நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Tuesday, October 18, 2016

முகநூல் கணக்கை முடக்கி, கொள்கையை முடக்க முடியாது


நீண்ட நாள்களுக்குப் பிறகு, ஏதோவொரு பக்கி எனது முகநூல் கணக்கில் உள்நுழைய முயற்சித்து தோல்வியைக் கண்டிருக்கிறது. 

நான் முன்புபோல முகநூலில் நேரடியாக எதையும் பதிவிடுவ தில்லை. மாறாக, நீதியைத்தேடி... இணையப்பக்கத்தில் பதிவிட்டு, அதிலிருந்தே முகநூலில் பகிர்கிறோம். 

எனது கருத்துக்களை வரவேற்று, மற்றவர்களுக்கு பகிர நினைக்கும் எவரும் இப்படியே, அவரவர்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிரலாம். இதுவே சிறப்பானதும், முடக்க முடியாததும், பாதுகாப் பானதும் ஆகும்.

https://www.blogger.com/ என்பதை, இணையத்தளம் போலவே பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு கட்டணங்கள் எதுவும் கிடையாது. இதனை உருவாக்குவது குறித்து பல்வேறு காணொளிகள் இணையத்தில் இருக்கின்றன. இதன் உதவியோடு உருவாக்கிக் கொள்ளலாம்.   

எனது முகநூல் கணக்கை முடக்கினால், எனது கருத்துக்கள் வெளி வராமல் முடக்கி விடலாம் என நினைப்பது முட்டாள்தனம். 

ஆர்குட்போல, சமூக வலைத்தளமான இம்முகநூலுங்கூட ஒருநாள் இல்லாமல் போகலாம். 

ஆனால், இயற்கையின் சக்தியோடும், துணையோடும் நான் எழுத நினைக்கும் நூல்களை, ஒருபோதும் பொய்யர்களால் (மனிதர்களால்) தடுக்கவோ, எனது கருத்துக்களை இல்லாமல் செய்யவோ இயலாது.

நான் தடைக் கற்களுக்குப் பயந்து பின்வாங்குபவன் அல்ல; மாறாக, அத்தடைக் கற்களையே படிக்கற்களாக மாற்றி ஏறி மிதித்து செல்பவன். ஆகையால், என்னை தடுக்க நினைக்கும் ஒவ்வொரு செயலும் என்னை வலுப்படுத்தவும், உற்சாகம் கொள்ளவுமே செய்யும்.

ஆகையால், உங்களது தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல், திருட்டுத்தனங்களை தொடருமாரும் கேட்டுக் கொண்டு, வெற்றி பெற வாழ்த்துகிறேன். 

சரி நம்ம விசயத்துக்கு வருவோம். 

முகநூல் கணக்கை பாதுகாக்க பல அறிவார்ந்த யோசனைகள்!

உங்களது முகநூல் கணக்கை உங்களது சொந்த உலாப்பேசி, கணினி, மடிக்கணினி தவிர வேறொருவருடைய சாதனங்களில் திறக்காதீர்கள். 

இதிலும், கூடுமானவரை ஒரே உலாவியில் (internet explorer, mozilla firefox, Chrome) திறக்க முயற்சியுங்கள். வெவ்வேறு ஊர்களில் இருந்து திறக்கும்போது, அது நீங்கள்தானா என்பதை உறுதி செய்யச் சொல்லும்போது சரியாக சொல்ல வேண்டும்.   

மற்றவர்கள் முன்னிலையில், முகநூல் உள்ளிட்ட எந்தவொரு கணக்கையும் திறப்பதையும், உலவுவதையும் கட்டாயம் தவிர்க்கவும். 

வழக்கமாக பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரிகள், பலருக்கும் தெரியும் என்பதால், யூகத்தின் அடிப்படையில் அந்த மின்னஞ்சல் முகவரியை கொடுத்து முகநூலின் உள்ளே நுழைய முயற்சித்து முடக்கப் பார்ப்பார்கள். 

ஆகையால், முகநூல் போன்ற முக்கிய சமூக வலைத்தளப் பக்கங்களுக்கு அல்லது இதர தேவைகளுக்கு என தனித்தனியாக, அது சார்ந்த பெயரிலேயே உருவாக்கிக் கொள்வதும், அதுகுறித்து இரகசியம் காப்பதும், நம்மை எவ்விதத்திலும் அசைத்துப் பார்க்க முடியாதது ஆகிவிடும். 

மேலும், ஜிமெயிலில் உள்ளே நுழைவதற்கு முன்பாக, நமது உலாப்பேசி எண்ணுக்கு கடவுச்சொல் வரும்படி அமைத்துக் கொள்ளவும், உங்களது சொந்தக் கணினியில் திறக்கும்போது இக்கடவுச் சொல்லை தவிர்க்கவும் வசதி உள்ளது. இதைப் பயன்படுத்தி மேன்மேலும் வலுப்படுத்திக் கொள்ளலாம். 

இப்படி ஒவ்வொன்றுக்காக உருவாக்கப்படும் மின்னஞ்சல் முகவரிகளை எல்லாம் தனித்தனியாக பிரித்துப் பார்ப்பது மிகுந்த சிரமம் ஆயிற்றே என்ற கவலையும் வேண்டாம்.

நமது எண்ணுக்கு வரும் உலாப்பேசி அழைப்புக்களை, வேறு எண்ணுக்கு மாற்றி விடுவதுபோல, நமது சில மின்னஞ்சல்களை ஒரே மின்னஞ்சலுக்கு வரும்படி அமைத்துக் கொள்ளும் வசதியும், எந்த மின்னஞ்சல் வழியாக தகவல் வந்ததோ, அதே மின்னஞ்சலில் இருந்தோ அல்லது வேறு மின்னஞ்சலில் இருந்தோ பதில் அனுப்பும் வசதியும் உள்ளது.

இதையெல்லாம் அறிந்து, சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்காததால்தான், தெரிந்தவர்கள் முடக்க முயற்சிக் கிறார்கள். அவ்வளவே! 

சமூகத்திற்கான விழிப்பறிவுணர்வு பதிவுகளை ஈடுபவர்கள், அதனை நேரடியாக முகநூல் பதிவிடாமல், இணையப்பக்கத்தில் பதிவிட்டு அதன் வழியாக சமூக வலைத்தளங்களில் பதிவிடவும். 

இலவசமான இணையப்பக்கத்தை பிளாக்கரில் வலைப்பூவாகப் பெறலாம். குறைந்த கட்டணத்தை செலுத்தி இணைய முகவரியை பதிவு செய்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. 

இப்படி சில ஆண்டுகளாக நான் பதிவிட்ட சுமார் 180 பதிவுகள், தற்போது வரை இத்தளத்தில் இருக்கின்றன. இப்பதிவுகள் குறித்து பின்னூட்டமிடு பவர்களுங்கூட, முகநூலில் பின்னூட்டமிடாமல் இணையப்பக்கத்தில் பதிவிடுவது நல்லது.

எனது முகநூலில் இட்டப்பதிவுகளை முடக்குவதற்கான முயற்சிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டத்தில், ஒருமுறை முடக்கப்பட்டும் விட்டது. இதற்குப் பிறகுதான், இவற்றையெல்லாம் ஆராய்ந்து, வழக்கம் போலவே உங்களுக்கும் இந்த வழிமுறைகளை முன்மொழிந்து உள்ளேன். 

இப்படி செய்வதன் மூலம் தங்களது கருத்துக்களை எக்காலத்திலும் யாரும் முடக்க முடியாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.       

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

நூல்களின் முகப்பு

நியாயந்தான் சட்டம்

Translate

Follow by Email

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு உலாப்பேசி எண்கள் 09842909190 மற்றும் 09842399880 ஆகும்.

இப்படி, நன்கொடை செலுத்தி வாங்கிய நூல்களால் பயனில்லை என்று கருதும் பட்சத்தில், அப்படியே திருப்பி அனுப்பிவிட்டு, கொரியர் செலவுபோக மீதிப் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

எல்லாப் பதிகளும்!

பயின்றோர் (20-08-16)