பொதுவாக அரசூழியர்கள் மற்றும் பொது ஊழியர்கள் என்று எல்லோராலும் கருதப் படுபவர்களும், சொல்லப்படுபவர்களும், எனது கண்ணோட்டத்தில், சட்டப்படி எதையுமே சரியாகச் செய்யத்தெரியாத, அரைகுறை (செமி ஸ்கில்டு) ஊழியர்கள்தாம்!
இன்னுங்கொஞ்சம் நாசுக்காகச் சொல்ல வேண்டுமானால், ‘முழுத்திறனில்லாத ஊழியர்கள்’ என்று வேண்டுமானால் சொல்லலாம். காசுக்காகவே மாரடிப்பவர்களுக்கு என்ன நாசுக்கு வேண்டியிருக்கு? ஆகையால், அரைகுறை ஊழியர்கள் என்றே, மிகப்பொருத்தமாகச் சொல்லுவோம்.
அரசை எதிர்த்து நமக்கிருக்கும் கேள்வி கேட்கும் உரிமைகூட, அரசூழியர்களுக்கு இல்லாததால், அவர்கள் அனைவரும் அரசின் அடிமைகளே!
ஆகையால், தேவைப்பட்டால் அடிமைகள் என்றே கூடச் சொல்லலாம், தவறில்லை. அப்பொழுதுதான், அவர்களுக்கும் கொஞ்சமாவது சூடு, சொரணை வரும்!!
ஆனால், இவர்களை, ‘அரைகுறை ஊழியர்கள், அரசூழியர்கள், பொது ஊழியர்கள்’ என, அரசே மூன்று வகையினராகப் பிரித்து, அவர்களுக்கான ஊழியத்தை வழங்கியிருந்தாலுங்கூட, இதுகுறித்த தெளிவானதொரு சட்ட விளக்கத்தை, இதுவரை அடிப்படையான ஐந்து சட்ட விதிகளில் சொல்லவில்லை என்பதோடு, வேறெந்தச் சட்டத்திலுங்கூடச் சொல்லியுள்ளதாக எனக்குத் தெரியவில்லை.
உண்மையில், அரசின் சரிபாதி நிர்வாகத்தின் கீழ் ஊழியம் புரிபவர்களை, ‘அரைகுறை ஊழியர்கள்’ என்றும்,
அரசின் முழுமையான நிர்வாகத்தின் கீழ் ஊழியம் புரிபவர்களை, ‘அரசூழியர்கள்’ என்றும்,
அரசின் முழு அதிகாரத்தைப் பெற்ற துறைகளான நீதித்துறை மட்டுமல்லாது, தேர்தல் ஆணையம், மத்திய கணக்காயர் போன்று பல்வேறு துறைகளில் ஊழியம் புரிபவர்களைப் ‘பொது ஊழியர்கள்’ என்றும்,
மூன்று வகையினராக நாம் கருத்தில் கொள்ளவேண்டும் என்பதோடு, அவர்களின் ஊழியத் தகுதியறிந்து, இம்மூன்றில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும்.
இவ்வருடம் வெளியான ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் இருந்து...
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment