வக்கீல் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! என்பது, எனது பத்து வருட சட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் முன்மொழிந்த தத்துவம்.
2008 ஆம் ஆண்டில் எழுதிய, ‘‘நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம்’’ நூலில், சட்டத் தொழில் செய்யும் பொய்யர்கள், சட்ட விதிப்படி மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்து எழுதியுள்ளேன்.
இதேபோல, 2009 ஆம் ஆண்டில் எழுதிய, ‘‘நீதியைத்தேடி... சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்’’ நூலில், இப்பொய்யர்களின் சட்டத்துக்குப் புறம்பான மிரட்டல்களை எப்படியெல்லாம் சந்திக்கலாம், அவர்கள் அநியாயமாக பிடுங்கித்தின்ற பணத்தை, எப்படி மீண்டும் பெறலாம் என்பது பற்றியும் எழுதியுள்ளேன்.
பொய்யர்களின் இதுபோன்ற தான்தாண்றித்தனமான பணம் பிடுங்குஞ் செயலுக்கு, இந்த வெத்துவெட்டுப் பொய்யர்களுக்குப் பயந்து வருமான வரித்துறையினர் அவர்களது வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்துவதில்லை என்றுஞ் சொல்லி இருந்தேன்.
இந்த உண்மை சுமார் ஏழாண்டுகளுக்குப் பின், தற்போது முதல் முறையாக பலித்திருக்கிறது. ஆமாம், எனக்குத் தெரிய வருமான வரித்துறையினர், ஒரு பொய்யரை சோதனை செய்ததும், கோடிக்கணக்கில் பணத்தை கைப்பற்றியதும் இதுவே முதல் முறை!
இப்பொய்யரிடம் முறைப்படி விசாரணை நடத்தினால், யார்யார் பணம் கொடுத்தது, எந்தெந்த சட்ட விரோதமான காரியங்களுக்காகக் கொடுக்கப்பட்டது, இதன் பின்னனியில் உள்ள மற்றவர்கள் யார்யார் என்பதையெல்லாம் வெளிக் கொண்டுவர முடியும். ஆனால், பாருங்க...
தங்களிடம் சிக்கிய பொய்யரின் பெயரைக்கூட, வருமான வரித்துறை வெளியிடவில்லை என்பதன் மூலம், தங்களின் பங்கு கிடைத்ததும் விட்டு விடுவார்களோ என்றே நம்ப வேண்டியுள்ளது.
மேலும், இலாபத்தையே பிரதாண நோக்கமாக கொண்ட ஊடகங்கள், இதுபோன்ற கொள்ளையர்களை, கொள்ளையர்கள் என்று குறிப்பிடாமல், வழக்கறிஞர் என்று குறிப்பிடுவதுதான் ஜனநாயகத்தையும், ஜனநாயக ரீதியில் கொள்ளையர்களை காக்கும் முயற்சியும் ஆகும்.
ஒரு பொய்யரால், தன் வாழ்நாளில் சுமார் 125 கோடியை கொள்ளை யடிக்க முடிந்திருக்கிறது என்றால், இப்பொய்யர் என்னென்ன அநீதிகளைச் செய்திருப்பார் என்று நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பொய்யரையும் இப்படி சோதனை செய்தால், பல லட்சங்கோடியை பறிமுதல் செய்து, அவர்களை குற்றத்தண்டனைக்கு உள்ளாக்கி அவர்களது பொய்த்தொழிலையும் ஒழித்துக்கட்ட முடியும்.
மேலும், இச்சோதனையில் சிக்கும் பல்வேறு முக்கிய ஆவணங்களைக் கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு எளிதில் நிவாரண நீதியைத்தர முடியும். இனியாவது, வருமான வரித்துறையினர் செய்வார்களா என்பதே எஞ்சி நிற்கும் கேள்வி?
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment