No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Saturday, October 15, 2016

வளர்த்து விட்டதற்கு, வளர்ப்புத் தாய்க்கும் தண்டனை!


ராமர் பிள்ளையை அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாது. அந்த அளவிற்கு மூலிகைப் பெட்ரோல் என்றப் பெயரில் மோசடிகளைச் செய்து, உலகே தன்னை திரும்பிப்பார்க்க வேண்டுமென திட்டமிட்டு ஏமாற்றியவர்.

சர்காரிய கமிஷன் விஞ்ஞானத் திருடர் என்று பட்டம் சூட்டிய கருணாநிதி, அன்றைய பரிந்துரை முதலமைச்சராக இருந்தபோது, அவரையே ஏமாற்றி வித்தை காண்பித்தவர், ராமர் பிள்ளை.

ஆமாம், தனது கண்டுபிடிப்பான மூலிகை பெட்ரோலில் வண்டியை இயக்கி காண்பிப்பதாக கூறி, அவரை இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து, சட்ட சபையை சுற்றி வந்தவர்.

இந்த விவகாரம் தொடர்பாக நான் அன்று அறிந்த செய்திகள் இன்றும் பசுமையாய் நினைவில் இருக்கிறது. காரணம், நான் சட்ட ஆராய்ச்சியில் களமிறங்க ஆயத்தமான நேரம்.

மூலிகைப் பெட்ரோலில் எப்படி மோசடி செய்தார் என்பதை, இதுபோன்ற நாளிதழ் செய்திகளில் கட்டாயம் சொல்ல வேண்டும். அப்போதுதான், பல்லாண்டுகளுக்கு முன் நடந்தது என்பதை (அ, இ)ந்தத் தலைமுறையினரும் அறிந்துக் கொள்ள முடியும்.

ஆனால், பத்திரிகையை தொழிலாக நடத்துபவர்களுக்கு, இதெல்லாம் நினைவில் இருக்க வாய்ப்பே இல்லை. பின் எப்படி சொல்ல முடியும்?  

அதாவது, மூலிகை கலந்த நீரை கொதிக்க வைத்து, அந்த மூலிகைகளை கீரை கடைவதுபோல கடைவதற்காக வைத்திருந்த மத்திற்குள் பிரத்தியேக வேதியல் பொருட்களை வைத்திருந்தார். அந்த வேதியல் பொருட்கள் கரைய, அம்மத்தின் மேல் சல்லடைப் போன்ற பித்தலை தகடையும் பொருத்தி இருந்தார்.

மூலிகை பெட்ரோல் எப்படி சாத்தியமென எண்ணிய அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் நீரின் அளவு, மூலிகையின் அளவு ஆகிய இரண்டும் சேர்ந்து கொதித்தப் பிறகு, குறைவதற்குப் பதிலாக கூடியதால் எழுந்த சந்தேகத்தில், கடையும் மத்தை சோதித்த போதுதான், வேதியில் பொருளை (மறை, கரை)த்தும் செய்த பித்தலாட்டம் தெரிந்தது.  

இன்றும் இவருடைய இல்லாத ஆராய்ச்சிக்காக பெரும்பணத்தை நன்கொடையாக கொடுத்து ஏமாறுகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்கிறார், அவரது நெருங்கிய நண்பர் ஒருவர். 


ஆகையால், ராமர் பிள்ளை மேல்முறையீட்டில் நிதிபதிகளைச் சரிகட்டி விடுதலையானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதற்காகப் பொய்யர்கள் இவரை இந்நேரம் ஈ போல மொய்த்துக் கொண்டிருப்பார்கள்.

இதுபோன்ற திட்டமிட்ட மோசடிகளுக்கு, அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும். ஆனால், மூன்று ஆண்டுகள் என குறைந்தபட்ச தண்டனையை நிதிபதி வழங்கியுள்ளார். காரணம் ஏனோ? 

ஒருவர் செய்வது நியாயமா, அநியாயமா என்பது அவருடன் இருக்கும் நபர்களுக்கு நிச்சயம் தெரியும். ஆனால், இது இவரது வளர்ப்புத்தாய் போன்ற வயதான பெண்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

ஆகையால், காவலூழியர்கள் வளர்ப்புத்தாயை குற்ற வழக்கில் சேர்த்திருக்கவே கூடாது. அப்படியே சேர்த்திருந்தாலுங்கூட, விசாரணைக்கு முன்பாகவே ராமர்பிள்ளைக்கு சட்டந் தெரிந்திருந்தால், கழற்றி விட்டிருக்க முடியும். சட்டத்துக்கு விரோதமாக திட்டமிட்டு மோசடி செய்தவருக்கு, சட்ட விதிகளின் நன்மைகள் தெரிந்திருக்க வாய்ப்பிள்ளைதானே?!

ஆமாம், தன் சூழ்ச்சியில் சம்பந்தமே இல்லாமல் அல்லது வேண்டுமென்றே சூழ்ச்சியாக குற்ற வழக்கில் எதிரிகளாக சேர்க்கப்பட்டவர்களை பிரதான எதிரியோ அல்லது வேறு எதிரிகளோ, தான் செய்த குற்றத்தில் மற்றவர்ளுக்கு தொடர்பில்லை என குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 315 இன்படி, வாக்குமூலம் அளித்து விசாரணையில் இருந்து விடுவிக்க முடியும்.

இதுபற்றி 2006 ஆம் ஆண்டில் எழுதிய நீதியைத்தேடி... குற்ற விசாரணைகள் நூலிலேயே எழுதி உள்ளேன். இதனை வாசகர்கள் கூட சரியாகப் பயன்படுத்திக் கொண்டதாக தெரியவில்லை.

இப்படியொரு விதி இருப்பது பொய்யர்களுக்கும், நிதிபதிகளுக்கு தெரியுமா என்பது தெரியவில்லை. ஆகையால், அவர்கள் இவ்விதியை அ(வ்வ)ளவாகப் பயன்படுத்துவதில்லை.

இப்படி விடுவித்து விட்டால், ஒவ்வொரு எதிரிக்கும் தனித்தனியாக பணம் பிடுங்க முடியாமல்போய் விடுமே என்ற கெட்ட உள்நோக்கமாகவும் இருக்கலாம்.    

ஒருவர் செய்வது மோசடியான வேலை என்பது அவரைச் சார்ந்தவர்களுக்கு தெரிய வரும்போது, அம்மோசடி நபர் மீதுள்ள ஏதோவொரு விதமான மோகத்தால், அதுகுறித்து அவரை எச்சரிப்பதில்லை என்பதற்கு, என்னால் பல்வேறு சம்பவங்களைச் சொல்ல முடியும். ஆனால், இங்கு விரிவஞ்சி தவிர்க்கிறேன். தேவை வரும்போது விவரிக்கிறேன்.

இப்படியொரு மோசடி எனக்குத் தெரியவந்தால், அவர்கள் யாராக இருந்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல், அவர்களை அடியோடு புறக்கணித்து விடுவேன். 

இப்படி புறக்கணிக்கும்போது, அதற்கான நிர்ப்பந்தத்தில் இருந்தும், தண்டனையில் இருந்துங்கூட ஏதோவொரு விதத்தில் தப்பித்து விடும் சூழ்நிலை தானாகவே உருவாகி விடும். அவ்வளவே! 
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)