எனக்கு காலையில் இருந்து வந்த தகவல் மற்றும் கேள்விகளின் அடிப்படையில், கருப்புப்பணம் வைத்திருப்போர் அதனை வெள்ளையாக மாற்றுவதற்கு 20 சதவிகித கமிஷன் அடிப்படையில் இரண்டு லட்சம் வரை மாற்றித்தர கேட்கிறார்களாம்.
அவர்களது 1, 60, 000 த்தை திருப்பித் தரும் வரை, அவர்களது முக்கிய ஆவணங்களை தங்கள் வசம் வைத்துக் கொள்ள கேட்கிறார்களாம்.
உங்களைச் சுரண்டி கருப்புப்பணம் சேர்த்து, அதனை உங்களின் மூலமே வெள்ளையாக மாற்ற முயற்சிக்கும் எந்தவொரு செயலுக்கும் உடன்படாதீர்கள் என்பது எனது அறிவுரை அன்று; கோரிக்கை!
இப்படி சில பெண்களுக்கும், திருப்பித்தர வேண்டாம் என்று கூறி, ஓரிரு லட்சங்களை கொடுக்கவும் முன்வருகிறார்களாம். இப்படி கேட்டதில் வங்கியில் பணி புரியும் ஊழல் பெருச்சாலிகளும் உண்டாம்.
அரசாங்கமே இரண்டரை லட்சங்களை அனுமதித்துள்ளபோது, ஓரிரு லட்சங்களை வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணமும் வேண்டாம்.
கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு, இரண்டு லட்சத்திற்கு மேல் நகை வாங்கியவர்களின் பட்டிலையும், வீடியோவையும் ஆதாரமாக வைத்து, அவர்களிடம் விசாரணை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதேபோல, 5000, 10000 மாக இருந்த உங்களது வங்கிக்கணக்கில் எப்படி லட்சக்கணக்கில் வந்தது என, ஊழல் பெரிச்சாலிகளைப் பிடித்தப் பிறகு சுண்டெலியான உங்களைப் பிடிக்க வாய்ப்புகள் அதிகம்.
இதற்கு முன்பாக உங்களுக்கு பணங்கொடுத்த ஊழல் பெருச்சாலிகள் விசாரணையில் சிக்க நேர்ந்தால், அவர்களிடம் பணம் வாங்கிய வகையில் நீங்களும் சிக்க நேரிடும்.
ஆகையால், உங்களைச் சுரண்டியும், ஊழல் செய்தும் கருப்புப் பணத்தை வைத்துக்கொண்டு இப்படி கேட்பவர்களைப் பற்றி வருமான வரித்துறையினருக்கு நேரடியாகவோ அல்லது வேறு நபர்கள் மூலமாகவோ தகவல் சொல்லி, கருப்புப்பணத்தை ஒழிக்க ஒத்துழைப்பு கொடுங்கள்.
இந்த தைரியம் இல்லாதவர்கள், நம்பினால் என்னிடம் சொல்லுங்கள். நான் சொல்கிறேன். இப்படி தகவல் கொடுங்களென வருமான வரித்துறையே, மக்களுக்கு விளம்பரப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், செய்ததாக தெரியவில்லை.
உடனடியாக இதனை செய்வதோடு, கருப்புப்பணம் குறித்து தகவல் கொடுப்போருக்கு, கைப்பற்றப்படும் பணத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் சன்மானமாக வழங்கப்படும் என அறிவித்தால், ஏழை எளிய மக்கள் குறுக்கு வழிக்கு ஆசைப்பட மாட்டார்கள் என்பதோடு, கருப்புப்பண முதலைகளும் சுரண்டிய மக்களை மேலும் சுரண்ட பயன்படுத்திக் கொள்ள பயப்படு வார்கள்.
இப்படிச் செய்வதனால் மட்டுமே, கருப்புப்பணத்தை ஒழிக்க முடியும்.
கருப்புப் பணத்தில் சிக்குபவர்கள் நிச்சயம் கருப்பு நகை, கருப்புச் சொத்து, பினாமிச் சொத்து உள்ளிட்ட பல்வேறு வழி வகைகளிலும் நிச்சயம் சிக்குவார்கள்.
ஆகவே, ஏழை எளிய நடுத்தர மக்களே எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!!
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment