உரிமையியல் வழக்குக்களுக்கு மட்டுந்தான் சான்றாவணங்களின் பட்டியல் வரும் என்றே பலரும் நினைக்கிறார்கள். இது தவறு. குற்றவியல் வழக்கிற்கும் சான்றாவணங்களின் பட்டியலை தாக்கல் செய்ய முடியும்.
இதனை ஆவணங்களைப் பட்டியல் போட்டுக் கொடுங்கள் என்று தெளிவாகச் சொல்லாமல், ஆங்கிலேயர்களுக்கு பிறந்த நிதிபதிகள், இன்டெக்ஸ் போட்டுக் கொடுங்கள் என ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.
குற்றவியல் வழக்குக்களில் சூழ்நிலையைப் பொறுத்து, ஆவணச் சாட்சியத்தின் அடிப்படையில், ஒரு சங்கதியை மெய்ப்பிக்க நினைக்கும்போது, அதுகுறித்த ஆவணப்பட்டியலை, புகார் மனுவோடோ அல்லது பரிசீலனை மனுவோடோ அல்லது ஆட்சேபனை உரையோடோ நாமே தாக்கல் செய்துவிட வேண்டும்.
இப்படி நாம் தாக்கல் செய்வது மட்டுமல்ல; நமது எதிர்த்தரப்பினரின் ஆவணங்களையும் இப்படி கேட்டு வாங்கிவிட வேண்டும். இதுகுறித்து, மிகவும் விரிவாக ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் சொல்லியுள்ளேன்.
பொதுவாக பொய்யர்கள், சட்ட விதிகள் எதுவும் குறிப்பிடப்பட்டாத அச்சடிக்கப்பட்ட மொட்டைப் படிவத்தில்தான், ஆவணப்பட்டியலை எந்த வழக்காக இருந்தாலும் தாக்கல் செய்வார்கள்.
குற்ற விசாரணை முறை விதி 294 இல் குறிப்பிடப்பட்டுள்ள, அரசு விதித்துள்ளப் படிவம் என்பது, பொய்யர்கள் பயன்படுத்தும் அச்சடிக்கப்பட்ட படிவங்கள் அன்று. அவை, சோம்பேறி பொய்யர்களால் தங்களுக்கும், தங்களைப் போலவே சோம்பேறித்தனமும், கூடவே அறிவுவறுமையும் உள்ள பொய்யர்களுக்காக அச்சடிக்கப்படுபவை.
பொய்யர்களுக்கு மட்டுமன்று; காவலூழியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசூழியர்களுக்காகவும் பொதுவாக அச்சடிக்கப்பட்ட படிவங்களில், தேவையற்ற அல்லது பொருந்தாதப் பகுதிகள் சில இருக்கின்றன என்பதை ஓரளவிற்கு அறிந்திருப்பீர்கள்.
ஆகையால், தன் வழக்கில் தானே வாதாடும் தனித்துவம் பெற்ற நாம், பொய்யர்கள் மற்றும் அரசூழியர்களின் சட்ட விதிகளுக்கு மாறான செயல்கள் எதையும் பின்பற்றாமல், நம் சுய முயற்சியில் எதையும் உருவாக்க வேண்டும். இப்படி உருவாக்க, உருவாக்கத்தான் உங்களின் அறிவுத்திறன் மேம்படும்.
இதனைச் செய்யாமல், உங்க அளவிற்கு எனக்கு சட்ட அறிவு இல்லையென்று சொல்லிக் கொண்டு இருந்தால், பொய்யர்கள் மற்றும் நிதிபதிகளைப்போல இருப்பதுங்கூட இல்லாமலேயே போய்விடும். எச்சரிக்கை!
இப்படி உருவாக்குவதை சட்ட விதிகள் அனுமதிக்கிறதா என்ற, இயல்பான கேள்வி உங்களுக்கு எழலாம். நான் முன்மொழிந்துள்ள ‘‘நியாயந்தான் சட்டம்’’ என்பதற்கு ஏற்ப, நம் நியாயமான எண்ணங்களுக்கு ஆதரவாகத்தான் சட்ட விதிகள் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அப்படி இல்லாத சட்ட விதிகளும் செல்லாதது என்பதால், அதைப்பற்றி கவலைப்ப வேண்டியதில்லை.
ஆனால், பொய்யர்களுக்குப் புரோக்கர்களாக இருக்கும் தறுதலை வாசகர்கள் பொய்யர்களைப் போலவும், அவர்களுக்கு மேலாகவும்கூட முட்டாள்களாக செயல்படுகிறார்கள் என்பதை நான் நன்கறிவேன்.
சென்னை பாலாஜி பதிப்பகம் வெளியிட்டுள் குற்ற விசாரணை முறை விதிகளின் இறுதியில் இரண்டாம் அத்தியாயத்தில் உள்ளதுதான், அரசு விதித்துள்ள உண்மையான படிவம்.
ஆனால், எல்லா விதிகளுக்குமான படிவங்கள் தரப்படவில்லை. குறிப்பாக குற்ற விசாரணை முறை விதி 294 க்கு தரப்படவில்லை.
நான் எற்கெனவே சொன்னபடி, ‘‘நியாயந்தான் சட்டம்’’ என்பதற்கு ஏற்ப, இப்படிவங்கள் நம் தேவையை பூர்த்தி செய்யாது என்பதை உணர்ந்த காரணத்தால், குற்ற விசாரணை முறை விதி 476 இல், மேற்சொன்ன படிவங்களை தேவைக்கேற்ப மாறுதலுடன் பயன்படுத்திக் கொள்ள உரிமை உண்டு என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஆகையால், உங்களது சிந்தனைக்கு தக்கபடி, ஆவணங்களின் பட்டியலுக்கு இப்படியொரு படிவத்தை நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம் அல்லது இதுவே போதுமானது என நினைத்தால், இப்படியே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மிக முக்கியமாக பட்டியலில், ஓர் ஆவணம் எந்த தேதியை கொண்டது, யார் யாருக்கு எழுதியது, அதன் கருப் பொருளென்ன, எத்தனைப் பக்கங்களை கொண்டது என்பதுபற்றி தெளிவாக குறிப்பிடத் தேவையான தெளிவைப் பெறுங்கள்.
இந்தப் பட்டியலின் தொடக்கத்திற்கு முன்னால், மற்ற மனு, பதிலுரை, எதிருரை உள்ளிட்டவற்றில், தலைப்பில் வருவதுபோலவே நீதிமன்றம், ஊர், வழக்கு எண், வழக்காளிகளின் பெயர்கள் ஆகியன இருக்க வேண்டும்.
வழக்கம்போலவே, இதன் நகலை உயர்மட்ட நிதிபதிகளுக்கு அனுப்புவதாகவும், கீழே குறிப்பிடலாம்.
சமூகம் சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற வேண்டுமென விரும்பினால், இதுகுறித்த தங்களின் கருத்தைச் சொல்லி, உங்களது சமூக வலைத்தளங்களில் பகிருங்கள்
**********************
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment