பொதுவாக குற்றவியல் வழக்குக்களில் இருக்கும் பயம், உரிமையியல் வழக்குகளுக்கு இருப்பதில்லை. ஆனால், குற்றவியலைப் போன்றே உரிமையியல் வழக்குக்களிலும் அச்சப்பட வேண்டும்.
ஏனெனில், நம்மீது குற்றவியல் வழக்கு நடப்பது நமக்கு நன்றாக தெரியும். ஆகையால், நம்மால் இயன்ற அளவிற்கு தற்காத்துக் கொள்ள முடியும். ஆனால், உரிமையியல் வழக்குக்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமலேயே நடத்தி, அவர்களின் சொத்துக்களை அபகரிக்க முடியும்.
இதுபற்றி 2009 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட ‘‘நீதியைத்தேடி... சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்’’ நூலில் தேவையான அளவிற்கு சொல்லி உள்ளேன். இந்நூலைப் பிழைத்திருத்தம் செய்து தந்த அன்பர், இந்த விசயத்தைப்பற்றி தன் அதிர்ச்சியை தெரிவித்தார்.
பொய்யர்கள் மற்றும் நிதிபதிகளின் இதுபோன்ற கூட்டுக்களவாணி தனத்திற்கு, நாளிதழ்கள் மிகுந்த ஒத்துழைப்பை வழங்குகின்றன என்பதைப்பற்றியும், அதனை தடுக்க முயன்ற எனது பல்வேறு யுக்திகள் குறித்தும் ‘‘சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்’’ நூலிலேயே எழுதியுள்ளேன்.
மோட்டார் வாகன விபத்து வழக்குக்கள் என்றால், போக்குவரத்து காவலூழியர்களும் கூட்டுக்களவாணிகளாகவே இருப்பார்கள்.
நாளிதழ்களில் இப்படி வரும் விளம்பரங்களை வைத்து, அதிலுள்ள முகவரிக்கு நாளிதழில் வெளியான அவ்வழக்கு அறிவிப்பு குறித்து, அஞ்சலட்டை ஒன்றை அதற்கான பிரத்தியேக வைத்திருக்கும் நோட்டுக்கு அடியில் கார்பன் வைத்து எழுதிப் போடுவேன். நாளிதழ் விளம்பரத்தையும் அந்நோட்டிலேயே ஒட்டி வைப்பேன்.
அவ்வஞ்சல் அட்டை சிலருக்கு போய்ச்சேரும். அவர்களில் சிலர் நன்றி சொல்லுவார்கள். அறிவுவறுமை வாதிகள் சிலர், நான் ஏதோ, பிராடு பண்ணி கடிதம் அனுப்பியதுபோல, ‘‘எனக்கு தெரியாமல் என்மீது எப்படி வழக்கு இருக்கும் என எகிறுவார்கள்’’. இப்படி காவலூழியர் ஒருவரே எகிறினார்.
பத்திரிகையில் வந்த செய்தியை காட்டி, ‘‘உன் வீரத்தை நீதிமன்றத்தில் போய்காட்டு; உன்மீது இவ்வழக்கு இல்லை யென்றால், அஞ்சலட்டையை ஆதாரமாக வைத்து என்மீது வழக்குபோடு’’ என்று பதிலுக்கு நானும் எகிறி விட்டேன்.
வேறு வழியில்லாமல் நீதிமன்றத்துக்கு சென்று விசாரிக்க வழக்கு இருக்கவே, என்னிடம் மன்னிப்பு கேட்டார். ஏனெனில், வழக்குக்கள் இல்லாமல், இதுபோன்ற அறிவிப்புகள் வராது. ஆனால், இப்படி வரும் வழக்குக்களில் பெரும்பா(ழா, லா)னவை பொய்யான வழக்குக்க ளாகத்தான் இருக்கும்.
ஆகையால், சிலருக்கு போய்சேராமல் எனக்கே திரும்ப வரும். அதற்கான காரணமும் அஞ்சல் பட்டுவாடா ஊழியர்களால் எழுதப்பட்டிருக்கும்.
இப்படி குறிப்பெழுதி வந்தால், அதனையே இந்திய அரசின் (இந்திய அஞ்சல் சான்று) தக்க ஆதாரச் சான்றாக வைத்து, உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908 இன் கட்டளை 1 விதி 8அ இன் கீழ், இடைமனு ஒன்றை அஞ்சல் வழியாக அனுப்பி வைத்து, அவ்வழக்கை மேற்க்கொண்டு விசாரணை செய்ய முடியாத அளவிற்கு விசாரணைக்கு தடை போட்டு விடுவேன். இதுபற்றி நீதியைத்தேடி... நூல்களில் சொல்லி உள்ளேன்.
மேலே உள்ள விளம்பரத்தை வைத்து, இந்த வழக்கு பொய்யாகப் புனையப்பட்டுள்ளது என்பதை எடுத்த எடுப்பிலேயே எளிதில் அறியலாம்.
எனெனில், உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908 இன் கட்டளை 5 விதி 20(1)(1) இன்படி, ‘‘யாருக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதோ, அவர் வசிக்கும் அல்லது தொழில் செய்யும் பகுதியில், அவ்வட்டார மொழியில் வெளியிட வேண்டும்".
இதன்படி பார்த்தால், இந்த விளம்பரத்தை அந்தமான நிக்கோபார் தீவில்தான் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், இவ்விளம்பரம் இன்று 17-10-2016 அன்று, சென்னை தினமலர் பக்கம் 12 இல் வெளியாகி உள்ளது.
இதில் கொடுமை என்னவென்றால், கூட்டுக்களவாணி நிதிபதியே தமிழ் நாளிதழில் செய்தி வெளியிட வேண்டும் என்று சொல்லிருப்ப தற்கான இணையப்பக்க ஆதாரமிது!
இது வெளியான பின்பும், மீண்டும் பத்திரிகையில் வெளியிட வேண்டுமென நிதிபதி சொல்லியுள்ளார். ஆனால், தமிழ் நாளிதழில் என்பதை சொல்லாமல், நிதிபதி தப்பித்து விடுகிறார். ஆனால், பொய்யரோ தமிழ் நாளிதழில் வெளியிட்டுள்ளார்.
இதனை வழக்கில் பொய்யர் ஆதாரமாக அவிடாவிட்டுடன் தாக்கல் செய்ய, நிதிபதி என்ன நஷ்டஈடு உத்தரவைப் பிறப்பிக்க வேண்டுமோ அப்படியே பிறப்பித்து முன்பாகவே பங்கிட்டுக் கொண்ட பணத்தை ஈடு செய்வார்கள். அவ்வளவே!
மோட்டார் வாகன விபத்தில், ஓர் இனக்கலவர வழக்குக்களை விசாரிக்கும் நிதிபதியே, இப்படி கொள்ளையடிக்கிறார் என்றால், உண்மையான இனக்கலவர வழக்குக்களில் குற்றவாளிகளை விடுவிக்க எப்படியெல்லாம் கொள்ளையடிப்பார்கள் என்பதை யோசித்துக் கொள்ளுங்கள்.
பொய்யர்கள் மற்றும் நிதிபதிகளின் குற்றங்களை மக்கள் போதிய சட்ட விழிப்பறிவுணர்வுடன் தடுத்து, பொய்யர்களை ஒழித்துக் கட்டாதவரை நாம் எந்தவொரு முன்னேற்றத்தையும் காணமுடியாது. காண முடியுமென நம்புவதும், கானல் நீரைக் காண முயற்சித்தது போல்தான்!
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment