No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Tuesday, November 8, 2016

விதைப்பந்து வீசலாம் வாங்க...!


போர் வந்தால் எதிரி நாடுகளின் மீது குண்டு வீசுவார்கள்...

நாம் வாழும் இப்பூமிப்பந்து மீது, நம் நல்வாழ்வுக்காக அன்பு வந்தால் விதைப்பந்து வீசுங்கள்.....

எளிய வழியில் அதிகமாக மரங்கள் வளர்க்க ஒரு வழி...

ஆம், இது எளிது தான்....

எப்படி?!!!!!!!!


விதைப்பந்து என்பது, மண் மற்றும் பசுஞ்சாணத்தால் ஆன ஓர் உருண்டை. இது பயன்தரும் மரங்களின் விதைகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட பந்து. 

ஆமாம், பயன் தரும் விதைகளை சேகரித்து, அதை பாதுகாத்து அதனை சக்தி வாய்ந்த இயற்கை எறி குண்டுகளாக பரவலாக பயன்படுத்திய மிகவும் தொன்மையான எகிப்திய நாட்டு விவசாய முறையாகும்.

இரண்டாம் உலகப் போருக்குப்பின் ஜப்பான் நாட்டில் விளை நிலங்களைத் தவிர்த்து, எரிமலை சாம்பல் படிந்திருந்த பகுதிகளில் விதைப்பந்துகளை வானிலிருந்து தூவியே காடுகளை உருவாக்கினர். 

இதனால்தான், போருக்குப் பின்னரும், அத்தடமே தெரியாத அளவிற்கு அனைத்திலும் வளர்ச்சியடைத்து நம்மை பிரம்பிக்க வைக்கிறது. 

விதை பந்துகளை தயாரிக்க தேவையான மூலப் பொருட்கள் :

1. செம்மண் அல்லது களிமண் 

2. பலன் தரும் விருட்சங்களின் தரமான விதைகள்.

3. பசுஞ்சாணம் 

4. தண்ணீர் 

செய்முறை :

செம்மண்ணில் பாதியளவு பசுஞ் சாணத்தை கலந்து நீரூற்றி பிசைந்து உருண்டையாக உருட்டிக் கொள்ள வேண்டும். அதன் நடுவே நீங்கள் சேகரித்த விதைகளை வைத்து உருண்டையாக்கி விடுங்கள். 

முதலில் நிழலில் உலர்த்தி பிறகு வெயிலில் ஒரு நாள் காய வைக்கவும். இதனால் உருண்டைகளில் வெடிப்பு வராது. சூரிய வெப்பத்தில் ஒரு நாள் காய்ந்தால் அது இறுகி விடும். 

நீங்கள் வெளியே செல்லும் போது மரம் நட வாய்ப்புள்ள இடங்களில் வீசி செல்லுங்கள். அவ்விதை மழை வரும்வரை எலி, எறும்பு, பறவைகளிடமிருந்து பாதுகாப்பாய் இருக்கும். 

ஒரு வருடம் வரை விதை பத்திரமாக முளைக்க ஏற்றதாக இருக்கும். 

விதைகளைப் பொருத்தவரை சில நாட்களுக்கு முளைக்க தேவையான சத்துக்கள் விதையிலேயே இருக்கும்.

மண்ணில் கலந்துள்ள சாணமானது, மண்ணில் நுண்ணுயிர்களை உருவாக்கி செடியின் வேர் மண்ணில் எளிதில் செல்ல ஏற்ற வகையில் இலகுவாக்கி விடும். 

மண்ணின் கடினத்தன்மையை அகற்றி மிருதுவாக்கி விடும். சாணத்தை உண்ணும் நுண்ணுயிர்களின் கழிவை செடியின் வேர் உண்டு தன்னை அம்மண்ணில் நிலைப்படுத்திக் கொள்ளும். 

ஆனால் வெறும் விதைகளை விதைத்தால் அவை மற்ற உயிரினங்களால் உண்ணப்பட்டு விடலாம். வெப்பத்தால் தன் முளைக்கும் தன்மையை இழந்து விடலாம். 

நிலமானது செடி வளர்வதற்கான ஏற்றதாக இல்லாமல் கடினமானதாக இருக்கலாம். அதனால் விதை முளைக்காது. ஆனால் விதைப்பந்தில் தண்ணீர் பட்டவுடன் இலகுவதுடன் நுண்ணுயிர்களை உண்டாக்கி நிலத்தை இலகுவாக்கி விடும்.

எனவே உங்கள் வீடுகளில் சிறிது செம்மண் மற்றும் பசுஞ்சாணத்தை சேகரித்து வையுங்கள். பழங்களை சாப்பிட்ட பின் நல்ல விதைகளை எடுத்து சேகரித்து வையுங்கள். 

ஓய்வு நேரத்தில் விதைப்பந்தை உருவாக்கி வைத்து வெளியே செல்லும்போது தோதான இடம் பார்த்து வீசி விடுங்கள். விளைநிலங்களை தவிர்த்து விடுங்கள். கோடை காலமானாலும் வீசி விடுங்கள். 

பறவைகள் கூட தனக்கு உணவளித்த மரத்திற்கு நன்றிக்கடனாக அவ்விதைகளை எச்சத்துடன் கலந்து ஆங்காங்கே விதைத்துச் செல்கிறது. அவ்விதை விழுமிடம் பாறையாக இருந்தாலும் முளைக்கிறது.   

சாலைதோறும் மரங்களை நட்டு வைக்க அசோகராக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. 

இயற்கையை நேசிக்கும் மனமும், ஆர்வமும், அதற்கான முயற்சியும் இருந்தால் போதும், விதைப்பந்துகளை தயாரித்தும், வீசியும், நாம் வாழும் இப்பூமிப்பந்தை வளமானதாக மாற்றி விடலாம்.  

குறிப்பு: மதுரையைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவரும், நமது நீதியைத்தேடி... வாசகரும் ஆன (மனித, ஆரோக்கிய)ப் பட்டறை சிவக்குமரன் இதனை, இரு தினங்களுக்கு முன்னர் எனது மின்னஞ்சலுக்கு அனுப்பினார். இதனை சற்றே எனது பாணியில் உருமாற்றம் செய்துள்ளேன். அவ்வளவே!  

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)