No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Friday, October 28, 2016

புகை நமக்குப் பகையா?!தீப ஒளித் திருநாளின் (மெய், விஞ்)ஞான விளக்கம் என்றத் தலைப்பில் இடப்பட்ட கட்டுரை, ‘நமக்குப் புகை எப்படி நன்மையாகும்’ என்ற ஐயத்தை   சிலருக்கு ஏற்படுத்தி இருக்கிறது. 

எனது ஆராய்ச்சி அறிவுக்கு எட்டிய வகையில், புகையிலுள்ள சில சங்கதிகளை வெளிப்படுத்தவே, பொருத்தமான இக்குறளையும், இதற்கான விளக்கத்தையும் எழுதியுள்ளேன்.     

அதிகாரம்: (ப, பு)கை

எல்லாப் புகையும் உயிருக்கப் பகையல்ல 
போதையைத்தரும் புகையே பகை

விளக்கம்: ‘‘புகை நமக்குப் பகை’’ என்ற பொத்தாம் பொதுவான புதுமொழியை நமக்குள் புகுத்திக் கொண்டதால், எல்லாப் புகையையும் நாம் பகையாகவே பார்க்கிறோம். 

வருடத்தில் ஒருநாள் பட்டாசு வெடிக்கும் பண்டிகையை முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். இது எதனால் என்பதை, ஆராய்ந்து அறிய முற்படாமல், நம் முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள்; நாமே அறிவாளிகள் என்று நினைக்கு அறிவீலிகள் ‘‘புகை நமக்குப் பகை’’ என்ற வாசகத்தைப் புகுத்தி நம்மையும் அறிவீலிகள் ஆக்கி விட்டார்கள். 

இதனால், பட்டாசுகளை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர்கள் கூட கொடிய நோய்களுக்கு ஆளாகிறார்கள் என்றுஞ் சிலர் சொல்கிறார்கள். 

இதன்படி பார்த்தால், ‘‘இந்த தீபாவளிக்கு பட்டாசு தயாரித்தவர்கள் யாரும், அடுத்தாண்டு தயாரிக்க உயிரோடு இருக்க மாட்டார்கள். அப்படியே இருந்தாலும், தயாரிப்பு பணியில் ஈடுபட முடியாத அளவிற்கு நோயுற்று இருக்கனும்’’. 

உண்மையில், அப்படியா இருக்கிறார்கள்?

பெ(ரு, று)ங்கூலிக்கு மாரடிக்கும் மூன்று வகையான அரசூழியர்கள் மற்றும் தொழிலாளிகளின் இரத்தத்தையும், உயிரையும் உறிஞ்சும் தொழிலதிபர்கள் ஆகியோரின் அலட்சியத்தின் காரணமாக அவ்வப்போது நிகழும் வெடிவிபத்துக்களில் சிக்கி உயிரிழப்போர் வெகுசிலரைத் தவிர, 

ஆண்டாண்டு காலமாகவும், தலைமுறை தலைமுறையாகவும் இத்தொழிலை செய்து வருவோரே ஆயிரமாயிரம்.

பட்டாசுகளில் உள்ள மூலப்பொருட்கள் பல பாஷான வகைகளைச் சார்ந்தது என்பதும், இவைகள் நம் பாரம்பரிய மிக்க சித்த மருத்துவத்தில் பல்வேறு விதங்களில் பயன்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. 

இப்படித்தான், புகையுடைய யாக வேள்விகளையும் முன்னோர்கள் செய்திருக்கிறார்கள். அதாவது, மருந்தாக நேரடியாக உட்கொள்ள முடியாத, அப்படி உட்கொண்டால் நஞ்சாக மாறி உயிரைப் பறிக்கக்கூடிய பல்வேறு செடிகள், அதன் காய்ந்த குச்சிகள், விதைகள், காய்கள், கனிகளை யாக வேள்வியில் இட்டு, அப்புகையை நுகரச் செய்வதன் மூலம் நோயை அவர்களுக்கு உண்டாகும் நோய்களை தடுத்திருக்கிறார்கள், நோய் வந்தவர்களை குணப்படுத்தி இருக்கிறார்கள். இதனை தற்போது நானும் அறிவேன்.  

இன்னுங் கொஞ்சம் வெளிப்படையாகச் சொல்லப்போனால், நம் பாட்டன், தாத்தா ஆகியோர், சுருட்டுப் பிடிக்கும் பழக்கத்தை வைத்திருந்தனர். அவர்கள் யாரும் அழுகல் நோய் (கேன்சர்) வந்து இறக்கவில்லை. இச்சுருட்டுப் பழக்கம் இல்லாதவர்கள் பல கொடிய நோய்களால் இறந்திருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

புகைப்பிடிக்கும் பழக்கம் மட்டுமே அழுகல் நோய்க்கு காரணம் அல்ல என்பதையும், ஆங்கில மருத்துவ உலகம் ஒப்புக் கொண்டுள்ளது.  

அப்படியானால், அச்சுருட்டால் என்ன நன்மை நடந்தது என்றால், அவ்வப்போது உடலில் உருவாகும் கெட்ட வாயுக்களை சுருட்டின் புகை வெளியேற்றி நோய்வாய்ப் படாமல் காத்திருக்கிறது என்பதோடு, இன்றைக்கு சிலர் பிடிப்பதைப்போல தொடர் புகைப் பழக்கத்திற்கும் ஆளாக்கவோ, அடிமைப்படுத்தவோ இல்லை. 

சிலர் பெண்கள் பித்துப் பிடித்ததுபோல இருப்பதற்கு காரணம், அவர்களது உடலில் உருவாகி நிரந்தரமாக தங்கியுள்ள கெட்ட வாயுக்களே காரணம். ஆண்களுக்கும், திருமணமான பல பெண்களுக்கும், அதிகபட்சம் இப்பித்து பிடித்த நிலை இராது. 

ஏனென்றால், ஆண்களில் பலர் புகைப்பிடிக்கும் சில நண்பர்களுடன் சேருவதாலும் அல்லது அவர்கள் விடும் புகையை ஏதோவொரு விதத்தில் சுவாசிக்க நேர்வதாலும், புகைக்கும் பழக்கம் கொண்ட கணவனுடன் அல்லது உடலில் கெட்ட வாயுக்கள் தோன்றாமல், உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும் பெண்களுக்கும் இப்பித்துப் பிடித்த பிரச்சனை இராது. இன்றுங்கூட, இந்தியாவில் சுருட்டுப் பிடிக்கும் பெண்களும் உண்டு. 

நம்ம பாட்டிமார்கள் எல்லாம் அடுப்படிப் புகையில், ஊதி ஊதி ஆண்டாண்டு காலமாக சமைத்தவர்கள்தானே?! இவர்கள் எல்லாம் இளம் வயதில் இறந்து விட வில்லையே... இன்னுங்கூட ஆரோக்கியமாக இருப்பவர்களும் இருக்கிறார்களே... 

பித்துப் பிடித்தவர்களை, பூசாரியிடம் கொண்டு சென்றால், அவர்கள் தங்களை ஆற்றல் மிக்கவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ள செய்ய வேண்டிய பஜனைகளை எல்லாம் செய்துவிட்டு, இறுதியாக சுருட்டை நன்றாக இழுத்து, அவர்களின் முகத்தில் இரண்டு மூன்றுமுறை ஊதுவார்கள். 

இப்படி இரண்டு மூன்றுமுறை செய்தாலே, அவர்கள் சரியாக விடுவதையும் பார்க்கிறோம். அப்படியானால், சுருட்டுப் புகையால் நடப்பது நன்மைதானே?!

இதனை தவிர்த்து, ஒரு பெண்ணை நேரடியாக சுருட்டுபிடி சரியாகி விடும் என்றால் என்ன ஆகும்? பூசாரியின் மதிப்பும், பிழைப்பும், இதிலுள்ள ரகசியங்களும் போய்விடும்.  

உடனே, சுருட்டுப் பிடிக்க ஆரம்பித்து விடாதீர்கள். ஏனெனில், இப்பொழுது கிடைக்கும் சுருட்டுகள், முன்பிருந்ததைப் போல கேடு விளைவிக்காததா என்பது எனக்கு தெரியாது. இதை ஆராய்வதும் எளிதல்ல. எச்சரிக்கை!    

மொத்தத்தில், எப்போது நம் நாகரீகம், ‘அநாகரீகம்’ என்றும், மேற்கத்திய கலாச்சாரமே ‘நாகரீகம்’ என்றுங்கருதி, அவற்றை நாம் பின்பற்ற ஆரம்பித்தோமோ அதுதான், அவர்களைப் போலவே நம் சிந்தனையையும் இந்தளவிற்கு மழுங்கடித்து இருக்கிறது.

அவன் கூட, நம்முடைய முந்தைய வாழ்க்கை முறைதான் ஆரோக்கியமான நாகரீகமென்று பின்பற்ற ஆரம்பித்து விட்டான். 

ஆனால், நாம்தான் அவனுடைய அநாகரீகத்தைப் (பி, பீ)டித்துக் கொண்டிருக்கிறோம். அவ்வளவே! 

இதுபற்றி சத்தியவான் காந்தி 1909 இல் எழுதிய ‘‘இந்தியத் தன்னாட்சி’’ நூலிலேயே எச்சரித்துள்ளார். ஆனால், நாம்தான் படிக்கவில்லை; படித்தவர்களும் பின்பற்றவில்லை. 

சரி, உடலில் கேட்ட வாயுக்கள் நுழைந்திருப்பதை கண்டுபிடிப்பது எப்படி, அதனை சுருட்டுப் பிடிக்காமல் விரட்டுவது எப்படி என்பதை, இயன்றால் அடுத்தப் பதில் சொல்கிறேன்.     

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)