No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Saturday, October 29, 2016

சட்ட விதிகளை குறிப்பிட வேண்டியதன் அ-வசியமென்ன?


நாங்கள் பயணம் செய்த பேருந்து ஓட்டுநருக்கும், கார் ஓட்டுநருக்கும் இடையே நடந்த தகராறில், காரில் வந்தவர்கள், பேருந்து ஓட்டுநரையும், நடத்துனரையும் தாக்கியது குறித்து, ‘‘உதவுபவர்களுக்கு உபத்திரம் செய்யக்கூடாது!’’ என்ற கட்டுரையில் எழுதியிருந்தது நினைவிருக்கலாம். 


அப்படியொரு சம்பவந்தான் இந்தச் செய்தியில் வந்திருப்பதும் என்றாலுங்கூட, இதில் முந்திச் சென்றவரை, கோபத்தில் சுட்டுக் கொலைச் செய்திருக்கிறார். முந்துதல் என்கிற உந்துதல், தன்னை உள்ளேயுந் தள்ளி வாழ்வை சீரழித்து விடும் என்பதை, இதிலிருந்து நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.  

சுட்டுக்கொலை செய்த காரணத்தால், கடந்த 10-05-2016 அன்று கைது செய்யப்பட்டவருக்கு, பாட்னா உயர்நீதிமன்றம் கடந்த 19-10-2016 அன்று பிணை வழங்கியுள்ளது. இதன் மூலம் அவர்மீது கொலைக்குற்றம் மட்டுமே சாற்றப்பட்டு இருக்கலாம் என்றே கருத முடிகிறது. 

மாறாக, சுடுவதற்கு பயன்படுத்தி துப்பாக்கி உரிமம் பெற்றதா அல்லது கள்ளத்துப்பாக்கியா என்பதும், உரிமம் பெற்ற துப்பாக்கியாக இருந்தால், தற்காப்புக்கான உரிமத்தைப் பெற்றுவிட்டு, கொலை செய்வதற்கு சட்ட விரோதமாக பயன்படுத்தியதாகவோ அல்லது கள்ளத் துப்பாக்கியாக இருந்தால் அதற்கேற்றவாறோ குற்றஞ் சுமத்தி ஒரு வருடம் வரை பிணைக்கே வழியில்லாதபடி தடைக்காவலில் அடைத்திருக்க முடியும். ஆனால், இப்படி எதையும் செய்யவில்லை.    

ஆனால், இதனை எதிர்த்து பீகார் மாநில அரசின் சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், உச்சநீதிமன்ற நிதிபதிகள், பாட்னா உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததால், குற்றஞ் சாட்டப்பட்டவர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்கிறது மேற்கண்ட செய்தி! 

இந்த செய்தியும் அப்படித்தான். 

ஆனால், 11 ஆண்டுகளாக நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை சட்ட விதிகளுக்கு உட்பட்டு விரைவில் முடிக்க வேண்டுமென்று நிதிபதிகள் சொல்லி உள்ளனரே தவிர, இதுவரை ஏன் முடிக்கவில்லை என கேள்வி கேட்க துப்பில்லை.  ஆகையால்தான் கேட்கவில்லை. 

ஆமாம், எந்தவொரு வழக்காக இருந்தாலும், சட்ட விதிப்படி விசாரணையை முடிக்க வேண்டுமென்றால், அதிகபட்சமாக குறைந்த பட்சம் மூன்று மாதங்களில் இருந்து அதிகப்பட்சமாக ஆறு மாத காலங்களுக்குள்தான். 

இதுவும், விசாரணை நீதிமன்றங்களுக்குத்தான் என்பதைப்பற்றி ‘‘நீதியைத்தேடி...’’ நூல்களில் ஆரம்பித்து ‘‘மநு வரையுங்கலை!’’ நூல் வரை தெளிவாகச் சொல்லியுள்ளேன்.  

அப்படியானால், மேல்முறையீட்டு நீதிமன்றங்கள், இதைவிட குறைவான கால அவகாசத்தைதானே எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் 10, 20, 30 ஆண்டுகள் என வழக்கு நிலுவையில் இருக்க நிதிபதிகள்தானே காரணம்?   

இதுபற்றி இந்த செய்தி வந்தபோதே எழுத வேண்டுமென நினைத்தது, தற்போது மிகவும் பொருத்தமாக எழுதும்படி ஆகிவிட்டது. 

மொத்தத்தில், நிதிபதிகள் எல்லா சட்டங்களையும் மீறலாம் என்றும், மற்றவர்கள் மட்டுமே மீறக்கூடாது என்ற மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளனர் என்பதற்கு இதெல்லாம் ஆதாரங்கள். 

குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 167 மற்றம் இந்திய சாசன கோட்பாடு 22(4) இன்படி, ஒருவர் மீது எந்த மாதிரியான குற்றச்சாற்றாக இருப்பினும், அவரை விசாரணை என்றப் பெயரில் அதிகபட்சமாக 90 நாட்களுக்கு மேல் சிறையில் வைத்திருக்கக் கூடாது என அறிவுறுத்துகிறது. 

இதற்கும் மேலான காலத்திற்கு சிறையில் அடைக்க வேண்டு மென்றால், ஏதோவொரு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ்தான், இதுவும் அப்படி சிறையில் அடைக்க நியாயமான காரணம் இருக்கிறது என்பதை, அதற்கான நிதிபதிகளைக் கொண்ட பரிந்துரைக்குழு பரிந்துரை செய்தால் மட்டுமே, தண்டனை அறிவிக்கப்படாமல், விசாரணை காலத்திலேயே ஒரு வருட காலத்திற்கு சிறையில் அடைக்க முடியும்.  

இதையெல்லாம் எனது சட்ட ஆராய்ச்சியில் ஆராய்ந்து, சுமார் பனிரெண்டு வருடங்களுக்கு முன்பே வாசகர்களுக்கு எடுத்துச் சொன்னதன் விளைவாக, குறிப்பிடும் படியான வெகுசிலர், இந்தியாவிலேயே முதன் முறையாக இவ்விதியைப் பயன்படுத்தி பிணையில் வந்து சாதனை செய்தனர் என்பதற்கான இந்திய அஞ்சல் சான்று இது! 


இப்படி, பொய்யர்களுக்கும், நிதிபதிகளுக்கும் தெரியாத பல்வேறு பிணைகளுக்கான குற்ற விதிகள் குறித்து, ‘‘நீதியைத்தேடி... பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி?’’ நூலில் விரிவாக எழுதியுள்ளேன்.  


நம்ம விசயத்துக்கு வருவோம். 

90 நாட்களுக்குமேல் சிறையில் வைத்திருக்க இயலாது. ஆனால், அதற்கு மேலும் சட்ட விரோதச் சிறையில் இருந்திருக்கிறார் என்பதை சரியான காரணமாக, மேற்சொன்ன சட்ட விதியோடு சுட்டிக்காட்டி, பாட்னா உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்டவரை பிணையில் விடுவித்து இருந்தால், சட்ட விதியே இப்படித்தான் இருக்கிறது என்றெண்ணி, அதனை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு செய்திருக்க முடியாது. 

அப்படியே செய்திருந்தாலுங்கூட, உச்சநீதிமன்ற நிதிபதிகள் பிணைக்கு தடை விதிக்க முடியாமல் போய் இருக்கும். ஆனால், இங்கு தடை விதித்து விட்டார்கள். இத்தடைக்கு சட்ட விதிப்படி, அம்முட்டாள் நிதிபதிகள் எந்தக் காரணத்தையும் சொல்லி இருக்க முடியாது.  

இப்படி உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரையுள்ள நிதிபதிகள், இந்திய சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் குறித்து அடிப்படை அறிவில்லாமல்தான் இருக்கிறார்கள் என்பதில் (நீங், மக்)கள் தெளிவாக இருக்க வேண்டும்.

இத்தெளிவிற்கு ஏற்பவும், நாம் கேட்கும் நியாயக் கோரிக்கைக்கு ஏற்பவும் சரியான சட்ட விதிகளைக் குறிப்பிட்டு மனுத்தாக்கல் செய்து, அச்சட்ட விதிகளைக் குறிப்பிட்டே உத்தரவு பிறப்பிக்கவும் கோரவேண்டும். மேற்கண்ட சிறைவாசகரின் கடிதத்தில் இப்படி குறிப்பிட்டு இருப்பதை காணலாம். 

அப்போததான், நம் நியாயக் கோரிக்கைக்கு எதிராக நிதிபதிகள் வேண்டுமென்றே உத்தரவு பிறப்பிக்க முடியாது. அப்படியே பிறப்பித்தாலும், கெட்ட உள்நோக்கத்தோடுதான் பிறப்பித்தார் என மேல்முறையீட்டிலோ அல்லது சீராய்விலோ ஆதாரப்பூர்வமாக குற்றஞ் சாற்றி, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 166, 167, 217, 218 மற்றும் 219 உள்ளிட்ட பொருத்தமான சட்டப்பிரிவுகளின் கீழ் நிதிபதியை தண்டிக்க வேண்டுமென கோரமுடியும். 

இதன் மூலம், நிதிபதிகளின் பைத்தியக்காரத்தனமான செயல்களை தடுத்து நிறுத்தவும் முடியும். இல்லையெனில், மேற்கண்ட செய்தியில் உள்ளபடி, தங்களின் முட்டாள்தனத்தால், மனநலம் பாதிக்கப்பட்ட நிதிபதிகள், மனம்போன போக்கில் தங்களின் இஷ்டப்படி எதையாவது எழுதி விடுவார்கள். 

ஆமாம், ‘‘நிதிபதிகள் எழுதும் தீர்ப்புக்களில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்பது கழுதைக்கு தெரிந்தால், கழுதைகூட அக்காகிதத்தை திண்ணாது’’ என்பது, எனது பத்து வருட சட்ட ஆராய்ச்சியின் முடிவில் வெளியிடப்பட்ட ‘‘நீதியைத்தேடி... சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி?’’ நூலில் எழுதிய மிக முக்கியமான, பொருத்தமான கருத்து. 

இந்நூல்களைப் பெற விரும்புவோர், 9842909190 என்ற உலாப்பேசி எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.  

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)