுதாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேனோ, அதையெல்லாம் எழுதும் படியான சூழ்நிலை, ஏனோ ஒவ்வொரு நாளும் உருவாகிக் கொண்டே இருக்கிறது.
எனது கொள்கையின்படி, நான் யாரிடமும் எதற்காகவும், எனக்காக கூடப் பரிந்துப் பேச ஆட்களைப் பிடிப்பதில்லை. இது எனக்காக நானே வாதாடுவதில் ஆரம்பித்து அனைத்திற்கும் பொருந்தும்.
இதனால், அநீதியாக எதை இழந்தாலும், அது கோடானு கோடியாகவே இருந்தாலுங்கூட அதற்காக கவலைப்படுவதில்லை என்பது, எனது கொள்கை முடிவின் உச்சம்.
இந்த வகையில், பொதுவுடைமை நீதியைத்தேடி... நூல்களுக்கு தனிப்பட்ட முறையில் எவரையும் நாடி அணிந்துரை, மதிப்புரைகளை கேட்டு வாங்கியதில்லை.
மாறாக, அந்நூல்கள் வெளியான பின், ஆன்மீகம், பகுத்தறிவு, இடது மற்றும் வலதுசாரி என ஒவ்வொரு விதமான கொள்கையோடும் வெளிவரும் நாளிதழ் உள்ளிட்ட எல்லா விதமான இதழ்களுக்கும், அனுப்பி விடுவோம். இதற்கு அடிப்படையான காரணம், மதிப்புரை பெறுவது மட்டுமல்ல;
மாறாக, அவர்களும் சட்ட விழிப்பறிவுணர்வைப் பெறவேண்டும், நிதிபதிகள் வழங்கும் நியாயத்துக்கு புறம்பான தீர்ப்புக்களை விமர்சிக்கப் பழக வேண்டும், அவரவர்களும் (நிதிபதிகளும், அச்சு ஊடகங்களும்) செய்யும் சட்டத் தவறுகளை உணர வேண்டும் என்பன உட்பட பல்வேறு சங்கதிகள் இதில் அடங்கி இருக்கின்றன.
பொதுவாக, அச்சு ஊடகங்களில் செய்திகள் வருவதால் பிரச்சினை தீரும் என நம்புபவர்கள் அதிகம். ஆனால், ஆராய்ந்துப் பார்த்தால் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது என்ற அதிர்ச்சி வரலாற்றை அறிய முடியும்.
இதுபற்றி சத்தியவான் காந்தி எழுதியதன் சுருக்கத்தை, பாராளுமன்றம், பத்திரிகை குறித்து மகாத்மா காந்தி! என்றத் தலைப்பில் படிக்கலாம்.
நம் நூல்களை பொய்யர்கள் நடத்தும் இதழ்களுக்கு மட்டும் அனுப்புவது இல்லை. ஏனெனில், அவர்கள் விசயத்தை தெரிந்து கொள்வதற்காக படிப்பார்கள், அதில் பணஞ் சம்பாதிக்க வழி உள்ளதா என்பதைக் கண்டறிந்து பணம் சம்பாதிப்பார்களே அன்றி, அதுகுறித்த தங்களின் உண்மையான கருத்தைக்கூட பதிவுசெய்ய மாட்டார்கள்.
அப்படிப் பதிவு செய்தால், ஊரை ஏமாற்றிப் பிழைக்கும் அவர்களின் பொய்ப் பிழைப்பும் போய், பிச்சைதான் எடுக்க வேண்டி இருக்கும்.
ஆனால், அப்பொய்த்தொழிலை உணர்ந்து கை விட்டவர்கள், உண்மையை எழுதுவார்கள். இப்படி வெகுசிலர்தான் இருக்கிறார்கள்.
இந்த வகையில், மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், பொய்த் தொழிலை துட்சமாய் நினைத்து உதறிய (சட்டத்தொழில் மற்றும் நடிப்புத் தொழில் ஆகிய இரண்டையும்) சோ. ராமசாமி அவர்களும், முதல் மூன்று நீதியைத்தேடி... நூல்களுக்கு அவர் எழுதி வந்த துக்ளக் வார இதழில் மதிப்புரையை எழுதி, நமது சட்ட விழிப்பறிவுணர்வுக் கொள்கையை பரப்பிய அவரை இந்த நேரத்தில் நினைவு கூர்கிறேன்.
இப்படி பல்வேறு வகையான இதழ்களும் எழுதிய மதிப்புரைகளை, நம் நூல்களுக்கான மதிப்புரைகளில் சில... என்ற தொகுப்பு ஆக்கத்தில் படிக்கலாம். இம்மதிப்புரைகள், மறு பதிப்பு நூல்களில் அச்சிடப்படுகின்றன.
எனவே, இப்படி அனுப்பிய நீதியைத்தேடி... நூல்களை ஏற்று, கிட்டத்தட்ட அனைத்து இதழ்களுமே மதிப்புரையை வழங்கி உள்ளார்கள் என்பதை நீங்களே புரிந்து கொள்ள முடியும்.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment