No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Tuesday, November 22, 2016

எந்தவொரு போராட்டத்துக்கும் மக்களின் ஆதரவே வசியம்!


சாதாரண மக்கள் தங்களது தண்ணீர், சாலை வசதி உள்ளிட்ட அத்தியாவசிய பாதிப்புகளுக்காக பல்வேறு விதங்களில் போராடுவார்கள். இவை அனைத்தையும் விட, பணம் மிகமிக அத்தியாவசியம், அல்லவா?

அப்படி இருந்துங்கூட, வழக்கம்போல சாலையில் அமர்வது உட்பட எந்த விதத்திலும் போராடவில்லை. இதுவே, அரசுக்கு கிடைத்த முதல் வெற்றி.  

ஆகையால், அரசியல் கொள்ளையர்கள் உள்ளிட்ட ஊழல் பெருச்சாலிகளை ஒழித்துக் கட்ட அரசு எடுத்துள்ள கொள்கை முடிவை புரிந்துக் கொண்டு போராடாமல் இருக்கும் மக்களைப் பாராட்டத்தான் வேண்டும்.  

ஆமாம், கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கையில், பணப்பற்றாக்குறை ஏற்பட்டு பதினான்கு நாட்களாகியும் இப்படியொரு போராட்டத்தை, நாட்டில் எங்குமே காண முடியவில்லை. 

ஆனால், குடிநீர், சாலை வசதி போன்று அடிப்படை தேவைக்காக போராடும் மக்களுக்கு ஆதரவு தராத கட்சிகள் அனைத்தும், தற்போது அத்தியாவசியப் பணத்திற்காக போராடாத மக்களுக்கு மாபெரும் பிரச்சினை என்ற வகையில் போராட்டங்களை நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. 

இது தங்களது கறுப்புப்பணத்தை பாதுகாக்க முயலும் கேடுகெட்ட செயலே அன்றி வேறெதுவும் இல்லை என்பது அந்தந்த கட்சிகளில் அங்கம் வகிக்கும் அல்லது அக்கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் அத்தனை பேரும் அறிந்த இரகசியந்தான்.  

ஆனால், அக்கட்சிகளின் அடிமைகள், தங்களின் பிழைப்புக்காக ஆதரவு தந்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தைபோல, ஆதரவு தருபவர்களுக்கு இல்லை. 

கறுப்புப்பண ஒழிப்பு என்ற வரலாறு காணாத இமாலய முயற்சியில் வெற்றி பெற என்னென்ன ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதை எடுத்துரைப்பதுதான் எதிர்க் கட்சிகளின் பிரதான வேலையே அன்றி, எதிர்ப்பதோ, போராட்டம் நடத்துவதோ, ஒன்றுகூடி கூத்தடிப்பதோ அன்று. 


ஆனால், இப்படிச் செய்யாமல் எல்லாக் கட்சிகளும் ஓரணியில் நின்று நாடாளுமன்றத்தை முடக்கி இருப்பது என்பதெல்லாம் அந்தந்த கட்சிகளின் ஆதங்கத்தை அப்பட்டமாக வெளிக் காட்டுகிறதே அன்றி வேறில்லை. 

திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது என்றத் தத்துவப் பாடல் வரிகளுக்கு ஏற்ப, ‘‘திருடுவதற்கு என்றே திட்டம் தீட்டுபவர்களுக்கு, திருடாமல் இருப்பதற்கு எப்படி திட்டந் தீட்டித்தர முடியும்?’’ என்பதால் எதிர்க்கிறார்கள் போலும்!  

ஆகையால், இந்த எதிர்ப்பு எதிர்வரும் தேர்தல்களில், அக்கட்சி களுக்கு எதிரான மக்களின் வாக்காக எதிரொளிக்கும் என்ற வகையில், இந்த அரசே, அடுத்த அரசாக, இப்போதே வெற்றிப் பெற்று விட்டதாக, எதிர்க்காலச் சிந்தனையுள்ள சமூக ஆர்வலர்கள் எவரும் பார்க்கிறார்கள். 

ஆகவே, இதனை கறுப்புப்பண ஒழிப்பில் அரசுக்கு கிடைத்துள்ள இரண்டாவது வெற்றியாக கருதுகிறார்கள்.

ஆமாம், உண்மையில், அரசின் அதிரடி கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைக்கு எதிராக அரசியல் கட்சிகள் விடுத்துள்ள போராட்ட அழைப்பு, நமக்கு எதிரானது என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். 

ஆகையால், ஓரணியல் திரண்டுள்ள ஊழல் கட்சிகளின் அடிமைகள் சிலரிடம் வேண்டுமானால் போராட்டத்துக்கு ஆதரவு இருக்குமே அன்றி, சாதாரண ஏழையெளிய நடுத்தர மக்களின் ஆதரவு இருக்காது என்பதே என் பார்வை. இவர்களின் ஆதரவு இல்லாத போராட்டம் ஒருபோதும் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. 

ஆமாம், போராட்டத்துக்கு யார் வேண்டுமானாலும் அழைப்பு விடுக்கலாம். ஆனால், அதனை ஏற்று, அதில் யார்யார் கலந்துக் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே, அதன் வெற்றி நிச்சயமாகும். அழைப்பு விடுத்தவர்களும், அவர்களின் அடிமை களுமே கலந்து கொண்டு, கலைந்து விட்டால், அது நிச்சயமாக தோல்வியில்தான் முடியும். 

ஆனாலும், தங்களுடைய போராட்டம் வெற்றி பெற்றதாகத்தான், அவரவர்களது ஊடகங்களின் வாயிலாக உளறுவார்கள். 

என்னைப் பொறுத்தவரை, அரசியல் கட்சிகள் விடுத்துள்ள அனைத்து விதமான போராட்டத்தையும் வரவேற்கிறேன். 

அப்போதுதான், கறுப்புப்பண ஒழிப்பில் மக்களின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாக விளங்கிக் கொண்டு, அடுத்தடுத்து கருத்துக்களைச் சொல்ல முடியும். அரசின் அதிரடியில் ஹாட்ரிக் வெற்றியை முடிவு செய்ய முடியும்.  

மேலும், மன்னனின் வழியே மக்களின் வழி என்பதை நிலை நிறுத்தி, நிமிரப் போகிறார்களா அல்லது எங்களின் வழியே உங்களின் வழியென மீண்டும் கறுப்புப் பணத்திற்கு வழி கோலப் போகிறார்களா என்பதே, என்னைப் போன்றவர்களிடம் எஞ்சி நிற்கும் கேள்வி? 

இக்கேள்விக்கும் ஓரிரு நாட்களில் விடை கிடைத்து விடும். அவ்வளவே! 

குறிப்பு: இங்கு மன்னன் என்பது இந்திய சாசனத்தின்படி குடியரசுத் தலைவரையே குறிக்கும். பிரதமர் என்பவர் பரிந்துரையாளரே! 
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)