No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Saturday, September 24, 2016

எதிர் வழக்காடுதலும், வழக்காடுதலே!


24-09-2016 அன்று நம் நீதியைத்தேடி வாசகர் ஒருவரிடம் இருந்து வந்த மின்னஞ்சல் விவரமிது! 

வணக்கம் தோழர்,

தங்களின் சட்ட ஆராய்ச்சி நூல் வரிசையில்,  5-வது வெளியீடான "சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி?" என்ற நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன்!

இந்நூலில், "மகான்களின் மகிமையும், மடத்தனமும்" என்ற தலைப்பிலான கட்டுரையில் (பக்கம் -38, 39)," தந்தை பெரியார், பகுத்தறிவாதிகளுக்கு மகான். மூடநம்பிக்கையை ஒழித்து, பகுத்தறிவுக்கு வித்திட்ட பகலவன். எண்ணம், சொல், செயல் அனைத்தும் தெளிவானதாகவும், நுட்பம் மிக்கதாகவும், பகிரங்கமானதாகவும் இருக்கும். இவரது கொள்கை,  (சிந்தனை)  அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று எண்ணியவர்.

ஆனால், தான் வாழும்போதே தனது கருத்துக்களைப் பொதுவுடமை என்று அறிவிக்காமல் விட்டுவிட்டார். விளைவு? அவரின் ஆதரவாளர்களுக்குள், தங்களுக்கே அவை "அறிவுசார் சொத்துரிமை" யாக வேண்டும் என வழக்கு -தகராறுகள் எழுந்து, நீதின்றமன்றங்கள் வரை சென்று, இறுதியாக யாருக்கும் தனியுரிமை கிடையாது என்ற நிலையில் இருக்கிறது" என்று எழுதியுள்ளீர்கள்.

மேற்கண்ட தங்களின் கருத்தில், நான் முரன்படுகிறேன்! காரணம், மிக உன்னதமான நோக்கத்துக்காக பத்து வருட உழைப்பில் உருவாகியுள்ள நூலில், கருத்துப்பிழை இருக்கக்கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் மட்டுமே!

கீழ்க்காணும் சிறிய விளக்கத்தையும் தாங்கள் ஆய்வு செய்யக்கோருகிறேன்.

"தோழர் கொளத்தூர் மணி" யை தலைவராகக் கொண்டுள்ள, திவிக என்ற அமைப்பு "குடியரசு" பத்திரிக்கைத் தொகுப்புக்களை பொதுவுடமை நோக்கில் வெளியிட முனைந்தபோது,திராவிடர் கழகம் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குப்போட்டது. அதில், பெரியார் நூல்களைப் பொதுவுடமையாக்கினால் பிற்போக்குவாதிகள் சிலர், அவரின் கருத்துக்களை திரித்து வெளியிட்டு விடுவார்கள். ஆகவே, "பெரியார் சுயரியாதைப் பிரச்சார இயக்கம்" மட்டுமே வெளியிட வேண்டும் என்று வாதாடியது.

ஆனால், பெரியார் சிந்தனைகளையும் நூல்களையும் நீதிமன்றம் அரசுடமையாக்கி தீர்ப்பளித்துள்ளது. இவ்விடயத்தில் தாங்களுடன் நான் முரன்படுவது, அறிவுசார் சொத்துரிமைக்காக பெரியார் ஆதரவாளர்கள் வழக்கிட்டுக் கொண்டனர் என்பதில்தான்.

திராவிடர் கழகம் மட்டுமே, அறிவுசார் சொத்துரிமை கொண்டாடியது. ஆனால், திவிக-வோ பொதுவுடமையாக்க வேண்டுமென வாதாடியது. -நன்றி

இப்படிக்கு
நா.தங்கவேல்

விளக்கப் பதில்: 

முதலில் உங்களுக்கு தோன்றியதை எடுத்துரைத்ததை வரவேற்கிறேன்.                

நான் எதையுமே நுனிப்புல் மேய்வதுபோல மேலோட்டமாக எதையும் எழுதுவதில்லை. ஆழ்ந்தும், ஆராய்ந்தும்தான் எழுதுவேன். இதற்கென பல்வேறு யுக்கிகளை கையாளுவேன்.

உண்மையில், நீங்கள் என்னோடு முரண்படவில்லை; ஒத்துப் போகிறீர்கள்.

ஆமாம், நீங்கள் சொன்ன அனைத்தையும் நானும் அறிவேன். இது தொடர்பான வழக்கு ஆவணங்களையும் தோழர் மணியிடம் இருந்து பெற்றுள்ளேன்.

நீங்கள் குறிப்பிடும் பகுதியில், ‘‘இறுதியாக, யாருக்கும் தனியுரிமை கிடையாது என்ற நிலையில் இருக்கிறது’’ என்பதோடு முடித்து விட்டேன். மற்றபடி, யார் செய்தது சரி, தவறு என்ற விடயத்திற்குள் போகவில்லை.

ஆனால், நீங்கள் வழக்கு விடயத்திற்குள் சென்று உங்களது ஆதரவு தரப்பை எடுத்துரைக்கிறீர்கள்.

அதாவது தொடரப்பட்ட ஒரு வழக்கில், ‘‘எதிர்தரப்பினர் தங்களின் தரப்பை எடுத்துச் சொல்வதும் வழக்காடுதலே’’ ஆகும். நீங்கள் எதிர் வழக்காடவில்லை எனில் வழக்கு தொடுத்தவரின் வழக்குரிமை நிலைநாட்டப்படும். அவ்வளவே!

தீர்ப்புக்களை திரித்து எழுதுவதில் வல்லவரான நிதிபதி கேனச் சந்துரு, தீர்ப்பை மாற்றி எழுதியிருந்தால், உங்களது தரப்பு மேல் முறையீடு செய்யுந்தானே?!

இதன் மூலம் நான் முக்கியமாக சொல்ல வருவது, ‘‘சட்டஞ் சார்ந்த விடயங்களில் மகான்களும் மடத்தனமாக இருந்து விடுகிறார்கள்’’ என்பதே.

பகுத்தறிவு பெரியார், என்னைப்போலவே தன் கருத்துக்களை பொதுவுடைமை என அவர் வாழுங் காலத்திலேயே அறிவித்திருந்தால், நாம் இப்படி கருத்துப் பறிமாற வேண்டிய அவசியம் எழுந்திருக்காது.    


பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

1 comment:

  1. திரு வாரண்ட் பா"லா",அவர்களின் கருத்தோடு முரன்பட்டால் நாம் அறிவாளியாகி விடுவோம் என்றென்னி கருத்துக் கூறியதாக யாரும் எண்ணி விடவேண்டாம்.நான் எந்நாளும் கொண்டாடும் தோழர். கொளத்தூர் மணி தலைமையிலான தி வி க, வையும் (நான் தி வி க உறுப்பினரல்ல) குறை சொல்லி விட்டாரே! என்ற ஆதங்கத்தில் மட்டுமே! மற்றபடி தி வி க தான் பொதுவுடமைக்காக போராடியது. வெற்றி பெற்றது மேலும் நான்,திரு.வாரண்ட் பா"லா"வால் நாடும் நாட்டு மக்களும் நன்மையும்,நல்வழிகாட்டுதலையும் பெறுகிறார்கள் என்று மகிழ்சி அடைகிறேன்!

    ReplyDelete

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)