No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Thursday, September 29, 2016

நியாயத்தின் அளவுகோல் என்ன?!


‘‘நியாயந்தான் சட்டம்; அதற்கு தேவையில்லை வக்கீல் (பொய்யர்) பட்டம்’’ என்பது, நமது சட்ட விழிப்பறிவுணர்வுக் கொள்கையின் அடிப்படையில் நான் முன்மொழிந்துள்ள தாரக மந்திரம். 

நியாயம் என்பது, ஒவ்வொருக்கும் தக்கவாறு வேறுபடும் என்றும் ஆகையால், இந்நியாயத்தின் அளவுகோலை கணக்கிடுவது இயலாத காரியமென்றும் அறிவுவறுமை பெருமாக்கள் சொல்லுவார்கள்.

ஆனால், ஓர் ஆராய்ச்சியாளனாக, நியாயத்தை கணக்கிடும் முறை குறித்த தெளிவானதொரு முடிவை, அதிகாரப்பூர்வமாக பத்து வருடங்களுக்கு முன்பே சொல்லி விட்டேன். 

ஆமாம், 2006 ஆம் ஆண்டில் எழுதிய நீதியைத்தேடி... குற்ற விசாரணைகள் என்ற பொதுவுடைமை நூலில், நமக்கு நியாயம் இருக்கிறதா என்பதை சோதனை முறையில் அறிய, 

‘‘நமக்கு யார் அநியாயம் செய்து விட்டார்கள் என எண்ணுகிறோமோ, அவர்கள் இடத்தில் இருந்து நாம் பார்க்க வேண்டுமென்றும், அப்படிப் பார்க்கும் போது, நாமும் அதையேத்தான் செய்திருப்போம் என்றால் அவர்கள் செய்ததும் நியாயமே’’ என்ற அடிப்படையில் தீர்வுகாண வேண்டுமென சொல்லியுள்ளேன்.

இதனை நீதியைத்தேடி... வாசகர்கள் உணர்ந்தார்களா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. இதிலும், பொய்யர்களைப்போல நிதியைத்தேடி... அலையும் வாசகர்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. 

ஆனாலும், வாசகர்களை எச்சரிப்பதற்காக சொல்ல வேண்டிய இடத்தில், சொல்ல வேண்டிய வாசகர்களைப் பற்றி, வரிசையாக எழுதிவரும் நூல்களில் சொல்லிக் கொண்டேதான் வருகிறேன்.   

சிபிஐ விசாரணை, சாதாரண காவல்துறை விசாரணையைப் போல் இரண்டாந்தரம், மூன்றாம் தரம், நாலாந்தரம் என இல்லாமல், சிறப்பான முதல்தரமானதாக இருக்கும் என்று சொல்லப்படும். 

ஆமாம், காவல்துறை காவலில் மட்டுமல்லாமல் நீதிமன்ற காவலில் இருந்த ராம்குமார் சந்தேகத்திற்கு இடமான நிலையில் மரணித்து இருக்கிறார். 

ஆனால், பொதுவாகவே சிபிஐ புலனாய்வு விசாரணையில் யாரும் மரணம் அடைவதில்லை. இதுபோலவே, இவர்கள் தாக்கல் செய்யும் குற்ற வழக்குக்களில் விடுதலையாவதும் அரிது. ஆனால், இவை அரசியல் தலையீடு உள்ள வழக்குக்களுக்கு பொருந்தாது என்பது நான் சொல்லித்தான், உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதும் அன்று.  

இதனால்தான், எதற்கெடுத்தாலும் சிபிஐ விசாரிக்க வேண்டுமென்கிற கோரிக்கை, நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.  ஆனால், இந்த தற்கொலை செய்தியோ சிபிஐ விசாரணை காவல்துறை விசாரணையைப் போலவே இருந்தது எனவும், இதுவே எங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரது தற்கொலைக்கும் காரணம் என்று இலஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட மத்திய அரசு ஊழியர் தனது தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். 

உண்மையில், இவர் இலஞ்சம் வாங்கவில்லை என்றால், ‘‘இலஞ்சம் வாங்காத என்னை இலஞ்சம் வாங்கினேன் என்று கைது செய்ததோடு, செய்யாத குற்றத்துக்கு விசாரணை என்றப் பெயரில் துன்புறுத்தினார்கள். ஆகையால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன்’’ என்று எழுதியிருந்தால், இவருக்கு நியாயமிருக்கிறது என நாம் நம்பமுடியும். 

ஆனால், இப்படிச் சொல்லவே இல்லை. இந்த நாளிதழ் செய்தியில், அந்த செய்தி இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கும் வாய்ப்பில்லை.

இதுபோன்ற தற்குறிகளின் தற்கொலை கடிதங்களை மரண வாக்குமூலமாக அப்படியே ஏற்கலாமா என்பது பற்றியும், எந்தெந்தச் சூழ்நிலையில் ஏற்கலாம் என்பது பற்றியும் விரிவாக ஆராய்ந்துதான் கட்டுரை எழுதவேண்டும்.   

தங்களின் குடும்ப மானம் போய்விட்டது என்ற அடிப்படையிலேயே இவர்கள் அனைவரும் குடும்பத்தோடு இரண்டு இரண்டு பேராக தற்கொலை செய்து கொண்டனர் என்றுதான், என்னால் அனுமானிக்க முடிகிறது.  

மேலும், குடும்ப மானம் போனதால், தற்கொலை செய்து கொண்ட மனைவி மற்றும் மகளின் முதல் தற்கொலையே இவர்களது தற்கொலைக்கும் காரணமாக இருக்கும் என்பதையும் நாம் உணரலாம். 

மொத்தத்தில், உல்லாசமாக வாழ வாங்கிய இலஞ்சமே, நால்வரின் உயிரைக் குடித்திருக்கிறது.   

இலஞ்சம் வாங்கக்கூடாது என்று சட்டம் சொல்கிறது. ஆனால், நீங்கள் வாங்கினீர்கள். அதேபோல, புலன் விசாரணைக்கு உட்படும் நபர்களை துன்பப்படுத்தக்கூடாது என சட்டம் சொல்கிறது. ஆனாலும், உங்களைப் போலவே அவர்களும் சட்டத்தை மீறி செய்கிறார்கள். அவ்வளவுதான்! 

ஆமாம், நான் இலஞ்சம் வாங்கினேன் என அரசூழியரான இவர்கள் ஒத்துக் கொள்ளப் போகிறார்களா, இல்லையே! மாறாக, லஞ்சமே வாங்கவில்லையென வாங்கிய லஞ்சத்தை பொய்யருக்கும், நிதிபதிகளுக்கும் கொடுத்து அல்லவா விடுதலையாவீர்கள்!!

ஆமாம், ‘‘இலஞ்சம் வாங்கினேன் சிறையில் அடைத்தார்கள்; இலஞ்சம் கொடுத்தேன் வெளியில் விட்டார்கள்’’ என்ற வரிகள்தானே உண்மை!!!   

உங்களுக்கொரு நியாயம்; மத்தவங்களுக்கொரு நியாயமா? 

தர்மத்துக்கு தக்கபடி தர்மமாக நடந்து கொள்ள வேண்டும். 

நியாயத்துக்கு தக்கபடி நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். 

சட்டத்துக்கு தக்கபடி சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும்.  

இல்லையெனில், மற்றவர்களும் உங்களது சட்ட விரோதத்துக்கு தக்கபடி சட்டப்படியோ அல்லது சட்டத்துக்கு விரோதமாகவே நடந்துதான் ஆகனும். 

நியாயத்துக்கு விரோதமான சட்டங்களையுங் கூட, சட்டப்படியே சந்திக்க முடியும். இதற்கு சத்தியவான் காந்தி நல்லதொரு உண்மை!

இந்த கோணத்தில்தான், நான் எதையும் ஆராய்ந்து அனுகுகிறேன். இதனால்தான், எனது சட்ட ஆராய்ச்சி உட்பட அனைத்துப் பயணம் எந்தவித இடையூரும் இல்லாமல் நாளுக்குநாள் முன்னேறிக் கொண்டு இருக்கிறது எனவும் நம்புகிறேன். 

இனியும், நான் எந்த நிலையில் இருந்தாலும், இதைத்தான் அனுசரிப்பேன். இது சட்டத்தால், சட்டத்தை சத்தியத்தின் வழியில் சந்திப்பது ஆகும். ஆகையால், ஒருபோதும் (க, ந)ஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை.  
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)