மத்தியச் சிறை நூலகங்களுக்கு நம் ‘‘நீதியைத்தேடி... முதல் மநு வரையுங்கலை!’’ வரையிலான நூல்களைக் கொடுத்ததால், படித்துப் பலனடைந்தோர் பலர்.
இதுபற்றி நமக்கு கடிதம் எழுதியோர் சிலர். இந்தக் கடிதங்களை எல்லாம், நீதியைத்தேடி... இணையப்பக்கத்தில் ஆவணப்படுத்த உள்ளேன்.
ஆகையால், கூடுதல் பிரதிகளை கேட்டு சிறைத்துறையில் இருந்தும் கடிதம் அனுப்பி உள்ளார்கள். நிதிபதியே கூடுதல் பிரதி கடிதம் அனுப்பி இருக்கும்போது, சிறைத்துறையில் கைதிகளுக்காக கேட்க மாட்டார்களா என்ன?
என்னைப் பொருத்தவவரை இதில், பெரிதாக ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவ்வளவே!
முன்பெல்லாம், இப்படி கடிதம் எழுதுபவர்களை, அவர்கள் வசிக்கும் மத்தியச் சிறைச்சாலைக்கே சென்று பார்த்து, அவர்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும், ஆறுதலையும், ஆலோசனையையும் சொன்னதுண்டு. இந்த வகையில், நான் போகாதது கடலூர் மற்றும் மதுரை மத்தியச் சிறைகள் மட்டுந்தான்.
மேலும், சிறைச்சாலை கைதிகளுக்கு சட்டப்பயிற்சி வகுப்பு எடுக்க வேண்டுமென்று மேற்கொண்ட முயற்சிகளும் உண்டு. ஆனால்...
இதன்படி, யார்யார் வகுப்பெடுக்க போகிறீர்கள் என்பது குறித்து சிறைத்துறை கேட்ட பட்டியலில், தமிழ்நாடு முழுவதும் நானே எடுக்க முடியாது என்பதால், நம் வாசகர்கள் உள்ளிட்ட பலரின் பெயர்களை, அவர்களைப் பற்றி நன்கு ஆராயாமலும், தன்னார்வலர்கள் என்றப் பெயரில் திரியும் சில தறுதலைகளின் பெயரையும் அப்பட்டியலில் சேர்த்து விட்டேன். பின்புதான், இவர்களைப்பற்றி எனக்கும் தெரிய வந்தது.
இதனால், இவர்களைப்பற்றி விசாரித்த சிறைத்துறையிடம் இருந்து அனுமதி இல்லாமல் போயிற்று.
நான் ஒருவனே எடுக்க முடியாது; அப்படியே எடுக்க நினைத்தாலும் அதற்கு என் பொருளாதாரம் ஒத்துழைக்காது என்பதால், இந்த முயற்சியை அடியோடு கை விட்டு விட்டேன். என்ன செய்வது?
லட்சாதிபதியாக இல்லாமல், இலட்சியவாதியாக இருக்கிறேனே?
சிறைத்துறை கேட்ட பட்டியலில் சேர்க்கக்கூடாத யாரையெல்லாம் நான் சேர்ந்திருந்தேனோ, அவர்களில் பலர் கொள்ளையர்களாக, கொள்ளையர்களின் பினாமிகளாக வசதியான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது, இப்போது நன்றாகவே தெரிகிறது.
இதற்கென்று உள்ள உலவுத்துறை இவர்களைப்பற்றி எல்லாம் ஆராய்கிறது. ஆனால், தனி ஒருவனாக நான் எதையெல்லாம் ஆராய்வது?
ஆனாலும், இவர்களிடம் நம் வாசகர்கள் ஏமாறக்கூடாது என்பதற்காக நூல்களில் எச்சரிக்கிறேன். ஆனாலும், பலர் ஏமாறத்தான் செய்கிறார்கள்.
லட்சாதிபதியாக இல்லாமல், இலட்சியவாதியாக இருக்கிறேனே?
சிறைத்துறை கேட்ட பட்டியலில் சேர்க்கக்கூடாத யாரையெல்லாம் நான் சேர்ந்திருந்தேனோ, அவர்களில் பலர் கொள்ளையர்களாக, கொள்ளையர்களின் பினாமிகளாக வசதியான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது, இப்போது நன்றாகவே தெரிகிறது.
இதற்கென்று உள்ள உலவுத்துறை இவர்களைப்பற்றி எல்லாம் ஆராய்கிறது. ஆனால், தனி ஒருவனாக நான் எதையெல்லாம் ஆராய்வது?
ஆனாலும், இவர்களிடம் நம் வாசகர்கள் ஏமாறக்கூடாது என்பதற்காக நூல்களில் எச்சரிக்கிறேன். ஆனாலும், பலர் ஏமாறத்தான் செய்கிறார்கள்.
எனது சிறைச்சாலை சட்டப்பயிற்சி வகுப்பு முயற்சி கைகூடி இருந்தால், சட்டத்துக்கு விரோதமாக கேள்வி கேட்பார் இன்றி சிறைச்சாலையில் கிடக்கும் ஆதரவற்றோர் அத்தனை பேரும் நிச்சயமாக வெளியில் வந்திருப்பார்கள். பாதி சிறைச்சாலையே காலியாகி இருக்கும்.
ஆனால், வந்தவர்களோ வாசகர்களில் சிலர் மட்டுந்தான்.
ஆனால், வந்தவர்களோ வாசகர்களில் சிலர் மட்டுந்தான்.
இப்போதும், சிறையில் நம் நூல்களைப் படித்தது பற்றி முகநூலின் உள்பெட்டிக்கு வந்து தகவல் சொன்னோர் பலர்.
தானே வாதாடிய இந்தக் கைதிக்கு இன்னுஞ் சில சட்ட விதிகள் அத்துப்படியாக தெரிந்திருக்க வேண்டும். இருந்தாலும், இவ்வளவு தூரம் மேற்கொண்ட சுய முயற்சி பாராட்டத்தான் வேண்டும்.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment