இச்செய்தியில் நட்சத்திர குறியிட்டுள்ள பகுதிகள் மிகவும் கூர்ந்து கவனிக்கத் தக்கவை!
ஆமாம், பெ(ரு, று)ங்கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்கள் ‘‘ஏதோ இந்தவொரு வழக்கில் மட்டுந்தான் பொய் சொன்னது போலவும், அதனால் தவறான உத்தரவை பிறப்பித்து விட்டது போலவும்’’ நிதிபதி பிரகாஷ் கூறியுள்ளார்.
ஒரு பொய்யராக இருந்து, நிதிபதியானவருக்கு இத்தனை நாட்களாக இதெல்லாம் தெரியாமல் இருந்தது என்பது பொய்.
இது உண்மையென்றால், தான் தவறான உத்தரவை பிறப்பிக்க காரணமாய் இருந்த பொய்யருக்கு குற்ற விசாரணை முறை விதி 340 இன்கீழ், நீதி நிர்வாகத்தைப் பாதிக்கச் செய்த குற்றத்துக்காக விசாரணை நடத்தி உ(ய)ரிய சிறைத்தண்டனை விதித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் அபராதத்தைக்கூட விதிக்கவில்லை.
ஏனெனில், ‘‘வக்கீல் என்றாலே கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்கள்! இடைத்தரகர்களே!!’’ என்ற நம் தத்துவத்திற்கு ஏற்ப முன் தீர்ப்புக்களை பணத்தைக் கொடுத்து வாங்கியதும், பணம் வாங்கிய விசுவாசமும்தான் காரணம்.
இலஞ்சங் கொடுத்து தீர்ப்பை வாங்க நினைப்பவர்கள், அத்தீர்ப்பு நிலையானது அன்று என்பதை இதன் மூலம் உணர வேண்டும்.
இலஞ்சங் கொடுத்து தீர்ப்பை வாங்க நினைப்பவர்கள், அத்தீர்ப்பு நிலையானது அன்று என்பதை இதன் மூலம் உணர வேண்டும்.
முன்பெல்லாம் திருவிழாக்களில் ஆன்மீக சொற்பொழிவு, அர்த்தமுள்ள நாடகங்கள், இன்னிசைப் பாட்டுக் கச்சேரி என பயனுள்ள வகையில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வார்கள்.
ஆனால், இப்பொழுதோ ஆபாசமாக குத்தாட்டம் போடும் கூத்தாடிகளை கூத்தடிக்க வைக்கிறார்கள். இதனை ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தலமான யுடியூபில் ஏற்றுகிறார்கள். இதனை இளைஞர், இளஞைகள் ஏராளமானோர் பார்க்கின்றனர்.
எப்படிப் பார்த்தாலும் குற்றங்கள் பெருக நிதிபதிகளே காரணம் என்ற தலைப்பில் நீதியைத்தேடி... பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி நூலில் எழுதியது நிதிபதிகள் உள்ளவரை, உண்மையாய் இருக்கும்.
ஆமாம், நீதி என்ற நிர்வாகத்தைப் பாதிக்கச் செய்வது, நிதிபதிகளே! நிதிபதிகளே!! நிதிபதிகளே!!! அன்றி வேறு யாரும் அல்லர்.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment