2014 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட, ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலில், வருமான வரியை ஏமாற்றி செலுத்துவத்தில் உள்ள ஆடிட்டர்களின் பங்குகளைப் பற்றி ஓரளவிற்கே எழுதி உள்ளேன்.
ஏனெனில், சமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான எனது சட்ட ஆராய்ச்சியில், ஒரே குட்டையில் (ஊ, நா)றிய மட்டைகளான பொய்யர்கள் மற்றும் நிதிபதிகளைப்பற்றி ஆராய்ந்த அளவிற்கு, ஆடிட்டர்களைப் பற்றி ஆராய வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
இவர்களைப்பற்றி ஆராயப்போனால், பல நூல்களை எழுத வேண்டியிருக்கும். வேறு யாரும் எழுதி உள்ளார்களா என்பதும் தெரியவில்லை.
இவிங்க எல்லாம் ஏற்கெனவே தங்களது சட்டக் கடமையை சரியாக செய்திருந்தால், கருப்புப்பணம் என்பதற்கே வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.
தும்பை விட்டு வாலைப்பிடித்த கதையாக, இப்போது கருப்புப் பணத்தை ஒழிக்க உறுதி பூண்டுள்ளோம் என்று, இப்படி தங்களை விளம்பரப் படுத்தி உள்ளார்கள்.
இதனை நாளிதழ்களில் விளம்பரப்படுத்தி இருப்பதன் மூலம், ஏற்கெனவே இவர்கள் ஊழலுக்கும் கருப்புப்பணத்திற்கும் துணை நின்றார்கள் என்பதை மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார்கள். அவ்வளவே!
மேலும், ‘‘சொல்லுறவன் செய்யமாட்டான்; செய்யிறவன் சொல்ல மாட்டான்’’ என்பதும், ‘‘விளம்பரம் என்பதும் வெத்து விளம்பரத் துக்காகத்தானே தவிர, உண்மையை விளம்புவதற்கு அல்ல’’ என்பதும் உலகறிந்த அனுபவ மொழிகள்!
ஆகவே, இவர்கள் எதற்காக இதனை விளம்பரப்படுத்தினார்கள் என்பதும், இதனைப் பார்த்து இன்னும் யார்யார் விளம்பரம் வெளியிடப் போகிறார்களோ என்பதே, அச்சமாக எழுந்துள்ள கேள்வி?
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment