வழக்கு என்றால், பெ(று, ரு)ங்கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்கள்தான் வாதாடுவார்கள். ஆகையால், யாருக்காக எப்பொய்யர் ஆலோசகராக இருந்து பொய்ப்பேசுகிறார் என்பதை நிதிபதிகள் தெரிந்துகொள்ள வேண்டு மென்பதற்காக, மனுவிலும், மேலட்டையிலும் பொய்யர்கள் தங்களின் பெயர்களை குறிப்பிட்டுக் கொள்வார்கள்.
ஆனால், உங்களுக்காக நீங்களே வாதாடும்போது, உங்களுக்கு ஆலோசனை சொல்ல பொய்யர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இந்த வெற்றிடத்தை நிரப்பாவிட்டால் நிதிபதிகளுக்கு ஏதோ குறையிருப்பது போல தலை வலிக்கும் போலிருக்கிறது. அதாவது மாட்டு மந்தையில, மாடுகள் குறைந்தால், மாடுமெய்ப்பவருக்கு மனம் ஒருமாதிரி கஷ்டப் படுந்தானே!
ஆகையால், அந்த வெற்றிடத்தில் தனக்குத்தானே வாதாடுகிறார் என்பதை குறிக்கும் விதமாக, ஆங்கிலத்தில் ‘‘பார்ட்டி இன் பெர்சன்’’ என்று குறிப்பிடும் வழக்கத்தை நிதிபதிகள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இதனை நாமும் கட்டாயமாக கடைப்பிடிக்க வேண்டுமென்ற அவசியமே கிடையாது.
ஏனெனில், பெ(று, ரு)ங்கூலிக்கு மாரடிக்கும் பொய்யர் களைப் போல, உங்களது வழக்கிற்கு நீங்கள் வேலைக்காரன் கிடையாது. மாறாக, முதலாளி!
ஆமாம், ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும் நூலில், நீங்க என்ன படிச்சிருக்கீங்க!? என்ற தலைப்பில், உங்களுக்காக ஒரு பொய்யர் வாதாடும்போது, உங்களுக்காக அவர் தாக்கல் செய்யும், உங்களது கையொப்பத்துடன் கூடிய வக்காலத்தில், வேறொரு பொய்யர் முன்னரே, நீங்கள், உங்களது பொய்யரை நியமித்தீர்கள் என்பதற்கு சான்றொப்பம் வாங்க வேண்டுமென்றும்..,
உங்களுக்காக தாக்கல் செய்யும் பிரமாண வாக்கு மூலத்தில், உங்களுக்காக பொய்ப்பேசும் பொய்யர் சான்றொப்பமிட முடியாது. மாறாக வேறொரு பொய்யர்தான் சான்றொப்பமிட முடியுமென்றும், ஆனால், நீங்களே முதலாளியாக இருந்து வழக்கை நடத்தும்போது, நீதிமன்ற சாசன உறுபு 70 இன்படி, நீங்கள் ஒப்பமிட்டாலே போதுமானது என்பதை, பல்வேறு விளக்கங்களுடன் சொன்னது’’,நினைவிருக்கும்.
ஆகையால், நீங்களே முதலாளியாக இருந்து வழக்கை நடந்தும்போது, கூலிக்கு மாரடிக்கும் பொய் வேலைக்காரப் பொய்யர்கள் உங்களுக்காக செய்யும், பொய்யான ஜோடனைகளை எல்லாம், உண்மையாக இருக்கும் நீங்கள் எதற்காகவும் செய்து, உங்களின் உண்மைத் தன்மையை குறைத்துக் கொள்ளாதீர்கள்.
நிதிபதிகள் எழுதும் தீர்ப்புகளில், யார் யாருக்காக, எந்தெந்த பொய்யர்கள் வாதாடினார்கள் என்பதை குறிப்பிட வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருப்பதால், அவர்கள் வேண்டுமானால், உங்களுக்காக நீங்களே வாதாடினீர்கள் என்றெழுத வைத்து பெருமைப் படுங்கள்.
வெளிவர உள்ள மநு வரையுங்கலை நூலிலிருந்து…
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment