கறுப்புப்பண ஒழிப்பு அறிவிப்பு வெளியான உடனேயே, இன்னுங் கொஞ்சம் நாளைக்கு பிச்சைக்கார பிரம்மாக்கள்தான் சில்லரை வரந்தர வேண்டுமென திரு. வாரண்ட் பாலா அவர்கள் முகநூலில் பதிவிட்டு இருந்தார்.
வழக்கமாக நொறுக்குத் தீணிகளை வாங்கும் பேக்கரிக்கு சென்று வாங்க காத்து இருந்தேன். அப்பொழுது அங்கு வந்த தர்மம் பெற்று பிழைக்கும் பெண்மணி தான் வைத்திருந்த 8500 ரூபாயை கொடுத்து, பேக்கரியில் சில்லரை கேட்டார். இதனை பார்த்ததும், இவர்களிடம் அதிகமான சில்லரை இருக்கிறது போலும் என நினைத்தேன்.
ஆனால், கடைக்காரரோ ‘‘உனக்கு எது வேண்டுமானாலும் வாங்கிட்டுப் போ; இப்போ சில்லரை கிடையாது’’ என்று சொல்ல, அவர்களிடம் சில்லரை இல்லை என்பது புரிந்தது.
ஆனால், அப்பெண்மணி எத்தனை வருஷமா நான் உனக்கு சில்லரை கொடுத்திருக்கேன். இதெல்லாம், என் சில்லரைக்கு நீ கொடுத்த பணந்தான். எனக்கு பேங்க் அக்கவுண்லாம் இல்ல. அதனால, நீ தான் சில்லரை தரவேண்டும் என்றதும், அங்கிருந்த எங்களுக்கு சிரிப்பு வந்துவிட்டது.
கடைகாரருக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது. மாற்றித்தருவதாக சொல்லி கேட்டதை கொடுத்தும் அனுப்பினார். நிலைமை கொஞ்சம் சகஜமான பிறகு, முடிந்தால் நானே கூட மாற்றி தரவேண்டுமென எண்ணி உள்ளேன்.
உங்களில் வெகுசிலர் இப்படிச் செய்தால்கூட, இவர்களின் பெரிய பணமாற்றப் பிரச்சினை எளிதாக தீர்க்கப்பட்டு விடும்.
உங்களில் வெகுசிலர் இப்படிச் செய்தால்கூட, இவர்களின் பெரிய பணமாற்றப் பிரச்சினை எளிதாக தீர்க்கப்பட்டு விடும்.
இப்படி, தர்மம் பெற்று பணம் சேர்த்து வைத்துள்ளோர் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஆதாரச் செய்தி!
உண்மையில், அப்பெண்மணி கேட்டது நியாயந்தானே!
ஆமாம், ‘‘நியாயந்தான் சட்டம்’’ என்ற அடிப்படை தத்துவத்தை முன்மொழிந்துள்ள, நம் கொள்கை முழக்கம், நம் வாசகர் அல்லாது தர்மம் பெற்று வாழும் பெண்மணி வரை, ஏதோவொரு வகையில் ஊடுருவி இருக்கிறது. ஆனால், அது பணமில்லாமல் துன்பத்திற்கு ஆளாகும்போதுதான் வெளி வருகிறது.
ஆமாம், இப்பெண்மணி கேட்ட நியாயத்தைக் கூட, சட்டப் பிரச்சினையில் சிக்கித்தவிக்கும் பணப்புழக்கம் உள்ள மக்கள், நேரடியாக கேட்கத்துணிவு இல்லாமல் பொய்யர்களை நாடி நின்று, அனைத்து விதத்திலும் மோசம் போனப்பின், யோசித்து என்ன பயன்?
சில்லரையை கொடுக்க வேண்டுமென நினைக்கிற கடைக்காரர்கள், இவர்களைப் போன்றவர்களிடம் பெற்று, கௌரவமாக நமக்கு கொடுத்து விடுகிறார்கள். இதில், கமிஷன் கொடுத்து வாங்குபவர்களும் உண்டு.
ஆனால், சில்லரையைக் கொடுக்காமல் சில்லரைத்தனமாக நடந்து கொள்ள வேண்டுமென நினைக்கும் சில்லரை நடத்துனர்களை போன்ற பலரையும் பிச்சைக்காரர்கள் என்று சொல்வதை தவிர வேறு வார்த்தை இல்லை.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment