No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Saturday, November 5, 2016

கையொப்ப - கைநாட்டுச் சர்ச்சை சங்கதிகளும் தீர்வும்!பொதுவாக எழுத்தறிவு இல்லாதவர்கள்தான் கைநாட்டு வைக்க முடியும் என எண்ணுவது தவறு. எழுத்தறிவு உள்ளவர்களும் வைக்கலாம். 

எழுத்தறிவு உள்ளவர்கள் எல்லாம் கையெழுத்துதான் போட வேண்டுமென்றோ அல்லது எழுத்தறிவு இல்லாதவர்கள் மட்டுந்தான் கைநாட்டுதான் வைக்க வேண்டுமென்றோ சட்ட விதிகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. 

அப்படியே எதுவும் இருந்தாலுங்கூட, ‘‘நியாயந்தான் சட்டம்’’ என்ற அடிப்படை தத்துவத்தின் கீழ் செல்லாததாகி விடும். மேலும், ஓரிடத்தில் அரசுத்துறையே இப்படி செய்கிறது என்பதுபற்றி, பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால், அவ்விடம்பற்றி பின்னர் சொல்கிறேன்.   

‘‘நியாயந்தான் சட்டம்’’ என்கிற அடிப்படையில், இவ்விரண்டில் உங்களுக்கு பாதுகாப்பானது எதுவோ அதனை செய்து கொள்ளலாம். தேவைப்பட்டால், பாதுகாப்பு கருதி ஒருசேர இரண்டையுங்கூட செய்யலாம். 

ஏனெனில், ஒருவர் எங்கெல்லாம் கையெழுத்திடுகிறார் என்பதை நினைவு வைத்துக் கொள்வதோ அல்லது அப்படி கையெழுத்து இடும் பகுதியின் நகலைப் பிரதி வைத்துக் கொள்வதோ கடினம் என்ற நிலையில், மிகமிக முக்கியமான ஆவணங்களில் இரண்டையும் ஒருசேர செய்து விடுவது, பல்வேறு விதங்களில் நன்மை பயக்கும்.   

ஏனெனில், ஒருவர் போட்ட கையொப்பத்தை, தான் போடவில்லை என்று எளிதாக மறுப்பதும், ஒருவர் போடாத கையொப்பத்தை, அவர்தான் போட்டார் என்று எளிதாக குற்றஞ் சுமத்தவும் முடியும். 

தற்போது, கைநாட்டுச் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள ஜெயலலிதா, முன்பாக தான் குற்றஞ்சாற்றப்பட்ட ஒரு வழக்கில், ‘‘தான் போட்ட கையொப்பத்தையே போடவில்லை’’ என மறுத்தார் என்ற குற்றச்சாற்றும் உண்டு. 

இந்நிலையில் அறிவியல்பூர்வமான சோதனை மூலந்தான் நிரூபிக்க முடியும் என்ற நிலையில், இந்த அறிவியல்பூர்வ சோதனையும் எந்த அளவிற்கு உண்மையாக இருக்கும் என்று சொல்வதற்கு இல்லை. 

காசோலை மோசடி வழக்குக்களில் தாக்கல் செய்யப்படும் பெரும்பாழான காசோலைகளில் கையொப்பம் மட்டுமே, அக்காசோலைக்கு உரியவருடையதாக இருக்கும். மற்றவை எல்லாமே வேறு ஒருவருடைய கையெழுத்தாகத்தான் இருக்கும். இதுபற்றிய ஒரு வழக்கு விவரத்தை ‘‘மநு வரையுங்கலை!’’ சொல்லியுள்ளேன். 

சாதாரண காசோலைகளே இப்படியென்றால், மதிப்புமிக்க சொத்துப் பத்திரங்களில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை காண அரியதொரு ஆதாரமே வெளிவந்துள்ளது. ஆமாம், இந்தக் காணொளியில், 


தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் தன் தந்தையின் கையொப்பத்தையும், கைநாட்டையும் அவரது மகளான பெண் மருத்துவர் ஜெயசுதா, தனது மருத்துவச்சி என்ற தொழிலைத் தவறாகப் பயன்படுத்தி, பணியில் இருந்த செவிலியர்களை வெளியே அனுப்பி விட்டு, தனது மருத்துவர் மகன்களின் உதவியுடன் வலுக்கட்டாயமாக பெறுவதைப் பார்க்கலாம். 

மேலும், இந்த உண்மை வெளிவந்து விடக்கூடாது என்பதற்காக, பெற்ற தந்தையின் உயிரைப்பற்றி கவலைப்படாமல், அவருக்கு பொருத்தப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்களை நீக்கி கொலை செய்ய முற்படுவதையும்  காணலாம். 

இவ்வளவு ஏன், நான் நம்பிக்கைக்கு உரிய வாசகர் என்று கருதிய ஒருவரே, தன் சொத்துப் பிரச்சினை தீர்த்துத்தர உதவி கேட்டு வந்த ஒருவரின் சொத்தை, அவ்வாசகர் தனது பெயருக்கு பொய்யாக கிரயம் எழுதி வாங்கிக் கொண்டு, அக்கிரயம் உண்மையென வழக்கு நடத்திக் கொண்டிருக்கும் விவரத்தை ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் விரிவாகச் சொல்லியுள்ளேன். 

ஆகையால், மற்றவர்களிடம் மட்டுமல்லாது, நம் வாசகர்களிடங்கூட மிகவும் எச்சரிக்கையாக இருங்கள் என வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் எச்சரித்துக் கொண்டிருக்கிறேன். இதனை வேண்டாத வெறுப்பு நச்சரிப்பாக கருதுபவர்களைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை. 

பல பிரபலங்கள், தாங்கள் கையொப்பமிட வேண்டிய இடங்களில் எல்லாம், அவர்களே இடாமல் நம்பிக்கைக்கு உ(ய)ரிய அடிமைகளை வைத்தே கையொப்பமிடுகிறார்கள் என்பதையும் நான் நன்கறிவேன். 

இப்படி அடுத்தவரின் எப்படிப்பட்ட கையொப்பத்தையும் போலியாகப் போடும் ஈனத்திறம் பெற்ற கயமையாளர்கள் பலர் இருக்கிறார்கள்.

இதிலுள்ள வில்லங்கம் தெரிந்தும், தெரியாமலும் அப்பிரபலங்களின் அடிமைகள், தங்களின் விசுவாசத்தைக் காட்டவும், அவர்களது அற்ப கூலி, அற்பப் புகழ் ஆகியவற்றுக்காகவும் இதனைச் செய்கிறார்கள். இதெல்லாம் திரைமறைவில் நடக்குமே ஒழிய, பலர் அறிய நடக்காது. 

ஆகையால், பிரபலங்களின் கையொப்பத்தைப் பெறும்நிலை உங்களுக்கு ஏற்பட்டால், உங்களின் முன்னரே வாங்க வேண்டும். ஆனால், வங்கிகள் உட்பட பல நிறுவனங்கள், தங்களுக்கு கிடைக்கும் பணத்திற்காக இந்த விசயத்தில் தெரிந்தே, போலி கையொப்பமிட உதவுகின்றன.  

ஆமாம், அப்பிரபலத்தை வங்கிக்கு வா என்று அழைத்தால், அவர்களின் பெருந்தொகை நம் வங்கிக்கு கிடைக்காமல் போய்விடும் என்கிற பண ஆசையில், அப்பிரபலங்களை நாடி, தரகுக்கு ஆள் பிடிக்கும் வங்கி ஊழியர்களே செல்கிறார்கள்.

இப்படி ரியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் பெற்ற மாரியப்பன் தங்கவேலு வீட்டிற்கு வங்கி ஊழியர்கள் படையெடுத்த செய்தியும் நாளிதழ்களில் வெளியாகின. இதன் நகல் தேவைப்படும் என நினைக்கவில்லை. ஆகையால், எடுத்து வைக்கவில்லை. 

பிரபலங்கள் கையொப்பம் இடவேண்டிய படிவங்களை கொடுத்து விட்டு, பின்னர் வந்துப் பெற்றுக் கொள்வார்கள். இவ்விடைப்பட்ட நேரத்தில்தான் போலியான கையொப்பங்கள் மோசடியாக போடப்படுகின்றன.   

இப்படி பொய் கையெழுத்து போடுபவர்கள் இருக்க வேண்டிய சிறையில் கூட, இப்படிப்பட்ட ஓரிருவரை சந்தித்து இருக்கிறேன். இவர்களுக்கு சிறை என்பது, மிகவும் பாதுகாப்பான இடமே என்ற வகையில், பிணையில் சென்று போட வேண்டிய பொய் கையொப்பத்தைப் போட்டு, பெறும் மோசடி செய்தப்பின் சிறைக்கு வந்து விடுவார்கள். 

சரி, நான் ஏற்கெனவே சொல்வதாக சொல்லி இருந்த விசயத்துக்கு வருகிறேன். 

நீங்க எவ்வளவுதான் படித்திருந்தாலும், பல மொழிகளில் கையொப்பமிட தெரிந்தவராக இருந்தாலுங்கூட, நீங்க சிறையில் விசாரணை அல்லது தண்டனை கைதியாக இருக்கும் போது கைநாட்டுதான் வாங்குவார்கள். 

ஒருவேளை நீங்கள் சிறையிலேயே இறந்து விட்டால், இறந்தது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தவே கைநாட்டு வாங்குவதாக தெரிகிறது. இது ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் இருந்தே இருப்பதாகவும் தெரிகிறது. 

இதற்கு மறுப்பு தெரிவித்து, கைநாட்டு வைக்க மறுத்ததால்தான் பியுஷ் சேத்யாவை, வையென சிறைச்சாலை ஊழியர்கள் தாக்கியதாகவும் தகவல் உண்டு. ஆனால், இதுதான் காரணமென்று அதிகாரப்பூர்வமான செய்திகள் இல்லை.
  
புதிதாக சிறைக்கு செல்பவர்கள் இதுபோன்ற தகவல்களை தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே, பலருக்கும் தெரியாத கை நாட்டு விவகாரத்தை சொல்கிறேன். 

ஒருவரது உடல்நிலை காரணமாகவோ அல்லது பயம், பதற்றம் ஆகியவற்றின் காரணமாகவே, அவர்கள் போடும் கையொப்பங்கள் மாறலாம். ஆனால், கை ரேகைகள் அவ்வளவு எளிதாக மாறாது என்பதும், ஒருவரின் கைரேகையைப் போல் மற்றவர்களுக்கு இருக்காது என்பதும், ஆகையால் இதில் போலிகள் இருக்க சாத்திய மில்லை என்பதாலும், முக்கிய ஆவணங்களில் சட்டப்படியே கைரேகையை கட்டாயம் ஆக்கலாம். 

இல்லையெனில், அந்த ஆவணத்தின் சில குறிப்பிட்ட பகுதிகளை யாவது சொந்தமாக எழுதியப்பின் கையொப்பமிடச் சொல்லுவதன் மூலம் பொய்யான கையொப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்பதுபற்றி, ஆவணங்கள் கையெழுத்தில் இருக்கோணும்!  என்ற கட்டுரையில் சொல்லி உள்ளேன். 

எனவே, கையொப்பமிடும் பழக்கம் உள்ளவர்கள், சூழ்நிலைக்கு ஏற்ப வைக்கும் கைநாட்டில் சந்தேகம் எழுந்து, ஒருவேளை அந்த நபர் சிறையில் இருந்தவராக இருந்தால், அங்கு வைத்த கை நாட்டைக் கொண்டு தங்களின் சந்தேகத்தை தெளிவுப்படுத்(த, தி)க் கோர அல்லது கொள்ள முடியுமே தவிர, கைநாட்டு வைக்க உரிமையில்லை என்று நியாயப்படி வழக்குப்போட முடியாது. 

மேலும், ஒருவர் சுயநினைவோடுதான் கைநாட்டு வைத்தார் என்பதை தவிர, வேறெந்த சட்டப் பிரச்சினையும் இவ்விவகாரத்தில் இல்லை. ஆனால், இதுகுறித்து வழக்கில் எந்த கேள்வியும் எழுப்பப்பட்டதாக தெரியவில்லை. 


ஆனால், தன்னார்வலர்கள் என்றப் பெயரில், பினாமிகளாக திரியும் சில புகழ் விரும்பி மற்றும் விளம்பர விரும்பித் தறுதலைகளே, பொதுநல வழக்கு என்றப் பெயரில் எதற்கெடுத்தாலும் வழக்கு போடுகிறார்கள். 

தலைக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டுமென வழக்கு போட்டதும், அதனைத் தொடர்ந்து நிதிபதி கிறுக்கு கிருபாகரன், சட்டத்தை மீறிய தான்தோண்றித்தனமான உத்தரவை பிறப்பிக்க அடித்தளம் அமைத்துக் கொடுத்ததும், இத்தன்னார்வ தறுதலை தான்.   

சமூகநல ஆர்வலர் என்று சொல்லிக்கொண்டு, தொட்டதற்கும் வழக்கு போடும் இத்தறுதலை, தலைக்கவசம் அணியும் விவகாரத்தில் வாகனம் தொடர்புடைய ஆவணங்களையும், வண்டியையும் பறிமுதல் செய்யலாம் என்ற நிதிபதி கிறுக்கு கிருபாகரனின் சட்ட விரோத உத்தரவை எதிர்த்து, பொய்யர்கள் மேற்கொண்ட முயற்சியைக்கூட மேற்கொள்ளவில்லை. 

இவரைப்பற்றி, சமூகத்திற்கு சொல்ல வேண்டியவை ஏராளம் இருக்கிறது. அதற்கான தேவையும், வாய்ப்பும் ஏற்படும்போது கொஞ்சம் கொஞ்சமாக சொல்கிறேன். இப்படி இன்னுஞ் சிலர் உள்ளனர். 

இவர்கள், இவர்களாகவே கற்பனையில் நினைத்துக் கொண்டு இருப்பது போன்று, அவரவர்களது தற்புகழ் தற்பெருமையைத் தவிர, இவர்களைப் பற்றி நன்கு அறிந்த என்னைப் போன்றவர்களிடம் வேறெதுவுமே கிடையாது என்ற உண்மையை, எனக்கே உரித்தான உயரிய கொள்கையின்படி, அவர்களது  மூஞ்சியில் அறைந்தார் போல, நேரடியாகவே சொல்லி இருக்கிறேன். இதில், இவரும் ஒருவர். 

எனக்கே, ஏதோவொரு விதத்தில் இவர்களைப் பற்றிய உண்மை வெளிப்படையாக தெரியும்போது, உலவுத்துறை மூலம் கண்காணிக்கும் அரசுக்கும், மற்ற அதிகார பீடங்களுக்கும் தெரியாதா என்ன? 

ஆகையால்தான், இவர்களை ஒரு பொறுட்டாக மதிப்பதில்லை. மதிப்பவர்களின் மறுபக்கத்தை ஆராய்ந்தால், மதிப்புக்கான காரணம் என்னவென்பது தெரியும். அவ்வளவே!

பிற்சேர்க்கை நாள்: 16-11-2018

நிதிபதி கிறுக்கு கிருபாகரன் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டதாக மேலே சொல்லப்பட்டது அல்லவா?

இது உண்மைதான் என்பதை, ‘‘நிதிபதி கிறுக்கு கிருபாகரன் சட்டத்தை வளைப்பதில் வல்லவர் என்றும், அவரைப் பார்த்து நானும் கற்றுக் கொண்டேன்’’ என்றும் மற்றொரு நிதிபதியே பொதுவில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். 

ஆகவே, நிதிபதி கிறுக்கு கிருபாகரன் போன்றோர், எப்படிப்பட்ட அய்யோக்கிய நிதிபதிகள் என்பதை, உணர்ந்துக் கொள்ளுங்கள். 

சட்டம் மனைவியைப் போன்றது. மாறாக, சட்டத்தை தன் விருப்பம்போல வளைத்து நிதிபதிகள் எழுதும் தீர்ப்புகள் ஒழுக்கமில்லாத விபச்சாரிகளைப் போன்றது என்பதை, சட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்?! என்ற கட்டுரையில் விரிவாகப் படித்து அறியவும். 

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)