சட்டத்தொழில் செய்யும் பொய்யர்களால் குடும்பங்கள் பல அழிந்து போயிருக்கின்றன என்பது சத்தியவான் காந்தியின் பொதுவான கருத்து.
இப்பொய்யர்கள், வாதாடும் சட்ட உரிமையே இல்லாமல் குடும்ப நல நீதிமன்றங்களில் நுழைந்து கணவன் மனைவிக்குள் பிரிவினையை ஏற்படுத்துக்கிறார்கள் என்றால், இதற்கு கூட்டுக்களவாணிகளான நிதிபதிகள் ஒத்துழைக்கிறார்கள்.
இது, இன்று 26-10-2016 அன்று, நீதியைத்தேடி... வாசகர் ஒருவரிடம் இருந்து வந்த மின்னஞ்சலும், அவ்வாசகருக்கான எனது பதிலுமாகும்.
வணக்கம் அய்யா ,
உங்கள் புத்தகத்தை படித்து எனக்கு நானே நீதிமன்றத்தில் வாதாடி வருகிறேன்.மிகவும் உறுதுணையாக இருக்கிறது. மிக்க நன்றி. உங்களிடம் இருந்து இப்போது ஒரு சிறு உதவி தேவைப்படுகிறது. முடிந்தால் உதவவும்.
நான் என் குழந்தையின் கஸ்டடி கேட்டு GWOP வழக்கு போட்டேன், அதனுடன் இடைக்கால மனுவாக VISITATION IA வையும் சேர்த்து போட்டேன்.
ஆனால் என் மனைவி இடைக்கால மனுவிற்கு பதிலுரை போடுவதற்கு பதிலாக MAIN பெட்டிசனுக்கு எதிர் உரை தாக்கல் செய்துள்ளார்.
"வணக்கமாய் தாக்கல் செய்யும் எதிருறை" என்றே பெயரிடப்பட்டுள்ளது. இது நடந்து 3 மாதங்கள் முடிந்து விட்டது.
இப்பொழுது நான் இரண்டு இடைமனுக்கள் தாக்கல் செய்து நிவாரணம் பெற்றுவிட்டேன். ஒன்று குழந்தையை ஒவ்வொரு வாரமும் பார்க்க, இன்னொன்று தீபாவளிக்கு குழந்தையை பார்க்கும் மனுக்கள்.
வாராவாரம் பார்க்க கேட்ட மனுவில், மாதம் ஒருமுறை மட்டுமே நீதிபதி அனுமதித்தார்.
ஆகையால் குழந்தையை பார்க்கும் எண்ணிக்கையை அதிகப்படு த்தக்கோரி இன்னொரு இடைமனு வரும் வாரம் தாக்கல் செய்யப்போகிறேன்.
எனக்கு கீழ்கண்ட சந்தேகங்கள் உள்ளன. உங்கள் உதவி இருந்தால் சரியாக இருக்கும் என்று நினைத்தே இந்த மின்னஞ்சலை எழுதுகிறேன்:
1. என் மனைவியின் பொய்யர் பதிலுரைக்கு பதில் எதிர்துறை என்றே எழுதியுள்ளார். எனவே நான் இப்பொழுது எதிர்துறை தாக்கல் செய்தால் இதை சுட்டிக்காட்டலாமா?
2. இடைக்கால மனு உள்ளபொழுது, மெயின் பெட்டிசனுக்கு பதிலுரை அப்பொய்யர் தாக்கல் செய்யலாமா?
3. என் இரண்டு இடைக்கால மனுக்களில் தீர்ப்பு வாங்குவதற்கேய எனக்கு மூன்றரை மாதங்கள் ஆகிவிட்டது. எனவே அவர்களின் பதிலுறையை பெற்று மூன்று மாதங்கள் கழித்து இப்பொழுது நான் எதிர்துறை தாக்கல் செய்யலாமா?
பதில்: நல்லது.
நீங்கள் கேட்டுள்ள கேள்விகளின் மூலம், ‘‘நீதியைத்தேடி... நூல்களில் ஆரம்பித்து மநு வரையுங்கலை!’’ வரை ஓரளவுக்கு மேலோட்டமாக படித்திருக்கிறீர்கள் என்பது புரிகிறது.
இரத்திர சுருக்கமாக எழுதியுள்ள இம்மின்னஞ்சல் மூலம் தங்களின் திறனை வெளிப்படுத்தி உள்ளீர்கள்.
ஆனால், இந்நூல்களில் சொல்லப்பட்டுள்ளவை எல்லாம் செயல்படுத்தத்தானே தவிர, செயல்படுத்தலாமா என கேள்வி கேட்பதற்காக அல்ல என்பதை புரிந்து கொள்ளவில்லையே, ஏன்?
பொய்யர்களுக்கு சட்டந்தெரியாது. ஆகையால், சட்டப் பிரிவுகளை குறிப்பிட மாட்டார்கள் என்பதை, நூல்களில் பல இடங்களில் சொல்லியுள்ளேன். ஆகையால், சட்டப்பிரிவு குறிப்பிடாத மனுவை ஆட்சேபிக்காமல் வாங்கியது உங்களது தவறு.
மேலும், குடும்பநல நீதிமன்றங்களில் வாதாட, பொய்யர்களுக்கு சட்டப்படி அனுமதி இல்லை என்றும் சொல்லியுள்ளேன். எனவே, உங்களது மனைவியின் பொய்யரை வழக்கில் இருந்து நீக்க மனு கொடுக்காததும் உங்களுடைய தவறே!
உரிமையியல் வழக்குக்களில் ‘மனுவின் மீது பதிலுரையும், பதிலுரை மீது, எதிருரையும்’ கட்டாயமாக தாக்கல் செய்ய வேண்டுமென்பதை ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் தெளிவாக சொல்லியுள்ளேன்.
எனவே, இதில் கேள்வி எழ வேண்டிய அவசியமே இல்லை.
பொதுவாக இடைமனு நிலுவையில் இருக்கும்போது, அசல் மனுவின் மீது, அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது. பதிலுரை தாக்கல் செய்துள்ளதால், வழக்கு விரைவாக முடியும்.
இதனால், உங்களுக்கென்ன பாதிப்பு?
பாதிப்பு இருந்தால் அதையோ அல்லது தாமதத்திற்கான காரணத்துடன் பதிலுரையின் மீது எதிருரையை தாக்கல் செய்யவும். அவ்வளவே!
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment