சட்ட ஆராய்ச்சியின் ஆரம்ப காலத்தில், ஒருவரது பிரச்சினையை தீர்க்க, அவரது எதிர்த்தரப்பினருக்கு கடிதம் எழுதி விளக்கம் கேட்பது, அவர்களை நேரில் சந்தித்து பேசுவது என எனக்குத் தெரிந்த பல்வேறு வழிகளில் முயன்றுள்ளேன். இதுபற்றி நூல்களிலும் எழுதியுள்ளேன்.
சத்தியவான் காந்தியின் கருத்துக்கூட இதுவாகத்தான் (மக்கள் தங்களது தகராறுகளை தங்களுக்கு உள்ளேயே பேசித் தீர்த்துக்கொள்ள முன்வர வேண்டும்) இருந்தது என்பது பின்னரே தெரிந்தது.
விழுப்புரம் மாவட்டம் அணிலாடி என்ற கிராமத்தைச் சேர்ந்த தா. சுவாமிநாதன் என்பவருக்கு தலா அண்ணன், தம்பி என ஒருவர். இவரும் தம்பியும் ஒருபக்கம். அண்ணன் மட்டும் ஒரு பக்கம். இவர் திண்டிவனத்தில் வசிக்க, தம்பியும் அண்ணனும் அவ்வூரிலேயே வசித்தார்கள்.
அண்ணன் சொத்துக்களை அபகரித்துக்கொண்டு தனக்கு கொடுக்கவில்லை என்றும், அதற்கான ஆலோசனை வழங்க வேண்டுமென்றும் என்னிடம் கேட்க அவ்வூருக்கே சென்று பாதிரியார் மற்றும் பஞ்சாயத்துதாரர்களைச் சந்தித்து பேசினேன்.
ரூபாய் ஐம்பதை கட்டணமாக செலுத்தி மனு கொடுங்கள். விசாரிக்கிறோம் என்றார்கள். அப்படியே செய்தேன். பஞ்சாயத்தும் ஆரம்பமானது.
நம்ம வாசகரிடம், உங்க அண்ணனிடம் நான் மட்டுமே பேசுவேன்; நீங்க எக்காரணங் கொண்டும் வாயைத்திறக்க கூடாது. அப்படி எதையாவது பேசினால், அத்தோடு எழுந்து போய்விடுவேன் என்று நிபந்தனையோடு பேசினேன்.
அண்ணனும் வேறு வழியில்லாமல், சொத்துக்களை பிரித்துக் கொடுப்பது என்று கிட்டத்தட்ட என் வழிக்கு வந்துவிட்டார். இந்த விடயம் தெரிந்து அங்கு வந்த அவரது மனைவி, ‘‘நான் சொல்லுறத கேட்கல... தொங்கிருவேன்’’ என்று மிரட்டலோடு விடுத்த அரட்டலில், சொத்தைத்தர சம்மதித்த இவரது அண்ணன் முடியாது என்று சொல்லிவிட்டு போய்விட்டார். வேறு வழியின்றி, பஞ்சாயத்தாரும் கலைந்து சென்று விட்டனர்.
இத்தனைக்கும் இவரது மனைவி ஐம்பது வயது மதிக்கத்தக்க கிழவி என்றால், வயதுள்ள பெண்கள் எப்படி மிரட்டுவார்கள் என்பதையும் நான் நேரில் பலமுறைப் பார்த்திருக்கிறேன். இப்பத்திரிகை செய்து இந்த சம்பவத்தைதான் எனக்கு நினைவூட்டியது.
வயதானப் பெற்றோர்களை, ஆண்கள் புறக்கணிக்க, பெண்களின் இதுபோன்ற மிரட்டல்களே அடிப்படைக் காரணம் என்பதால், இதனை சட்டத்திருத்தமாகவே கொண்டு வர வேண்டும்.
மானம் மரியாதைப் பார்க்கும் ஆண்கள், மனைவிகளின் மிரட்டல்களை எல்லாம் பொறுத்துக்கொண்டு காலந்தள்ளு கிறார்கள். துணிந்தவர்கள் விவாகரத்துப் பெறுகிறார்கள்; இனியும் பெறுவார்கள். அவ்வளவே!
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment