வாகனங்கள் தொடர்பான ஆவணங்களுக்காக ‘அப்’ என்றப் பெயரில், ஆப்பு வைத்திருப்பதுபோல் தெரிகிறது.
ஆமாம், இந்த ‘அப்’ எந்த அளவிற்கு சட்டப்படி சரியானது என்கிற விபரத்தை அறிய முடியவில்லை.
அப்படியே இருந்தாலும், இதற்காகவே வாகன ஓட்டிகள் எல்லாம் ஆன்ட்ராய்டு ரக உலாப்பேசியை வைத்திருக்க வேண்டுமென்கிற கட்டாயம் ஏற்படுகிறது. இது எந்த சட்ட விதிப்படி சரியாகும்?
மேலும், இதற்கு ஆதார் அட்டையும் கட்டாயமாகி விடுகிறது. ஆதார் அட்டைகளுக்கான சட்ட நடைமுறைகள், கைதிகளை அடையாளங் காணுஞ் சட்டம் 1920 மற்றும் அடிப்படை உரிமையைப் பறிக்குஞ் செயல் என்பதைப்பற்றி விரிவாக அறிய, குற்றவாளிகளாகும் குடிமக்களே என்ற இக்கட்டுரையைப் படிக்கவும்.
எது எப்படி இருப்பினும், முன்பிருந்த முறைதான் எல்லா விதத்திலும் சாலச் சிறந்தது. முன்பு இருந்தது முறை இதுதான்!
எது எப்படி இருப்பினும், முன்பிருந்த முறைதான் எல்லா விதத்திலும் சாலச் சிறந்தது. முன்பு இருந்தது முறை இதுதான்!
பொதுவாக, வாகன ஓட்டிகள் தனக்கான ஓட்டுனர் உரிமம் உட்பட, வாகனத்துக்கான ஆவணங்கள் அனைத்தையும் (பை, கை)யிலேயே வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என நினைக்கிறார்கள். இது தவறு. இந்த ஆவணங்களை வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ அல்லது வேறு பாதுகாப்பான இடத்திலோ கூட வைத்திருக்கலாம்.
ஒருவேளை, வாகனச் சோதனையின் போது இந்த ஆவணங்கள் இல்லையென்றால், சம்பந்தப்பட அந்த ஆவணங்களை, குறைந்தது பதினைந்து நாள் கால அளவில் எப்போது வேண்டுமானாலும் சரி பார்ப்பதற்காக, தனது மேல்நிலை ஊழியரிடம் காண்பிக்க கோரி சட்டப்பூர்வ அறிவிப்பைதான் தர முடியுமே தவிர, உடனே அபராதம் விதிக்க முடியாது.
இவ்வறிவிப்பின்படி, அதில் குறிப்பிட்ட அக்காலத்திற்குள் நமக்கு நேரம் இருக்கும் போது காண்பித்து விட்டால், அந்த அறிவிப்பை ரத்து செய்து கொள்வார்கள். அப்படி காண்பிக்கா விட்டால் மட்டுமே நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும்.
வழக்கு தொடுத்தாலும் கூட, வழக்கில் காண்பித்துக் கொள்ளலாம். இதனால், ஒன்றும் குடிமுழுகி போய்விடாது.
இதெல்லாம், ஏதோ என் கற்பனையென்று நினைத்து விடாதீர்கள். சந்தேகம் இருந்தால், கீழேயுள்ள போக்குவரத்து காவலூழியர்கள் வழங்கிய அறிவிப்பை இருபுறமும் நன்றாகப் படித்துப் பாருங்கள். குறிப்பாக, நான் கட்டமிட்டு காட்டியுள்ள பகுதியைப் படியுங்கள்.
மேலும், விரிவான விவரங்களை அறிய, வாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்!
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment