பெரும்பாலும் சட்டத்தில் இல்லாத ஒன்றுதான் இருப்பதாகவும், இருக்கும் ஒன்றுதான் இல்லையெனவும் பொய்யர்கள், நிதிபதிகள் உட்பட அனைவராலும் சொல்லப்படும்!
எனவே, போதிய விளக்கம் இல்லாமல் அல்லது அதற்கான கோட்பாட்டைச் (பிரிவை) சொல்லாமல், இந்திய சாசனத்துக்கு (அரசமைப்புக்கு) எதிரானது என தகவல் சொல்லப்பட்டிருந்தால், அது யாரால் சொல்லப்பட்டிருந்தாலும் அப்படியொரு சங்கதி இந்திய சாசனத்தில் அல்லது சட்டத்தில் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை, நாம்தான் சரி பார்க்க வேண்டும்.
இந்த செய்தியைப் பொருத்தவரை, இந்திய சாசன கோட்பாடு 21 இல், ‘‘சட்டப்படியான விசாரணை முறை இல்லாமல், ஒருவரின் உயிரையோ அல்லது உரிமையையோ பறிக்கக்கூடாது’’ என அடிப்படை உரிமையில் அறிவுறுத்தப்பட்டு உள்ளதன் மூலம், அரசு மரண தண்டனையை ஒழிக்க முடியாது என்கிறது.
ஆனால், "சட்டப்படியான விசாரணை முறை இருக்கிறதா" என்றால், ஒருபோதும் இல்லை என்பது உலகமே அறிந்த இரகசியந்தான்!
இதற்கான சரியான வழிமுறைகளை அடிப்படை உரிமையில் வகுக்காதது, இந்திய சாசனத்தை வரைவு செய்த அறிவார்ந்தவர்களின் அபாரமான சட்ட அறிவு வறுமை அடிப்படைக் காரணம் என்றால், இதற்கு நாங்கள் ஆட்சியாளர்கள் என்ற அகங்காரமே காரணமாக இருந்திருக்க முடியும்.
இதனை வெளிப்படையாக வெளிப்படுத்த விரும்பாதவர்கள், மரண தண்டனையை சட்டத்தில் இருந்து நீக்க வேண்டுமென்கிற கோரிக்கையை ஒருபுறம் ஆரம்பிக்க மறுபுறமோ, அரசு நீக்க முடியாது என்கிறது. இதனை ஐக்கிய நாடுகளின் சபையிலேயே உறுதிசெய்து வாக்களித்தும் உள்ளது.
ஆகவே, அரசு தனது அடிப்படை உரிமையை நிலை நாட்டிக் கொள்வதைப் போல, நாம்தான் நம் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும். இதற்கு அடிப்படை சட்ட விழிப்பறிவுணர்வு மிகவும் அவசியம்.
ஆனால், இதற்கான வாய்ப்பை மக்களுக்கு ஏற்படுத்தித்தந்தால், நாம் ஆட்சி செய்யமுடியாது என்றெண்ணிய ஆங்கிலேயர்களைப் போலவே நம்மவர்களும், அனைவருக்கும் சட்டக்கல்வி கிடைக்க வழிச் செய்யவில்லை.
இதனை நாங்கள் செய்து தந்திருக்கிறோம். பயன்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வளவே!
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment