நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Wednesday, November 30, 2016

சட்டத்தை சரியாகப் படிக்காமல் செயல்பட்டால் இப்படித்தான் நடக்கும்.


இன்று, 30.11.2016 அன்று, மின்னஞ்சலில் வந்த வாசகரின் கேள்வியும், எனது பதிலும்!

ஐயா  

வணக்கம்

தங்கள் படைப்புகள் அனைத்தும் சமுதாயத்திற்கும் தனி மனிதனுக்கும் பயனளிக்கிறது. அதுவும் மனு வரையுங்கலை புத்தகம் எனக்கு மிகவும் பிடித்தது.

வாட்டாச்சியரின் மிரட்டல் தொடர்பாக ஒரு சந்தேகம்

நான் நீர்வழி ஓடை /பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி அரசு ஆணை 540ன் கீழ் வட்டாட்சியருக்கு மனு செய்திருந்தேன்.

வட்டாச்சியர் 60 நாட்கள் ஆகியும் எந்த அறிக்கையும்/தகவலும் தராதாதால் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்திருந்தேன், தகவலுக்காக அந்த மேல்முறையீடு விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியிருந்தேன். 

மாவட்ட ஆட்சியர் கோட்டாட்சியருக்கு ஒரு கடிதம் அனுப்பி அந்த கடிதத்தில் என்னுடைய மனு மீது நடவடிக்கை எடுத்து தீர்வு செய்ய உத்திரவிட்டுருந்தார். அந்த நகலும் எனக்கு அனுப்பியிருந்தார்கள்.

இந்த கடிதம் வட்டாட்சியருக்கு அனுப்பப்படவே இல்லை. ஆனால் வட்டாச்சியர் என்னை அழைப்பாணை அனுப்பாமலே மூன்றாம் நபர்களிடம் கூறி அலுவத்திற்கு வரச்சொல்லியிருந்தார். 

நான் அவர் அலுவலகத்திற்கு சென்ற பொது வட்டாச்சியர் என்னை பார்த்து “இதுபோன்ற கடிதம் எழுதினால் உன்னை  சிறையில் அடைத்துவிடுவேன் என்று மிரட்டினார். நான் இந்த  நீர்வழி ஓடை /பாதை ஆக்கிரமிப்பை பற்றி கூறிவிட்டு” அமைதியாக அந்த அலுவலகத்திருந்து  வந்து விட்டேன். 

நான் இப்பொழுது யாரிடம் புகார் செய்யலாம். என்ன செய்ய வேண்டும். தங்கள் மேலான அறிவுரையை வழங்கினால் எனக்கு பயனுள்ளதாக இருக்கும். 

நன்றி  
ரமேஷ்

சட்டத்தை சரியாகப் படிக்காமல் செயல்பட்டால் இப்படித்தான் நடக்கும். எந்தவொரு ஆக்கிரமிப்புக்களையும் அகற்ற வேண்டியது கிராம நிர்வாக ஊழியரின் பொறுப்பு. 

எனவே ஆக்கிரமிப்பு குறித்து, முதலில் சான்று நகல் கேட்டிருக்க வேண்டும். பின் நினைவூட்டல் அனுப்பி இருக்க வேண்டும். அடுத்தகட்டமாக அறிவிப்பு அனுப்பி இருக்க வேண்டும். இதுபற்றி ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலில் எழுதி உள்ளேன். 

இதன் நகலை கு.வி.மு.வி 133 இன்படி, வட்டாட்சியரில் இருந்து மாவட்ட ஆட்சியர் வரை போடலாம். இல்லையெனில், இவ்விதியின் கீழ் நேரடியாகவே இவர்களுக்கு மனு அனுப்பி இருக்கனும். இதன் நகலை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்பி இருக்கனும். 

இப்படி அமலில் உள்ள வலுவான மத்திய சட்ட விதியை விட, மாநில அரசின் அரசாணை குப்பைக்கு சமமானது என்பது, அரசூழியர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆகையால், அதையும், பயன்படுத்தும் நபரையும் மதிக்க மாட்டார்கள்.   

மாவட்ட ஆட்சியரின் கடிதத்தின் மீது, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, கோட்டாச்சியரிடம் சான்று நகலைக் கேட்டிருக்கனும்.  

இப்படி செய்யாமலும், அழைப்பானை இல்லாமலும் போனது தவறு. சிறையில் அடைப்பேன் என மிரட்டியபோது, அடை என்று சொல்லி விட்டு அங்கேயே உட்கார்ந்து இருக்கனும்.


இப்பவுங்கூட, மிரட்டியதற்கான காரணத்தை சான்று நகலாக கேட்டும், சிறையில் அடைக்கவும் சொல்லி மனு அனுப்பலாம். 

மொத்தத்தில், நீங்கள் நீதியைத்தேடி... நூல்களின் அடிப்படை கருத்தையே உள் வாங்கிக் கொள்ளவில்லை என்பது தெளிவு. ஆனால், இந்நூல்கள் பெரிதும் உதவியாய் இருப்பதாக சொல்லி உள்ளது, நீங்களே உங்களை ஏமாற்றிக் கொள்ளும் செயல். 
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Monday, November 28, 2016

நீதி நிர்வாகத்தைப் பாதிக்கச் செய்யும் நிதிபதிகள்!!!இச்செய்தியில் நட்சத்திர குறியிட்டுள்ள பகுதிகள் மிகவும் கூர்ந்து கவனிக்கத் தக்கவை! 

ஆமாம், பெ(ரு, று)ங்கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்கள் ‘‘ஏதோ இந்தவொரு வழக்கில் மட்டுந்தான் பொய் சொன்னது போலவும், அதனால் தவறான உத்தரவை பிறப்பித்து விட்டது போலவும்’’ நிதிபதி பிரகாஷ் கூறியுள்ளார். 

ஒரு பொய்யராக இருந்து, நிதிபதியானவருக்கு இத்தனை நாட்களாக இதெல்லாம் தெரியாமல் இருந்தது என்பது பொய். 

இது உண்மையென்றால், தான் தவறான உத்தரவை பிறப்பிக்க காரணமாய் இருந்த பொய்யருக்கு குற்ற விசாரணை முறை விதி 340 இன்கீழ், நீதி நிர்வாகத்தைப் பாதிக்கச் செய்த குற்றத்துக்காக விசாரணை நடத்தி உ(ய)ரிய சிறைத்தண்டனை விதித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் அபராதத்தைக்கூட விதிக்கவில்லை.

ஏனெனில், ‘‘வக்கீல் என்றாலே கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்கள்! இடைத்தரகர்களே!!’’ என்ற நம் தத்துவத்திற்கு ஏற்ப முன் தீர்ப்புக்களை பணத்தைக் கொடுத்து வாங்கியதும், பணம் வாங்கிய விசுவாசமும்தான் காரணம்.

இலஞ்சங் கொடுத்து தீர்ப்பை வாங்க நினைப்பவர்கள், அத்தீர்ப்பு நிலையானது அன்று என்பதை இதன் மூலம் உணர வேண்டும். 

முன்பெல்லாம் திருவிழாக்களில் ஆன்மீக சொற்பொழிவு, அர்த்தமுள்ள நாடகங்கள், இன்னிசைப் பாட்டுக் கச்சேரி என பயனுள்ள வகையில் நிகழ்ச்சிகளை  ஏற்பாடு செய்வார்கள். 

ஆனால், இப்பொழுதோ ஆபாசமாக குத்தாட்டம் போடும் கூத்தாடிகளை கூத்தடிக்க வைக்கிறார்கள். இதனை ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தலமான யுடியூபில் ஏற்றுகிறார்கள். இதனை இளைஞர், இளஞைகள் ஏராளமானோர் பார்க்கின்றனர். 

எப்படிப் பார்த்தாலும் குற்றங்கள் பெருக நிதிபதிகளே காரணம் என்ற தலைப்பில்  நீதியைத்தேடி... பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி நூலில் எழுதியது நிதிபதிகள் உள்ளவரை, உண்மையாய் இருக்கும். 

ஆமாம், நீதி என்ற நிர்வாகத்தைப் பாதிக்கச் செய்வது, நிதிபதிகளே! நிதிபதிகளே!! நிதிபதிகளே!!! அன்றி வேறு யாரும் அல்லர்.  
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Sunday, November 27, 2016

வழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்களுக்கான முகநூல் குழு


முன்பெல்லாம், ஒருவர் மீதுள்ள வழக்குகள் குறித்து நாளிதழ்களில் வரும் விளம்பரங்களை, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அஞ்சலட்டை மூலம் தெரியப்படுத்துவேன். பின்பு நேரமின்மை காரணமாக விட்டு விட்டேன். 

தகவல் தொழில் நுட்பம் வளர்ந்துள்ள காரணத்தால், அப்படி வரும் நாளிதழ் விளம்பரங்களை, சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு சேர்ப்பது மிகவும் எளிதாக இருக்கும். 

ஆகையால், மேற்கண்ட தலைப்பில் முகநூலில் பிரத்தியேக குழு ஒன்றை உருவாக்கி உள்ளேன். இதற்கான அவசியம் குறித்து விரிவாக அறிய, உரிமையியல் வழக்குக்களிலும் அச்சப்பட வேண்டும் என்ற கட்டுரையைப் படிக்கவும். 

மற்றவர்களின் சட்ட உரிமையை நாம் காக்க முற்படும்போது, கூடவே நம் உரிமையும் காக்கப்படும் என நம்பிக்கையில், இக்குழுவில் இணைந்து கடமையைச் செய்ய விரும்பும் தன்னார்வலர்களை வரவேற்கிறேன். 

இக்குழுவில் செய்ய வேண்டி விவர குறிப்புகள் பின்வருமாறு!  

இக்குழுவிற்கு தன்னார்வலர்களை வரவேற்கிறோம். 


மற்றவர்களின் சட்ட உரிமையை, நாம் காக்கும்போது, நம் உரிமையும் காப்பாற்றப்படும் என்பதை உணர்ந்து, இக்கடமையைச் செய்ய முன்வாருங்கள். உரிமையியல் சார்ந்த வழக்குக்கள் (சொத்து, தொழிலாளர், விவாகரத்து, நுகர்வோர் உள்ளிட்டவை) குறித்து காலை, மாலை என தினசரி நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியாவதைப் பார்த்திருப்பீர்கள். இவ்விளம்பரங்கள் பல சட்டத்துக்கு விரோதமான முறையில், மற்றவர்களின் உரிமையைப் பறிப்பதற்காகவும், கூட்டுக் கொள்ளை அடிப்பதற்காகவும், நிதிபதிகளின் ஒத்துழைப்போடு பொய்யர்களால் கொடுக்கப்படுகிறது என்பது எங்களது சட்ட ஆராய்ச்சியின் முடிவு. 

இப்படி கொடுக்கப்படும் விளம்பரங்கள் குறித்து, அவ்விளம்பரத்தில் வரும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு, அவர்கள் மீதான வழக்கு விபரத்தை தெரிவித்து, அவரவர்களது சட்ட உரிமையை நிலைநாட்டிக் கொள்ள உதவுவதே இக்குழுவின் பிரதான நோக்கம். 

* ஆகையால், நாளிதழில் வெளியாகும் நீதிமன்ற வழக்கு விளம்பரங்களை மட்டுமே இக்குழுவில் பதிவு செய்யவேண்டும். 

** எக்காரணங் வேறு பதிவுகளை இடக்கூடாது. அப்படி மீறி பதிவிடுபவர்கள் குழுவில் இருந்து வெளியேற்றப்படு(வா, வீ)ர்கள். 

*** ஏதோவொரு விதத்தில் இக்குழுவில் இணைந்து கடமையாற்ற முடியும் என எண்ணுகிற ஆர்வலர்கள் மட்டும் இக்குழுவில் இணைந்து கொள்ளுங்கள். 

ஆர்வலர்கள் செய்ய வேண்டியவை!

1. நாளிதழ்களில் வரும் வழக்கு விளம்பரங்களை அப்படியே ஒளிப்படம் எடுத்து பதிவிட வேண்டும். தட்டச்சு செய்து பதிவிடுவதை தவிர்க்கவும். 

2. சம்பந்தப்பட்டவர்கள் தெளிவாக அறிந்துக் கொள்ள ஏதுவாக நாளிதழின் பெயர், தேதி, எந்த ஊர் பதிப்பு, விளம்பரம் வெளியான பக்கம் ஆகியவற்றை, ஒவ்வொரு விளம்பரத்திலும் கொடுக்க வேண்டும். 

இது விளம்பரத்துடன் இணைந்த படமாகவோ அல்லது தனியாகப் பதிவிடும் எழுத்தாகவோ இருக்கலாம்.

வழக்கு விசாரணைக்கு வரும் தேதியை தவறாமல் குறிப்பிட வேண்டும். இது, தகவல் தர நினைப்பவர்களுக்கு வசதியாய் இருக்கும். 

3. இந்நாளிதழ் விளம்பரத்தில் காணப்படும் பெறுநர் முகவரிக்கு அருகில் வசிக்கும் ஆர்வலர்கள், இதுகுறித்த தகவலை உரிய முகவரியில் சொல்லலாம். 

4. பெறுநர் முகவரியோ அல்லது வேறு எதுவும் தவறாக இருந்தால், அதுகுறித்து அப்பதிவில் பின்னூட்டமாக தெரிவித்தால், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கையை, நாங்கள் மேற்கொள்ள முடியும். 

5. நாம் அப்பெறுநர் வசிக்கும் பகுதியில் வசிப்பவர் இல்லை என்றாலுங்கூட, நமக்கு தெரிந்த நண்பர்கள் யாராவது, அப்பகுதியில் வசிப்பவராக இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் விவரத்தைச் சொல்லி தகவலைத்தர முயற்சிக்கலாம். 

6. கட்செவியில் (வாட்ஸ்அப்) உள்ள ஆர்வலர்கள், இதற்கென பிரத்தியேக குழுவை ஏற்படுத்தி பகிர்வதன் மூலம், தகவல் சொல்(ல, லி) உதவலாம். 

7. நேரம் இருப்பவர்கள் இதுபற்றி அஞ்சல் அட்டை ஒன்றை, விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு எழுதிப் போட்டு உதவலாம். இதற்கான அஞ்சல் அட்டையை அல்லது அதற்கான செலவை ஏற்க நாங்கள் தயாராய் உள்ளோம்.

8. சம்பந்தப்பட்ட நபருக்கு அக்கடிதம் சேராதபோது, உங்களுக்கே திருப்பி அனுப்புவதற்காக, உங்களின் முகவரியை அஞ்சலட்டையில் பின்பக்க இடது புறத்தில் சிறப்பாக தெரியும்படி எழுத வேண்டும் அல்லது முத்திரையாகப் பதிக்க வேண்டும். 

அஞ்சலட்டையின் இருபுறமும் இருக்க வேண்டிய முக்கிய சங்கதிகள். 

அன்புடையீர் வணக்கம்.

தங்களின் மீது (அசல் வழக்கு எண் 1/2016 ) ஆனது, (சார்பு) நீதிமன்றம், (ஓசூரில்) உள்ளதாகவும், அதில் தாங்கள் (27-11-2016) அன்று முன்னிலையாக வேண்டும் என்ற நீதிமன்ற அறிவிப்பு, இன்று (10-10-2016) அன்றைய (சென்னை தினமலர்) பதிப்பில் வெளியாகி உள்ளது. 

இதனை சரிபார்த்து, தங்களது சட்ட உரிமையை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்கிற நல்லெண்ணத்தோடு இந்த தகவலை அனுப்பி உள்ளேன். இதற்கு உதவிகள் ஏதுவும் தேவைப்பட்டால், என்னை 09842909190 என்ற உலாப்பேசி எண்ணில் அழைக்கவும்.

குறிப்பு: அடைப்புக்குள் உள்ள சங்கதிகளை, விளம்பரத்தின்படி எழுத வேண்டும்.  


இதில் ஒரு அஞ்சலட்டைக்கு 50 பைசா செலவு செய்யவேண்டும். இதனை பாதியாகக் குறைக்கவும் வழி இருக்கிறது. 

ஆமாம், அஞ்சல் அட்டையில் மேகதூத் என்ற ஒருவகை அஞ்சலட்டையும் அஞ்சலகங்களில் கிடைக்கிறது. இதன் விலை பாதியாக கிடைக்க காரணம், பின்பக்க இடது புறத்தில் ஏதாவது விளம்பரங்கள் இடம் பெற்றிருக்கும். 


ஆகையால், பின்னால் எழுத வேண்டிய நம் முகவரியை முன்புறத்தில் தெளிவாக தெரியும் வண்ணம் இடம் ஒதுக்கி எழுதலாம். முகவரியை முத்திரையாக (ரப்பர் ஸ்டாம்ப்) தயார் செய்து பதிப்பது சிறந்தது.  

இந்த அஞ்சலட்டைகளை நீங்கள் 50 அல்லது 100 ரூபாய்க்கு மொத்தமாக கேட்டால், அந்த அஞ்சலகத்தில் இல்லை என்றாலுங்கூட, தருவித்து தருவார்கள். இப்படி உங்களுக்கு தேவையான அஞ்லட்டை உள்ளிட்ட அனைத்தையும் வாங்க எங்கோ உள்ள அஞ்சலகத்துக்குத்தான் நேரடியாக போக வேண்டும் என்பதில்லை. 

ஆமாம், உங்களது பகுதிக்கு வரும் அஞ்சல் பட்டுவாடா ஊழியரிடமே கிடைக்கும். ஆனால், இவர்களிடம் பொதுவாக யாரும் வாங்குவதில்லை என்பதால், அவர்கள் கொண்டு வருவதில்லை. நீங்கள் கேட்டால் கொண்டு வந்து கொடுக்க வேண்டியது அவர்களது ஊழியப்பொறுப்பு. 

ஆனால், இது விரைவு அஞ்சலை பட்டுவாடா செய்ய வரும் பிரத்தியேக ஊழியருக்குப் பொருந்தாது. சாதாரண அஞ்சல்களைப் பட்டுவாடா செய்யும் ஊழியர்களுக்கே பொருந்தும் என்பது மிகவும் முக்கியம். 

இப்படியே, நீங்கள் எழுதிய கடிதங்களை அஞ்சல் செய்ய எங்கோ உள்ள அஞ்சலகங்களுக்கு செல்லாமல், இவர்களிடமே கொடுத்து விடலாம். அப்படி கொடுப்பதை பெற்றுக்கொண்டு அஞ்சல் செய்ய வேண்டியதும் இவர்களது பொறுப்பு. 


இதில் உங்களுக்கு குறைகள் ஏதாவது இருந்தாலோ அல்லது தெளிவுபெற வேண்டி இருந்தாலோ சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள தலைமை அஞ்சலகத்தில் தொலை பேசியிலேயே கேட்டு தெளிவைப் பெறலாம். 

இப்படிப்பட்ட சுருக்கமான தகவல்கூட, பெறுபவர்களை குழப்பி விடக்கூடும், பொய்யர்களை அணுகக்கூடும். ஆகையால், நம் சட்ட விழிப்பறிவுணர்வு விவரங்களுடன் 40 பக்க அளவில் விரிவானதொரு அச்சுப் பதிப்பை அச்சடித்து அனுப்பலாமா என யோசித்தால், இதற்கான செலவுகள் பலமடங்கு கூடிவிடும். 

ஆர்வலர்களோ அல்லது தகவலைப் பெற்றவர்களோ, இச்செலவை ஏற்க முன்வந்தால் சோதனை முயற்சியாக முயற்சித்துப் பார்க்கலாம். 

இக்குழுவிற்கென தனியாக தந்திச் செய்திப் பகிர்வு (டெலிகிராம் மெசேஜ்) ஏற்படுத்தப்பட்டு உள்ளது. விரும்பம் உள்ளவர்கள் கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள். 

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Friday, November 25, 2016

அச்சுப் பிசகாது, அசத்துமா அச்சுத்தொழில்?


அச்சுத்தொழில் என்பது, அத்தியாவசியமான ஒன்றாகி விட்டது. ஆனால், இந்த அச்சுத் தொழிலை மிகச்சரியான முறையில் செய்வதற்கு சாதாரண ஆப்செட்டிலிருந்து பெரிய நிறுவனங்கள் வரை இல்லை என்பதுதான் உண்மை. மிகப்பெரிய அச்சு நிறுவனங்களில், கொள்ளையடிப்பவர்கள்தான் அச்சிட முடியும்.   

தன் தொழிலைதக்க வைத்துக் கொள்வதில் மிகுந்த தன் முனைப்பை காட்டும் தனியார்களே இப்படியென்றால், பெ(ரு, று)ங்கூலிக்கு மாரடிக்கும் அரசு ஊழியர்கள் பணியாற்றும் அரசு அச்சகங்கள் எப்படி இருக்கும் என்பதற்கு, கறுப்புப்பண ஒழிப்பில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த 2000 ரூபாய் செய்தியே தகுந்த ஆதாரம். 

பணம் என்பது கோடாணு கோடியில் அச்சடிக்கப்படும் சிறுத்துண்டு காகிதம். அவ்வளவையும் சோதிக்க முடியுமா... ஆகையால் ஒன்றிரண்டு இப்படி குறைபாடு உடையதாகத்தான் இருக்கும் என்பதை, பொதுவாக நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

இதனை எழுதிக் கொண்டிருந்த நேரத்தில், புதிதாக அச்சடிக்கப்பட்ட 500 ரூபாய்களில், அச்சுப் பிழைகள் அதிகம் இருப்பதாக ரிசர்வ் வங்கியே ஒப்புக் கொண்டுள்ளது.   

ஆனால், இதுகுறித்த அறிவுவறுமைவாதிகள், இவ்விவகாரத்தை ரிசர்வ் வங்கிக் கவர்னரும், பிரதமரும், குடியரசுத் தலைவரும் அச்சுப் பணி செய்தது போல, மிகவும் பெரிதாக விவாதிப்பார்கள். இப்படி விவாதிப்பவர்கள், தாங்கள் செய்யும் தொழிலை எந்த அளவிற்கு நேர்த்தியாக செய்வார்கள் என்பதும், அவரவர்களுக்கே தெரியும். 

மேலும், இந்த புதிய 2000 ரூபாய் நோட்டு இரகசியமாக அச்சடிக்கப்பட்டு, அதிரடியாக களத்தில் இறக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக பொறுமையாக அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்ட ரூபாய் நோட்டுக்களில், இப்படியொரு பிரச்சினை வந்ததாக எனக்குத் தெரியவில்லை. 

ஆனால், முன்பிருந்த 100 ரூபாய் நோட்டை அச்சுப் பிசகாமல் கள்ள நோட்டாக அச்சிட்டு, இப்போது புழக்கத்தில் உள்ள நூறு ரூபாய் நோட்டுக்கள் இந்தியா முழுவதும் மாறுவதற்கு காரணமாக இருந்த தமிழனும் உண்டு.    

நூல்களை சரியான முறையில் அச்சிட்டு வெளிக் கொண்டு வருவதிலேயே, பல்வேறு பிரச்சினைகள் வரும் என்பதை, நம் நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்களை அச்சிடுபவன் என்ற வகையில், நான் நன்கு அறிவேன். 

ஆமாம், இதுவரை நானெழுதி அச்சடித்துள்ள ஏழு நூல்களில் ஒரு நூலைக் கூட, நான் நினைத்தபடி எந்தக் குறையும் இல்லாமல் அச்சடித்து, நூலாகக் கொண்டுவர முடியவில்லை. எல்லாமே ஏதோவொரு விதத்தில் குறைப் பிரசவந்தான். 

ஆமாம், ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் அவனது எழுத்துக்கள் வெளிவருவது, ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கும், தகப்பனும் எவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்குமோ, அப்படியொரு மற்றற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

ஆனாலிது, கருவாக உருவாகும் குழந்தை, வெளிவர பத்து மாதங்கள் ஆவதுபோல, ஒரு நூலை எழுத குறைந்தது, ஒரு வருடம் எடுத்துக் கொள்ளும் என்னைப் போன்றோருக்குத்தான் பொருந்துமே ஒழிய, இணையத்தில் வெளியாகி உள்ள தகவல்களை எல்லாம் திருடி நூலாக தொகுத்து, பணம் சம்பாதிக்க நினைப்பவர்களுக்கு ஒருபோதும் பொருந்தாது. ஆகையால், சந்தோசம் இராது. 

ஆமாம், குழந்தையைப் பெற்றவளிடம் இருந்து, அக்குழந்தையை திருடி வந்தவள், எப்போது மாட்டுவோமோ என்ற மன சஞ்சலத்தில்தானே எப்போதும் சந்தோசமின்றி இருப்பாள்? 

அப்படித்தான் எழுத்துத் திருடர்களும் சந்தோசம் இல்லாமல், ஆரம்ப காலத்தில் மன சஞ்சலத்தில் இருப்பார்கள். ஆனால், போகப்போக பழகிவிடும். 

இப்படிப்பட்ட திருட்டு எழுத்தாளர்களுக்கு அந்த நூலில் என்னென்ன சங்கதிகள் இருக்கிறன என்பதே தெரியாது. மேலும் அது பலரின் (எழு, கரு)த்துக்கள் என்பதால், வார்த்தை மற்றும் கருத்துப் பிரயோகங்கள் ஒரே (மாதிரி, நடை)யாக இருக்காது. 

பத்து வருடத்துக்கு முன்பெல்லாம், ஒரு நூலை வெளியிட விரும்புபவர்கள், பிற நூல்களில் இருந்து திருட, அச்சங்கதி தொடர்பான பல்வேறு நூல்களை வாங்கி, ஒவ்வொரு நூலிலும் குறிப்பிட்ட சில பகுதிகளை தேர்வு செய்து, தட்டச்சுக்கு கொடுத்து, பின் அதை நூலாக உருவாக்கி அச்சிட்டு விடுவார்கள்.

இதனை எளிதாக எப்படி இனங்காண்பது என்பதுபற்றி நுண்ணறிவு இல்லாத நூல்கள் என்ற தலைப்பில், நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம் நூலில் எழுதி உள்ளேன். 

ஆனால், தற்போது இப்படிப் பல நூல்களை வாங்க வேண்டியதோ, தட்டச்சு செய்ய வேண்டியதோ கூட இல்லை. தேவையானவற்றை இணையத்தில் இருந்து எளிதாக எடுத்து நூலாக வடிவமைத்து, பத்து நாட்களுக்குள் நூலாகவே அச்சடித்து விடலாம். 

உண்மையாக குழந்தையைப் பெற்றெடுக்கும் தாய்க்கு, குழந்தைக்கு குறைபாடு எதுவும் இருந்தால், சந்தோசம் குறைவது போலதான், ஓரிரு ஆண்டுகளாக இரவும், பகலும் கஷ்டப்பட்டு எழுதிய நூல்கள் சிறு சிறு குறைபாடோடு வெளிவரும் போது, என்னைப் போன்ற எழுத்தாளர்களும் வருத்தப்படுவார்கள். இது நூலுக்கு மட்டுந்தான் என்றில்லை. 

அவரவர்களின் நிலையைப் பொறுத்து, சாதாரண நாலுவரி கவிதை வெளி வருவதில் இருந்து, கட்டுரையாக, இதழாக, நூலாக வெளி வருவது வரை ஒவ்வொருவருக்கும் இன்பத்தில் துன்பமாகத்தான் இருக்கும்.   

நான் அச்சிட்ட நூல்களிலேயே மிகவும் மோசமாக இருக்கக்கூடியது நீதியைத்தேடி... பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி? நூல்தான் என்பதை வாசகர்களாகிய நீங்கள் அறிந்திருக்கலாம்.  

காரணம், இந்நூலை காவல் நிலையங்களுக்கும், சிறைக் கைதிகளுக்கும் இலவசப் பிரதியாக வழங்க வேண்டுமென்கிற ஆர்வத்தில், ஓர் அறக்கட்டளை நிர்வாகி நன்கொடை தருவதாக உறுதி அளித்திருந்ததன் பேரில் பத்தாயிரம் பிரதிகளுக்கு திட்டமிட்டேன். 

ஆனால், வாக்குறுதி அளித்த அந்த அறமில்லாத அறக்கட்டளை நிர்வாகி உரிய நேரத்தில் நன்கொடையை கொடுக்கத் தவறிய காரணத்தாலும், ஒரு குடிகார பைண்டரிடம் அந்நூல்களை கொடுத்து மாட்டிக் கொண்டதாலும் அந்நூலின் தரம் (மோ, நா)சமாகி விட்டது. 

பத்தாண்டுகளுக்கு முன்பு, என்னிடம் கூடுதலாக குறைந்தது இருபதாயிரம் இருந்திருந்தால், அந்த நூல் ஓரளவிற்காவது தரமாய் இருந்திருக்கும். பத்தாண்டுகள் கடந்தப் பின்னுங்கூட, என் மனதை இன்றும் உறுத்திக் கொண்டிருக்கிறது.     

நன்றாக அச்சிட்டப்பட்டுள்ளது என நினைத்து நூல்களில் குறை இருப்பது தெரியாமல், சில வாசகர்களுக்கு அனுப்பி இருக்கிறோம். அவ்வாசகர்கள் படிக்கும்போது கண்டு பிடித்து தெரிவித்தப்பின், மாற்று நூலை அனுப்பி இருக்கிறோம். இப்படி, ஒரு நூலை நல்ல முறையில் வெளிக்கொண்டு வருவதில் அவ்வளவு சிரமங்கள் இருக்கின்றன. 

நூலை எழுதுவதோடு மட்டுமல்லாமல், நானே வடிவமைப்பு செய்தும், அச்சிடவும் நானே நேரடியாக களப்பணியில் இறங்கியே இவ்வளவு, சிக்கல்களை சந்திக்க வேண்டி உள்ளது என்றால், கூலிக்கு மாரடிப்பவர்களை வைத்து செய்தால் எப்படி இருக்குமென யோசித்துக் கொள்ளுங்கள்.      

ஆகையால், நூல்களை அச்சிடுவோருக்கு உதவியான வழிகாட்டு தல்கள் மற்றும் அச்சகங்களைப் பற்றிய விழிப்பறிவுணர்வு நூலொன்றையே எழுதலாம். இதில், யாருக்காவது வழிகாட்டுதல் தேவைப்பட்டால் என்னை அனுகலாம்.   

ஏனெனில் அச்சகமே வைத்தில்லாமல், நூல்களை அச்சிட்டுத் தருவதாக கூறி, வெளியூரில் இருந்து வரும் நபர்களை ஏமாற்றும் புரோக்கர்கள் கூட்டம் சிவகாசி பேரூந்து நிலையத்தில் மிகமிக அதிகம். 

அச்சுத்தொழில் என்றாலே, பலருக்கும் நினைவுக்கு வருவது சிவகாசிதான். இப்படித்தான் நாங்களும் சிவகாசியில் முதலில் ஏமாந்தோம். இதுபற்றி ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் எழுதி உள்ளேன். 

இங்கு ஏமாற்றப்படுவோரில் கேரளா வாசிகள் உள்ளிட்டவர்களே அதிகம் என்பது, தமிழ்நாட்டிற்கான அவமான அடையாளம். ஆகையால், எதுவொன்றையும் சிவகாசியில் அச்சிட செல்வோர் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.   

நூல்களுக்கே இப்படி என்றால், சிறிய அளவிலான ரூபாய் நோட்டுக்களில் அச்சுப் பிரச்சினைகள் அதிகமாகத்தான் இருக்கும். அதனை வங்கிகள்தான் மாற்றிக் கொடுக்க வேண்டும். 

ஆனால், அரசின் கறுப்புப்பண ஒழிப்புக்கு, வங்கிகளின் கறுப்புப்பண பெருச்சாலிகளும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே, மேற்கண்ட பத்திரிகை செய்தியில் சொல்லி உள்ளபடி எல்லாம் தவறாக நடக்கிறார்கள்.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடும், வங்கிப் பெருச்சாலிகள் யாரென்பதை செய்தி ஊடகங்கள் பகிரங்கப்படுத்த வேண்டும். அவ்போதுதான், அவ்வூழியர்களின் மீது நடவடிக்கை சாத்தியம். 

இப்படி பிரச்சினைக்கு தீர்வுக்காண முயலாமல், பிரச்சினையை மட்டும் செய்தியாக வெளியிட்டால், குப்பைக்கு நிகரான காகிதப் பக்கங்கள்தான் பத்திரிகையில் நிரம்பும். இது கழுதைக்குத்தான் தீணியாகுமே தவிர, (கதை, படி)ப்பவர்களுக்கு ஆகாது. அவ்வளவே! 
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Tuesday, November 22, 2016

எந்தவொரு போராட்டத்துக்கும் மக்களின் ஆதரவே வசியம்!


சாதாரண மக்கள் தங்களது தண்ணீர், சாலை வசதி உள்ளிட்ட அத்தியாவசிய பாதிப்புகளுக்காக பல்வேறு விதங்களில் போராடுவார்கள். இவை அனைத்தையும் விட, பணம் மிகமிக அத்தியாவசியம், அல்லவா?

அப்படி இருந்துங்கூட, வழக்கம்போல சாலையில் அமர்வது உட்பட எந்த விதத்திலும் போராடவில்லை. இதுவே, அரசுக்கு கிடைத்த முதல் வெற்றி.  

ஆகையால், அரசியல் கொள்ளையர்கள் உள்ளிட்ட ஊழல் பெருச்சாலிகளை ஒழித்துக் கட்ட அரசு எடுத்துள்ள கொள்கை முடிவை புரிந்துக் கொண்டு போராடாமல் இருக்கும் மக்களைப் பாராட்டத்தான் வேண்டும்.  

ஆமாம், கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கையில், பணப்பற்றாக்குறை ஏற்பட்டு பதினான்கு நாட்களாகியும் இப்படியொரு போராட்டத்தை, நாட்டில் எங்குமே காண முடியவில்லை. 

ஆனால், குடிநீர், சாலை வசதி போன்று அடிப்படை தேவைக்காக போராடும் மக்களுக்கு ஆதரவு தராத கட்சிகள் அனைத்தும், தற்போது அத்தியாவசியப் பணத்திற்காக போராடாத மக்களுக்கு மாபெரும் பிரச்சினை என்ற வகையில் போராட்டங்களை நடத்தப் போவதாக அறிவித்துள்ளன. 

இது தங்களது கறுப்புப்பணத்தை பாதுகாக்க முயலும் கேடுகெட்ட செயலே அன்றி வேறெதுவும் இல்லை என்பது அந்தந்த கட்சிகளில் அங்கம் வகிக்கும் அல்லது அக்கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் அத்தனை பேரும் அறிந்த இரகசியந்தான்.  

ஆனால், அக்கட்சிகளின் அடிமைகள், தங்களின் பிழைப்புக்காக ஆதரவு தந்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தைபோல, ஆதரவு தருபவர்களுக்கு இல்லை. 

கறுப்புப்பண ஒழிப்பு என்ற வரலாறு காணாத இமாலய முயற்சியில் வெற்றி பெற என்னென்ன ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதை எடுத்துரைப்பதுதான் எதிர்க் கட்சிகளின் பிரதான வேலையே அன்றி, எதிர்ப்பதோ, போராட்டம் நடத்துவதோ, ஒன்றுகூடி கூத்தடிப்பதோ அன்று. 


ஆனால், இப்படிச் செய்யாமல் எல்லாக் கட்சிகளும் ஓரணியில் நின்று நாடாளுமன்றத்தை முடக்கி இருப்பது என்பதெல்லாம் அந்தந்த கட்சிகளின் ஆதங்கத்தை அப்பட்டமாக வெளிக் காட்டுகிறதே அன்றி வேறில்லை. 

திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை ஒழிக்க முடியாது என்றத் தத்துவப் பாடல் வரிகளுக்கு ஏற்ப, ‘‘திருடுவதற்கு என்றே திட்டம் தீட்டுபவர்களுக்கு, திருடாமல் இருப்பதற்கு எப்படி திட்டந் தீட்டித்தர முடியும்?’’ என்பதால் எதிர்க்கிறார்கள் போலும்!  

ஆகையால், இந்த எதிர்ப்பு எதிர்வரும் தேர்தல்களில், அக்கட்சி களுக்கு எதிரான மக்களின் வாக்காக எதிரொளிக்கும் என்ற வகையில், இந்த அரசே, அடுத்த அரசாக, இப்போதே வெற்றிப் பெற்று விட்டதாக, எதிர்க்காலச் சிந்தனையுள்ள சமூக ஆர்வலர்கள் எவரும் பார்க்கிறார்கள். 

ஆகவே, இதனை கறுப்புப்பண ஒழிப்பில் அரசுக்கு கிடைத்துள்ள இரண்டாவது வெற்றியாக கருதுகிறார்கள்.

ஆமாம், உண்மையில், அரசின் அதிரடி கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைக்கு எதிராக அரசியல் கட்சிகள் விடுத்துள்ள போராட்ட அழைப்பு, நமக்கு எதிரானது என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். 

ஆகையால், ஓரணியல் திரண்டுள்ள ஊழல் கட்சிகளின் அடிமைகள் சிலரிடம் வேண்டுமானால் போராட்டத்துக்கு ஆதரவு இருக்குமே அன்றி, சாதாரண ஏழையெளிய நடுத்தர மக்களின் ஆதரவு இருக்காது என்பதே என் பார்வை. இவர்களின் ஆதரவு இல்லாத போராட்டம் ஒருபோதும் வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. 

ஆமாம், போராட்டத்துக்கு யார் வேண்டுமானாலும் அழைப்பு விடுக்கலாம். ஆனால், அதனை ஏற்று, அதில் யார்யார் கலந்துக் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே, அதன் வெற்றி நிச்சயமாகும். அழைப்பு விடுத்தவர்களும், அவர்களின் அடிமை களுமே கலந்து கொண்டு, கலைந்து விட்டால், அது நிச்சயமாக தோல்வியில்தான் முடியும். 

ஆனாலும், தங்களுடைய போராட்டம் வெற்றி பெற்றதாகத்தான், அவரவர்களது ஊடகங்களின் வாயிலாக உளறுவார்கள். 

என்னைப் பொறுத்தவரை, அரசியல் கட்சிகள் விடுத்துள்ள அனைத்து விதமான போராட்டத்தையும் வரவேற்கிறேன். 

அப்போதுதான், கறுப்புப்பண ஒழிப்பில் மக்களின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாக விளங்கிக் கொண்டு, அடுத்தடுத்து கருத்துக்களைச் சொல்ல முடியும். அரசின் அதிரடியில் ஹாட்ரிக் வெற்றியை முடிவு செய்ய முடியும்.  

மேலும், மன்னனின் வழியே மக்களின் வழி என்பதை நிலை நிறுத்தி, நிமிரப் போகிறார்களா அல்லது எங்களின் வழியே உங்களின் வழியென மீண்டும் கறுப்புப் பணத்திற்கு வழி கோலப் போகிறார்களா என்பதே, என்னைப் போன்றவர்களிடம் எஞ்சி நிற்கும் கேள்வி? 

இக்கேள்விக்கும் ஓரிரு நாட்களில் விடை கிடைத்து விடும். அவ்வளவே! 

குறிப்பு: இங்கு மன்னன் என்பது இந்திய சாசனத்தின்படி குடியரசுத் தலைவரையே குறிக்கும். பிரதமர் என்பவர் பரிந்துரையாளரே! 
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Sunday, November 20, 2016

மரண தண்டனையை நீக்குவது எளிதன்று!


பெரும்பாலும் சட்டத்தில் இல்லாத ஒன்றுதான் இருப்பதாகவும், இருக்கும் ஒன்றுதான் இல்லையெனவும் பொய்யர்கள், நிதிபதிகள் உட்பட அனைவராலும் சொல்லப்படும்!

எனவே, போதிய விளக்கம் இல்லாமல் அல்லது அதற்கான கோட்பாட்டைச் (பிரிவை) சொல்லாமல், இந்திய சாசனத்துக்கு (அரசமைப்புக்கு) எதிரானது என தகவல் சொல்லப்பட்டிருந்தால், அது யாரால் சொல்லப்பட்டிருந்தாலும் அப்படியொரு சங்கதி இந்திய சாசனத்தில் அல்லது சட்டத்தில் இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை, நாம்தான் சரி பார்க்க வேண்டும். 

  
இந்த செய்தியைப் பொருத்தவரை, இந்திய சாசன கோட்பாடு 21 இல், ‘‘சட்டப்படியான விசாரணை முறை இல்லாமல், ஒருவரின் உயிரையோ அல்லது உரிமையையோ பறிக்கக்கூடாது’’ என அடிப்படை உரிமையில் அறிவுறுத்தப்பட்டு உள்ளதன் மூலம், அரசு மரண தண்டனையை ஒழிக்க முடியாது என்கிறது. 

ஆனால், "சட்டப்படியான விசாரணை முறை இருக்கிறதா" என்றால், ஒருபோதும் இல்லை என்பது உலகமே அறிந்த இரகசியந்தான்! 

இதற்கான சரியான வழிமுறைகளை அடிப்படை உரிமையில் வகுக்காதது, இந்திய சாசனத்தை வரைவு செய்த அறிவார்ந்தவர்களின் அபாரமான சட்ட அறிவு வறுமை அடிப்படைக் காரணம் என்றால், இதற்கு நாங்கள் ஆட்சியாளர்கள் என்ற அகங்காரமே காரணமாக இருந்திருக்க முடியும். 

இதனை வெளிப்படையாக வெளிப்படுத்த விரும்பாதவர்கள், மரண தண்டனையை சட்டத்தில் இருந்து நீக்க வேண்டுமென்கிற கோரிக்கையை ஒருபுறம் ஆரம்பிக்க மறுபுறமோ, அரசு நீக்க முடியாது என்கிறது. இதனை ஐக்கிய நாடுகளின் சபையிலேயே உறுதிசெய்து வாக்களித்தும் உள்ளது. 

ஆகவே, அரசு தனது அடிப்படை உரிமையை நிலை நாட்டிக் கொள்வதைப் போல, நாம்தான் நம் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும். இதற்கு அடிப்படை சட்ட விழிப்பறிவுணர்வு மிகவும் அவசியம்.

ஆனால், இதற்கான வாய்ப்பை மக்களுக்கு ஏற்படுத்தித்தந்தால், நாம் ஆட்சி செய்யமுடியாது என்றெண்ணிய ஆங்கிலேயர்களைப் போலவே நம்மவர்களும், அனைவருக்கும் சட்டக்கல்வி கிடைக்க வழிச் செய்யவில்லை. 

இதனை நாங்கள் செய்து தந்திருக்கிறோம். பயன்படுத்திக் கொள்ளுங்கள். அவ்வளவே! 

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Thursday, November 17, 2016

உங்களுக்கு சவால் விட்டுச் சொல்கிறேன்!


முகநூலில் ஒருசிலர் எனது உள்பெட்டிக்கு வந்து நான் பொய்த் தொழிலுக்கு  படிக்கப் போறேன் என்பார்கள். 

இவர்கள் படிக்க வேண்டிய முக்கிய சங்கதிகளுக்கான இணைப்பு களைக் கொடுத்து, படித்து முடிவெடுக்கச் சொன்னாலுங்கூட, காதில் வாங்க மாட்டார்கள். 

பொய்யருக்கு படிப்பதுதான் எனது சிறுவயது குறிக்கோள், உண்மையாய் இருப்பேன், பணம் வாங்காமல் வாதாடுவேன், ஏழைகளின் நீதிக்காக உதவுவேன், எடுத்துக்காட்டாய் இருப்பேன், புரட்சி செய்வேன் என்றெல்லாம் எதையாவது உளறிக் கொண்டு இருப்பார்கள். 

பின் எதற்காக என்னிடம் படிக்கப் போகிறேன் என்றோ அல்லது படிக்கலாமா என்றோ ஆலோசனை கேட்கிறார்கள் என்பது, அவரவர் களுக்கே வெளிச்சம். இதுவே, அவர்கள் பரிந்துக் கொள்ளும் மன நிலையில் இல்லை என்பதை புரிந்து கொள்ள எனக்கு போதுமானது. 


இனியும், இப்படி யாராவது சொன்னால், அவர்களுக்கு இச்செய்தி யை படிக்க கொடுத்து விடலாம் அல்லவா... இதற்காகத் தான் இப்பதிவு! 

ஏற்கெனவே பொய்யர் தொழிலுக்கு படித்தவர்கள் சிலர், ஏண்டா இத்தனை வருடம் மற்றும் பணத்தை செலவுசெய்து படித்தோம், படிப்பதற்கு முன்னரே நீதியைத்தேடி... நூல்கள் கிடைத்திருந்தால் படித்திருக்க மாட்டோமே என நொந்து அப்பொய்த் தொழிலைச் செய்யாமல் வேறு வேலை செய்கின்றனர். 

இதையெல்லாம் ஆராயாமலா, நான் ஆராய்ச்சி செய்கிறேன். இப்படி எல்லாம் செய்ய முடியும் என்றால், நான் எதற்காக புத்தகம் எழுதி போதனை செய்கிறேன்? 

ஆமாம், ஒரு தனி நபராக நிதிபதிகள் செய்யும் தவறுகளை விமர்சிக்க முடியும்; தனக்கான நீதியை நிலைநாட்டிக் கொள்ள முடியும். ஆனால், பொய்யராக இருந்து, விமர்சித்தால் என்ன நடக்கும் என்பதை உணர்த்துவதுதான், இச்செய்தி. 


இப்படித்தான் நடக்கும் என்பதைப்பற்றி நூல்களில் தெளிவாக எழுதி உள்ளேன் என்பது, அந்நூலைப் படித்தவர்களுக்கு மட்டுந்தானே தெரியவரும். 

ஆனால், படிக்காமலும், சொல்லுவதை கேட்காமலும், நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று வீம்பு பேசினால், நாசமாய் போ என்று நினைத்துக் கொண்டு எனது அடுத்தடுத்த வேலையைத்தான் நான் பார்க்க முடியுமே தவிர, உங்களிடம் மாரடித்துக் கொண்டிருக்க முடியாது. 

இன்று மட்டுமல்ல; என்றும் சவால் விட்டுச் சொல்கிறேன்... 

நான் ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் கொடுத்துள்ளது போன்று, நிதிபதிகளின் தவறுகளை அணுஅணுவாக விமர்சிக்கும் மநுவை, பழந்திண்ணு கொட்டை போட்டதாக சொல்லிக் கொள்ளும் மூத்தப் பொய்யர்களே கூட தாக்கல் செய்து, நீதியை நிலைநாட்டிய உத்தரவோடும் வரட்டும், பார்க்கிறேன்! 
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Monday, November 14, 2016

பிச்சைக்கார பிரம்மாக்களின் நியாயம்!


கறுப்புப்பண ஒழிப்பு அறிவிப்பு வெளியான உடனேயே, இன்னுங் கொஞ்சம் நாளைக்கு பிச்சைக்கார பிரம்மாக்கள்தான் சில்லரை வரந்தர வேண்டுமென திரு. வாரண்ட் பாலா அவர்கள் முகநூலில் பதிவிட்டு இருந்தார்.


வழக்கமாக நொறுக்குத் தீணிகளை வாங்கும் பேக்கரிக்கு சென்று வாங்க காத்து இருந்தேன். அப்பொழுது அங்கு வந்த தர்மம் பெற்று பிழைக்கும் பெண்மணி தான் வைத்திருந்த 8500 ரூபாயை கொடுத்து, பேக்கரியில் சில்லரை கேட்டார். இதனை பார்த்ததும், இவர்களிடம் அதிகமான சில்லரை இருக்கிறது போலும் என நினைத்தேன்.

ஆனால், கடைக்காரரோ ‘‘உனக்கு எது வேண்டுமானாலும் வாங்கிட்டுப் போ; இப்போ சில்லரை கிடையாது’’ என்று சொல்ல, அவர்களிடம் சில்லரை இல்லை என்பது புரிந்தது.

ஆனால், அப்பெண்மணி எத்தனை வருஷமா நான் உனக்கு சில்லரை கொடுத்திருக்கேன். இதெல்லாம், என் சில்லரைக்கு நீ கொடுத்த பணந்தான். எனக்கு பேங்க் அக்கவுண்லாம் இல்ல. அதனால, நீ தான் சில்லரை தரவேண்டும் என்றதும், அங்கிருந்த எங்களுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

கடைகாரருக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது. மாற்றித்தருவதாக சொல்லி கேட்டதை கொடுத்தும் அனுப்பினார். நிலைமை கொஞ்சம் சகஜமான பிறகு, முடிந்தால் நானே கூட மாற்றி தரவேண்டுமென எண்ணி உள்ளேன்.

உங்களில் வெகுசிலர் இப்படிச் செய்தால்கூட, இவர்களின் பெரிய பணமாற்றப் பிரச்சினை எளிதாக தீர்க்கப்பட்டு விடும். 

இப்படி, தர்மம் பெற்று பணம் சேர்த்து வைத்துள்ளோர் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஆதாரச் செய்தி!  


உண்மையில், அப்பெண்மணி கேட்டது நியாயந்தானே!   

ஆமாம், ‘‘நியாயந்தான் சட்டம்’’ என்ற அடிப்படை தத்துவத்தை முன்மொழிந்துள்ள, நம் கொள்கை முழக்கம், நம் வாசகர் அல்லாது தர்மம் பெற்று வாழும் பெண்மணி வரை, ஏதோவொரு வகையில் ஊடுருவி இருக்கிறது. ஆனால், அது பணமில்லாமல் துன்பத்திற்கு ஆளாகும்போதுதான் வெளி வருகிறது.

ஆமாம், இப்பெண்மணி கேட்ட நியாயத்தைக் கூட, சட்டப் பிரச்சினையில் சிக்கித்தவிக்கும் பணப்புழக்கம் உள்ள மக்கள், நேரடியாக கேட்கத்துணிவு இல்லாமல் பொய்யர்களை நாடி நின்று, அனைத்து விதத்திலும் மோசம் போனப்பின், யோசித்து என்ன பயன்?

சில்லரையை கொடுக்க வேண்டுமென நினைக்கிற கடைக்காரர்கள், இவர்களைப் போன்றவர்களிடம் பெற்று, கௌரவமாக நமக்கு கொடுத்து விடுகிறார்கள். இதில், கமிஷன் கொடுத்து வாங்குபவர்களும் உண்டு.

ஆனால், சில்லரையைக் கொடுக்காமல் சில்லரைத்தனமாக நடந்து கொள்ள  வேண்டுமென நினைக்கும் சில்லரை நடத்துனர்களை போன்ற பலரையும் பிச்சைக்காரர்கள் என்று சொல்வதை தவிர வேறு வார்த்தை இல்லை.   
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Sunday, November 13, 2016

விளம்பரம் என்பதும் வெத்து விளம்பரத்துக்காகத்தான்!


2014 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட, ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலில், வருமான வரியை ஏமாற்றி செலுத்துவத்தில் உள்ள ஆடிட்டர்களின் பங்குகளைப் பற்றி ஓரளவிற்கே எழுதி உள்ளேன். 

ஏனெனில், சமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான எனது சட்ட ஆராய்ச்சியில், ஒரே குட்டையில் (ஊ, நா)றிய மட்டைகளான பொய்யர்கள் மற்றும் நிதிபதிகளைப்பற்றி ஆராய்ந்த அளவிற்கு, ஆடிட்டர்களைப் பற்றி ஆராய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. 

இவர்களைப்பற்றி ஆராயப்போனால், பல நூல்களை எழுத வேண்டியிருக்கும். வேறு யாரும் எழுதி உள்ளார்களா என்பதும் தெரியவில்லை.  

இவிங்க எல்லாம் ஏற்கெனவே தங்களது சட்டக் கடமையை சரியாக செய்திருந்தால், கருப்புப்பணம் என்பதற்கே வாய்ப்பில்லாமல் போயிருக்கும். 

தும்பை விட்டு வாலைப்பிடித்த கதையாக, இப்போது கருப்புப் பணத்தை ஒழிக்க உறுதி பூண்டுள்ளோம் என்று, இப்படி தங்களை விளம்பரப் படுத்தி உள்ளார்கள். 

இதனை நாளிதழ்களில் விளம்பரப்படுத்தி இருப்பதன் மூலம், ஏற்கெனவே இவர்கள் ஊழலுக்கும் கருப்புப்பணத்திற்கும் துணை நின்றார்கள் என்பதை மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார்கள். அவ்வளவே!  

மேலும், ‘‘சொல்லுறவன் செய்யமாட்டான்; செய்யிறவன் சொல்ல மாட்டான்’’ என்பதும், ‘‘விளம்பரம் என்பதும் வெத்து விளம்பரத் துக்காகத்தானே தவிர, உண்மையை விளம்புவதற்கு அல்ல’’ என்பதும் உலகறிந்த அனுபவ மொழிகள்!

ஆகவே, இவர்கள் எதற்காக இதனை விளம்பரப்படுத்தினார்கள் என்பதும், இதனைப் பார்த்து இன்னும் யார்யார் விளம்பரம் வெளியிடப் போகிறார்களோ என்பதே, அச்சமாக எழுந்துள்ள கேள்வி? 
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Saturday, November 12, 2016

ஏழை எளிய நடுத்தர மக்களே எச்சரிக்கை!


எனக்கு காலையில் இருந்து வந்த தகவல் மற்றும் கேள்விகளின் அடிப்படையில், கருப்புப்பணம் வைத்திருப்போர் அதனை வெள்ளையாக மாற்றுவதற்கு 20 சதவிகித கமிஷன் அடிப்படையில் இரண்டு லட்சம் வரை மாற்றித்தர கேட்கிறார்களாம். 

அவர்களது 1, 60, 000 த்தை திருப்பித் தரும் வரை, அவர்களது முக்கிய ஆவணங்களை தங்கள் வசம் வைத்துக் கொள்ள கேட்கிறார்களாம். 

உங்களைச் சுரண்டி கருப்புப்பணம் சேர்த்து, அதனை உங்களின் மூலமே வெள்ளையாக மாற்ற முயற்சிக்கும் எந்தவொரு செயலுக்கும் உடன்படாதீர்கள் என்பது எனது அறிவுரை அன்று; கோரிக்கை! 

இப்படி சில பெண்களுக்கும், திருப்பித்தர வேண்டாம் என்று கூறி, ஓரிரு லட்சங்களை கொடுக்கவும் முன்வருகிறார்களாம். இப்படி கேட்டதில் வங்கியில் பணி புரியும் ஊழல் பெருச்சாலிகளும் உண்டாம். 


அரசாங்கமே இரண்டரை லட்சங்களை அனுமதித்துள்ளபோது, ஓரிரு லட்சங்களை வாங்கிக் கொள்ளலாம் என்ற எண்ணமும் வேண்டாம். 

கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு, இரண்டு லட்சத்திற்கு மேல் நகை வாங்கியவர்களின் பட்டிலையும், வீடியோவையும் ஆதாரமாக வைத்து, அவர்களிடம் விசாரணை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

இதேபோல, 5000, 10000 மாக இருந்த உங்களது வங்கிக்கணக்கில் எப்படி லட்சக்கணக்கில் வந்தது என, ஊழல் பெரிச்சாலிகளைப் பிடித்தப் பிறகு சுண்டெலியான உங்களைப் பிடிக்க வாய்ப்புகள் அதிகம். 

இதற்கு முன்பாக உங்களுக்கு பணங்கொடுத்த ஊழல் பெருச்சாலிகள் விசாரணையில் சிக்க நேர்ந்தால், அவர்களிடம் பணம் வாங்கிய வகையில் நீங்களும் சிக்க நேரிடும்.   


ஆகையால், உங்களைச் சுரண்டியும், ஊழல் செய்தும் கருப்புப் பணத்தை வைத்துக்கொண்டு இப்படி கேட்பவர்களைப் பற்றி வருமான வரித்துறையினருக்கு நேரடியாகவோ அல்லது வேறு நபர்கள் மூலமாகவோ தகவல் சொல்லி, கருப்புப்பணத்தை ஒழிக்க ஒத்துழைப்பு கொடுங்கள். 

இந்த தைரியம் இல்லாதவர்கள், நம்பினால் என்னிடம் சொல்லுங்கள். நான் சொல்கிறேன். இப்படி தகவல் கொடுங்களென வருமான வரித்துறையே, மக்களுக்கு விளம்பரப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், செய்ததாக தெரியவில்லை.

உடனடியாக இதனை செய்வதோடு, கருப்புப்பணம் குறித்து தகவல் கொடுப்போருக்கு, கைப்பற்றப்படும் பணத்தில் குறிப்பிட்ட சதவிகிதம் சன்மானமாக வழங்கப்படும் என அறிவித்தால், ஏழை எளிய மக்கள் குறுக்கு வழிக்கு ஆசைப்பட மாட்டார்கள் என்பதோடு, கருப்புப்பண முதலைகளும் சுரண்டிய மக்களை மேலும் சுரண்ட பயன்படுத்திக் கொள்ள பயப்படு வார்கள். 

இப்படிச் செய்வதனால் மட்டுமே, கருப்புப்பணத்தை ஒழிக்க முடியும்.  

கருப்புப் பணத்தில் சிக்குபவர்கள் நிச்சயம் கருப்பு நகை, கருப்புச் சொத்து, பினாமிச் சொத்து உள்ளிட்ட பல்வேறு வழி வகைகளிலும் நிச்சயம் சிக்குவார்கள். 

ஆகவே, ஏழை எளிய நடுத்தர மக்களே எச்சரிக்கை! எச்சரிக்கை!! எச்சரிக்கை!!! 

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Friday, November 11, 2016

மக்களின் மடத்தனமும்; சிலரின் சிறுபிள்ளைத்தனமும்!


ஆண்டுக் கணக்கில் அவ்வப்போது வெளியிட்ட 500, 1000 ரூபா நோட்டுகளை எல்லாம் ஒரே நேரத்தில் முடக்கி விட்டு, ஓரிரு நாட்களில் புதிய ரூபா நோட்டுக்களை வழங்குவது என்பது, எப்படிப்பட்ட வளர்ந்த நாடுகளிலுங்கூட இயலாத காரியமே! 

ஆகையால், இதனை இந்தியாவில் எதிர்ப்பார்ப்பது அர்த்தமற்ற அபத்தமானது!!

ஏனெனில், இதற்கு அனைத்துத் தரப்பில் இருந்தும் ஆதரவில்லை. அரசியல் செய்ய இதுதான் சரியான தருனமென, அரசியல் வியாதிகளின் பினாமி தொல்லைக் காட்சிகள், தங்களின் ஆதாயத்திற்காக பெரிதுபடுத்தி செய்தி வெளியிடுகிறது. 

ராகுல் கூட, சோத்துக்கு வழியில்லாமல் இரண்டாயிரம் ரூபாய்க்காக மக்களோடு மக்களாக என்றுகூறி வரிசையில் நின்று அரசியல் செய்தது, உலகின் உச்சகட்ட சிறுபிள்ளைதனம்

உண்மையாக இருந்தால், தில்லியில் மளிகை கடை வைத்துள்ள நம் வாசகரிடம் சொல்லி, ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் கூட கொடுக்கச் சொல்லி விடுவேன். ஏனெனில், வசதியா வாழ்ந்தவரு, வறுமையில் வாழ்வது கஷ்டம் ஆயிற்றே!  

ஆகையால், ராகுலே நின்னுட்டார்; நாம நிக்கலேன்னா குத்தமாயிடும் என்றெண்ணி, இனி ஒவ்வொரு கட்சியை சார்ந்த அரசியல் வியாதிகளும் வரிசையில் நின்று அரசியல் செய்து சீன் போடுவார்கள் என எதிர்ப்பார்க்கலாம்.  

அரசூழியர்களும், வங்கி ஊழியர்களும் எவ்வளவு வேகமாக வேலை செய்வார்கள் என்பதும், உலகறிந்த உண்மை என்பதோடு, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்காத வங்கி ஊழியர்கள் யாராவது இருக்க முடியுமா? 

இவர்களிடமும் கருப்புப்பணம் இருக்குமாகையால், எவ்வளவு தூரம் அரசின் அதிரடி நடவடிக்கைக்கு அரசியலைத்தாண்டி ஒத்துழைப்பார்கள் என்பதையும் உறுதியாய் சொல்லுவதற்கு இல்லையே! 

மேலும், மாற்றிக் கொடுப்பதற்கு எவ்வளவு ரூபாய் நோட்டுக்கள் தேவையோ, அவ்வளவையும் நிச்சயம் அச்சடித்திருக்க முடியாது. அப்படியே ஒருவேளை அச்சடித்து இருந்தாலுங்கூட, சில மாதங்களுக்கு முன்பு, இரயிலில் கொண்டு செல்லப்பட்ட செல்லாத பணத்தையே கொள்ளையடித்த சம்பவத்திற்கு மத்தியில், நாட்டின் எல்லாப் பகுதிக்கும் திருட்டு, வழிபறி, கொள்ளை ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பது என்பதும் இயலாத காரியமே என்பதை எல்லாம் மக்கள் உணர வேண்டும்.

கடந்த ஆண்டு சென்னை பெருவெள்ளத்தில் சிக்கி எந்த விதமான அடிப்படை வசதியும் இல்லாமல், குறைந்தது ஒரு வாரம் முதல் மாதக்கணக்கில் கஷ்டத்தை உணர்ந்த மக்களே, அப்படியொரு அசாதாரண சூழ்நிலையே இல்லாத இப்பொழுது ஓரிரு நாட்களைக்கூட பொருத்துக் கொள்ள மறுப்பது மடத்தனமே.   

தாங்கள் எல்லாம் வறுமையில் வாடிக் கொண்டிருந்ததாக சொன்ன மக்கள் எல்லாம், தற்போது எங்களிடம் 500, 1000 த்தை தவிர, வேறு பணமோ சில்லரையோ, உணவுக்கு தேவையான உப்பு உள்ளிட்ட பொருட்கள் கூட, கையிருப்பில் இல்லை என்பதுபோல, பணத்தை மாற்ற படையெடுத்து நின்று, அனுபவிக்கும் கொடுமைக்கு அவர்கள்தான் பொறுப்பு. 

இவர்களிடம் 500, 1000 ரூபாயாக இல்லாமல் இருக்கும் பணத்தை வைத்தும், பழக்கப்பட்ட கடைக்காரர்கள் உள்ளிட்ட பலரது ஒத்துழைப்புடன் தாராளமாக ஒரு வாரத்தை ஓட்டலாம். வீட்டிலும், கடையிலும் அவ்வளவு கையிருப்பு இருக்கிறது.  

மேலும், தற்போது பல்வேறு வகையான அங்காடிகளிலும் ஏடிஎம் அட்டையை தேய்த்து, பொருட்களை வாங்கும் வசதி இருக்கிறது. இந்த தேய்க்கும் எந்திர வசதி இல்லை என்றாலுங்கூட, அவர்களது வங்கிக் கணக்கிற்கு பணப்பறிமாற்றம் செய்து பொருட்களை பெறமுடியும். 

இதனை சாதாரண கடையில் ஆரம்பித்து, மொத்த கொள்முதல் வரை மிக எளிமையாக செய்ய முடியும். இதற்கு ஒத்துழைக்க மறுத்தால், அவர்கள் கருப்புப்பணத்தில் புழங்குபவர்கள் என்றே அர்த்தம். 

ஆமாம், விவசாயி உள்ளிட்ட உற்பத்தியாளர்களுக்கும், அப்பொரு ளை நுகரும் மக்களுக்கும் நடுவில் உள்ள இடைத்தரகர்களே வியாபாரிகள் என்பதும் உலகறிந்த ஒன்றுதான்!       

இப்படியே பல்வேறு அத்தியாவசிய சேவைகளையும் பெற இணையவழிப் பணப்பறிமாற்றம் முடியும். இப்படி யாருக்காவது, சிறிய அளவில் உதவலாம் என்ற அடிப்படையில், இதுபற்றியும் முகநூலில் பதிவிட்டேன். 


ஆனால், இதனை யாரும் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதோடு, பயன்படுத்துவது எப்படி என்றுகூட யாரும் கேட்க வில்லை. நாங்களாகவே தேடிச் சென்று, இவ்விவரம் தெரியாது விளக்கம் கேட்டிருந்த முகநூல் அன்பர் ஒருவருக்கு பதிவிட்டோம். 


இதுபற்றிய விழிப்பறிவுணர்வு குறுஞ்செய்தி தனியார் வங்கிகளிடம் இருந்து வந்துக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால், இந்த வழிமுறைகளை எல்லாம் தேர்ந்தெடுக்காமல் மக்கள், தங்களைத் தாங்களே மடையர்களாக ஆக்கிக் கொள்கிறார்கள். 

ஆமாம், நாமும் புதுநோட்டை வாங்கித்தடவி பார்த்துடனும் என்று, அடித்துப் பிடித்து வாங்கி, அதனை அர்ப்பத்தனமா போட்டோ புடிச்சி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பீற்றிக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தை வெளிப்படையாகவே பார்க்க முடிகிறது. 

ஒரு நாளில் 2000, ஒரு வாரத்தில் 4000 மட்டுமே பணங் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ள நிலையில், இப்படி பதிவிடுபவர்களின் கையில் குறைந்தது நாலைந்து 2000 ரூபாய் நோட்டுக்கள் எப்படி இருக்க முடியும்? இவர்களில் யாருக்கும் 500 ரூபாய் நோட்டே அல்லது வேறு சில்லரை பணமோ கொடுக்கப்பட வில்லையா?


2000 ரூபாயை அடுத்தவர்களிடம் வாங்கி போட்டோ எடுத்துப் போடுகிறார்களா... இப்படி போடுவதற்கு அவர்கள் கொடுப்பார்களா அல்லது இவர்கள் குடும்பத்தோடு சென்று ஆளாளுக்கு வாங்குகிறார்களா... வாங்க வேண்டிய அவசியம் என்ன... அப்படியே வாங்கினாலும், நீண்ட வரிசையில் நிற்பவர்களுக்கோ அல்லது நம் நாட்டிற்கு சுற்றுப்பணம் வந்த வெளிநாட்டு வாழ் மக்களுக்கோ கொடுத்து உதவ வேண்டியதுதானே? 

சூழ்நிலைக்கு வெளிநாட்டில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளுக்கு உள்ள சிரமத்தை போக்கத் தேவையான நடவடிக்கைகளை வங்கிகள் உடனே மேற்கொள்ள வேண்டாமா? அப்படி மேற்கொண்டால், இப்படிச் செய்தது தவறு என அரசுதான் குற்றஞ் சுமத்துமா? 

500, 1000 க்கு குறைவான பணம் யாரிடமுமே இல்லை என்று சொல்லுகிற சூழ்நிலையில், புதிதாக பெற்ற 2000 ரூபாய் நோட்டோடு பல் இளிப்பவர்கள் எல்லாம்  எங்கு சில்லரை வாங்குவார்கள்... எப்படி தங்களின் சில்லரை தேவைகளை பூர்த்தி செய்கிறார்கள் என்பதை எல்லாம் நாம் யோசிக்க வேண்டும். 

உண்மையில், வெளி நாட்டில் இருந்து இன்பச் சுற்றுலா வந்தவர்களுக்கு  துன்பச் சுற்றுலாவாக மாறியிருக்கிறது என்பதையும், கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை வைத்திருந்தவர் களுக்கு, கசப்பான அனுபவமாகி இருக்கிறது என்பது மட்டுமே, நான் ஒப்புக்கொள்ளும் உண்மை! 
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

இதுபோன்ற சட்ட சந்தேகங்கள் உங்களுக்கும் இருக்கலாம்!


நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்!

நீங்களும் ஐஏஎஸ் ஆகலாம்...

நீங்களும் ஐபிஎஸ் ஆகலாம்...

நீங்களும் எம்பிபிஎஸ் ஆகலாம்...

என்பன உட்பட பல்வேறு தலைப்புக்களில் நூல்களைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், இவை எல்லாவற்றுக்கும் படிக்க பல்வேறு வகையான பாடங்களைப் படிக்கவும், பல்வேறு விதங்களில் நடைபெறும் தேர்வுகளில் தேர்ச்சி பெறவும் வேண்டும்.

இதெல்லாம் இயலுமா என்பதே தெரியாமல், (அ, இ)துவாகலாம் என்கிற நூல்களை ஆசையில் வாங்கிப் படித்தும் இருப்பீர்கள். ஆனால், படித்ததில் 100 க்கு 99.99 பேருக்கு அந்த ஆசை நிறைவேறி இருக்காது.

ஆனால், நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் என்பது இந்த வகைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. 

ஆமாம், நீங்களே வாதாடுவதற்கு, அதிகபட்ச நியாயமும், கொஞ்சம் துணிச்சலும் உங்களுக்கு இருந்தால் போதும். 

சட்டந்தெரியாத நிதிபதிகளிடம் இருந்து நியாயத்தைப் பெற, அவர்களுக்கு தெரியாத அடிப்படைச் சட்டங்கள் ஐந்தில் அதிகபட்சம் ஐம்பது விடயங்களை தெரிந்து வைத்திருந்தால் போதும். நிதிபதிகள் மட்டுமல்ல; எந்தவொரு ஊழியர்களின் கண்ணிலும் விரலை விட்டு ஆட்டலாம்.

இந்த அடிப்படைச் சட்டங்கள் ஐந்தும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிப்பதற்கு சமம் என்கிற வகையில் மிகவும் எளிமையானதுதான் என்பதை நீதியைத்தேடி... நூல்கள் உணர்த்தும்.   

இதுவே நீதியைத்தேடி... குற்ற விசாரணை என்ற முதல் நூலில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள அடிப்படையான ஐந்து நூல்கள். 

இது தவிர உங்களுக்கு என்ன பிரச்சினை என்பதைப் பொருத்து திருமண விவாகரத்து, தொழிலாளர் நலன், நுகர்வோர் பாதுகாப்பு, வீட்டு வாடகை என மேலும் சில சட்ட நூல்கள் தேவைப்படலாம்.

இவற்றில் எது தேவை என்றாலும், நாங்களே நேரடியாக சொல்லி அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறோம். இதற்கான தொகையை கொடுக்கும் வங்கிக் கணக்கில் முன்னதாகவே செலுத்த வேண்டி இருக்கும்.

இப்படி, ஊடகத்துறையில் உள்ள ஒருவருக்கு இருந்த சந்தேகம், நீதியைத்தேடி... வாசகர் ஆனதும் போனது எப்படி என்பது பற்றிய, அவரின் பதிவு இது. படித்துப் பாருங்கள்!

*******************

மருத்துவ பட்டப் படிப்பு முடிக்காமல் எப்படி மருத்துவர். அதே போன்று பொறியியல் பட்டப் படிப்பு முடிக்காமல் எப்படி பொறியியலாளர் என்றிருக்கும் போது, சட்டப் படிப்பிற்கும் அது தானே பொருந்தும்? 

அதற்கேற்றார் போல், பத்திரிகைகளிலும் அடிக்கடி போலி வக்கீல்கள் கைது என்றெல்லாம் செய்திகள் வரும். மாட்டிக் கொள்ளும்வரை ஒரு மருத்துவர் போலியாக செயல்பட முடியும். ஆனால் வக்கீலாக எப்படி செயல்பட இயலும்? என்ற பொது புத்தியில் எழுந்த சந்தேகம். 

அதே சமயம், சட்டத்தின் தேவை ஏதாவது ஒரு விதத்தில் நமக்கு தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பத்திரிகைகள் மற்றும் அதற்கென்றே பிரத்யேகமாக வெளியாகும் கவனம் ஈர்க்கும் கவர் ஸ்டோரிகள் அடங்கிய சட்ட இதழ்களை வாங்கிப் படிப்பேன். 

ஆனால், ஒரு வழக்கில் சட்டம் எங்கு தொடங்கி எங்கெல்லாம் பிராயணித்து எதில் வெளியே வருகிறது என்ற குழப்பம் இருந்து கொண்டே இருந்தது. 

சட்டப் புத்தகங்களை வாங்கினால் சட்டப்பிரிவுகளை வாசிக்கலாம். அதைத் தாண்டி என்ன செய்வது என்ற வெறுமை. எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற இடைவிடாத முயற்சியில் கூகிள் தேடு பொறியில் தேடியபோது, எதேச்சையாக நீதியைத்தேடி... டாட் ஆர்க் சிக்கியது.


உடனடியாக பணம் அனுப்பி அடுத்த நாளே எஸ்.டி. கொரியர் வாசலில் காலை 8 மணி முதல் பார்சல் வரும்வரை காத்திருந்து வாங்கி, பின்னர் அங்கேயே பிரித்து நூல் வடிமைப்பை பார்த்துக் கொண்டே படியிறங்கினேன். 

தொடர்ந்து இரண்டு நாட்கள் இடைவிடாது படித்ததில், ஒரு வழக்கு என்பது எங்கு தொடங்கி எங்கெல்லாம் பிராயணித்து எதில் வெளியே வருகிறது என்ற குழப்பம் கிட்டத்தட்ட தீர்ந்து விட்டது. 

அதே போல் வாசகர்களுக்கு ஒரு முக்கிய தகவல், அடிப்படைச் சட்டங்கள் ஐந்து என நீதியைத்தேடி... நூலில் பரிந்துரைக்கப் பட்டுள்ளதில், மேற்கண்ட ஐந்து நூல்களும் திரு. நடராஜன் என்பவர் எழுதி, சென்னை பாலாஜி பதிப்பகம் வெளியிட்டுள்ள புத்தகங்கள் மிகப் பொருத்தமானவை. 

400 ரூபாய்க்குள் மேற்கண்ட ஐந்து புத்தகங்களும் வாங்கி விடலாம். மலிவு விலை, எளிமையான மொழி பெயர்ப்பு என சட்டத்தை விளங்கிக்கொள்ள வாசகர்களுக்கு மிகப் மிகப் பொருத்தமானது. 

உதாரணமாக இதில் 4 வரிகளில் சொல்லப்பட்டுள்ள கு.வி.மு.வி 436 என்ற ஜாமீன் பிரிவையே, கவர்சிகரமான வடிவமைப்பில் அதிக விலையில் வெளியிடும் ஏடிசி பதிப்பகத்தின் சட்ட நூலில் 40 வரிகளில் சொல்லப் பட்டிருக்கும். 

எத்தனை முறை படித்தாலும் விளங்காமல், சட்டமும் வேண்டாம் ஒரு மயிரும் வேண்டாம் என்ற அளவுக்கு மனநிலை பாதிப்பை உண்டாக்கும் ஆபத்தும் அதிகம். இதில் கடைசியாக பொருள் விளக்கம் வேறு. அது மேலும் கொடுமை. எச்சரிக்கை.

*************************

குறிப்பு: சென்னையைச் சேர்ந்தவரும், ஊடகத் துறையில் ஊழியம் புரிபவரும் ஆன திரு. நா. சுப்பையா என்ற நீதியைத்தேடி... வாசகருக்கு, வாசகர் ஆவதற்கு முன்பு இருந்த சந்தேகங்களும், வாசகரான பின் கிடைத்த தெளிவும் குறித்து, அவரே முகநூலில் பதிவிட்ட பதிவிது. 

உங்களுக்கும் இப்படிப்பட்ட சந்தேகங்கள் இருந்தால், தெளிவு பெற வேண்டும் என்பதற்காக, இதனை வாசகர்களின் பகுதியில் வெளியிட்டு உள்ளேன். அவ்வளவே!

பொய்யர்களுக்கு வழக்காளிகளைப் பிடித்துத்தரும் மற்றும் பொய்யர்களின் நூல்களை விற்பனை செய்யும் புரோக்கர்களாகவும் உள்ள நிதியைத்தேடி... தறுதலை வாசகர்கள் கூட்டம், சட்ட அறியாமையில் உள்ள பலரின் தலையில்..,


மேலே வாசகர் சொன்னபடி, 400 ரூபாயில் முடிக்க வேண்டிய நூல்களை, இப்படி 4000 க்கு தேவையில்லாமல் தலையில் கட்டி விடுகிறார்கள். எச்சரிக்கை! 

ஆனாலும், நீதியைத்தேடி... உள்ளிட்ட நூல்கள் இல்லாமல் சட்டத்தை நேராகப் படிக்க முடியாது என்பதாலேயே கேட்கிறார். அவ்வளவே!
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

பொய்யர்களைப் பற்றி நிதிபதி கேனச் சந்துருவின் பகிரங்க ஒப்புதல்


நூறு வருடங்களுக்கு முன் இந்திய வழக்கறிஞர்கள் இந்திய நீதிமன்றங்களில் தொழில்செய்ய அனுமதி மறுக்கப்பட்ட வரலாறு உண்டு. அவர்களையும் உயர் நீதிமன்றத்தில் பணியாற்ற அனுமதித்த தலைமை நீதிபதிக்கு எதிராக ஆங்கில பாரிஸ்டர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியதும் நடந்தது. ஆனால் அதையெல்லாம் மீறி இந்திய வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களில் தங்களது வெற்றிக்கொடியை நிலை நாட்டியபோது சோகம் ஒன்று காத்திருந்தது.

1921-ல் கருப்பு அங்கியையும் கழுத்துப் பட்டியையும் தூக்கியெறிந்து விட்டு ஒத்துழையாமை இயக்கத்தில் சேர அறைகூவல் விடுத்திருந்தார் காந்தி. அதையொட்டி தொழிலில் திறன் படைத்த பலர் நாட்டின் விடுதலைக்கு தங்களை அர்ப்பணித்தனர். 

அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்தவர்களோ முந்தைய தலைமுறையின் இடத்தை எட்டி, கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். அவர்களைப் பொறுத்தவரை தொழில் முன்னே; தேசம் பின்னே என்பதே கொள்கையாக இருந்தது. இதே காலகட்டத்தில்தான் வழக்கறிஞர் தொழிலை ஒழுங்குபடுத்த முதல் முறையாக 1925-ம் வருட ‘இந்திய பார் கவுன்சில் சட்டம்’ கொண்டு வரப்பட்டது.

விதிமீறல்கள்

வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை உயர் நீதிமன்றத்திடம் அளித்தது இச்சட்டம். விளைவாக, தேச பக்த வழக்கறிஞர்கள் அவ்வப்போது ஆங்கில நீதிபதிகளின் ‘உரிமத்தை ரத்துசெய்துவிடுவோம்’ மிரட்டலை எதிர்கொண்டனர். 1961 வருட வழக்கறிஞர்கள் சட்டம் முதன்முறையாக அகில இந்தியரீதியில் வழக்கறிஞர்கள் தொழிலை ஒருமுகப்படுத்தவும், பார் கவுன்சில்களுக்கு சுயேட்சையான அதிகாரம் வழங்கவும் முயற்சித்தது. 

ஆயினும் உயர் நீதிமன்றங்களுக்குள் நடக்கும் ஒழுங்கீனங்களை முறைப்படுத்தவும், நீதிமன்றச் செயல்பாடுகளைச் சிறப்பிக்கவும் பிரிவு 34-ன் கீழ் உயர் நீதிமன்றங்களே விதிமுறைகளை வகுத்துக்கொள்வதற்கு அச்சட்டம் வழிவகுத்தது. ஆனாலும், பல உயர் நீதிமன்றங்கள் இதற்கான தெளிவான சட்ட விதிகளை வகுத்துக்கொள்ளவில்லை. நீதிமன்றங்களில் முறைகேடாகச் செயல்படும் வழக்கறிஞர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கும் போக்குதான் இருந்தது.

அகில இந்திய பார் கவுன்சில் வழக்கறிஞர் சட்ட விதிகள், ‘நீதிமன்றத்தின் முன் வழக்கறிஞர்களுக்கு உள்ள கடமை’ என்ன என்பதைத் தெளிவாகவே வரையறுக்கின்றன. நீதிபதிகளைக் கௌரவமாக நடத்துவதும், அவர்களிடம் முறைகேடான வழிகளில் தம் செல்வாக்கை நிலைநாட்ட முயலக் கூடாது என்பதும் தீர்க்கமாகவே கூறப்பட்டிருக்கிறது. எனினும், இந்த விதிகளின் படியெல்லாம், இவற்றை மீறிய வழக்கறிஞர் எவர் மீது இதுவரை ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது கிடையாது.

தாமதமான புதிய விதிகள்

2004-ல் சென்னை உயர்நீதிமன்றம் அப்பிரிவின் கீழ் விதிகளை வகுத்திருந்தாலும் வழக்கறிஞர்களின் எதிர்ப்பால் அவற்றை 25 நாட்களில் திரும்பப் பெற்றது. அச்சமயத்தில் அந்த விதிகளைக் கண்டித்து நான் ‘ப்ரண்ட்லைன்’ இதழில் கட்டுரை எழுதியிருந்தேன். தலைமை நீதிபதியிடமும் அவ்விதிகளை திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தினேன். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டிக்கப்படும் வழக்கறிஞர்களின் சன்னத் (அ) உரிமம் பறிக்கப்பட்டு அவர் தொழில் நடத்த தடைவிதிக்க வழக்கறிஞர் சட்டம் பிரிவு 34-ன்கீழ் சென்னை உயர்நீதி மன்றம் உருவாக்கிய விதிகளில் வழி உண்டு.

வி.சி.மிஸ்ரா என்ற அன்றைய பார் கவுன்சில் தலைவர் அலகாபாத் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதிக்கு எதிரே ஒழுங்கீனமாக நடந்து கொண்டது தொடர்பாக உச்ச நீதிமன்றமே சுயமாக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்தது; அவர் தண்டிக்கப்பட்டார். எனினும், அவருக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து போடப்பட்ட சீராய்வு மனுவில், ஒழுங்கு நடவடிக்கை அதிகாரம் பார் கவுன்சில்களுக்கு மட்டுமே உண்டு என்று கூறி தீர்ப்பு மாற்றப்பட்டது.

டெல்லியில் நந்தா என்பவர் வெளிநாட்டு காரை வேகமாக ஓட்டி ஏற்பட்ட சாலை விபத்தில் இறந்தோர் பற்றிய வழக்கில் ஆர்.கே.ஆனந்த் என்ற மூத்த வழக்கறிஞர் ஆஜரானார். அவர் சாட்சிகளை பணங்கொடுத்து மாற்ற முற்படுகையில் ‘தெஹெல்கா’ என்ற ஊடகம் மறைமுகமாக அதைப் பதிவுசெய்து, அம்பலமாக்கியது. 

இதையொட்டி தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர்நீதி மன்றமும், உச்சநீதி மன்றமும் விசாரித்து தண்டனை வழங்கி அவரது வழக்கறிஞர் உரிமம் பறிக்கப்பட்டது. பின்னர் தொடுக்கப்பட்ட சீராய்வு மனுவில் அவரது தண்டனை குறைக்கப்பட்டு ரூ. 14 லட்சம் அபராதமும், ஒரு வருடம் ஏழைகளுக்கு சட்ட உதவி வழக்குகளில் மட்டும் ஆஜராகும்படியும் உத்தரவிடப்பட்டது.

2009-ல் வழங்கப்பட்ட அத்தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் எல்லா உயர்நீதி மன்றங்களுக்கும் ஒரு உத்திரவிட்டது. வழக்கறிஞர் சட்டம் 34-வது பிரிவின்படி நீதிமன்றங்களுக்குள் தவறிழைக்கும் வழக்கறிஞர்க ளைத் தண்டிக்கும் வகையில் இரு மாதங்களுக்குள் தக்க விதிகளை வகுக்க உயர் நீதிமன்றங்களுக்கு உத்திரவிடப்பட்டது. ஆனால் பிரிவு 34-ன் கீழ் முறையான விதிகள் வகுக்கப்படாததால் நீதிமன்றங்கள் பல இக்கட்டான சூழ்நிலைகளைச் சந்திக்க நேர்ந்தது.

எனவே அப்பிரிவின் கீழ் விதிகளை வகுக்க வேண்டியதை நான் இங்கு தொடர்ந்து வலியுறுத்திவந்தேன். தலைமை நீதிபதிகள் கோகலே, அகர்வால், இக்பால் என்று பலருக்கும் கடிதம் எழுதினேன். எனினும், இப்போதுதான் தலைமை நீதிபதி கௌல் முயற்சியில் புதிய விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

இன்றைய நிலை வேறு

ஒரு வழக்கறிஞர், “நீதிபதிக்குக் கொடுக்க வேண்டும்” என்று கட்சிக்காரரிடம் பணம் வாங்குவது, நீதிமன்ற ஆவணங்களை முறைகேடாக திருத்துவது, நீதிபதியை எல்லோருக்கும் முன்னால் நீதிமன்றத்தில் வசவு வார்த்தைகளில் கடிந்துகொள்வது, நீதிபதிகளின் மீது நிரூபிக்க முடியாத அநியாயமான குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது, நீதிமன்ற வளாகத்திற்குள் ஊர்வலமாகச் செல்வது (அல்லது) நீதிபதியை கேரோ செய்வது (அ) நீதிமன்ற அறையில் கோரிக்கை தட்டிகளைப் பிடித்துக்கொண்டு நிற்பது (அ) நீதிமன்ற வளாகத்தில் மதுபோதையில் இருப்பது போன்ற ஒழுங்கீனங்களுக்கு நீதிமன்றங்களே நடவடிக்கை எடுத்து அந்த ஒழுங்கீனமான வழக்கறிஞர்களின் உரிமத்தைப் பறிப்பதற்கு இந்தப் புதிய விதி வழிவகுக்கிறது. 

இத்தகைய ஒழுங்கீனங்களைச் செய்வதற்கு எந்த வழக்கறிஞருக்கும் உரிமை கிடையாது என்பது சொல்லித் தெரிய வேண்டாம். ஆனால், வழக்கறிஞர்களோ இவற்றுக்குத் தம் கண்டன முழக்கங்களைத் தெரிவித்துள்ளனர்.

இங்கு மட்டும் அல்ல; ஏனைய நீதிமன்றங்கள் பலவற்றிலும் இது போன்ற விதிகள் இயற்றப்பட்டுள்ளன. உதாரணமாக, பம்பாய் உயர்நீதிமன்றம் இயற்றியுள்ள விதியின்படி வழக்கறிஞர்கள் நடத்தும் நீதிமன்ற புறக்கணிப்பு தடை செய்யப்பட்டுள்ளது. அங்கெல்லாம் யாரும் இப்படிப்பட்ட விதிக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதாகத் தெரியவில்லை.

அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் இதை “பிரிட்டிஷ் காலத்திய கருப்புச் சட்டங்களைவிட மோசமானது” என்று கூறியுள்ளது. ஆனால் பிரிட்டிஷ் நிலைமை எப்படியிருந்தது என்ற அறியாமையின் வெளிப்பாடே இந்த அறிக்கை. அன்றைக்கு வழக்கறிஞர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் முழு அதிகாரமும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கையில் இருந்தது. அதை அவர்கள் தேசப் பற்று மிகுந்த வழக்கறிஞர்களை ஒடுக்குவதற்கே பயன்படுத்தினர். இன்றைய நிலைமை அப்படியா?

காலத்தின் கட்டாயமே

நீதிமன்றத்திற்குள் ஊர்வலமும், முழக்கங்களும், வழக்காடுபவர்கள் தாக்கப்படுவதும், நீதிபதிகளின் சாதியைக் கூறி வழக்கு மாற்றம் கேட்பதும் இன்னும் எத்தனையோ பட்டியலிட முடியாத அசிங்கங்கள் அரங்கேறுகின்றன. சென்னை நீதிமன்றத்தில், ஒரு அரசியல் தலைவர் மீது முட்டை வீசப்பட்டதும், அவர் முகத்தில் தாக்கப்பட்டதும் நினைவிருக்கலாம். அதற்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி போடப்பட்ட உத்தரவு ஏழு வருடங்களாக இன்னும் வழக்குக் கோப்புகளில்தான் உறங்குகிறது.

இந்திய நீதிமன்றங்கள் சவாலை எதிர்கொள்ள நாட்டின் மக்கள்தொகைப் பெருக்கத்திற்கேற்ப 40,000 நீதிபதிகளை நியமிக்க அரசுக்குக் கோரிக்கை வைத்திருக்கிறார் நம்முடைய தலைமை நீதிபதி. உண்மையில் இந்தியா முழுவதுமுள்ள மூன்று லட்சம் வழக்கறிஞர்களைச் சமாளிக்க போதுமான நீதிபதிகள் இல்லை என்பதே நாம் எதிர்கொள்ளும் சவால். 

கிராமப் பகுதிகளில் தன்னந்தனியாக நீதிமன்றத்தில் பணியாற்றும் இளம் பெண் நீதிபதிகள் முன்வைக்கும் குறைகளைத் தீர்ப்பதற்கே எவ்விதச் செயல்திட்டமும் இல்லாத இச்சூழலில், இப்படியான விதிமுறைகள் காலத்தின் கட்டாயமாகவே தோன்றுகிறது. நியாயமாக வழக்கு பேசும் வழக்கறிஞர்கள் இதுபற்றியெல்லாம் கவலையே கொள்ள வேண்டியது இல்லை. அதை விடுத்து, வேறு வழி செல்வது என்று முடிவெடுப்போரை நீதிதேவி மட்டும் அல்ல; மக்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!

குறிப்பு: இது 01-06-2016 அன்று தமிழ் இந்து நாளிதழில், நிதிபதி கேனச்சந்துரு "வழக்கறிஞர்களே.. மக்கள் கவனிக்கின்றனர்!" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை. இதனை எழுதிய நிதிபதி தீர்ப்பை திரித்து எழுதுவதில் எப்படிப்பட்டவர், எதற்காக திரித்து எழுதினார்  என்பதை அறிய திரித்து எழுதப்படும் தீர்ப்புகள்! 
   
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Follow by Email

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)