No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Sunday, October 30, 2016

வாகன ஓட்டிகளுக்கான அடுத்த ‘அப்’ ஆப்பு!


வாகனங்கள் தொடர்பான ஆவணங்களுக்காக ‘அப்’ என்றப் பெயரில், ஆப்பு வைத்திருப்பதுபோல் தெரிகிறது. 


ஆமாம், இந்த ‘அப்’ எந்த அளவிற்கு சட்டப்படி சரியானது என்கிற விபரத்தை அறிய முடியவில்லை. 

அப்படியே இருந்தாலும், இதற்காகவே வாகன ஓட்டிகள் எல்லாம் ஆன்ட்ராய்டு ரக உலாப்பேசியை வைத்திருக்க வேண்டுமென்கிற கட்டாயம் ஏற்படுகிறது. இது எந்த சட்ட விதிப்படி சரியாகும்? 

மேலும், இதற்கு ஆதார் அட்டையும் கட்டாயமாகி விடுகிறது. ஆதார் அட்டைகளுக்கான சட்ட நடைமுறைகள், கைதிகளை அடையாளங் காணுஞ் சட்டம் 1920 மற்றும் அடிப்படை உரிமையைப் பறிக்குஞ் செயல் என்பதைப்பற்றி விரிவாக அறிய, குற்றவாளிகளாகும் குடிமக்களே என்ற இக்கட்டுரையைப் படிக்கவும்.

எது எப்படி இருப்பினும், முன்பிருந்த முறைதான் எல்லா விதத்திலும் சாலச் சிறந்தது. முன்பு இருந்தது முறை இதுதான்! 

பொதுவாக, வாகன ஓட்டிகள் தனக்கான ஓட்டுனர் உரிமம் உட்பட, வாகனத்துக்கான ஆவணங்கள் அனைத்தையும் (பை, கை)யிலேயே வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என நினைக்கிறார்கள். இது தவறு. இந்த ஆவணங்களை வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ அல்லது வேறு பாதுகாப்பான இடத்திலோ கூட வைத்திருக்கலாம்.

ஒருவேளை, வாகனச் சோதனையின் போது இந்த ஆவணங்கள் இல்லையென்றால், சம்பந்தப்பட அந்த ஆவணங்களை, குறைந்தது பதினைந்து நாள் கால அளவில் எப்போது வேண்டுமானாலும் சரி பார்ப்பதற்காக, தனது மேல்நிலை ஊழியரிடம் காண்பிக்க கோரி சட்டப்பூர்வ அறிவிப்பைதான் தர முடியுமே தவிர, உடனே அபராதம் விதிக்க முடியாது.  

இவ்வறிவிப்பின்படி, அதில் குறிப்பிட்ட அக்காலத்திற்குள் நமக்கு நேரம் இருக்கும் போது காண்பித்து விட்டால், அந்த அறிவிப்பை ரத்து செய்து கொள்வார்கள். அப்படி காண்பிக்கா விட்டால் மட்டுமே நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும். 

வழக்கு தொடுத்தாலும் கூட, வழக்கில் காண்பித்துக் கொள்ளலாம். இதனால், ஒன்றும் குடிமுழுகி போய்விடாது.

இதெல்லாம், ஏதோ என் கற்பனையென்று நினைத்து விடாதீர்கள். சந்தேகம் இருந்தால், கீழேயுள்ள போக்குவரத்து காவலூழியர்கள் வழங்கிய அறிவிப்பை இருபுறமும் நன்றாகப் படித்துப் பாருங்கள். குறிப்பாக, நான் கட்டமிட்டு காட்டியுள்ள பகுதியைப் படியுங்கள்.  

மேலும், விரிவான விவரங்களை அறிய, வாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

பொய்யர்களே இங்கு வாருங்கள்; இச்செய்தியைப் பாருங்கள்!


பொய்தொழிலை கௌரவத் தொழிலென்று பொய்ச்சொல்லித் திரியும் பொய்யர்களே, புளுகர்களே, பொறுக்கிகளே, இடைத்தரகர்களே, நியாயத்திருடர்களே, இன்னும் பலவாறான கயமையாளர்களே..., 

இங்கு வாருங்கள்; இச்செய்தியைப் பாருங்கள்!


ஒரு சாதாரண குடிமகனாக, சட்ட ஆராய்ச்சியாளராக சட்டத்தொழில் புரியும் பொய்யர்களையும், நிதிபதிகளையும் சட்டத்தோடு ஒப்பிட்டு ஆராய்ந்து, பல்வேறு தகவல்களை கொச்சையாக சொல்ல முடியுமென்கிற அதிகாரத்தில் சொல்லி இருக்கிறேன். 

ஆனால், இந்தியாவின் தலைமை நிதிபதியாக உள்ள ஒருவர், நான் சொல்லுவது போல் கொச்சையாக சொல்லிவிட முடியாது. இவ்வளவு தூரம் பச்சையாக சொல்வதே பெரிது என்பதை, இதற்குமேல் நீங்கள்தான் புரிந்துக் கொண்டு பொய்யர்களின் பொய்த்தொழிலை ஒழித்துக்கட்ட முன்வர வேண்டும். 

இச்செய்தியில் வரும் ஒவ்வொரு வாசகத்தையும், மிகவும் உன்னிப்பாக படியுங்கள். நாமே சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற வேண்டுமென்கிற உந்துதல் கொஞ்சமாவது வருகிறதா என்று உணர்ந்துப் பாருங்கள்; விரும்பினால் உணர்வை கருத்தாகப் பதிவு செய்யுங்கள்.   

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Saturday, October 29, 2016

தானே வாதாடி வழக்கில் வெற்றி பெற்ற ஆயுள் கைதி!


மத்தியச் சிறை நூலகங்களுக்கு நம் ‘‘நீதியைத்தேடி... முதல் மநு வரையுங்கலை!’’ வரையிலான நூல்களைக் கொடுத்ததால், படித்துப் பலனடைந்தோர் பலர். 

இதுபற்றி நமக்கு கடிதம் எழுதியோர் சிலர். இந்தக் கடிதங்களை எல்லாம், நீதியைத்தேடி... இணையப்பக்கத்தில் ஆவணப்படுத்த உள்ளேன்.   

ஆகையால், கூடுதல் பிரதிகளை கேட்டு சிறைத்துறையில் இருந்தும் கடிதம் அனுப்பி உள்ளார்கள். நிதிபதியே கூடுதல் பிரதி கடிதம் அனுப்பி இருக்கும்போது, சிறைத்துறையில் கைதிகளுக்காக கேட்க மாட்டார்களா என்ன? 

என்னைப் பொருத்தவவரை இதில், பெரிதாக ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. அவ்வளவே!   

முன்பெல்லாம், இப்படி கடிதம் எழுதுபவர்களை, அவர்கள் வசிக்கும் மத்தியச் சிறைச்சாலைக்கே சென்று பார்த்து, அவர்களுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும், ஆறுதலையும், ஆலோசனையையும் சொன்னதுண்டு. இந்த வகையில், நான் போகாதது கடலூர் மற்றும் மதுரை  மத்தியச் சிறைகள் மட்டுந்தான். 

மேலும், சிறைச்சாலை கைதிகளுக்கு சட்டப்பயிற்சி வகுப்பு எடுக்க வேண்டுமென்று மேற்கொண்ட முயற்சிகளும் உண்டு. ஆனால்... 

இதன்படி, யார்யார் வகுப்பெடுக்க போகிறீர்கள் என்பது குறித்து சிறைத்துறை கேட்ட பட்டியலில், தமிழ்நாடு முழுவதும் நானே எடுக்க முடியாது என்பதால், நம் வாசகர்கள் உள்ளிட்ட பலரின் பெயர்களை, அவர்களைப் பற்றி நன்கு ஆராயாமலும், தன்னார்வலர்கள் என்றப் பெயரில் திரியும் சில தறுதலைகளின் பெயரையும் அப்பட்டியலில் சேர்த்து விட்டேன். பின்புதான், இவர்களைப்பற்றி எனக்கும் தெரிய வந்தது. 

இதனால், வர்களைப்பற்றி விசாரித்த சிறைத்துறையிடம் இருந்து அனுமதி இல்லாமல் போயிற்று.  

நான் ஒருவனே எடுக்க முடியாது; அப்படியே எடுக்க நினைத்தாலும் அதற்கு என் பொருளாதாரம் ஒத்துழைக்காது என்பதால், இந்த முயற்சியை அடியோடு கை விட்டு விட்டேன். என்ன செய்வது? 

லட்சாதிபதியாக இல்லாமல், இலட்சியவாதியாக இருக்கிறேனே? 

சிறைத்துறை கேட்ட பட்டியலில் சேர்க்கக்கூடாத யாரையெல்லாம் நான் சேர்ந்திருந்தேனோ, அவர்களில் பலர் கொள்ளையர்களாக, கொள்ளையர்களின் பினாமிகளாக வசதியான வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது, இப்போது நன்றாகவே தெரிகிறது. 

இதற்கென்று உள்ள உலவுத்துறை இவர்களைப்பற்றி எல்லாம் ஆராய்கிறது. ஆனால், தனி ஒருவனாக நான் எதையெல்லாம் ஆராய்வது?


ஆனாலும், இவர்களிடம் நம் வாசகர்கள் ஏமாறக்கூடாது என்பதற்காக நூல்களில் எச்சரிக்கிறேன். ஆனாலும், பலர் ஏமாறத்தான் செய்கிறார்கள்.   

எனது சிறைச்சாலை சட்டப்பயிற்சி வகுப்பு முயற்சி கைகூடி இருந்தால், சட்டத்துக்கு விரோதமாக கேள்வி கேட்பார் இன்றி சிறைச்சாலையில் கிடக்கும் ஆதரவற்றோர் அத்தனை பேரும் நிச்சயமாக வெளியில் வந்திருப்பார்கள். பாதி சிறைச்சாலையே காலியாகி இருக்கும். 

ஆனால், வந்தவர்களோ வாசகர்களில் சிலர் மட்டுந்தான். 

இப்போதும், சிறையில் நம் நூல்களைப் படித்தது பற்றி முகநூலின் உள்பெட்டிக்கு வந்து தகவல் சொன்னோர் பலர். 

தானே வாதாடிய இந்தக் கைதிக்கு இன்னுஞ் சில சட்ட விதிகள் அத்துப்படியாக தெரிந்திருக்க வேண்டும். இருந்தாலும், இவ்வளவு தூரம் மேற்கொண்ட சுய முயற்சி பாராட்டத்தான் வேண்டும். பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

சட்ட விதிகளை குறிப்பிட வேண்டியதன் அ-வசியமென்ன?


நாங்கள் பயணம் செய்த பேருந்து ஓட்டுநருக்கும், கார் ஓட்டுநருக்கும் இடையே நடந்த தகராறில், காரில் வந்தவர்கள், பேருந்து ஓட்டுநரையும், நடத்துனரையும் தாக்கியது குறித்து, ‘‘உதவுபவர்களுக்கு உபத்திரம் செய்யக்கூடாது!’’ என்ற கட்டுரையில் எழுதியிருந்தது நினைவிருக்கலாம். 


அப்படியொரு சம்பவந்தான் இந்தச் செய்தியில் வந்திருப்பதும் என்றாலுங்கூட, இதில் முந்திச் சென்றவரை, கோபத்தில் சுட்டுக் கொலைச் செய்திருக்கிறார். முந்துதல் என்கிற உந்துதல், தன்னை உள்ளேயுந் தள்ளி வாழ்வை சீரழித்து விடும் என்பதை, இதிலிருந்து நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.  

சுட்டுக்கொலை செய்த காரணத்தால், கடந்த 10-05-2016 அன்று கைது செய்யப்பட்டவருக்கு, பாட்னா உயர்நீதிமன்றம் கடந்த 19-10-2016 அன்று பிணை வழங்கியுள்ளது. இதன் மூலம் அவர்மீது கொலைக்குற்றம் மட்டுமே சாற்றப்பட்டு இருக்கலாம் என்றே கருத முடிகிறது. 

மாறாக, சுடுவதற்கு பயன்படுத்தி துப்பாக்கி உரிமம் பெற்றதா அல்லது கள்ளத்துப்பாக்கியா என்பதும், உரிமம் பெற்ற துப்பாக்கியாக இருந்தால், தற்காப்புக்கான உரிமத்தைப் பெற்றுவிட்டு, கொலை செய்வதற்கு சட்ட விரோதமாக பயன்படுத்தியதாகவோ அல்லது கள்ளத் துப்பாக்கியாக இருந்தால் அதற்கேற்றவாறோ குற்றஞ் சுமத்தி ஒரு வருடம் வரை பிணைக்கே வழியில்லாதபடி தடைக்காவலில் அடைத்திருக்க முடியும். ஆனால், இப்படி எதையும் செய்யவில்லை.    

ஆனால், இதனை எதிர்த்து பீகார் மாநில அரசின் சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், உச்சநீதிமன்ற நிதிபதிகள், பாட்னா உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததால், குற்றஞ் சாட்டப்பட்டவர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்கிறது மேற்கண்ட செய்தி! 

இந்த செய்தியும் அப்படித்தான். 

ஆனால், 11 ஆண்டுகளாக நடைபெற்று வரும் வழக்கு விசாரணையை சட்ட விதிகளுக்கு உட்பட்டு விரைவில் முடிக்க வேண்டுமென்று நிதிபதிகள் சொல்லி உள்ளனரே தவிர, இதுவரை ஏன் முடிக்கவில்லை என கேள்வி கேட்க துப்பில்லை.  ஆகையால்தான் கேட்கவில்லை. 

ஆமாம், எந்தவொரு வழக்காக இருந்தாலும், சட்ட விதிப்படி விசாரணையை முடிக்க வேண்டுமென்றால், அதிகபட்சமாக குறைந்த பட்சம் மூன்று மாதங்களில் இருந்து அதிகப்பட்சமாக ஆறு மாத காலங்களுக்குள்தான். 

இதுவும், விசாரணை நீதிமன்றங்களுக்குத்தான் என்பதைப்பற்றி ‘‘நீதியைத்தேடி...’’ நூல்களில் ஆரம்பித்து ‘‘மநு வரையுங்கலை!’’ நூல் வரை தெளிவாகச் சொல்லியுள்ளேன்.  

அப்படியானால், மேல்முறையீட்டு நீதிமன்றங்கள், இதைவிட குறைவான கால அவகாசத்தைதானே எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உள்ளிட்ட மேல்முறையீட்டு நீதிமன்றங்களில் 10, 20, 30 ஆண்டுகள் என வழக்கு நிலுவையில் இருக்க நிதிபதிகள்தானே காரணம்?   

இதுபற்றி இந்த செய்தி வந்தபோதே எழுத வேண்டுமென நினைத்தது, தற்போது மிகவும் பொருத்தமாக எழுதும்படி ஆகிவிட்டது. 

மொத்தத்தில், நிதிபதிகள் எல்லா சட்டங்களையும் மீறலாம் என்றும், மற்றவர்கள் மட்டுமே மீறக்கூடாது என்ற மனநிலை பாதிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளனர் என்பதற்கு இதெல்லாம் ஆதாரங்கள். 

குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 167 மற்றம் இந்திய சாசன கோட்பாடு 22(4) இன்படி, ஒருவர் மீது எந்த மாதிரியான குற்றச்சாற்றாக இருப்பினும், அவரை விசாரணை என்றப் பெயரில் அதிகபட்சமாக 90 நாட்களுக்கு மேல் சிறையில் வைத்திருக்கக் கூடாது என அறிவுறுத்துகிறது. 

இதற்கும் மேலான காலத்திற்கு சிறையில் அடைக்க வேண்டு மென்றால், ஏதோவொரு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ்தான், இதுவும் அப்படி சிறையில் அடைக்க நியாயமான காரணம் இருக்கிறது என்பதை, அதற்கான நிதிபதிகளைக் கொண்ட பரிந்துரைக்குழு பரிந்துரை செய்தால் மட்டுமே, தண்டனை அறிவிக்கப்படாமல், விசாரணை காலத்திலேயே ஒரு வருட காலத்திற்கு சிறையில் அடைக்க முடியும்.  

இதையெல்லாம் எனது சட்ட ஆராய்ச்சியில் ஆராய்ந்து, சுமார் பனிரெண்டு வருடங்களுக்கு முன்பே வாசகர்களுக்கு எடுத்துச் சொன்னதன் விளைவாக, குறிப்பிடும் படியான வெகுசிலர், இந்தியாவிலேயே முதன் முறையாக இவ்விதியைப் பயன்படுத்தி பிணையில் வந்து சாதனை செய்தனர் என்பதற்கான இந்திய அஞ்சல் சான்று இது! 


இப்படி, பொய்யர்களுக்கும், நிதிபதிகளுக்கும் தெரியாத பல்வேறு பிணைகளுக்கான குற்ற விதிகள் குறித்து, ‘‘நீதியைத்தேடி... பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி?’’ நூலில் விரிவாக எழுதியுள்ளேன்.  


நம்ம விசயத்துக்கு வருவோம். 

90 நாட்களுக்குமேல் சிறையில் வைத்திருக்க இயலாது. ஆனால், அதற்கு மேலும் சட்ட விரோதச் சிறையில் இருந்திருக்கிறார் என்பதை சரியான காரணமாக, மேற்சொன்ன சட்ட விதியோடு சுட்டிக்காட்டி, பாட்னா உயர்நீதிமன்றம் சம்பந்தப்பட்டவரை பிணையில் விடுவித்து இருந்தால், சட்ட விதியே இப்படித்தான் இருக்கிறது என்றெண்ணி, அதனை எதிர்த்து மாநில அரசு மேல்முறையீடு செய்திருக்க முடியாது. 

அப்படியே செய்திருந்தாலுங்கூட, உச்சநீதிமன்ற நிதிபதிகள் பிணைக்கு தடை விதிக்க முடியாமல் போய் இருக்கும். ஆனால், இங்கு தடை விதித்து விட்டார்கள். இத்தடைக்கு சட்ட விதிப்படி, அம்முட்டாள் நிதிபதிகள் எந்தக் காரணத்தையும் சொல்லி இருக்க முடியாது.  

இப்படி உள்ளூர் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரையுள்ள நிதிபதிகள், இந்திய சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் குறித்து அடிப்படை அறிவில்லாமல்தான் இருக்கிறார்கள் என்பதில் (நீங், மக்)கள் தெளிவாக இருக்க வேண்டும்.

இத்தெளிவிற்கு ஏற்பவும், நாம் கேட்கும் நியாயக் கோரிக்கைக்கு ஏற்பவும் சரியான சட்ட விதிகளைக் குறிப்பிட்டு மனுத்தாக்கல் செய்து, அச்சட்ட விதிகளைக் குறிப்பிட்டே உத்தரவு பிறப்பிக்கவும் கோரவேண்டும். மேற்கண்ட சிறைவாசகரின் கடிதத்தில் இப்படி குறிப்பிட்டு இருப்பதை காணலாம். 

அப்போததான், நம் நியாயக் கோரிக்கைக்கு எதிராக நிதிபதிகள் வேண்டுமென்றே உத்தரவு பிறப்பிக்க முடியாது. அப்படியே பிறப்பித்தாலும், கெட்ட உள்நோக்கத்தோடுதான் பிறப்பித்தார் என மேல்முறையீட்டிலோ அல்லது சீராய்விலோ ஆதாரப்பூர்வமாக குற்றஞ் சாற்றி, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 166, 167, 217, 218 மற்றும் 219 உள்ளிட்ட பொருத்தமான சட்டப்பிரிவுகளின் கீழ் நிதிபதியை தண்டிக்க வேண்டுமென கோரமுடியும். 

இதன் மூலம், நிதிபதிகளின் பைத்தியக்காரத்தனமான செயல்களை தடுத்து நிறுத்தவும் முடியும். இல்லையெனில், மேற்கண்ட செய்தியில் உள்ளபடி, தங்களின் முட்டாள்தனத்தால், மனநலம் பாதிக்கப்பட்ட நிதிபதிகள், மனம்போன போக்கில் தங்களின் இஷ்டப்படி எதையாவது எழுதி விடுவார்கள். 

ஆமாம், ‘‘நிதிபதிகள் எழுதும் தீர்ப்புக்களில் என்ன சொல்லப் பட்டிருக்கிறது என்பது கழுதைக்கு தெரிந்தால், கழுதைகூட அக்காகிதத்தை திண்ணாது’’ என்பது, எனது பத்து வருட சட்ட ஆராய்ச்சியின் முடிவில் வெளியிடப்பட்ட ‘‘நீதியைத்தேடி... சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி?’’ நூலில் எழுதிய மிக முக்கியமான, பொருத்தமான கருத்து. 

இந்நூல்களைப் பெற விரும்புவோர், 9842909190 என்ற உலாப்பேசி எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.  

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Friday, October 28, 2016

புகை நமக்குப் பகையா?!தீப ஒளித் திருநாளின் (மெய், விஞ்)ஞான விளக்கம் என்றத் தலைப்பில் இடப்பட்ட கட்டுரை, ‘நமக்குப் புகை எப்படி நன்மையாகும்’ என்ற ஐயத்தை   சிலருக்கு ஏற்படுத்தி இருக்கிறது. 

எனது ஆராய்ச்சி அறிவுக்கு எட்டிய வகையில், புகையிலுள்ள சில சங்கதிகளை வெளிப்படுத்தவே, பொருத்தமான இக்குறளையும், இதற்கான விளக்கத்தையும் எழுதியுள்ளேன்.     

அதிகாரம்: (ப, பு)கை

எல்லாப் புகையும் உயிருக்கப் பகையல்ல 
போதையைத்தரும் புகையே பகை

விளக்கம்: ‘‘புகை நமக்குப் பகை’’ என்ற பொத்தாம் பொதுவான புதுமொழியை நமக்குள் புகுத்திக் கொண்டதால், எல்லாப் புகையையும் நாம் பகையாகவே பார்க்கிறோம். 

வருடத்தில் ஒருநாள் பட்டாசு வெடிக்கும் பண்டிகையை முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். இது எதனால் என்பதை, ஆராய்ந்து அறிய முற்படாமல், நம் முன்னோர்கள் எல்லாம் முட்டாள்கள்; நாமே அறிவாளிகள் என்று நினைக்கு அறிவீலிகள் ‘‘புகை நமக்குப் பகை’’ என்ற வாசகத்தைப் புகுத்தி நம்மையும் அறிவீலிகள் ஆக்கி விட்டார்கள். 

இதனால், பட்டாசுகளை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர்கள் கூட கொடிய நோய்களுக்கு ஆளாகிறார்கள் என்றுஞ் சிலர் சொல்கிறார்கள். 

இதன்படி பார்த்தால், ‘‘இந்த தீபாவளிக்கு பட்டாசு தயாரித்தவர்கள் யாரும், அடுத்தாண்டு தயாரிக்க உயிரோடு இருக்க மாட்டார்கள். அப்படியே இருந்தாலும், தயாரிப்பு பணியில் ஈடுபட முடியாத அளவிற்கு நோயுற்று இருக்கனும்’’. 

உண்மையில், அப்படியா இருக்கிறார்கள்?

பெ(ரு, று)ங்கூலிக்கு மாரடிக்கும் மூன்று வகையான அரசூழியர்கள் மற்றும் தொழிலாளிகளின் இரத்தத்தையும், உயிரையும் உறிஞ்சும் தொழிலதிபர்கள் ஆகியோரின் அலட்சியத்தின் காரணமாக அவ்வப்போது நிகழும் வெடிவிபத்துக்களில் சிக்கி உயிரிழப்போர் வெகுசிலரைத் தவிர, 

ஆண்டாண்டு காலமாகவும், தலைமுறை தலைமுறையாகவும் இத்தொழிலை செய்து வருவோரே ஆயிரமாயிரம்.

பட்டாசுகளில் உள்ள மூலப்பொருட்கள் பல பாஷான வகைகளைச் சார்ந்தது என்பதும், இவைகள் நம் பாரம்பரிய மிக்க சித்த மருத்துவத்தில் பல்வேறு விதங்களில் பயன்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது. 

இப்படித்தான், புகையுடைய யாக வேள்விகளையும் முன்னோர்கள் செய்திருக்கிறார்கள். அதாவது, மருந்தாக நேரடியாக உட்கொள்ள முடியாத, அப்படி உட்கொண்டால் நஞ்சாக மாறி உயிரைப் பறிக்கக்கூடிய பல்வேறு செடிகள், அதன் காய்ந்த குச்சிகள், விதைகள், காய்கள், கனிகளை யாக வேள்வியில் இட்டு, அப்புகையை நுகரச் செய்வதன் மூலம் நோயை அவர்களுக்கு உண்டாகும் நோய்களை தடுத்திருக்கிறார்கள், நோய் வந்தவர்களை குணப்படுத்தி இருக்கிறார்கள். இதனை தற்போது நானும் அறிவேன்.  

இன்னுங் கொஞ்சம் வெளிப்படையாகச் சொல்லப்போனால், நம் பாட்டன், தாத்தா ஆகியோர், சுருட்டுப் பிடிக்கும் பழக்கத்தை வைத்திருந்தனர். அவர்கள் யாரும் அழுகல் நோய் (கேன்சர்) வந்து இறக்கவில்லை. இச்சுருட்டுப் பழக்கம் இல்லாதவர்கள் பல கொடிய நோய்களால் இறந்திருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

புகைப்பிடிக்கும் பழக்கம் மட்டுமே அழுகல் நோய்க்கு காரணம் அல்ல என்பதையும், ஆங்கில மருத்துவ உலகம் ஒப்புக் கொண்டுள்ளது.  

அப்படியானால், அச்சுருட்டால் என்ன நன்மை நடந்தது என்றால், அவ்வப்போது உடலில் உருவாகும் கெட்ட வாயுக்களை சுருட்டின் புகை வெளியேற்றி நோய்வாய்ப் படாமல் காத்திருக்கிறது என்பதோடு, இன்றைக்கு சிலர் பிடிப்பதைப்போல தொடர் புகைப் பழக்கத்திற்கும் ஆளாக்கவோ, அடிமைப்படுத்தவோ இல்லை. 

சிலர் பெண்கள் பித்துப் பிடித்ததுபோல இருப்பதற்கு காரணம், அவர்களது உடலில் உருவாகி நிரந்தரமாக தங்கியுள்ள கெட்ட வாயுக்களே காரணம். ஆண்களுக்கும், திருமணமான பல பெண்களுக்கும், அதிகபட்சம் இப்பித்து பிடித்த நிலை இராது. 

ஏனென்றால், ஆண்களில் பலர் புகைப்பிடிக்கும் சில நண்பர்களுடன் சேருவதாலும் அல்லது அவர்கள் விடும் புகையை ஏதோவொரு விதத்தில் சுவாசிக்க நேர்வதாலும், புகைக்கும் பழக்கம் கொண்ட கணவனுடன் அல்லது உடலில் கெட்ட வாயுக்கள் தோன்றாமல், உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும் பெண்களுக்கும் இப்பித்துப் பிடித்த பிரச்சனை இராது. இன்றுங்கூட, இந்தியாவில் சுருட்டுப் பிடிக்கும் பெண்களும் உண்டு. 

நம்ம பாட்டிமார்கள் எல்லாம் அடுப்படிப் புகையில், ஊதி ஊதி ஆண்டாண்டு காலமாக சமைத்தவர்கள்தானே?! இவர்கள் எல்லாம் இளம் வயதில் இறந்து விட வில்லையே... இன்னுங்கூட ஆரோக்கியமாக இருப்பவர்களும் இருக்கிறார்களே... 

பித்துப் பிடித்தவர்களை, பூசாரியிடம் கொண்டு சென்றால், அவர்கள் தங்களை ஆற்றல் மிக்கவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ள செய்ய வேண்டிய பஜனைகளை எல்லாம் செய்துவிட்டு, இறுதியாக சுருட்டை நன்றாக இழுத்து, அவர்களின் முகத்தில் இரண்டு மூன்றுமுறை ஊதுவார்கள். 

இப்படி இரண்டு மூன்றுமுறை செய்தாலே, அவர்கள் சரியாக விடுவதையும் பார்க்கிறோம். அப்படியானால், சுருட்டுப் புகையால் நடப்பது நன்மைதானே?!

இதனை தவிர்த்து, ஒரு பெண்ணை நேரடியாக சுருட்டுபிடி சரியாகி விடும் என்றால் என்ன ஆகும்? பூசாரியின் மதிப்பும், பிழைப்பும், இதிலுள்ள ரகசியங்களும் போய்விடும்.  

உடனே, சுருட்டுப் பிடிக்க ஆரம்பித்து விடாதீர்கள். ஏனெனில், இப்பொழுது கிடைக்கும் சுருட்டுகள், முன்பிருந்ததைப் போல கேடு விளைவிக்காததா என்பது எனக்கு தெரியாது. இதை ஆராய்வதும் எளிதல்ல. எச்சரிக்கை!    

மொத்தத்தில், எப்போது நம் நாகரீகம், ‘அநாகரீகம்’ என்றும், மேற்கத்திய கலாச்சாரமே ‘நாகரீகம்’ என்றுங்கருதி, அவற்றை நாம் பின்பற்ற ஆரம்பித்தோமோ அதுதான், அவர்களைப் போலவே நம் சிந்தனையையும் இந்தளவிற்கு மழுங்கடித்து இருக்கிறது.

அவன் கூட, நம்முடைய முந்தைய வாழ்க்கை முறைதான் ஆரோக்கியமான நாகரீகமென்று பின்பற்ற ஆரம்பித்து விட்டான். 

ஆனால், நாம்தான் அவனுடைய அநாகரீகத்தைப் (பி, பீ)டித்துக் கொண்டிருக்கிறோம். அவ்வளவே! 

இதுபற்றி சத்தியவான் காந்தி 1909 இல் எழுதிய ‘‘இந்தியத் தன்னாட்சி’’ நூலிலேயே எச்சரித்துள்ளார். ஆனால், நாம்தான் படிக்கவில்லை; படித்தவர்களும் பின்பற்றவில்லை. 

சரி, உடலில் கேட்ட வாயுக்கள் நுழைந்திருப்பதை கண்டுபிடிப்பது எப்படி, அதனை சுருட்டுப் பிடிக்காமல் விரட்டுவது எப்படி என்பதை, இயன்றால் அடுத்தப் பதில் சொல்கிறேன்.     

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Wednesday, October 26, 2016

பொய்யர்களால் குடும்பங்கள் பல அழிந்து போயிருக்கின்றன


சட்டத்தொழில் செய்யும் பொய்யர்களால் குடும்பங்கள் பல அழிந்து போயிருக்கின்றன என்பது சத்தியவான் காந்தியின் பொதுவான கருத்து. 

இப்பொய்யர்கள், வாதாடும் சட்ட உரிமையே இல்லாமல் குடும்ப நல நீதிமன்றங்களில் நுழைந்து கணவன் மனைவிக்குள் பிரிவினையை ஏற்படுத்துக்கிறார்கள் என்றால், இதற்கு கூட்டுக்களவாணிகளான நிதிபதிகள் ஒத்துழைக்கிறார்கள். 

இது, இன்று 26-10-2016 அன்று, நீதியைத்தேடி... வாசகர் ஒருவரிடம் இருந்து வந்த மின்னஞ்சலும், அவ்வாசகருக்கான எனது பதிலுமாகும்.  

வணக்கம் அய்யா ,

உங்கள் புத்தகத்தை படித்து எனக்கு நானே நீதிமன்றத்தில் வாதாடி வருகிறேன்.மிகவும் உறுதுணையாக இருக்கிறது. மிக்க  நன்றி. உங்களிடம் இருந்து இப்போது ஒரு சிறு உதவி தேவைப்படுகிறது. முடிந்தால் உதவவும்.

நான் என் குழந்தையின் கஸ்டடி கேட்டு GWOP வழக்கு போட்டேன், அதனுடன் இடைக்கால மனுவாக VISITATION  IA  வையும் சேர்த்து போட்டேன். 

ஆனால் என் மனைவி இடைக்கால மனுவிற்கு பதிலுரை போடுவதற்கு பதிலாக MAIN  பெட்டிசனுக்கு எதிர் உரை  தாக்கல் செய்துள்ளார். 

"வணக்கமாய் தாக்கல் செய்யும் எதிருறை" என்றே பெயரிடப்பட்டுள்ளது. இது நடந்து 3 மாதங்கள் முடிந்து விட்டது.

இப்பொழுது நான் இரண்டு இடைமனுக்கள் தாக்கல் செய்து நிவாரணம் பெற்றுவிட்டேன். ஒன்று குழந்தையை ஒவ்வொரு வாரமும் பார்க்க, இன்னொன்று தீபாவளிக்கு குழந்தையை பார்க்கும் மனுக்கள். 

வாராவாரம் பார்க்க கேட்ட மனுவில், மாதம் ஒருமுறை மட்டுமே நீதிபதி அனுமதித்தார். 

ஆகையால் குழந்தையை பார்க்கும் எண்ணிக்கையை அதிகப்படு த்தக்கோரி  இன்னொரு இடைமனு வரும் வாரம் தாக்கல் செய்யப்போகிறேன். 

எனக்கு கீழ்கண்ட சந்தேகங்கள் உள்ளன. உங்கள் உதவி இருந்தால் சரியாக இருக்கும் என்று நினைத்தே இந்த மின்னஞ்சலை எழுதுகிறேன்:

1. என் மனைவியின் பொய்யர் பதிலுரைக்கு பதில் எதிர்துறை என்றே எழுதியுள்ளார். எனவே  நான் இப்பொழுது எதிர்துறை தாக்கல் செய்தால் இதை சுட்டிக்காட்டலாமா?

2. இடைக்கால மனு உள்ளபொழுது, மெயின் பெட்டிசனுக்கு பதிலுரை அப்பொய்யர் தாக்கல் செய்யலாமா?

3. என் இரண்டு இடைக்கால மனுக்களில் தீர்ப்பு வாங்குவதற்கேய எனக்கு மூன்றரை மாதங்கள் ஆகிவிட்டது. எனவே  அவர்களின் பதிலுறையை பெற்று மூன்று  மாதங்கள் கழித்து இப்பொழுது நான் எதிர்துறை தாக்கல் செய்யலாமா?


பதில்: நல்லது. 

நீங்கள் கேட்டுள்ள கேள்விகளின் மூலம், ‘‘நீதியைத்தேடி... நூல்களில் ஆரம்பித்து மநு வரையுங்கலை!’’ வரை ஓரளவுக்கு மேலோட்டமாக படித்திருக்கிறீர்கள் என்பது புரிகிறது. 

இரத்திர சுருக்கமாக எழுதியுள்ள இம்மின்னஞ்சல் மூலம் தங்களின் திறனை வெளிப்படுத்தி உள்ளீர்கள். 

ஆனால், இந்நூல்களில் சொல்லப்பட்டுள்ளவை எல்லாம் செயல்படுத்தத்தானே தவிர, செயல்படுத்தலாமா என கேள்வி கேட்பதற்காக அல்ல என்பதை புரிந்து கொள்ளவில்லையே, ஏன்?  

பொய்யர்களுக்கு சட்டந்தெரியாது. ஆகையால், சட்டப் பிரிவுகளை குறிப்பிட மாட்டார்கள் என்பதை, நூல்களில் பல இடங்களில் சொல்லியுள்ளேன். ஆகையால், சட்டப்பிரிவு குறிப்பிடாத மனுவை ஆட்சேபிக்காமல் வாங்கியது உங்களது தவறு. 

மேலும், குடும்பநல நீதிமன்றங்களில் வாதாட, பொய்யர்களுக்கு சட்டப்படி அனுமதி இல்லை என்றும் சொல்லியுள்ளேன். எனவே, உங்களது மனைவியின் பொய்யரை வழக்கில் இருந்து நீக்க மனு கொடுக்காததும் உங்களுடைய தவறே! 

உரிமையியல் வழக்குக்களில் ‘மனுவின் மீது பதிலுரையும், பதிலுரை மீது, எதிருரையும்’ கட்டாயமாக தாக்கல் செய்ய வேண்டுமென்பதை ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் தெளிவாக சொல்லியுள்ளேன். 

எனவே, இதில் கேள்வி எழ வேண்டிய அவசியமே இல்லை. 

பொதுவாக இடைமனு நிலுவையில் இருக்கும்போது, அசல் மனுவின் மீது, அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள கூடாது. பதிலுரை தாக்கல் செய்துள்ளதால், வழக்கு விரைவாக முடியும். 

இதனால், உங்களுக்கென்ன பாதிப்பு? 

பாதிப்பு இருந்தால் அதையோ அல்லது தாமதத்திற்கான காரணத்துடன் பதிலுரையின் மீது எதிருரையை தாக்கல் செய்யவும். அவ்வளவே!   
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Monday, October 24, 2016

பொய்யர்களின் கொள்கையே, பொய்யும் - பொறுக்கித்தனமும்; கொள்ளையும் - கொலையுந்தான்!


வக்கீல் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! என்பது, எனது பத்து வருட சட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில் முன்மொழிந்த தத்துவம். 

2008 ஆம் ஆண்டில் எழுதிய, ‘‘நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம்’’ நூலில், சட்டத் தொழில் செய்யும் பொய்யர்கள், சட்ட விதிப்படி மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்து எழுதியுள்ளேன். 

இதேபோல, 2009 ஆம் ஆண்டில் எழுதிய, ‘‘நீதியைத்தேடி... சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்’’ நூலில், இப்பொய்யர்களின் சட்டத்துக்குப் புறம்பான மிரட்டல்களை எப்படியெல்லாம் சந்திக்கலாம், அவர்கள் அநியாயமாக பிடுங்கித்தின்ற பணத்தை, எப்படி மீண்டும் பெறலாம் என்பது பற்றியும் எழுதியுள்ளேன். 

பொய்யர்களின் இதுபோன்ற தான்தாண்றித்தனமான பணம் பிடுங்குஞ் செயலுக்கு, இந்த வெத்துவெட்டுப் பொய்யர்களுக்குப் பயந்து வருமான வரித்துறையினர் அவர்களது வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்துவதில்லை என்றுஞ் சொல்லி இருந்தேன். 

இந்த உண்மை சுமார் ஏழாண்டுகளுக்குப் பின், தற்போது முதல் முறையாக பலித்திருக்கிறது. ஆமாம், எனக்குத் தெரிய வருமான வரித்துறையினர், ஒரு பொய்யரை சோதனை செய்ததும், கோடிக்கணக்கில் பணத்தை கைப்பற்றியதும் இதுவே முதல் முறை!

இப்பொய்யரிடம் முறைப்படி விசாரணை நடத்தினால், யார்யார் பணம் கொடுத்தது, எந்தெந்த சட்ட விரோதமான காரியங்களுக்காகக் கொடுக்கப்பட்டது, இதன் பின்னனியில் உள்ள மற்றவர்கள் யார்யார் என்பதையெல்லாம் வெளிக் கொண்டுவர முடியும்.  ஆனால், பாருங்க... 

தங்களிடம் சிக்கிய பொய்யரின் பெயரைக்கூட, வருமான வரித்துறை வெளியிடவில்லை என்பதன் மூலம், தங்களின் பங்கு கிடைத்ததும் விட்டு விடுவார்களோ என்றே நம்ப வேண்டியுள்ளது.

மேலும், இலாபத்தையே பிரதாண நோக்கமாக கொண்ட ஊடகங்கள், இதுபோன்ற கொள்ளையர்களை, கொள்ளையர்கள் என்று குறிப்பிடாமல், வழக்கறிஞர் என்று குறிப்பிடுவதுதான் ஜனநாயகத்தையும், ஜனநாயக ரீதியில் கொள்ளையர்களை காக்கும் முயற்சியும் ஆகும்.  

ஒரு பொய்யரால், தன் வாழ்நாளில் சுமார் 125 கோடியை கொள்ளை யடிக்க முடிந்திருக்கிறது என்றால், இப்பொய்யர் என்னென்ன அநீதிகளைச் செய்திருப்பார் என்று நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள். 

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பொய்யரையும் இப்படி சோதனை செய்தால், பல லட்சங்கோடியை பறிமுதல் செய்து, அவர்களை குற்றத்தண்டனைக்கு உள்ளாக்கி அவர்களது பொய்த்தொழிலையும் ஒழித்துக்கட்ட முடியும். 

மேலும், இச்சோதனையில் சிக்கும் பல்வேறு முக்கிய ஆவணங்களைக் கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு எளிதில் நிவாரண நீதியைத்தர முடியும். இனியாவது, வருமான வரித்துறையினர் செய்வார்களா என்பதே எஞ்சி நிற்கும் கேள்வி? 
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Saturday, October 22, 2016

உதவுபவர்களுக்கு உபத்திரம் செய்யக்கூடாது!


உதவி செய்பவர்களுக்கு துன்பத்தைக் கொடுத்தால், அவர்களது உதவியை நிறுத்திக் கொள்வார்கள் என்ற வகையில், உதவி செய்வோருக்கு பல வழிகளில் துன்பத்தைக் கொடுப்பார்கள். இதில் முன்னிலை வகிப்பது காவலூழியர்களே என்பது, நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.

இவர்கள் பதிவு செய்யும் வழக்குக்களில், வெகுசிலர் சட்ட நடவடிக்கையை எதிர்த்து பலமாக போராடுவார்கள் என்று தெரிந்தால், அவர்களைப் பணிய வைக்கவென்றே அவருக்கு துணையாக உள்ள, போராட்டக் குணமில்லாத ஓரிருவரையும், அவ்வழக்கில் (சே, கோ)ர்த்து விடுவார்கள்.

இப்படி கோர்க்கப்பட்டவர்களை சட்ட நடவடிக்கையில் அல்லது வழக்கில் இருந்து சட்டப்படி வெளியேற்றுவது எப்படி என்று தெரியாததால், போராட்ட குணம் உள்ளவர்களும் சட்ட நடவடிக்கையில் சமரசம் ஆகிவிடுவர் அல்லது அடங்கிப் போய்விடுவர். 

குற்றவியல் சட்ட நடவடிக்கைகளில் தேவையில்லாமல் கோர்க்கப்பட்டவர்களை, சட்டப்படி எப்படி கழற்றிவிட முடியும் என்பதை, வளர்த்து விட்டதற்கு, வளர்ப்புத் தாய்க்கும் தண்டனை! என்ற இந்தக் கட்டுரையில் படித்துணரலாம். 

விபத்தில் அல்லது குற்றச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட எத்தனையோ பேருக்கு நானும் உதவியிருக்க அதனால், எனக்கு சட்டப்படியான உபத்திரங்கள் எதுவும் வந்ததில்லை. அப்படி வரும் நிலை இருந்தாலுங்கூட, சட்டப்படி சந்தித்து விடலாம். ஆனால், இதுபற்றி போதிய விழிப்பறிவுணர்வு சமுதாயத்தில் வெகு குறைவாகக்கூட இல்லை.  

இந்த இடத்தில் பொருத்தமான ஒரு சம்பவத்தையும் சொல்ல வேண்டும். சில வருடங்களுக்கு முன் கோவையில் இருந்து குற்றாலத்திற்கு அரசு விரைவுப் பேருந்தின் பிற்பகுதியில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தோம். இப்பேருந்து ஓட்டுநருக்கும், கார் ஓட்டுநர் ஒருவருக்கும் முந்திச் செல்வதில் தகராறு ஏற்பட்டுள்ளது. 

பேருந்துக்கு முன் தன் காரை நிறுத்திய, அக்காரில் வந்தவர்கள், ஓட்டுனரையும் நடத்துனரையும் வைத்திருந்த ஆயுதங்களால் கடுமையாக தாக்கிவிட்டனர். 

எனக்குப் பின் இருக்கையில் இருந்த வாசக சகோதரி, நல்ல தூக்கத்தில் இருந்த என்னிடம், ‘‘அண்ணா ஏதோ பிரச்சினை நடக்கிறது; போய் பாருங்கள்’’ என்று குரல் கொடுக்கவே சென்று பார்த்தால், இருவருக்கும் ஆங்காங்கே இரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்தது. 

அதே சமயத்தில் காரின் பின்புறம் ஒருவர் அமர, அக்கார் மின்னல் வேகத்தில் பறந்து சென்றுவிட்டது. அதாவது, அமர்ந்த நபரையோ அல்லது அக்காரின் பதிவு எண்ணையோ, அதன் வண்ணத்தையோ கூட நான் அறிய முடியவில்லை. 

இருவரும் காப்பாற்றுங்கள் என வலியால் துடிக்க, நாங்கள் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதும், அருகில் எங்கு மருத்துவமனை இருக்கிறது என்பதுங்கூட எனக்குத் தெரியவில்லை.

இத்தனைக்கும், பேருந்துக்கு பக்கத்திலேயே நடுத்தர வயதுடைய கணவன் மனைவி இருவரும் எதுவுமே நடக்காததுபோல பேசிக் கொண்டு இருந்தவர்களிடம், இது எந்த இடம், மருத்துவமனை எங்குள்ளது என கேட்டதற்கு தெரியாது என்று சொல்லிவிட்டனர். 

சரி, சற்று தூரத்தில் சென்று கேட்கலாம் என்று, பின் பக்கமாகச் சென்று விசாரித்துக் கொண்டிருந்தபோது, வலியால் துடித்த ஓட்டுநர், மருத்துவமனையை தேடி பேருந்தை எடுத்துச் சென்றுவிட, சில நிமிடங்கள் கழித்து அவ்வழி வந்த ஆட்டோவில் ஏறி பேருந்தை துரத்திச்சென்று பிடிக்கும்படியும், ஆட்டோவுக்கு கட்டணம் செலுத்தும்படியும் ஆயிற்று. 

நல்லவேளையாக சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரத்திலேயே பேருந்து நின்றது. ஆகவே, இதுபோன்ற சமயங்களில் முன்பக்கம் சென்றே விசாரிக்க வேண்டும் என்பது பாலபாடமானது.  

ஆட்டோக்காரரிடம் விசாரித்த போதுதான், அது மதுரையின் புறநகர் பகுதி என்பதும் தெரிந்தது. அத்தனியார் மருத்துவமனை ஊழியர்கள் வெளியில் வைத்தே, முதலுதவி மட்டும் செய்தார்கள். 

சகப் பயணிகளிடம் 108 க்கு சொன்னீர்களா என்று கேட்க, இல்லை என்றார்கள். முன்பாக தூங்கிக்கொண்டிருந்த நான் எழுந்து வந்து பார்த்தபோது, ‘‘முன் இருக்கையில் அமர்ந்திருந்த இப்பயணிகள் அனைவருமே கொட்டக்கொட்ட விழித்துக் கொண்டு, அவ்விருவருக்கும் இரத்தம் சொட்டச்சொட்ட பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள். என் முயற்சிக்கு கூட உதவியாக வரவில்லை’’ என்ற உண்மையை பொருத்தமாக இவ்விடத்தில் சொல்ல வேண்டும். 

இதன்மூலம், இதுபோன்ற சமயங்களில் மக்கள் எவ்வளவு மனிதாபி மானத்தோடும், விழிப்பறிவுணர்வோடு இருக்கிறார்கள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். 

உடனே, நான் 108 க்கு போன் செய்தால், என்ன நடந்தது, ஏது நடந்தது, எந்த இடத்திற்கு ஆம்புலண்ஸை அனுப்பனும் என்று கேட்க, தெரிந்ததைச் சொன்னேன். 

இதுபோன்ற குற்றச் சம்பவங்களை, இவர்கள் உலவுத்துறைக்கு தகவல் சொல்வார்கள். ஆகையால், குற்றவாளிகள் மீது நடவடிக்கை உறுதி. நீங்கள் குற்றத் தகவலை நேரடியாகவும் செல்ல உலவுத்துறையின் தொலைபேசி எண் 044 - 23452323, 24, 25 ஆகும். 

இந்த உலவுத்துறையைப் பற்றி, அரிய முடியாத பல்வேறு சங்கதிகளை நீதியைத்தேடி... நூல்களில் சொல்லி உள்ளேன். இதிலும் குறிப்பாக, குற்ற விசாரணைகள் மற்றும் சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி ஆகிய நூல்கள்.
    
ஆகையால், ஆம்புலண்ஸ் வருவதற்கு முன்பாகவே, சென்னை உலவுத்துறையில் இருந்து என்னை உலாப்பேசியில் அழைத்தார்கள். இந்த எண்ணை நான் ஏற்கெனவே பதிந்து வைத்திருந்ததால், அழைப்பது யாரென்பதை புரிந்துக் கொண்டு, தெரிந்த தகவல்களை தைரியமாகச் சொன்னேன்.

நாகர் கோவிலைச் சேர்ந்த, இவ்விருவரையும் ஆம்புலண்ஸில் ஏற்றி விட்ட பிறகு, அவ்வழி வந்த விரைவுப் பேருந்தில் நின்று கொண்டே பயணம் ஆனோம். 

இவர்களது உறவினர்களும், மதுரை கிளை மேலாளரும் அழைத்து நன்றி சொன்னார்கள். மேலாளர் சாட்சியாக வரும்படி கேட்டுக்கொண்டார். நான் ஏற்கெனவே சொன்னபடி, ‘‘தெரிந்ததை மட்டுந்தான் சொல்லுவேன்’’ என்றதும் வேறு வழியின்றி, என்னை சாட்சியாக அழைப்பதில் பயனில்லை என நினைத்து அழைக்க வில்லை. 

அன்று நான் உடுத்தியிருந்த வெள்ளைநிற வேட்டி பயணற்றுப் போனது, ஆட்டோக்கு கொடுத்த நூறு, தூக்கங்கெட்டு நின்று கொண்டே பயணித்தது என பொறுத்துக்கொள்ள முடிந்த துன்பத்தை அனுபவித்தேன். என்னோடு பயணித்த மௌன ஆசாமிகளுக்கு இதில் எதுவுமில்லை. அவ்வளவுதான்!

சட்ட ஆராய்ச்சியில் களமிறங்கிய காலத்தில், விபத்தில் சிக்கிய வர்களுக்கு உதவ ஏன் பொதுமக்கள் அவ்வளவு சீக்கிரம் முன்வரவில்லை என்று ஆராய்ந்து, ஓர் உண்மையை உணர்ந்தேன்.  

அதாவது, விபத்து நடந்த இடத்திற்கு காவலூழியர்கள் வரும்வரை, பொதுமக்கள் எதையாவது செய்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் வந்தார்களோ, இல்லியோ ஒவ்வொருவராக கழல ஆரம்பித்து விடுவார்கள். 

இதற்கு அடிப்படை காரணம், அங்கு வரும் காவலூழியர்கள், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றுவதை விட, அவ்விபத்துக்கான காரணத்தையும், அதற்கான தடயங்கள், சாட்சிகளை சேகரிப்பதிலேயே குறியாக இருப்பார்கள். 

ஆகையால், சம்பவ இடத்துக்கு வந்ததும், அவர்களது பாணியில் பயமுறுத்தும்  ஓர் நோட்டத்தை இட்டு, அதில் அதீத அக்கறையோடு உதவிக் கொண்டு இருப்பவர்கள் யாரென்று பார்த்து கேள்விமேல் கேள்விகேட்க ஆரம்பித்து விடுவார்கள். 

இன்றுங்கூட, இந்நோட்டப் பார்வை நடந்துக்கொண்டுதான் இருக்கிறது என்பதை, இனி நீங்களே பார்த்தாலும் உணருவீர்கள். இதற்கு பயந்துதான் மற்றவர்கள், உதவாமல் வேடிக்கை பார்க்க ஆரம்பிக்கின்றனர். 

குற்ற விசாரணை முறை விதி 171 இன்படி, ‘‘உங்களுடைய அனுமதி இல்லாமல், நிதிபதியே கூட, உங்களை சாட்சியாக அழைக்க முடியாது’’ என்பதை, நீங்கள் புரிந்து கொண்டால், இப்படி நோட்டப் பார்வையிடும் காவலூழியர்களைக் கண்டு பயந்து, உதவி செய்வதில் இருந்து கழலாமல், உதவியை தாராளமாகத் தொடருவீர்கள்.

இதற்கெல்லாம், சட்ட விழிப்பறிவுணர்வு மிகமிக அவசியம் என்பதை உணர்ந்து, அதனை உங்களுக்கு ஏற்படுத்த நாங்கள் அருட்பெறும் முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.  

இதுபற்றி உச்சநீதிமன்றம், பல வருடங்களுக்கு முன்பாக அறிவுறுத்தலை விடுத்திருந்துங்கூட, இதுகுறித்து அரசின் முறையான அறிவிப்பு தற்போதுதான் வெளியாகி உள்ளது என்பது, நிச்சயமாக அரசின் அலட்சியமும் அவலமும்தான்! 

அரசே இப்படியிருக்கும்போது, அவ்வரசின் அடிமைகளாக இருக்கக்கூடிய காவலூழியர்கள் மட்டும் எப்படி இருப்பார்கள்? 

சட்ட விதிகளில் இல்லாத சங்கதிகள் தொடர்பாக, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும்போது, இந்திய சாசனக்கோட்பாடு 142 இன்படி, இந்த உத்தரவை உடனே சட்ட விதிகளாக இயற்ற வேண்டுமென அரசுக்கு உத்தரவிட வேண்டும். ஆனால், நிதிபதிகள் அப்படி சொல்வதில்லை. ஆகையால், அரசுகள் இப்படி தங்களது இஷ்டம்போல மிகவும் தாமதமாக செயல்படுகின்றன.     

இன்றைக்கு வளர்ந்துள்ள மொபைல் புரட்சியின் காரணமாக, விபத்து அல்லது குற்றக்காட்சிகளை வண்ணப் படமாக்கி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி விடுகின்றனர். இதனால் நன்மை தீமை என இரண்டும் உண்டு. 

நன்மையென்றால், அடுத்தநாள் ஊடகங்களின் வாயிலாகத்தான் தெரியும் என்ற நிலைமாறி, சமூக வலைத்தளங்களில் பரவும் வண்ணப்படச் செய்திகளையே ஊடகங்கள் பயன்படுத்த ஆரம்பித்து விட்டன.  பாதிக்கப்பட்டவர்களுக்கு பண உதவியும் கிடைக்கிறது. 

தீமையென்றால், கற்பனையில் கதையெழுதம் திறன் கொண்வர்கள், பயமுறுத்தும் கதையை எழுதி பதிவிடுகின்றனர் என்பதும், இதனை அப்படியே உண்மையென நம்பி ஆயிரக்கணக்கானோர் பின்னூட்டம் இடுவதையுங்கூட நான் நன்கறிவேன். இப்படிச் செய்வதில், முகநூல் பதிவர்களுக்கு ஓர் அற்ப சந்தோசம். 

சட்ட விழிப்பறிவுணர்வோடு, சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி, பற்பல நற்காரியங்களைச் செய்ய முடியும் என்பதுபற்றி கட்டுரை ஒன்றை விரைவில் பதிவிட முயற்சிக்கிறேன்.

*********************

சமூகம் சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற வேண்டுமென விரும்பினால், இதுகுறித்த தங்களின் கருத்தைச் சொல்லி, உங்களது சமூக வலைத்தளங்களில் பகிருங்கள் 
      
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Thursday, October 20, 2016

குற்றவியல் வழக்குக்களின் சான்றாவணப் பட்டியல்


உரிமையியல் வழக்குக்களுக்கு மட்டுந்தான் சான்றாவணங்களின் பட்டியல் வரும் என்றே பலரும் நினைக்கிறார்கள். இது தவறு. குற்றவியல் வழக்கிற்கும் சான்றாவணங்களின் பட்டியலை தாக்கல் செய்ய முடியும். 

இதனை ஆவணங்களைப் பட்டியல் போட்டுக் கொடுங்கள் என்று தெளிவாகச் சொல்லாமல், ஆங்கிலேயர்களுக்கு பிறந்த நிதிபதிகள், இன்டெக்ஸ் போட்டுக் கொடுங்கள் என ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்.  

குற்றவியல் வழக்குக்களில் சூழ்நிலையைப் பொறுத்து, ஆவணச் சாட்சியத்தின் அடிப்படையில், ஒரு சங்கதியை மெய்ப்பிக்க நினைக்கும்போது, அதுகுறித்த ஆவணப்பட்டியலை, புகார் மனுவோடோ அல்லது பரிசீலனை மனுவோடோ அல்லது ஆட்சேபனை உரையோடோ நாமே தாக்கல் செய்துவிட வேண்டும்.

இப்படி நாம் தாக்கல் செய்வது மட்டுமல்ல; நமது எதிர்த்தரப்பினரின் ஆவணங்களையும் இப்படி கேட்டு வாங்கிவிட வேண்டும். இதுகுறித்து, மிகவும் விரிவாக ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் சொல்லியுள்ளேன்.  

பொதுவாக பொய்யர்கள், சட்ட விதிகள் எதுவும் குறிப்பிடப்பட்டாத அச்சடிக்கப்பட்ட மொட்டைப் படிவத்தில்தான், ஆவணப்பட்டியலை எந்த வழக்காக இருந்தாலும் தாக்கல் செய்வார்கள். 

குற்ற விசாரணை முறை விதி 294 இல் குறிப்பிடப்பட்டுள்ள, அரசு விதித்துள்ளப் படிவம் என்பது, பொய்யர்கள் பயன்படுத்தும் அச்சடிக்கப்பட்ட படிவங்கள் அன்று. அவை, சோம்பேறி பொய்யர்களால் தங்களுக்கும், தங்களைப் போலவே சோம்பேறித்தனமும், கூடவே அறிவுவறுமையும் உள்ள பொய்யர்களுக்காக அச்சடிக்கப்படுபவை.

பொய்யர்களுக்கு மட்டுமன்று; காவலூழியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசூழியர்களுக்காகவும் பொதுவாக அச்சடிக்கப்பட்ட படிவங்களில், தேவையற்ற அல்லது பொருந்தாதப் பகுதிகள் சில இருக்கின்றன என்பதை ஓரளவிற்கு அறிந்திருப்பீர்கள். 

ஆகையால், தன் வழக்கில் தானே வாதாடும் தனித்துவம் பெற்ற நாம், பொய்யர்கள் மற்றும் அரசூழியர்களின் சட்ட விதிகளுக்கு மாறான செயல்கள் எதையும் பின்பற்றாமல், நம் சுய முயற்சியில் எதையும் உருவாக்க வேண்டும். இப்படி உருவாக்க, உருவாக்கத்தான் உங்களின் அறிவுத்திறன் மேம்படும்.

இதனைச் செய்யாமல், உங்க அளவிற்கு எனக்கு சட்ட அறிவு இல்லையென்று சொல்லிக் கொண்டு இருந்தால், பொய்யர்கள் மற்றும் நிதிபதிகளைப்போல இருப்பதுங்கூட இல்லாமலேயே போய்விடும். எச்சரிக்கை! 

இப்படி உருவாக்குவதை சட்ட விதிகள் அனுமதிக்கிறதா என்ற, இயல்பான கேள்வி உங்களுக்கு எழலாம். நான் முன்மொழிந்துள்ள ‘‘நியாயந்தான் சட்டம்’’ என்பதற்கு ஏற்ப, நம் நியாயமான எண்ணங்களுக்கு ஆதரவாகத்தான் சட்ட விதிகள் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 

அப்படி இல்லாத சட்ட விதிகளும் செல்லாதது என்பதால், அதைப்பற்றி கவலைப்ப வேண்டியதில்லை.   

ஆனால், பொய்யர்களுக்குப் புரோக்கர்களாக இருக்கும் தறுதலை வாசகர்கள் பொய்யர்களைப் போலவும், அவர்களுக்கு மேலாகவும்கூட முட்டாள்களாக செயல்படுகிறார்கள் என்பதை நான் நன்கறிவேன். 
  
சென்னை பாலாஜி பதிப்பகம் வெளியிட்டுள் குற்ற விசாரணை முறை விதிகளின் இறுதியில் இரண்டாம் அத்தியாயத்தில் உள்ளதுதான், அரசு விதித்துள்ள உண்மையான படிவம். 

ஆனால், எல்லா விதிகளுக்குமான படிவங்கள் தரப்படவில்லை. குறிப்பாக குற்ற விசாரணை முறை விதி 294 க்கு தரப்படவில்லை.  

நான் எற்கெனவே சொன்னபடி, ‘‘நியாயந்தான் சட்டம்’’ என்பதற்கு ஏற்ப, இப்படிவங்கள் நம் தேவையை பூர்த்தி செய்யாது என்பதை உணர்ந்த காரணத்தால், குற்ற விசாரணை முறை விதி 476 இல், மேற்சொன்ன படிவங்களை தேவைக்கேற்ப மாறுதலுடன் பயன்படுத்திக் கொள்ள உரிமை உண்டு என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  

ஆகையால், உங்களது சிந்தனைக்கு தக்கபடி, ஆவணங்களின் பட்டியலுக்கு இப்படியொரு படிவத்தை நீங்களே உருவாக்கிக் கொள்ளலாம் அல்லது இதுவே போதுமானது என நினைத்தால், இப்படியே பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

மிக முக்கியமாக பட்டியலில், ஓர் ஆவணம் எந்த தேதியை கொண்டது, யார் யாருக்கு எழுதியது, அதன் கருப் பொருளென்ன, எத்தனைப் பக்கங்களை கொண்டது என்பதுபற்றி தெளிவாக குறிப்பிடத் தேவையான தெளிவைப் பெறுங்கள். 

இந்தப் பட்டியலின் தொடக்கத்திற்கு முன்னால், மற்ற மனு, பதிலுரை, எதிருரை உள்ளிட்டவற்றில், தலைப்பில் வருவதுபோலவே நீதிமன்றம், ஊர், வழக்கு எண், வழக்காளிகளின் பெயர்கள் ஆகியன இருக்க வேண்டும். 

வழக்கம்போலவே, இதன் நகலை உயர்மட்ட நிதிபதிகளுக்கு அனுப்புவதாகவும், கீழே குறிப்பிடலாம்.

**********************

சமூகம் சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற வேண்டுமென விரும்பினால், இதுகுறித்த தங்களின் கருத்தைச் சொல்லி, உங்களது சமூக வலைத்தளங்களில் பகிருங்கள் 
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Wednesday, October 19, 2016

அடைமொழிச் சொற்கள் அவசியமா?
அரசூழியர்களுக்கு எழுதும் கடிதங்களில், தாராளமாக அவர்களின் பெயரைக் குறிப்பிட்டும் கடிதம் எழுதலாம். பெயர் தெரியாதபோது, பதவியின் பெயரைக் குறிப்பிட்டும் எழுதலாம். 

பதவியைக் குறிப்பிட்டு எழுதும்போது, பதவிக்கு முன்பு ‘திரு, திருமிகு, உயர்திரு, மாண்புமிகு, மானமிகு, வணக்கத்திற்குரிய, கனம், மரியாதைக்குரிய உட்பட எந்ததொரு அடைமொழிச் சொல்லையுங் குறிப்பிட வேண்டியதில்லை’.

அதேபோல், அவ்வூழியரின் பெயரைக் குறிப்பிட்டு எழுதும்போதும், பெயருக்கு முன்பும், வேறெந்த மதிப்புக்குரிய சொல்லையும் சட்டப்படியோ, சம்பிரதாயப்படியோ போடவேண்டியதில்லை.

ஏனெனில், உண்மையில் அவர்களுக்கு அத்தகுதிகள் இருந்திருந்தால், ‘தங்களின் துன்பங்களில் இருந்து, எப்பொழுதோ மனிதகுலம் மீண்டிருக்குமே ஒழிய, மனுமேல் மனுவைப்போட்டு மன்றாடிக்கொண்டோ, மாண்டுகொண்டோ இருக்காது; ‘‘மநு வரையுங்கலை’’ என்ற இந்நூலுந் தேவைப்பட்டிருக்காது!’.
  
அரசூழியர்கள் அனைவருமே நம் வரிப்பணத்தில் பெ(ரு, று)ங்கூலிக்கு மாரடிப்பவர்கள் என்பதால், எவ்விதத்தில் பார்த்தாலும் அவர்கள் நம்மைவிட மாண்பில் குறைந்தவர்கள்தாம். நீங்களும் நம்மில் ஒருவரேயென்பதால், மேற்கண்ட அடைமொழிகளைச் சொல்லி, மேன்மேலும் உங்களின் மாண்பை, நீங்களே குறைத்துக் கொள்ளாதீர்கள்.

ஆமாம், ஊர்ப்புறங்களில் மரியாதையில்லாமல் பேசுபவர்களிடம், ‘மரியாதையைக் கொடுத்து மரியாதையை வாங்கிக்கோ’ என எச்சரிப்பார்கள். அதன் பிறகும், நாமெப்படிப் பேசுகிறோமோ, அதற்குத் தகுந்தவாறு சரிக்குச் சரியான பதில் மரியாதை கிடைக்கும்.
  
ஆனால், அரசூழியர்களுக்கு நாமெழுதும் கடிதங்களில் மரியாதை கொடுக்கக் கொடுக்க அவர்களுக்கே இல்லாத தகுதிகள் இருப்பதாகயெண்ணி, தன்னைத்தானே உயர்வாகவும், (உங், மக்)களைத் தாழ்வாகவும் நினைப்பார்கள் என்பதோடு, என்னதான் விதவிதமான மரியாதையோடு அவர்களுக்கெழுதும் கடிதங்களில், நீங்கள் அவர்களைக் குறிப்பிட்டாலும், உங்களுக்கு அவர்கள் அதிகபட்சம் ‘திரு’ என்ற மரியாதையை மட்டுமே பதில் கடிதத்தில் எழுதுவார்கள். பல வேளைகளில் அதுவுங்கூட இல்லாமல் எழுதுவார்கள்.
  
இதனை அரசூழியர்களிடம் இருந்து, உங்களுக்கு வந்த எந்தக்கடிதத்தை வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துச் சரிபார்த்துக் கொள்ளலாம். எனவே, அரசூழியர்களின் அதிகபட்ச மரியாதையே ‘திரு’தான் என்னும்போது, உங்களது ஊழியர்களுக்கு எழுதும்போது, நீங்க மட்டும் எதற்குக் கண்டதையும் போடவேண்டும்?

அரசூழியர்களின் லஞ்சம் அல்லது திருட்டுத்தனம் தொடர்பான கடிதங்களில் அவர்களது பெயருக்கு முன் ‘திரு(ட்டு)’ என்றுதான் எழுதுவேன். முதன் முறையாக இப்படித்தான்; ‘தேவன்’ என்ற பெயர் கொண்ட ஊழியருக்கு, வெளிப்படையாகவே ‘திரு(ட்டு). தேவன்’ என மிகப்பொருத்தமாக எழுதினேன். 

இதனைப் படித்தவர்கள் அனைவரும் மிகவும் ரசித்தார்கள். அதுகுறித்த தங்களின் கருத்தையும், தார்மீக அடிப்படையில், அவர்களாகவே வெளிப்படுத்தினார்கள். 

இவருக்கெல்லாம் ‘தேவன்’ என்று கடவுளின் பெயரையே சூட்டிய அவரின் பெற்றோர், எந்தளவிற்கு இவரைப் பெருமையாக நினைத்து, இப்பெயரை வைத்திருப்பார்கள்? நான் ‘திரு(ட்டு). தேவன்’ என்று வைத்த பெயரை அறிந்தால், மனதளவில் அவரின் பெற்றோர் எவ்வளவு நொந்து போவார்கள்?

இத்திருட்டுத் தேவன் என்பவர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில், ஓர் உதவிச் செயற்பொறி அரைகுறை ஊழியரென்பதோடு, தனக்குக் கீழான ஊழியத் திருடருக்குக் குற்ற உடந்தை மற்றும் அத்திருடரைக் காப்பாற்ற, உழைக்கும் கீழ்நிலை ஊழியர்கள் மீது அதிகார துஷ்பிரயோகம் ஆகியனவும் செய்திருக்கிறார்.

ஆகையால், என்னால், ‘திருட்டுத் தேவன்’ என்று நேரடியாகவும், எழுத்து மூலமாகவும், அத்து(றை, ரை)யின் தலைமையகம்வரை அசிங்கப்படுத்தப் பட்டதால், மேல்நிலை முதல் கீழ்நிலை ஊழியர்கள் வரையிலான கேலிகிண்டலுக்கு ஆளாகியதால், மாறுதலுக்காக வேலையை விட்டே போயிருக்க வேண்டிய இத்தறுதலை, அதற்கு மாறாகத் தனது மாறாத நோக்கத்தோடு, பணிமாறுதலை மட்டும் பெற்றுச்சென்று விட்டார். பார்த்து.., உங்கள் பகுதிக்கும் வந்திருக்கப் போகிறார், உஷார்!!  

சரி, நான் விட்ட விசயத்துக்கு வருகிறேன். 

நான் திருட்டுத் தேவனுக்கு எழுதியதைப் போல, அடைமொழிச் சொற்களை எழுச்சியோடு எழுத ஆரம்பித்தாலே, உங்களுக்குச் சட்டப்படி செய்ய வேண்டிய கடமைகளைச் செய்துவிடுவார்கள். மாறாக, எப்பொழுதும் போல அவர்களுக்கே இல்லாத, அருமை பெருமைகளை எல்லாம் எழுதினால், நம்மை இன்னுமின்னும் புகழ்ந்து எழுதித் தள்ளட்டுமென்று (பெரு, பொறு)மையாகத்தானே காத்திரு(க்கவை)ப்பார்கள்?! 

எனக்குத் தெரிய, மகாத்மா காந்தியே பொருளாதார அறிஞர் என்று ஏற்றுக் கொண்ட ஜே.சி. குமரப்பா அவர்களே, அரசூழிய ர்களை இப்படியெல்லாம் எழுதியிருக்கிறார். வேறு யாரெல்லாம், இப்படி எழுதியிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. 

நிதிபதிகளுக்கே நான் இப்படித் தகுந்த காரணப்பெயரைச் சூட்டியுள்ளதோடு, இவை குறித்து நூல்களிலும், கட்டுரைகளிலும் எழுதியிருப்பதை நீங்கள் படித்திருப்பீர்கள்; இனியும் படிக்கப் போகிறீர்கள்.   

இப்படி அரசூழியர்கள் செய்யும் குற்றங்களுக்கு ஏற்ப, நீதிபதியை ‘நிதிபதி’ என நான் குறிப்பிடுவதுபோல, அரசூழியர்களுக்கு அடுத்தடுத்து எழுதும் மடல்களில், ‘திரு’வுக்குப் பதிலாக அவர்கள் செய்யுங்குற்றம் அல்லது செய்ய மறந்த சட்டக்கடமை குறித்துத் தெளிவாக விளக்கியபின், அவ்வூழியருக்குப் பொருத்தமான காரணப்பெயரைக் கட்டாயமாகச் சேர்க்கலாம். 

தேவைப்பட்டால், அவர்களைக் கடுமையான வார்த்தைகளால்கூட விமர்சிக்கலாம். இதெல்லாம், வேறு வகையில் அர்ச்சனை செய்து, ஆராதிப்பது போல்தான்! தவறில்லை!!

ஆனால், இப்படி அரசூழியர்களை அர்ச்சனை செய்து ஆராதிப்பதை, ‘அவதூறு’ என்று அவரவரும் அறியாமையில் சொல்கிறார்கள். உண்மையில், ‘நடந்த உண்மையை, அப்பழுக்கற்ற வகையில், அப்படியே எடுத்துச் சொல்லி விமர்சிப்பது, ஒருபோதும் அவதூறு ஆகாது!’.

இனி இந்நூலில், அரசூழியர்கள் என்ற நான் குறிப்பிடும் இடங்களில் எல்லாம், சூழ்நிலைக்கேற்பப் பொது ஊழியர்களையும் குறிக்கும் பொதுச்சொல்லாகக் கருத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இவ்விரு ஊழியர்களுக்கிடையேயான வித்தியாசங்குறித்த விளக்கத்தை, இதன் அடுத்த பகுதியில் சொல்கிறேன். 

‘‘அரசூழியர்களை மட்டுமல்ல; எவரையும் மேற்சொன்ன முறையில் அர்ச்சனை செய்து, ஆராதிப்பது குற்றமன்று’’ என இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 499 இல், தெள்ளத் தெளிவாக விளக்கப் பட்டுள்ளதைப் படித்துக் கொள்ளுங்கள்.

மேலும், அப்படி விமர்சிக்க நேரும்பொழுது, இப்பிரிவைத் தவறாமல் குறிப்பிட்டு விடுங்கள். ஏன், இதனைக் குறிப்பிட்டுச் சொல்கிறேன் என்றால், நம் ‘‘நீதியைத்தேடி...’’ வாசகர்கள், இப்படி அரசு மற்றும் காவலூழியர்களை விமர்சித்து, ஓரிருவர் கடிதம் எழுதியபோது, அவ்வாசகர்கள் மீது எதிர்நடவடிக்கை எடுப்பது குறித்து, அவ்வூழியர்கள் என்னிடமே கருத்துக் கேட்டார்கள். 

இப்படிச் சொல்வது, உங்களுக்கு வேண்டுமானால், ஆச்சரிய மாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கலாம். ஆனால், எனக்கு அப்படியில்லை. ஏனெனில், நமது உண்மையான சட்ட விழிப்பறிவு ணர்வைப் பெற விரும்பும் வாசகர்கள், எல்லா மட்டத்திலும் இருக்கிறார்கள் என்பதை, ஆசிரியன் என்ற முறையில், நான் மட்டுந்தானே நன்றாக அறியமுடியும்! 

சரி, அரசூழியர்கள் கடமையைச் சரியாகச் செய்திருந்தால், வாசகர்கள் ஏன் விமர்சிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி ஒருபுறமிருந்தாலும், உண்மையில் நடந்தது என்னவென்பதை, அவ்வூழியர்களிடமே கேட்டறிந்தபோது, பெரும்பா(ழு, லு)ம் தவறு அவர்களுடையதாகத்தான் இருந்தது. 

அப்படி எழுதியது அவதூறு இல்லையென்பது குறித்தும், சட்டப்படி நடவடிக்கை எதையும் எடுக்கமுடியாது என்பதையும், அவ்வரசு ஊழிய வாசகர்களுக்கு விளக்க வேண்டியிருந்தது. 

இதனால், நிச்சயம் நடவடிக்கையெடுக்க முடியுமென்ற நம்பிக்கையில் இருந்த, அந்த ஊழியர்களின் முகத்தில் ஏற்பட்ட பெருத்த ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் என்னால் காண முடிந்தது. 

ஆனாலும், அவர்களில் யாரும் என்மீது அதிருப்தி அடைந்ததாகத் தெரியவில்லை என்பதை, அதன் பிறகும் அவர்களது மேல்நிலை ஊழியர்களின் சட்டங்குறித்த சந்தேகங்களுக்கு, எனது சட்ட ஆலோசனையைப் பெற, அவர்களே பரிந்துரை செய்திருந்ததன் மூலம் என்னால் உணரமுடிந்தது. 

ஆமாம், ‘தான் சொல்வது நீதிதான்’ என்று ஒவ்வொருவரும் உணரும் வகையில் தீர்ப்புரைக்க வேண்டியது, எப்படி நிதிபதிகளின் கடமையோ, அதுபோலவே, நாம் வரையுங்கடிதங்களும், மனுக்க ளும்,  கூறுங்கருத்துக்களும், ஆலோசனைகளும், எண்ணங்களும், நாம் சொல்லும் ‘நியாயந்தான் சட்டம்’ என்ற வகையிலேயே எச்சார்பும் தற்சார்பும் இல்லாது நடுநிலையாய் இருக்கவேண்டியது மிகமிக முக்கியம்.     

இதனால், அவ்வூழியர்கள் மட்டுமல்லர்; அவர்கள் ஊழியம் புரியுந் துறைகூட, உங்கள் மீது எவ்விதமான சட்ட நடவடிக்கையையும், சட்டப்பூர்வமாகவே எடுக்கவியலாது. இந்நிலை பொது ஊழியர்களான மாவட்ட நிதிபதிகள் வரையிலுங் கூடச் சாலப் பொருந்தும். 

அப்படியே எடுக்க முனைந்தாலும், எதிர்க்கட்சியினர் மீது ஆளுங்கட்சியினர் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகள் 500 - 503 இன்கீழ் தொடுத்த பின்னர் ஆட்சி மாறியதும், தானாகவே காலாவதியாகும் வகையிலான அவதூறு வழக்கைப் போல்தான் ஒரு வழக்கைத் தொடுக்க வேண்டியிருக்கும். 

இந்த அவதூறு வழக்கும், எப்படித் தொடுக்கப்பட வேண்டுமென்பது குறித்து, குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன்விதி 199 இல் விளக்கப்பட்டுள்ளதையும் சேர்த்து, படிச்சிக்கோங்க! 

ஆகவே, ஊழியர்கள் அவதூறு நடவடிக்கையெடுக்க முனைந்தால், அது நிச்சயம் உங்களுக்குத்தான் நல்லதாக அமையும்; அமையும் சூழ்நிலையை திறமையாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 

ஆனால், எனக்குத் தெரிய, இப்படி எந்தவொரு வழக்கும், அரசூழியர்களால் பொதுமக்கள் மீது தொடுக்கப்பட்டதாகவே தெரியவில்லை. ஆனால், குறுக்கு வழியில், வெவ்வேறு விதங்களில் பழிவாங்க முயல்வார்கள். எச்சரிக்கை!

இப்படியெல்லாம் எழுதும்போதுதான், ஆமாம், நாம் மக்களின் வரிப்பணத்தில் பெ(ரு, று)ங்கூலிக்கு ஏற்ப, நம் கடமையைச் செய்யவில்லை. அதனால்தான், அவர்கள் நம்மைத் திட்டுகிறார்கள் என்ற சூடு, சொரணையே அரசூழியர்களுக்கு வருகிறது. 

இல்லையென்றால், எருமைமாட்டின் மீது மழை பெய்ததுபோல்தான், சூடு சொரணையற்று, மக்களிடமிருந்து மேன்மேலும் என்னென்ன கிடைக்குமென்று எதிர்பார்த்துக் கிடைப்பதையெல்லாம் மேய்ந்து, வயிறை வளர்த்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். 

பசுமாடுகள் போல, சூடு, சொரணையுள்ள அரசூழியர்களும் அரிதிலு மரிதாக, ஆங்காங்கே ஓரிருவர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அவர்களில் எவருமே கவரிமானாக இருப்பதில்லை. 

ம்ம்.., கவரிமான் என்றதும், நடந்த சம்பவம் ஒன்றும், நினைவுக்கு வருகிறது. 

சோதிடர் ஒருவர், தான் எழுதிய சோதிடங்குறித்த நூலில், ‘நிதிபதி களை, நீதிமான்’ என்று குறிப்பிட்டிருந்தார். நீதிபதி என்று சாதாரணமாக எழுதியிருந்தால்கூட, நிதிபதிகளைப் பற்றிய உண்மையை அறியாதவர்கள், வழக்கமாயெழுதும் சொல்தானே என்று கண்டுங் காணாமல் விட்டிருப்பேன். 

இதிலும், அவரது கெட்ட நேரம்பாருங்க, அந்நூலில் அவரது உலாப்பேசி எண்ணை வேறு கொடுத்திருந்ததால், அவரை நேரடியாக உலாப்பேசியில் அழைத்து, நமது சட்ட ஆராய்ச்சி குறித்த அனைத்து விபரங்களையும் எடுத்துச் சொல்லிவிட்டு, பின் எனது பாணியில், ‘காசுக்காக, இப்படியெல்லாம் எழுதாதீர்கள்’ என, நாசுக்காக நான் நாலுடோஸ் விட்டதும், ‘உண்மைதான்’ என்றும், அடுத்த பதிப்பிலிருந்து நீதிமான் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு, நீதிபதி என்றே போட்டு விடுவதாகவும் சொன்னதோடு, என்னைச் சந்திக்க வேண்டுமெனவும் விருப்பம் தெரிவித்தார்’. 

ஒருவர் செய்யுந்தப்பை ஆதாரத்துடன் அவருக்கே சுட்டிக் காட்டினால், என்னவொரு கைமேல் பலன் பாருங்க! 

எனவே, அரசூழியர்களை மட்டுமல்லாது, சக பொதுமக்களையும், உறவுகளையும் விளிக்கையில், ‘அன்புமிக்க, வம்புமிக்க, (தா, நா)ய்மாமன், அறிவு வறுமைமிக்க, தம்பியை ஏமாற்றிய தமிழனின் இல்லம்’ போன்று, உங்களது சிந்தனைப்படி தனிச்சிறப்பு மிக்க வார்த்தைகளைப் பயன்படுத்திக் கொ(ள்ளு, ல்லு)ங்கள்.  

இந்தாண்டு வெளியான ‘‘மநு வரையுங்கலை!’’ நூலிலிருந்து...

**********************

சமூகம் சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற வேண்டுமென விரும்பினால், இதுகுறித்த தங்களின் கருத்தைச் சொல்லி, உங்களது சமூக வலைத்தளங்களில் பகிருங்கள்

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Tuesday, October 18, 2016

முகநூல் கணக்கை முடக்கி, கொள்கையை முடக்க முடியாது


நீண்ட நாள்களுக்குப் பிறகு, ஏதோவொரு பக்கி எனது முகநூல் கணக்கில் உள்நுழைய முயற்சித்து தோல்வியைக் கண்டிருக்கிறது. 

நான் முன்புபோல முகநூலில் நேரடியாக எதையும் பதிவிடுவ தில்லை. மாறாக, நீதியைத்தேடி... இணையப்பக்கத்தில் பதிவிட்டு, அதிலிருந்தே முகநூலில் பகிர்கிறோம். 

எனது கருத்துக்களை வரவேற்று, மற்றவர்களுக்கு பகிர நினைக்கும் எவரும் இப்படியே, அவரவர்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பகிரலாம். இதுவே சிறப்பானதும், முடக்க முடியாததும், பாதுகாப் பானதும் ஆகும்.

https://www.blogger.com/ என்பதை, இணையத்தளம் போலவே பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு கட்டணங்கள் எதுவும் கிடையாது. இதனை உருவாக்குவது குறித்து பல்வேறு காணொளிகள் இணையத்தில் இருக்கின்றன. இதன் உதவியோடு உருவாக்கிக் கொள்ளலாம்.   

எனது முகநூல் கணக்கை முடக்கினால், எனது கருத்துக்கள் வெளி வராமல் முடக்கி விடலாம் என நினைப்பது முட்டாள்தனம். 

ஆர்குட்போல, சமூக வலைத்தளமான இம்முகநூலுங்கூட ஒருநாள் இல்லாமல் போகலாம். 

ஆனால், இயற்கையின் சக்தியோடும், துணையோடும் நான் எழுத நினைக்கும் நூல்களை, ஒருபோதும் பொய்யர்களால் (மனிதர்களால்) தடுக்கவோ, எனது கருத்துக்களை இல்லாமல் செய்யவோ இயலாது.

நான் தடைக் கற்களுக்குப் பயந்து பின்வாங்குபவன் அல்ல; மாறாக, அத்தடைக் கற்களையே படிக்கற்களாக மாற்றி ஏறி மிதித்து செல்பவன். ஆகையால், என்னை தடுக்க நினைக்கும் ஒவ்வொரு செயலும் என்னை வலுப்படுத்தவும், உற்சாகம் கொள்ளவுமே செய்யும்.

ஆகையால், உங்களது தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல், திருட்டுத்தனங்களை தொடருமாரும் கேட்டுக் கொண்டு, வெற்றி பெற வாழ்த்துகிறேன். 

சரி நம்ம விசயத்துக்கு வருவோம். 

முகநூல் கணக்கை பாதுகாக்க பல அறிவார்ந்த யோசனைகள்!

உங்களது முகநூல் கணக்கை உங்களது சொந்த உலாப்பேசி, கணினி, மடிக்கணினி தவிர வேறொருவருடைய சாதனங்களில் திறக்காதீர்கள். 

இதிலும், கூடுமானவரை ஒரே உலாவியில் (internet explorer, mozilla firefox, Chrome) திறக்க முயற்சியுங்கள். வெவ்வேறு ஊர்களில் இருந்து திறக்கும்போது, அது நீங்கள்தானா என்பதை உறுதி செய்யச் சொல்லும்போது சரியாக சொல்ல வேண்டும்.   

மற்றவர்கள் முன்னிலையில், முகநூல் உள்ளிட்ட எந்தவொரு கணக்கையும் திறப்பதையும், உலவுவதையும் கட்டாயம் தவிர்க்கவும். 

வழக்கமாக பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரிகள், பலருக்கும் தெரியும் என்பதால், யூகத்தின் அடிப்படையில் அந்த மின்னஞ்சல் முகவரியை கொடுத்து முகநூலின் உள்ளே நுழைய முயற்சித்து முடக்கப் பார்ப்பார்கள். 

ஆகையால், முகநூல் போன்ற முக்கிய சமூக வலைத்தளப் பக்கங்களுக்கு அல்லது இதர தேவைகளுக்கு என தனித்தனியாக, அது சார்ந்த பெயரிலேயே உருவாக்கிக் கொள்வதும், அதுகுறித்து இரகசியம் காப்பதும், நம்மை எவ்விதத்திலும் அசைத்துப் பார்க்க முடியாதது ஆகிவிடும். 

மேலும், ஜிமெயிலில் உள்ளே நுழைவதற்கு முன்பாக, நமது உலாப்பேசி எண்ணுக்கு கடவுச்சொல் வரும்படி அமைத்துக் கொள்ளவும், உங்களது சொந்தக் கணினியில் திறக்கும்போது இக்கடவுச் சொல்லை தவிர்க்கவும் வசதி உள்ளது. இதைப் பயன்படுத்தி மேன்மேலும் வலுப்படுத்திக் கொள்ளலாம். 

இப்படி ஒவ்வொன்றுக்காக உருவாக்கப்படும் மின்னஞ்சல் முகவரிகளை எல்லாம் தனித்தனியாக பிரித்துப் பார்ப்பது மிகுந்த சிரமம் ஆயிற்றே என்ற கவலையும் வேண்டாம்.

நமது எண்ணுக்கு வரும் உலாப்பேசி அழைப்புக்களை, வேறு எண்ணுக்கு மாற்றி விடுவதுபோல, நமது சில மின்னஞ்சல்களை ஒரே மின்னஞ்சலுக்கு வரும்படி அமைத்துக் கொள்ளும் வசதியும், எந்த மின்னஞ்சல் வழியாக தகவல் வந்ததோ, அதே மின்னஞ்சலில் இருந்தோ அல்லது வேறு மின்னஞ்சலில் இருந்தோ பதில் அனுப்பும் வசதியும் உள்ளது.

இதையெல்லாம் அறிந்து, சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்காததால்தான், தெரிந்தவர்கள் முடக்க முயற்சிக் கிறார்கள். அவ்வளவே! 

சமூகத்திற்கான விழிப்பறிவுணர்வு பதிவுகளை ஈடுபவர்கள், அதனை நேரடியாக முகநூல் பதிவிடாமல், இணையப்பக்கத்தில் பதிவிட்டு அதன் வழியாக சமூக வலைத்தளங்களில் பதிவிடவும். 

இலவசமான இணையப்பக்கத்தை பிளாக்கரில் வலைப்பூவாகப் பெறலாம். குறைந்த கட்டணத்தை செலுத்தி இணைய முகவரியை பதிவு செய்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. 

இப்படி சில ஆண்டுகளாக நான் பதிவிட்ட சுமார் 180 பதிவுகள், தற்போது வரை இத்தளத்தில் இருக்கின்றன. இப்பதிவுகள் குறித்து பின்னூட்டமிடு பவர்களுங்கூட, முகநூலில் பின்னூட்டமிடாமல் இணையப்பக்கத்தில் பதிவிடுவது நல்லது.

எனது முகநூலில் இட்டப்பதிவுகளை முடக்குவதற்கான முயற்சிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டத்தில், ஒருமுறை முடக்கப்பட்டும் விட்டது. இதற்குப் பிறகுதான், இவற்றையெல்லாம் ஆராய்ந்து, வழக்கம் போலவே உங்களுக்கும் இந்த வழிமுறைகளை முன்மொழிந்து உள்ளேன். 

இப்படி செய்வதன் மூலம் தங்களது கருத்துக்களை எக்காலத்திலும் யாரும் முடக்க முடியாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.       

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Monday, October 17, 2016

உரிமையியல் வழக்குக்களிலும் அச்சப்பட வேண்டும்


பொதுவாக குற்றவியல் வழக்குக்களில் இருக்கும் பயம், உரிமையியல் வழக்குகளுக்கு இருப்பதில்லை. ஆனால், குற்றவியலைப் போன்றே உரிமையியல் வழக்குக்களிலும் அச்சப்பட வேண்டும். 

ஏனெனில், நம்மீது குற்றவியல் வழக்கு நடப்பது நமக்கு நன்றாக தெரியும். ஆகையால், நம்மால் இயன்ற அளவிற்கு தற்காத்துக் கொள்ள முடியும். ஆனால், உரிமையியல் வழக்குக்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியாமலேயே நடத்தி, அவர்களின் சொத்துக்களை அபகரிக்க முடியும்.

இதுபற்றி 2009 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட ‘‘நீதியைத்தேடி... சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்’’ நூலில் தேவையான அளவிற்கு சொல்லி உள்ளேன். இந்நூலைப் பிழைத்திருத்தம் செய்து தந்த அன்பர், இந்த விசயத்தைப்பற்றி தன் அதிர்ச்சியை தெரிவித்தார். 

பொய்யர்கள் மற்றும் நிதிபதிகளின் இதுபோன்ற கூட்டுக்களவாணி தனத்திற்கு, நாளிதழ்கள் மிகுந்த ஒத்துழைப்பை வழங்குகின்றன என்பதைப்பற்றியும், அதனை தடுக்க முயன்ற எனது பல்வேறு யுக்திகள் குறித்தும் ‘‘சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்’’ நூலிலேயே எழுதியுள்ளேன்.

மோட்டார் வாகன விபத்து வழக்குக்கள் என்றால், போக்குவரத்து காவலூழியர்களும் கூட்டுக்களவாணிகளாகவே இருப்பார்கள்.  

நாளிதழ்களில் இப்படி வரும் விளம்பரங்களை வைத்து, அதிலுள்ள முகவரிக்கு நாளிதழில் வெளியான அவ்வழக்கு அறிவிப்பு குறித்து, அஞ்சலட்டை ஒன்றை அதற்கான பிரத்தியேக வைத்திருக்கும் நோட்டுக்கு அடியில் கார்பன் வைத்து எழுதிப் போடுவேன். நாளிதழ் விளம்பரத்தையும் அந்நோட்டிலேயே ஒட்டி வைப்பேன்.  

அவ்வஞ்சல் அட்டை சிலருக்கு போய்ச்சேரும். அவர்களில் சிலர் நன்றி சொல்லுவார்கள். அறிவுவறுமை வாதிகள் சிலர், நான் ஏதோ, பிராடு பண்ணி கடிதம் அனுப்பியதுபோல, ‘‘எனக்கு தெரியாமல் என்மீது எப்படி வழக்கு இருக்கும் என எகிறுவார்கள்’’. இப்படி காவலூழியர் ஒருவரே எகிறினார். 

பத்திரிகையில் வந்த செய்தியை காட்டி, ‘‘உன் வீரத்தை நீதிமன்றத்தில் போய்காட்டு; உன்மீது இவ்வழக்கு இல்லை யென்றால், அஞ்சலட்டையை ஆதாரமாக வைத்து என்மீது வழக்குபோடு’’ என்று பதிலுக்கு நானும் எகிறி விட்டேன். 

வேறு வழியில்லாமல் நீதிமன்றத்துக்கு சென்று விசாரிக்க வழக்கு இருக்கவே, என்னிடம் மன்னிப்பு கேட்டார். ஏனெனில், வழக்குக்கள் இல்லாமல், இதுபோன்ற அறிவிப்புகள் வராது. ஆனால், இப்படி வரும் வழக்குக்களில் பெரும்பா(ழா, லா)னவை பொய்யான வழக்குக்க ளாகத்தான் இருக்கும்.    

ஆகையால், சிலருக்கு போய்சேராமல் எனக்கே திரும்ப வரும். அதற்கான காரணமும் அஞ்சல் பட்டுவாடா ஊழியர்களால் எழுதப்பட்டிருக்கும். 

இப்படி குறிப்பெழுதி வந்தால், அதனையே இந்திய அரசின் (இந்திய அஞ்சல் சான்று) தக்க ஆதாரச் சான்றாக வைத்து, உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908 இன் கட்டளை 1 விதி 8அ இன் கீழ், இடைமனு ஒன்றை அஞ்சல் வழியாக அனுப்பி வைத்து, அவ்வழக்கை மேற்க்கொண்டு விசாரணை செய்ய முடியாத அளவிற்கு விசாரணைக்கு தடை போட்டு விடுவேன். இதுபற்றி நீதியைத்தேடி... நூல்களில் சொல்லி உள்ளேன்.

மேலே உள்ள விளம்பரத்தை வைத்து, இந்த வழக்கு பொய்யாகப் புனையப்பட்டுள்ளது என்பதை எடுத்த எடுப்பிலேயே எளிதில் அறியலாம். 

எனெனில், உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908 இன் கட்டளை 5 விதி 20(1)(1) இன்படி, ‘‘யாருக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதோ, அவர் வசிக்கும் அல்லது தொழில் செய்யும் பகுதியில், அவ்வட்டார மொழியில் வெளியிட வேண்டும்"

இதன்படி பார்த்தால், இந்த விளம்பரத்தை அந்தமான நிக்கோபார் தீவில்தான் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், இவ்விளம்பரம் இன்று 17-10-2016 அன்று, சென்னை தினமலர் பக்கம் 12 இல் வெளியாகி உள்ளது. 

இதில் கொடுமை என்னவென்றால், கூட்டுக்களவாணி நிதிபதியே தமிழ் நாளிதழில் செய்தி வெளியிட வேண்டும் என்று சொல்லிருப்ப தற்கான இணையப்பக்க ஆதாரமிது!


இது வெளியான பின்பும், மீண்டும் பத்திரிகையில் வெளியிட வேண்டுமென நிதிபதி சொல்லியுள்ளார். ஆனால், தமிழ் நாளிதழில் என்பதை சொல்லாமல், நிதிபதி தப்பித்து விடுகிறார். ஆனால், பொய்யரோ தமிழ் நாளிதழில் வெளியிட்டுள்ளார். 


இதனை வழக்கில் பொய்யர் ஆதாரமாக அவிடாவிட்டுடன் தாக்கல் செய்ய, நிதிபதி என்ன நஷ்டஈடு உத்தரவைப் பிறப்பிக்க வேண்டுமோ அப்படியே பிறப்பித்து முன்பாகவே பங்கிட்டுக் கொண்ட பணத்தை ஈடு செய்வார்கள். அவ்வளவே!  

மோட்டார் வாகன விபத்தில், ஓர் இனக்கலவர வழக்குக்களை விசாரிக்கும் நிதிபதியே, இப்படி கொள்ளையடிக்கிறார் என்றால், உண்மையான இனக்கலவர வழக்குக்களில் குற்றவாளிகளை விடுவிக்க எப்படியெல்லாம் கொள்ளையடிப்பார்கள் என்பதை யோசித்துக் கொள்ளுங்கள். 

பொய்யர்கள் மற்றும் நிதிபதிகளின் குற்றங்களை மக்கள் போதிய சட்ட விழிப்பறிவுணர்வுடன் தடுத்து, பொய்யர்களை ஒழித்துக் கட்டாதவரை நாம் எந்தவொரு முன்னேற்றத்தையும் காணமுடியாது. காண முடியுமென நம்புவதும், கானல் நீரைக் காண முயற்சித்தது போல்தான்! 
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)