வக்கீல் என்றாலே, "கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!!" என்ற தத்துவத்தை நான் முன்மொழித்ததில், எந்த மாற்றுக் கருத்தும், எக்காலத்திலும் இருக்க முடியாது.
ஒவ்வொரு பொய்யரும், தங்களுக்கு கிடைக்கும் கூலிக்காக வழக்கின் உண்மைகளை திரித்துப் பொய்ச்சொல்லி மாரடிக்கிறார்கள். புகழ்பெற்ற பொய்யர்கள் நிதிபதிகளுடன் இடைத்தரகு செய்தும், இலஞ்சங் கொடுத்தும் தீர்ப்பை வாங்குகிறார்கள்.
ஆனால், இந்த செய்தியோ ஏதோ இப்பெண் நிதிபதியும், பொய்யரும் மட்டுமே லஞ்சம் வாங்கியது போன்று, அதிசயமாய் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
பெண்கள் லஞ்சம் பிச்சை எடுப்பதற்கு சற்றும் தயங்குவதில்லை என்பதோடு, ஆண்கள் லஞ்சப் பிச்சை எடுப்பதிலும், அவரைச் சார்ந்த பெண்களுக்கு பெரும் பங்குண்டு.
இதுபோன்றெல்லாம் செய்வார்கள் என்பதால்தான், நில சம்பந்தமான வழக்குக்களில், பொய்யர்களை ஆணையர்களாக நியமிப்பதை தடுத்து, அந்நிலப் பகுதிக்கு உரிய கிராம நிர்வாக ஊழியரிடம் இருந்து அரசு ஆவணங்களைப் பெற்றோ அல்லது அவரையே களப்பணி செய்தோ உண்மையை எடுத்துரைக்கும்படி கோரவேண்டும்.
இதன் மூலம், ஆணையர்களாக நியமிக்கப்படும் பொய்யர்களுக்கு வழக்குதாரர் கொடுக்க வேண்டிய பெருங்கூலியை தவிர்ப்தோடு, சரியான நியாயத்தையும் பெற முடியும் என்கிற அரிய தகவலை, "நீதியைத்தேடி... சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்" நூலில் சொன்னேன்.
மேலும், எனக்கு தெரிய பொய்யர்களைத்தான் ஆணையர்களாக நியமிக்க வேண்டுமென எந்த சட்ட விதியும் சொல்லவில்லை.
ஆனால், நிதிபதிகள் இதுபோன்று கொள்ளையடிப்பதற்காகவே, தங்களோடு இடைத்தரகில் உள்ள பொய்யர்களை ஆணையர்களாக நியமிக்கிறார்கள் என்பது உங்களுக்கெல்லாம் தெரியாத ரகசியம்.
ஆகையால், நீங்கள் நடத்தும் நிலம் சார்ந்த வழக்குக்களில் மிகுந்த எச்சரிக்கையோடு இருங்கள்.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment