சமூக வலைத்தளம் என்றாலே, அது முகநூல் மட்டுந்தான் என்கிற தோற்றம் நிலவி வருகிறது. இது தவறு. இத்தளத்தை போலவே, மேலும் பல தளங்கள் இருக்கிறது. ஆனால் அதுபற்றி நமக்கு தெரிவதில்லை.
‘லிங்கட் இன்’ என்ற இத்தளங்கூட, முகநூலைப் போலவே உள்ள ஒரு சமூக வலைத்தள நிறுவனந்தான். இத்தளம் சமூக அக்கறையோடு வேலை வாய்ப்பினை வழங்க முன்வந்துள்ளதை இச்செய்தி வெளிப்படுத்துகிறது.
முகநூலில் அதிகப்படியானோர் அடிமைப்பட்டு கிடப்பதால், முகநூல் நிறுவனம் தானே என்ற மமதையில் முன்னேறிக் கொண்டு இருக்கிறது.
ஆமாம், பல முற்போக்கு சிந்தனையாளர்களின் கருத்துக்கள் முடக்கப்படுவது, அதனை எண்ணியெண்ணி முடக்கப்பட்டவர்கள் புலம்பி பதிவிடுவதும் தொடர் கதையாகி விட்டது.
இப்படி முடக்கப்படுவதற்கான காரணங்களும் சொல்லப்படுவதில்லை என்பதோடு, செல்வாக்கு உள்ளவர்கள் தவிர, மற்றவர்கள் இழந்து விட்ட முகநூல் கணக்கை, எவ்வளவு முயன்றாலும் மீட்டெடுக்க முயல்வதில்லை என்பது முகநூலில் நமக்குள்ள பெருங்குறை.
ஆமாம், முடக்கப்பட்ட கணக்கை மீட்டெடுக்கும் விசயத்தில் சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைப் போலவே, முகநூல் நிறுவனத்திடம் இருந்து பதில் வரும்.
முகநூலில் வெட்டியாக பலர் சுற்றித் திரிவதைப் போல, ‘லிங்கட் இன்’ இல் யாரும் சுற்றித் திரிவதில்லை. ஆக்கப்பூர்வமான சிந்தனையுள்ளவர்கள் மட்டுமே கணக்கு வைத்திருக்கிறார்கள், தங்களின் கருத்துக்களைப் பதிவிடுகிறார்கள்.
ஆனால், இதில் தமிழ்ப் பதிவுகள் மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஆகையால், தமிழ்ப் பதிவர்கள் ஐப் பயன்படுத்துவது நல்லதொரு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்பதால், நான் பதிவிட்டுக் கொண்டுதான் இருக்கிறேன்.
‘மக்களுக்காகத்தான் சமூக வலைத்தள நிறுவனங்களே ஒழிய, அவ்வலைத்தள நிறுவனங்களுக்காக மக்கள் அல்ல’ என்ற சிந்தனையோடு, பிற சமூக வலைத்தளங்களை நாம் பயன்படுத்த ஆரம்பித்தால், முட்டாள்தனம் நிறைந்த முகநூல் போன்ற சமூக வலைத்தள நிறுவனங்கள் நம்மை தேடி வரவேண்டியிருக்கும்.
இல்லையென்றால், ஆர்குட் போன்று மூடி விட்டுத்தான் போக வேண்டியிருக்கும். எனவே, முகநூலுக்கு மாற்று என்ன என்பதை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு, ‘லிங்கட் இன்’ சரியான தளமாகும்.
‘நாம் என்ன செய்யப் போகிறோம்’ என்பதே எஞ்சி நிற்கும் (கே, வே)ள்வி.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment