நம்மால் முடியவே முடியாது என்று நினைத்த ஒரு செயலை, இவ்வுலகின் ஏதோவொரு மூலையில், யாரோவொருவர் சர்வ சாதாரணமாக செய்து கொண்டுதான் இருக்கின்றார் என்பதை எல்லோருமே ஒப்புக் கொள்வதோடு, அது எப்படி சாத்தியம் என பிரம்மித்து நிற்கிறோம் அல்லவா?!
ஆமாம், நாம் ஒவ்வொருவருக்கும், வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும், அதில் வெற்றி பெறுவதென்ன அரிதிலும் அரிதாக வெகுசிலரே! இப்படிப்பட்டவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ ஒரு ரகசியத்தை பின்பற்றி வந்திருக்கிறார்கள் என்பதே அவர்களது வெற்றிக்கான காரணம் என்பதைக் குறித்து, இதன் முடிவில் சொல்கிறேன்.
உடனே, வழக்கம் போலவே, மிகவும் புத்திசாலித்தனமாக முடிவாக என்ன சொல்கிறேன் என்பதை அறிவதற்காக தாவி விடாதீர்கள். தொடர்ந்து படித்தால் மட்டுமே, பல ரகசியங்கள் புரியும்; இதனால் ரகசியத்தின் முடிவும் புரியும்!
நம் வெற்றிக்கும், தோல்விக்கும் என்ன காரணம் என்பதை, வெற்றி பெற்றவர்களும் சிந்திப்பதில்லை; தோல்வியடைந்தவர்களும் சிந்திப்பதில்லை.
ஆனால், வணிக ரீதியாக வெற்றி பெற்றவர்கள் மட்டும் தங்களைத் தங்களே, ‘உழைப்பால் உயர்ந்தவர்கள்’ என சொல்லிக்கொள்வர். அதனை தங்களது வதந்தியான வணிக விளம்பரத்திலுங்கூட, வெற்றிக் களிப்போடு விளம்பரப்படுத்திக் கொள்வர்.
ஆனால், உண்மையில் இப்படிப்பட்டவர்கள் அனைவருமே, ஏதோவொரு விதத்தில் அவர்களுக்காக அல்லது அவர்களிடம் உழைத்த பலரது உழைப்பைச் சுரண்டி உயர்ந்தவர்களே என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. ஏனெனில், பலரின் உழைப்பைச் சுரண்டாமல், எவர் ஒருவரும் ஒருபோதும் பொருளாதார ரீதியாக மட்டும் உயர்வடையவே முடியாது.
சரி, நம்ம ரகசிய விசயத்துக்கு வருவோம். ‘என் வாழ்க்கையே நான் உங்களுக்கு சொல்லும் செய்தி’ என தாத்தா காந்தி சொன்னது போல, எனது சட்ட ஆராய்ச்சியை முன்வைத்து, இந்த ரகசியத்தைச் சொன்னால், எனது விளக்கத்திற்கும், உங்களின் புரிதலுக்கும் மிக எளிதாக இருக்கும் என நம்புகிறேன்.
மேல் நிலைக்கல்வி வரை மட்டுமே பயின்று தனியார் நிறுவனத்தில் சாதாரண ஊழியனாக கடமையாற்றிய காலத்தில் ஏற்பட்ட சட்ட சிக்கல்களை களைவதற்காக அறிவாளிகள், மேதைகள், எல்லாம் தெரிந்தவர்கள் என நம்பியவர்களை நாடு முழுவதும் சந்தித்து உரையாடிய போது, எனது கேள்விக்கான பதிலை அவர்களால் தர முடியவில்லை. இதனை வெளிப்படையாக சொல்ல வெட்கப்பட்டு மறைப்பதற்காக, என்னை கடிந்து கொண்டனர்.
அவரவர்களும் தங்களுக்கு தெரிந்ததை சொல்கிறார்கள். ஆனால், அவைகள் சட்டப்படியோ, நியாயப்படியோ சரியானவைகள் அன்று என்பதும், அவர்களும் அவ்விடயத்தில் அறிவாளிகளன்று என்பதும், பதவி மற்றும் பண சுகத்துக்காக அரசூழியத்தில் அல்லது பிற வழி வகைகளில் அதிகாரத்தை உருவாக்கிக்கொண்டு அறிவு வறுமையோடு செயல்படுவதால், எனக்கு ஏற்பட்ட சட்டச் சிக்கல்கள் போல, நாட்டில் உள்ள அனைவருக்கும் சட்ட சிக்கல்கள் இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.
ஆகையால், சட்டத்தை ஆராய்ந்து, அதனை அனைவருக்கும் தெளிவுப்படுத்த வேண்டும் என்கிற "ஞானோதயம்" ஏற்பட்டது. உண்மையில் இந்த ஞானோதயம் ஏற்பட்ட போது, சட்ட நூல்கள் எங்கு கிடைக்கும், என்ன மொழியில் கிடைக்கும், அதனை எப்படி படித்து புரிந்துகொள்வது என்பது உட்பட எதுவுமே தெரியாது.
இதுவே தெரியாத போது, வாசகர்களின் ஆதரவோடு இதழை எழுதுவேன். அந்த இதழ்கள், மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நிதியுதவியோடும், வாசகர்களின் நிதியுதவியோடும் நூல்களாகும்; இந்நூல்கள் நூலகங்கள் உட்பட எல்லா நிதிபதிகளுக்கும் படிப்பதற்காக கொடுக்கப்படும்...
அளவு கடந்த அதிகாரங்களை பெற்றுள்ளவர்களாக சமூகத்தால் கருதப்படும் நிதிபதிகளின் யோக்கியதை, இந்நூல்களில் சந்தி சிரிக்கும். ஆனாலும், அவர்களால் சட்டப்படி நடவடிக்கை எதையும் எடுக்கமுடியாது...
எனக்கு ஏற்பட்ட இந்த ஞானோதயம், மிகவும் சரியே என சமூக சீர்த்திருத்தவாதிகளான மகாத்மா காந்தியும், பகுத்தறிவுப் பெரியாரும், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சியும், இன்னும் அறியப்படாத பலரும், அவரவர்களும் வாழ்ந்த காலத்திலேயே முன்மொழிந்திருப்பார்கள் என எதுவுமே தெரிந்திருக்க வாய்ப்பில்லைதானே?
ஆனால், இன்று இத்தனையும் (இதற்குள் எத்தனையெத்தனையோ இருக்கின்றன. விரிவஞ்சி விட்டுவிடுகிறேன். ஆனாலும், இறுதியாக பொய்யர்களும், அவர்களின் தொழிலும் ஒழிந்து போகும். இது எனது சபதமன்று; காலத்தின் சபதம்!) நடந்திருப்பதற்கான / நடக்கப் போவதற்கான காரணமென்ன என்பதை அறியவும், இதுபோன்றே தங்களின் உன்னதமான எண்ணங்கள் ஈடேறவும், இந்த காணொளி ரகசியத்தை காணுங்கள்.
அத்துப்படியாகும் வரை பாருங்கள். பயன் பெறுங்கள். உன்னத நோக்கத்திற்காக உங்களை ஈன்றெடுத்த இருந்த பாருக்கு பயனுள்ளவர்களாய் இருங்கள். தங்களைப் போலவே, ஒவ்வொருவரும் பயனுள்ளவராய் இருக்க பகிருங்கள்.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment