No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Friday, September 30, 2016

பொய்யர்கள் ஆணையர்களாக நியமிக்கப்படுவது ஏன்?


வக்கீல் என்றாலே, "கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!!" என்ற தத்துவத்தை நான் முன்மொழித்ததில், எந்த மாற்றுக் கருத்தும், எக்காலத்திலும் இருக்க முடியாது. 

ஒவ்வொரு பொய்யரும், தங்களுக்கு கிடைக்கும் கூலிக்காக வழக்கின் உண்மைகளை திரித்துப் பொய்ச்சொல்லி மாரடிக்கிறார்கள். புகழ்பெற்ற பொய்யர்கள் நிதிபதிகளுடன் இடைத்தரகு செய்தும், இலஞ்சங் கொடுத்தும் தீர்ப்பை வாங்குகிறார்கள்.


ஆனால், இந்த செய்தியோ ஏதோ இப்பெண் நிதிபதியும், பொய்யரும் மட்டுமே லஞ்சம் வாங்கியது போன்று, அதிசயமாய் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 

பெண்கள் லஞ்சம் பிச்சை எடுப்பதற்கு சற்றும் தயங்குவதில்லை என்பதோடு, ஆண்கள் லஞ்சப் பிச்சை எடுப்பதிலும், அவரைச் சார்ந்த பெண்களுக்கு பெரும் பங்குண்டு.  

இதுபோன்றெல்லாம் செய்வார்கள் என்பதால்தான், நில சம்பந்தமான வழக்குக்களில், பொய்யர்களை ஆணையர்களாக நியமிப்பதை தடுத்து, அந்நிலப் பகுதிக்கு உரிய கிராம நிர்வாக ஊழியரிடம் இருந்து அரசு ஆவணங்களைப் பெற்றோ அல்லது அவரையே களப்பணி செய்தோ உண்மையை எடுத்துரைக்கும்படி கோரவேண்டும். 

இதன் மூலம், ஆணையர்களாக நியமிக்கப்படும் பொய்யர்களுக்கு வழக்குதாரர் கொடுக்க வேண்டிய பெருங்கூலியை தவிர்ப்தோடு, சரியான நியாயத்தையும் பெற முடியும் என்கிற அரிய தகவலை, "நீதியைத்தேடி... சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்" நூலில் சொன்னேன்.

மேலும், எனக்கு தெரிய பொய்யர்களைத்தான் ஆணையர்களாக நியமிக்க வேண்டுமென எந்த சட்ட விதியும் சொல்லவில்லை. 

ஆனால், நிதிபதிகள் இதுபோன்று கொள்ளையடிப்பதற்காகவே, தங்களோடு இடைத்தரகில் உள்ள பொய்யர்களை ஆணையர்களாக நியமிக்கிறார்கள் என்பது உங்களுக்கெல்லாம் தெரியாத ரகசியம். 

ஆகையால், நீங்கள் நடத்தும் நிலம் சார்ந்த வழக்குக்களில் மிகுந்த எச்சரிக்கையோடு இருங்கள்.   
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Thursday, September 29, 2016

நியாயத்தின் அளவுகோல் என்ன?!


‘‘நியாயந்தான் சட்டம்; அதற்கு தேவையில்லை வக்கீல் (பொய்யர்) பட்டம்’’ என்பது, நமது சட்ட விழிப்பறிவுணர்வுக் கொள்கையின் அடிப்படையில் நான் முன்மொழிந்துள்ள தாரக மந்திரம். 

நியாயம் என்பது, ஒவ்வொருக்கும் தக்கவாறு வேறுபடும் என்றும் ஆகையால், இந்நியாயத்தின் அளவுகோலை கணக்கிடுவது இயலாத காரியமென்றும் அறிவுவறுமை பெருமாக்கள் சொல்லுவார்கள்.

ஆனால், ஓர் ஆராய்ச்சியாளனாக, நியாயத்தை கணக்கிடும் முறை குறித்த தெளிவானதொரு முடிவை, அதிகாரப்பூர்வமாக பத்து வருடங்களுக்கு முன்பே சொல்லி விட்டேன். 

ஆமாம், 2006 ஆம் ஆண்டில் எழுதிய நீதியைத்தேடி... குற்ற விசாரணைகள் என்ற பொதுவுடைமை நூலில், நமக்கு நியாயம் இருக்கிறதா என்பதை சோதனை முறையில் அறிய, 

‘‘நமக்கு யார் அநியாயம் செய்து விட்டார்கள் என எண்ணுகிறோமோ, அவர்கள் இடத்தில் இருந்து நாம் பார்க்க வேண்டுமென்றும், அப்படிப் பார்க்கும் போது, நாமும் அதையேத்தான் செய்திருப்போம் என்றால் அவர்கள் செய்ததும் நியாயமே’’ என்ற அடிப்படையில் தீர்வுகாண வேண்டுமென சொல்லியுள்ளேன்.

இதனை நீதியைத்தேடி... வாசகர்கள் உணர்ந்தார்களா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. இதிலும், பொய்யர்களைப்போல நிதியைத்தேடி... அலையும் வாசகர்களைப் பற்றி சொல்லவே தேவையில்லை. 

ஆனாலும், வாசகர்களை எச்சரிப்பதற்காக சொல்ல வேண்டிய இடத்தில், சொல்ல வேண்டிய வாசகர்களைப் பற்றி, வரிசையாக எழுதிவரும் நூல்களில் சொல்லிக் கொண்டேதான் வருகிறேன்.   

சிபிஐ விசாரணை, சாதாரண காவல்துறை விசாரணையைப் போல் இரண்டாந்தரம், மூன்றாம் தரம், நாலாந்தரம் என இல்லாமல், சிறப்பான முதல்தரமானதாக இருக்கும் என்று சொல்லப்படும். 

ஆமாம், காவல்துறை காவலில் மட்டுமல்லாமல் நீதிமன்ற காவலில் இருந்த ராம்குமார் சந்தேகத்திற்கு இடமான நிலையில் மரணித்து இருக்கிறார். 

ஆனால், பொதுவாகவே சிபிஐ புலனாய்வு விசாரணையில் யாரும் மரணம் அடைவதில்லை. இதுபோலவே, இவர்கள் தாக்கல் செய்யும் குற்ற வழக்குக்களில் விடுதலையாவதும் அரிது. ஆனால், இவை அரசியல் தலையீடு உள்ள வழக்குக்களுக்கு பொருந்தாது என்பது நான் சொல்லித்தான், உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதும் அன்று.  

இதனால்தான், எதற்கெடுத்தாலும் சிபிஐ விசாரிக்க வேண்டுமென்கிற கோரிக்கை, நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகிறது.  ஆனால், இந்த தற்கொலை செய்தியோ சிபிஐ விசாரணை காவல்துறை விசாரணையைப் போலவே இருந்தது எனவும், இதுவே எங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரது தற்கொலைக்கும் காரணம் என்று இலஞ்சம் வாங்கிய குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட மத்திய அரசு ஊழியர் தனது தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். 

உண்மையில், இவர் இலஞ்சம் வாங்கவில்லை என்றால், ‘‘இலஞ்சம் வாங்காத என்னை இலஞ்சம் வாங்கினேன் என்று கைது செய்ததோடு, செய்யாத குற்றத்துக்கு விசாரணை என்றப் பெயரில் துன்புறுத்தினார்கள். ஆகையால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன்’’ என்று எழுதியிருந்தால், இவருக்கு நியாயமிருக்கிறது என நாம் நம்பமுடியும். 

ஆனால், இப்படிச் சொல்லவே இல்லை. இந்த நாளிதழ் செய்தியில், அந்த செய்தி இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கலாம் என்பதற்கும் வாய்ப்பில்லை.

இதுபோன்ற தற்குறிகளின் தற்கொலை கடிதங்களை மரண வாக்குமூலமாக அப்படியே ஏற்கலாமா என்பது பற்றியும், எந்தெந்தச் சூழ்நிலையில் ஏற்கலாம் என்பது பற்றியும் விரிவாக ஆராய்ந்துதான் கட்டுரை எழுதவேண்டும்.   

தங்களின் குடும்ப மானம் போய்விட்டது என்ற அடிப்படையிலேயே இவர்கள் அனைவரும் குடும்பத்தோடு இரண்டு இரண்டு பேராக தற்கொலை செய்து கொண்டனர் என்றுதான், என்னால் அனுமானிக்க முடிகிறது.  

மேலும், குடும்ப மானம் போனதால், தற்கொலை செய்து கொண்ட மனைவி மற்றும் மகளின் முதல் தற்கொலையே இவர்களது தற்கொலைக்கும் காரணமாக இருக்கும் என்பதையும் நாம் உணரலாம். 

மொத்தத்தில், உல்லாசமாக வாழ வாங்கிய இலஞ்சமே, நால்வரின் உயிரைக் குடித்திருக்கிறது.   

இலஞ்சம் வாங்கக்கூடாது என்று சட்டம் சொல்கிறது. ஆனால், நீங்கள் வாங்கினீர்கள். அதேபோல, புலன் விசாரணைக்கு உட்படும் நபர்களை துன்பப்படுத்தக்கூடாது என சட்டம் சொல்கிறது. ஆனாலும், உங்களைப் போலவே அவர்களும் சட்டத்தை மீறி செய்கிறார்கள். அவ்வளவுதான்! 

ஆமாம், நான் இலஞ்சம் வாங்கினேன் என அரசூழியரான இவர்கள் ஒத்துக் கொள்ளப் போகிறார்களா, இல்லையே! மாறாக, லஞ்சமே வாங்கவில்லையென வாங்கிய லஞ்சத்தை பொய்யருக்கும், நிதிபதிகளுக்கும் கொடுத்து அல்லவா விடுதலையாவீர்கள்!!

ஆமாம், ‘‘இலஞ்சம் வாங்கினேன் சிறையில் அடைத்தார்கள்; இலஞ்சம் கொடுத்தேன் வெளியில் விட்டார்கள்’’ என்ற வரிகள்தானே உண்மை!!!   

உங்களுக்கொரு நியாயம்; மத்தவங்களுக்கொரு நியாயமா? 

தர்மத்துக்கு தக்கபடி தர்மமாக நடந்து கொள்ள வேண்டும். 

நியாயத்துக்கு தக்கபடி நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். 

சட்டத்துக்கு தக்கபடி சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும்.  

இல்லையெனில், மற்றவர்களும் உங்களது சட்ட விரோதத்துக்கு தக்கபடி சட்டப்படியோ அல்லது சட்டத்துக்கு விரோதமாகவே நடந்துதான் ஆகனும். 

நியாயத்துக்கு விரோதமான சட்டங்களையுங் கூட, சட்டப்படியே சந்திக்க முடியும். இதற்கு சத்தியவான் காந்தி நல்லதொரு உண்மை!

இந்த கோணத்தில்தான், நான் எதையும் ஆராய்ந்து அனுகுகிறேன். இதனால்தான், எனது சட்ட ஆராய்ச்சி உட்பட அனைத்துப் பயணம் எந்தவித இடையூரும் இல்லாமல் நாளுக்குநாள் முன்னேறிக் கொண்டு இருக்கிறது எனவும் நம்புகிறேன். 

இனியும், நான் எந்த நிலையில் இருந்தாலும், இதைத்தான் அனுசரிப்பேன். இது சட்டத்தால், சட்டத்தை சத்தியத்தின் வழியில் சந்திப்பது ஆகும். ஆகையால், ஒருபோதும் (க, ந)ஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை.  
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Wednesday, September 28, 2016

போட்டோ ஷாப்பின் வழிப்பொய்கள்!தமிழக அரசின் செயல்பாட்டுக்கான சந்திப்பு புகைப்படங்கள், தமிழக செய்தித்துறையால் வெளியிடப்பட்டு, நாளிதழ்களில் வெளியிடப்படும் ஒளிப்படங்கள் பல போட்டா ஷாப்பில் பொய்யாக உருவாக்கப்பட்டது என்பது அப்போட்டோ ஷாப்பில் வேலை செய்யும் திறன் கொண்டவர்களுக்கு தெரிகிறது.

ஆனால், இது அச்சு ஊடகத்துறையில், அப்போட்டோ ஷாப்பில் வடிவமைக்கும் வேலையில் உள்ள ஊழியர்களுக்கு தெரியாமல் போனதேன்? அல்லது தெரிந்தே வெளியிட்டது ஏன்??

இப்படி பொய்யான போட்டோ ஷாப் புகைப்படங்களை வெளியிட்டு, சம்பந்தப்பட்டவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள்??? 


போட்டோ ஷாப்பில் பொய்யாக புகைப்படத்தை தயார்செய்து வெளியிடுவதுதான், தமிழக அரசின் புரட்சியா?! 

அரசின் செய்தித்துறையே இப்படி கேவலமாகவும், நாலாந்த ரமாகவும் இருந்தால், தனியார் வசமுள்ள செய்தி ஊடகங்கள் எப்படி இருக்கும் என்பதை சொல்லத்தான் வேண்டுமா?  
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Tuesday, September 27, 2016

உங்களுக்(கோர், கான) ரகசியம்!


நம்மால் முடியவே முடியாது என்று நினைத்த ஒரு செயலை, இவ்வுலகின் ஏதோவொரு மூலையில், யாரோவொருவர் சர்வ சாதாரணமாக செய்து கொண்டுதான் இருக்கின்றார் என்பதை எல்லோருமே ஒப்புக் கொள்வதோடு, அது எப்படி சாத்தியம் என பிரம்மித்து நிற்கிறோம் அல்லவா?!
ஆமாம், நாம் ஒவ்வொருவருக்கும், வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும், அதில் வெற்றி பெறுவதென்ன அரிதிலும் அரிதாக வெகுசிலரே! இப்படிப்பட்டவர்கள் தெரிந்தோ, தெரியாமலோ ஒரு ரகசியத்தை பின்பற்றி வந்திருக்கிறார்கள் என்பதே அவர்களது வெற்றிக்கான காரணம் என்பதைக் குறித்து, இதன் முடிவில் சொல்கிறேன்.
உடனே, வழக்கம் போலவே, மிகவும் புத்திசாலித்தனமாக முடிவாக என்ன சொல்கிறேன் என்பதை அறிவதற்காக தாவி விடாதீர்கள். தொடர்ந்து படித்தால் மட்டுமே, பல ரகசியங்கள் புரியும்; இதனால் ரகசியத்தின் முடிவும் புரியும்!
secret of the success
நம் வெற்றிக்கும், தோல்விக்கும் என்ன காரணம் என்பதை, வெற்றி பெற்றவர்களும் சிந்திப்பதில்லை; தோல்வியடைந்தவர்களும் சிந்திப்பதில்லை.
ஆனால், வணிக ரீதியாக வெற்றி பெற்றவர்கள் மட்டும் தங்களைத் தங்களே, ‘உழைப்பால் உயர்ந்தவர்கள்’ என சொல்லிக்கொள்வர். அதனை தங்களது வதந்தியான வணிக விளம்பரத்திலுங்கூட, வெற்றிக் களிப்போடு விளம்பரப்படுத்திக் கொள்வர்.
ஆனால், உண்மையில் இப்படிப்பட்டவர்கள் அனைவருமே, ஏதோவொரு விதத்தில் அவர்களுக்காக அல்லது அவர்களிடம் உழைத்த பலரது உழைப்பைச் சுரண்டி உயர்ந்தவர்களே என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. ஏனெனில், பலரின் உழைப்பைச் சுரண்டாமல், எவர் ஒருவரும் ஒருபோதும் பொருளாதார ரீதியாக மட்டும் உயர்வடையவே முடியாது.
சரி, நம்ம ரகசிய விசயத்துக்கு வருவோம். ‘என் வாழ்க்கையே நான் உங்களுக்கு சொல்லும் செய்தி’ என தாத்தா காந்தி சொன்னது போல, எனது சட்ட ஆராய்ச்சியை முன்வைத்து, இந்த ரகசியத்தைச் சொன்னால், எனது விளக்கத்திற்கும், உங்களின் புரிதலுக்கும் மிக எளிதாக இருக்கும் என நம்புகிறேன்.
மேல் நிலைக்கல்வி வரை மட்டுமே பயின்று தனியார் நிறுவனத்தில் சாதாரண ஊழியனாக கடமையாற்றிய காலத்தில் ஏற்பட்ட சட்ட சிக்கல்களை களைவதற்காக அறிவாளிகள், மேதைகள், எல்லாம் தெரிந்தவர்கள் என நம்பியவர்களை நாடு முழுவதும் சந்தித்து உரையாடிய போது, எனது கேள்விக்கான பதிலை அவர்களால் தர முடியவில்லை. இதனை வெளிப்படையாக சொல்ல வெட்கப்பட்டு மறைப்பதற்காக, என்னை கடிந்து கொண்டனர்.
அவரவர்களும் தங்களுக்கு தெரிந்ததை சொல்கிறார்கள். ஆனால், அவைகள் சட்டப்படியோ, நியாயப்படியோ சரியானவைகள் அன்று என்பதும், அவர்களும் அவ்விடயத்தில் அறிவாளிகளன்று என்பதும், பதவி மற்றும் பண சுகத்துக்காக அரசூழியத்தில் அல்லது பிற வழி வகைகளில் அதிகாரத்தை உருவாக்கிக்கொண்டு அறிவு வறுமையோடு செயல்படுவதால், எனக்கு ஏற்பட்ட சட்டச் சிக்கல்கள் போல, நாட்டில் உள்ள அனைவருக்கும் சட்ட சிக்கல்கள் இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.
ஆகையால், சட்டத்தை ஆராய்ந்து, அதனை அனைவருக்கும் தெளிவுப்படுத்த வேண்டும் என்கிற "ஞானோதயம்" ஏற்பட்டது. உண்மையில் இந்த ஞானோதயம் ஏற்பட்ட போது, சட்ட நூல்கள் எங்கு கிடைக்கும், என்ன மொழியில் கிடைக்கும், அதனை எப்படி படித்து புரிந்துகொள்வது என்பது உட்பட எதுவுமே தெரியாது.
இதுவே தெரியாத போது, வாசகர்களின் ஆதரவோடு இதழை எழுதுவேன். அந்த இதழ்கள், மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நிதியுதவியோடும், வாசகர்களின் நிதியுதவியோடும் நூல்களாகும்; இந்நூல்கள் நூலகங்கள் உட்பட எல்லா நிதிபதிகளுக்கும் படிப்பதற்காக கொடுக்கப்படும்...
அளவு கடந்த அதிகாரங்களை பெற்றுள்ளவர்களாக சமூகத்தால் கருதப்படும் நிதிபதிகளின் யோக்கியதை, இந்நூல்களில் சந்தி சிரிக்கும். ஆனாலும், அவர்களால் சட்டப்படி நடவடிக்கை எதையும் எடுக்கமுடியாது...
எனக்கு ஏற்பட்ட இந்த ஞானோதயம், மிகவும் சரியே என சமூக சீர்த்திருத்தவாதிகளான மகாத்மா காந்தியும், பகுத்தறிவுப் பெரியாரும், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சியும், இன்னும் அறியப்படாத பலரும், அவரவர்களும் வாழ்ந்த காலத்திலேயே முன்மொழிந்திருப்பார்கள் என எதுவுமே தெரிந்திருக்க வாய்ப்பில்லைதானே?
ஆனால், இன்று இத்தனையும் (இதற்குள் எத்தனையெத்தனையோ இருக்கின்றன. விரிவஞ்சி விட்டுவிடுகிறேன். ஆனாலும், இறுதியாக பொய்யர்களும், அவர்களின் தொழிலும் ஒழிந்து போகும். இது எனது சபதமன்று; காலத்தின் சபதம்!) நடந்திருப்பதற்கான / நடக்கப் போவதற்கான காரணமென்ன என்பதை அறியவும், இதுபோன்றே தங்களின் உன்னதமான எண்ணங்கள் ஈடேறவும், இந்த காணொளி ரகசியத்தை காணுங்கள்.

அத்துப்படியாகும் வரை பாருங்கள். பயன் பெறுங்கள். உன்னத நோக்கத்திற்காக உங்களை ஈன்றெடுத்த இருந்த பாருக்கு பயனுள்ளவர்களாய் இருங்கள். தங்களைப் போலவே, ஒவ்வொருவரும் பயனுள்ளவராய் இருக்க பகிருங்கள். 

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Monday, September 26, 2016

பொய்யர்கள், விளம்பரப் பிரியர்களே!

அடிப்படையில் சொல்லப்போனால், பொய்யக்குத்தான் விளம்பரந் தேவையே ஒழிய, உண்மைக்கு ஒருபோதும் விளம்பரந் தேவையில்லை.

இது சட்டத்தொழிலை வரையறை செய்யும், இந்தியப் பொய்யர வைக்கும் நன்றாகவே தெரிந்திருக்கிறது. ஆகையால், அப்பொய்யரவை இயற்றிய பொய்யர்களுக்கான விதி 36 இல், ‘‘பொய்யர்கள் தனது தொழிலை எவ்வகையிலும் விளம்பரப்படுத்த கூடாது; பெயர்ப்பலகையும் சிறிய அளவில் இருக்க வேண்டும்’’ என்று அறிவுறுத்தி உள்ளது.

இப்படிப்பட்ட, மேலும் பல அறிவுறுத்தல்களை நீதியைத்தேடி... சட்ட அறிவுக்களஞ்சியம் நூலில் தொகுத்துள்ளேன்.

மேற்சொன்ன அறிவுறுத்தல் விதியின்படி பார்த்தால், பொய்யர்கள் அறிமுக அட்டையை (விசிட்டிங் கார்டு) கூட கொடுக்க முடியாது. ஆனால், பொய்யர்களோ பெயர்பலகை என்ற பெயரில், பொய்யர்கள் பெரிய விளம்பரப் பலகையையே வைத்துக் கொள்கிறார்கள்.

தங்களின் வாகனத்தில் அல்லது கிடைத்த இடத்தில் எல்லாம் தங்களைப் பற்றி விளம்பரம் செய்து கொள்கிறார்கள். நீதிமன்ற வளாகங்களில் உள்ள நோட்டரிப் பொய்யர்கள் எல்லாம், தங்களைப் பற்றிய பெரிய விளம்பரத்தை வைத்துக்கொண்டு, வருவோர் போவார்களை எல்லாம் கூவிகூவி அழைப்பதையும் பார்த்திருப்பீர்கள்.

இப்பொய்யர்கள் தற்போது, இணையத்தையும், சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்தி ஆள் பிடிக்க ஆரம்பித்து விட்டனர்.

பொய்யர்களுக்கான பட்டப் படிப்பில் குறுக்கு வழியிலோ அல்லது வேறு வழியிலோ தேர்ச்சி பெற்று, பொய்யரவையில் சேரும் பொய்யர்கள், சிறிதும் வெட்கமின்றி தங்களின் சேர்க்கை குறித்து கட் டவுட் வைத்துக் கொ(ல், ள்)கிறார்கள்.

பொதுவாக, இப்படி வைக்கப்படும் கட் டவுட்டுகளில் பெறும்பா(ழா, லா)னவை, யாருக்காக வைக்கப்படுகிறதோ, அவர்களது சொந்த செலவில், அவர்களது அடிமைகளின் பெயரில் அல்லது அவர்கள் சொல்லி, அவர்களது அடிமைகள் வைப்பதே அன்றி அல்லது தங்களது சுய ஆதாய விளம்பரத்துக்காக வைப்பதே அன்றி, அன்பின் மிகுதியால் வைப்பது அன்று!

ஆமாம், அன்பின் மிகுதி என்பது, அவரவர் உள்ளத்தில்தான் இருக்குமே தவிர, ஒருபோதும் ஊரறியச் செய்யாது.

தொல்லைக்காட்சி பேட்டிகளில், ஒரு வழக்கில் வாதாடிய பொய்யர் பேட்டி அளிக்கும் போது, பல பொய்யர்கள் அடித்துப் பிடித்துக்கொண்டு முங்காட்டுவதை எல்லோருமே பார்த்தி ருப்பீர்கள்.

இதெல்லாம் தெரிந்திருந்தால், இப்பொய்யர் உச்சநீதிமன்றத்துக்கு மேல்முறையீடு சென்றிருப்பாரா?

இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள தினமலர், இதனால் ஊடகங்களுக்கு பின்னடைவு என்றுதான் சொல்லுமா??  

பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

Saturday, September 24, 2016

எதிர் வழக்காடுதலும், வழக்காடுதலே!


24-09-2016 அன்று நம் நீதியைத்தேடி வாசகர் ஒருவரிடம் இருந்து வந்த மின்னஞ்சல் விவரமிது! 

வணக்கம் தோழர்,

தங்களின் சட்ட ஆராய்ச்சி நூல் வரிசையில்,  5-வது வெளியீடான "சாட்சியங்களைச் சேகரிப்பது எப்படி?" என்ற நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன்!

இந்நூலில், "மகான்களின் மகிமையும், மடத்தனமும்" என்ற தலைப்பிலான கட்டுரையில் (பக்கம் -38, 39)," தந்தை பெரியார், பகுத்தறிவாதிகளுக்கு மகான். மூடநம்பிக்கையை ஒழித்து, பகுத்தறிவுக்கு வித்திட்ட பகலவன். எண்ணம், சொல், செயல் அனைத்தும் தெளிவானதாகவும், நுட்பம் மிக்கதாகவும், பகிரங்கமானதாகவும் இருக்கும். இவரது கொள்கை,  (சிந்தனை)  அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று எண்ணியவர்.

ஆனால், தான் வாழும்போதே தனது கருத்துக்களைப் பொதுவுடமை என்று அறிவிக்காமல் விட்டுவிட்டார். விளைவு? அவரின் ஆதரவாளர்களுக்குள், தங்களுக்கே அவை "அறிவுசார் சொத்துரிமை" யாக வேண்டும் என வழக்கு -தகராறுகள் எழுந்து, நீதின்றமன்றங்கள் வரை சென்று, இறுதியாக யாருக்கும் தனியுரிமை கிடையாது என்ற நிலையில் இருக்கிறது" என்று எழுதியுள்ளீர்கள்.

மேற்கண்ட தங்களின் கருத்தில், நான் முரன்படுகிறேன்! காரணம், மிக உன்னதமான நோக்கத்துக்காக பத்து வருட உழைப்பில் உருவாகியுள்ள நூலில், கருத்துப்பிழை இருக்கக்கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் மட்டுமே!

கீழ்க்காணும் சிறிய விளக்கத்தையும் தாங்கள் ஆய்வு செய்யக்கோருகிறேன்.

"தோழர் கொளத்தூர் மணி" யை தலைவராகக் கொண்டுள்ள, திவிக என்ற அமைப்பு "குடியரசு" பத்திரிக்கைத் தொகுப்புக்களை பொதுவுடமை நோக்கில் வெளியிட முனைந்தபோது,திராவிடர் கழகம் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குப்போட்டது. அதில், பெரியார் நூல்களைப் பொதுவுடமையாக்கினால் பிற்போக்குவாதிகள் சிலர், அவரின் கருத்துக்களை திரித்து வெளியிட்டு விடுவார்கள். ஆகவே, "பெரியார் சுயரியாதைப் பிரச்சார இயக்கம்" மட்டுமே வெளியிட வேண்டும் என்று வாதாடியது.

ஆனால், பெரியார் சிந்தனைகளையும் நூல்களையும் நீதிமன்றம் அரசுடமையாக்கி தீர்ப்பளித்துள்ளது. இவ்விடயத்தில் தாங்களுடன் நான் முரன்படுவது, அறிவுசார் சொத்துரிமைக்காக பெரியார் ஆதரவாளர்கள் வழக்கிட்டுக் கொண்டனர் என்பதில்தான்.

திராவிடர் கழகம் மட்டுமே, அறிவுசார் சொத்துரிமை கொண்டாடியது. ஆனால், திவிக-வோ பொதுவுடமையாக்க வேண்டுமென வாதாடியது. -நன்றி

இப்படிக்கு
நா.தங்கவேல்

விளக்கப் பதில்: 

முதலில் உங்களுக்கு தோன்றியதை எடுத்துரைத்ததை வரவேற்கிறேன்.                

நான் எதையுமே நுனிப்புல் மேய்வதுபோல மேலோட்டமாக எதையும் எழுதுவதில்லை. ஆழ்ந்தும், ஆராய்ந்தும்தான் எழுதுவேன். இதற்கென பல்வேறு யுக்கிகளை கையாளுவேன்.

உண்மையில், நீங்கள் என்னோடு முரண்படவில்லை; ஒத்துப் போகிறீர்கள்.

ஆமாம், நீங்கள் சொன்ன அனைத்தையும் நானும் அறிவேன். இது தொடர்பான வழக்கு ஆவணங்களையும் தோழர் மணியிடம் இருந்து பெற்றுள்ளேன்.

நீங்கள் குறிப்பிடும் பகுதியில், ‘‘இறுதியாக, யாருக்கும் தனியுரிமை கிடையாது என்ற நிலையில் இருக்கிறது’’ என்பதோடு முடித்து விட்டேன். மற்றபடி, யார் செய்தது சரி, தவறு என்ற விடயத்திற்குள் போகவில்லை.

ஆனால், நீங்கள் வழக்கு விடயத்திற்குள் சென்று உங்களது ஆதரவு தரப்பை எடுத்துரைக்கிறீர்கள்.

அதாவது தொடரப்பட்ட ஒரு வழக்கில், ‘‘எதிர்தரப்பினர் தங்களின் தரப்பை எடுத்துச் சொல்வதும் வழக்காடுதலே’’ ஆகும். நீங்கள் எதிர் வழக்காடவில்லை எனில் வழக்கு தொடுத்தவரின் வழக்குரிமை நிலைநாட்டப்படும். அவ்வளவே!

தீர்ப்புக்களை திரித்து எழுதுவதில் வல்லவரான நிதிபதி கேனச் சந்துரு, தீர்ப்பை மாற்றி எழுதியிருந்தால், உங்களது தரப்பு மேல் முறையீடு செய்யுந்தானே?!

இதன் மூலம் நான் முக்கியமாக சொல்ல வருவது, ‘‘சட்டஞ் சார்ந்த விடயங்களில் மகான்களும் மடத்தனமாக இருந்து விடுகிறார்கள்’’ என்பதே.

பகுத்தறிவு பெரியார், என்னைப்போலவே தன் கருத்துக்களை பொதுவுடைமை என அவர் வாழுங் காலத்திலேயே அறிவித்திருந்தால், நாம் இப்படி கருத்துப் பறிமாற வேண்டிய அவசியம் எழுந்திருக்காது.    


பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)