முகநூலில் ஒருசிலர் எனது உள்பெட்டிக்கு வந்து நான் பொய்த் தொழிலுக்கு படிக்கப் போறேன் என்பார்கள்.
இவர்கள் படிக்க வேண்டிய முக்கிய சங்கதிகளுக்கான இணைப்பு களைக் கொடுத்து, படித்து முடிவெடுக்கச் சொன்னாலுங்கூட, காதில் வாங்க மாட்டார்கள்.
பொய்யருக்கு படிப்பதுதான் எனது சிறுவயது குறிக்கோள், உண்மையாய் இருப்பேன், பணம் வாங்காமல் வாதாடுவேன், ஏழைகளின் நீதிக்காக உதவுவேன், எடுத்துக்காட்டாய் இருப்பேன், புரட்சி செய்வேன் என்றெல்லாம் எதையாவது உளறிக் கொண்டு இருப்பார்கள்.
பின் எதற்காக என்னிடம் படிக்கப் போகிறேன் என்றோ அல்லது படிக்கலாமா என்றோ ஆலோசனை கேட்கிறார்கள் என்பது, அவரவர் களுக்கே வெளிச்சம். இதுவே, அவர்கள் பரிந்துக் கொள்ளும் மன நிலையில் இல்லை என்பதை புரிந்து கொள்ள எனக்கு போதுமானது.
இனியும், இப்படி யாராவது சொன்னால், அவர்களுக்கு இச்செய்தி யை படிக்க கொடுத்து விடலாம் அல்லவா... இதற்காகத் தான் இப்பதிவு!
ஏற்கெனவே பொய்யர் தொழிலுக்கு படித்தவர்கள் சிலர், ஏண்டா இத்தனை வருடம் மற்றும் பணத்தை செலவுசெய்து படித்தோம், படிப்பதற்கு முன்னரே நீதியைத்தேடி... நூல்கள் கிடைத்திருந்தால் படித்திருக்க மாட்டோமே என நொந்து அப்பொய்த் தொழிலைச் செய்யாமல் வேறு வேலை செய்கின்றனர்.
இதையெல்லாம் ஆராயாமலா, நான் ஆராய்ச்சி செய்கிறேன். இப்படி எல்லாம் செய்ய முடியும் என்றால், நான் எதற்காக புத்தகம் எழுதி போதனை செய்கிறேன்?
ஆமாம், ஒரு தனி நபராக நிதிபதிகள் செய்யும் தவறுகளை விமர்சிக்க முடியும்; தனக்கான நீதியை நிலைநாட்டிக் கொள்ள முடியும். ஆனால், பொய்யராக இருந்து, விமர்சித்தால் என்ன நடக்கும் என்பதை உணர்த்துவதுதான், இச்செய்தி.
இப்படித்தான் நடக்கும் என்பதைப்பற்றி நூல்களில் தெளிவாக எழுதி உள்ளேன் என்பது, அந்நூலைப் படித்தவர்களுக்கு மட்டுந்தானே தெரியவரும்.
ஆனால், படிக்காமலும், சொல்லுவதை கேட்காமலும், நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று வீம்பு பேசினால், நாசமாய் போ என்று நினைத்துக் கொண்டு எனது அடுத்தடுத்த வேலையைத்தான் நான் பார்க்க முடியுமே தவிர, உங்களிடம் மாரடித்துக் கொண்டிருக்க முடியாது.
இன்று மட்டுமல்ல; என்றும் சவால் விட்டுச் சொல்கிறேன்...
நான் ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் கொடுத்துள்ளது போன்று, நிதிபதிகளின் தவறுகளை அணுஅணுவாக விமர்சிக்கும் மநுவை, பழந்திண்ணு கொட்டை போட்டதாக சொல்லிக் கொள்ளும் மூத்தப் பொய்யர்களே கூட தாக்கல் செய்து, நீதியை நிலைநாட்டிய உத்தரவோடும் வரட்டும், பார்க்கிறேன்!
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment