சட்டத்தொழில் செய்யும் பொய்யர்கள், அடிப்படையில் சட்டந்தெரியாத பொய்யர்கள் மட்டுமல்லர்; அடிமைகளும் ஆவர்!
இப்பொய்யர்கள் தாங்கள் அடிமையாய் இருப்பது மட்டுமல்லாமல், இச்சமூகத்தையே அடிமையாய் வைத்திருக்கின்றனர்.
இப்பொய்யர்களின் புறம்போக்குத்தனமான செயல்களை முறைப்படுத்த, நிதிபதிகளால் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தங்களை, ‘‘மக்களின் நலன்களுக்கு எதிரானது’’ என்று பொய்ச்சொல்லி, கடந்த 70 நாட்களுக்கும் மேலாகப் போராடி வந்தனர்.
ஆனால், மக்களிடம் இப்பொய்ப் பிரச்சாரம் எடுபடாமல் பிசுபிசுத்துப் போகவே, பிழைக்க வேறு வழியின்றி போராட்டங்களை கைவிட்டு, மீண்டும் தங்களின் அடிமைத் தொழிலை தொடர்வதென்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
இதனை ஏற்றுக்கொண்ட இப்பொய்யர்களின் அகில இந்திய அவையின் நிர்வாக கூட்டுக்களவாணிகள், போலியாகப் போராடிய பொய்யர்களின் மீது எடுக்கப்பட்ட தற்காலிக நீக்கத்தை, அப்பொய்யர்கள் அடிமைகளாய் அடங்கிப் போகும் தன்மையைப் பொறுத்து இறுதி முடிவெடுப்பதாகக் கூறியுள்ளனர்.
மொத்தத்தில், இவ்வடிமைப் பொய்யர்களை நம்பும் எவரும், இந்த அடிமைகளுக்கே அடிமையாகத்தான் இருக்க முடியுமே தவிர, ஒருபோதும் உரிமையோடு வாழயியலாது!
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment