சமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான தளம் நீ வாழ, நீயே வாதாடு! நீதிமன்றத்தில் வாதாடுவது அப்பா அம்மாவிடம் பேசுவதுபோல்தான்! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீல் பட்டம் வக்கீல் என்றாலே கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Monday, August 15, 2016

மறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி, ஏன்?“மநு வரையுங்கலை!” நூலில் குற்றவியல் பகுதியில், நாம் கொடுக்கும் புகாரின் மீது காவலூழியர்கள்,‘‘பிழையுள்ள குற்றம்’’ என்று சட்ட விதிகளில் இல்லாத வெற்று அறிக்கையை கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் என்றும், அதனை ஆட்சேபிப்பது எப்படி என்பதை சொல்லியிருந்தேன்.
அந்த ஆட்சேபனை மீது என்ன முடிவெடுப்பது என்று புரியாமல், கடந்த 06-08-2016 அன்று, உதகையில் மாவட்ட நிதிபதி உள்ளிட்ட கீழ்மட்ட நிதிபதிகள், அரசுப் பொய்யர்கள் உள்ளிட்ட அரசு உதவிப் பொய்யர்கள் மற்றும் மாவட்ட தலைமை காவலூழியர்கள் உள்ளிட்ட கீழ்மட்ட காவலூழியர்கள் எல்லாம் ஒன்றாக கூடி, கலந்தாய்வுக் கூட்டம் போட்டிருக்காங்க!
இக்கூட்டுக் களவாணிகளின் அக்கலந்தாய்வுக் கூட்டம் சுமார் ஐந்து மணி நேரம் நீடித்துள்ளது. இதில், இனி வாரியம், கழகம் போன்றவற்றில் இருந்து புகார் வந்தால், இதுபோன்று பிழையுள்ள குற்றமென அறிக்கையை காவலூழியர்கள் தாக்கல் செய்யக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதே முடிவை சாதாரண மக்கள் தாக்கல் செய்யும் புகார்களின் மீதும் எடுக்க வைக்க வேண்டியது, வழக்கை நடத்தும் உங்களின் கடமையே ஆகும்.
மேற்குறிப்பிட்ட அந்த மின்வாரிய வழக்கிலிருந்து வெற்று அறிக்கை தாக்கல் செய்த காவல் உதவி காவலூழியரை காப்பாற்றும் விதமாக, அரசுத்தரப்பின் உதவிப் பொய்யர், ‘‘மறு புலனாய்வுக்கு’’ உத்தரவிடும்படி, நடுவரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுபோன்ற வழக்குக்களில் மறு புலனாய்வுக்கு உத்தரவிட்டால் என்ன நடக்கும் என்பது குறித்து விளக்கும் ஆட்சேபனை மனுவை புகார்தாரர் தாக்கல் செய்துள்ளார். இது உங்களுக்கும் நிச்சயம் பயன்படும் என்பதால் வெளியிட்டுள்ளேன்.
நீதித்துறை நடுவர் மன்றம்
உதகமண்டலம்
ஆர்.சி.எஸ்.நெ 78 / 2010
உள்
ஜே2 காவல் நிலைய குற்ற எண் 80 / 2009
இரா. செல்வகணபதி – குற்ற முறையீட்டாளர்
குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 2(7) இன்கீழ், பரிசீலனை மனு
1. மேற்படி வழக்கில் நான் குற்ற முறையீட்டாளர் ஆவேன். இது, சூழ்நிலைக்கேற்ப நான் தாக்கல் செய்யும் இரண்டாவது மற்றும் நான்கு பக்க ஆட்சேபனை மனுவாகும்.
2. இம்முறையீட்டின் மீது ஏற்கெனவே கடந்த 07-10-2015 அன்று எனது விரிவானதொரு ஐந்து பக்க ஆட்சேபனை உரையை தாக்கல் செய்துள்ளேன். இதன் நகலை, நம் உயர் அதிகாரிகளுக்கும் சமர்ப்பித்துள்ளேன். இப்படியே இவ்விரண்டாவது ஆட்சேபனை மனுவும், நம் உயர் அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.
3. முதல் ஆட்சேபனை மனுவைத் தாக்கல் செய்தப் பிறகு பல வாய்தாக்கள் போடப்பட்டு உள்ளன. இதில் 19-11-2015, 02-02-2016, 15-03-2016, 31-05-2016 அன்றைய விசாரணைகளை உங்களுக்கு முன்பாக இருந்த நடுவர் நடத்தினார்.
4. இதில் தாங்கள் மட்டுமே 28-06-2016, 12-07-2016, 20-07-2016 மற்றும் 28-07-2016 ஆகிய தேதிகளில் விசாரணை செய்துள்ளீர்கள்.
5. எனது ஆட்சேபனையின் மீது அரசு வழக்கறிஞரின் ஆலோசனையைக் கேட்டு உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, 08-08-2016 ஆன இன்றோடு ஐந்து வாய்தாக்களைப் போட்டு உள்ளீர்கள். இதற்கு முன் நான், எனது இம்முறையீடு தொடர்பான வழக்கு விசாரணையில் அரசு உதவி வழக்கறிஞரைப் பார்த்ததேயில்லை.
6. மேலும், கடந்த இரு வாய்தாக்களில் அரசு உதவி வழக்கறிஞர் மீண்டும் புலனாய்வுக்கு உத்தரவிடுமாறு, தங்களிடம் அர்த்தமற்ற கோரிக்கையை வைத்து வருகிறார்.
7. அப்படி தாங்கள் மறு புலனாய்வுக்கு சட்ட விதிப்படி உத்தரவிட முடியுமா என்பதையும், அப்படி உத்தரவிட்டால், அதனையடுத்து என்ன நடக்கும் என்பதை தெளிவுபட உங்களுக்கு எடுத்து உரைக்கவே இந்த ஆட்சேபனை உரையை உங்களின் பரிசீலனைக்காக தாக்கல் செய்கிறேன்.
8. இம்முறையீட்டு உள்ளான மின்மாற்றியின் உள்ளே உள்ள தாமிர கம்பிச்சுருளை, மற்ற தாமிரப் பாத்திரங்களை கடையில் வாங்குவதுபோல விலைகொடுத்து வாங்கிவிட முடியாது.
9. ஏனெனில், இத்தாமிர கம்பிச்சுருளை பிரத்தியேகமாக உற்பத்தி செய்வது, ‘‘கோவையில் அமைந்துள்ள மின் வாரியத்தின் ஓர் உட்பிரிவான சிறப்புப் பராமரிப்புப் பிரிவே’’ ஆகும்.
10. ஆமாம், மின்மாற்றியில் பழுது ஏற்பட்டால், அதன் பொறுப்புக் கட்டுப்பாட்டில் உள்ள நாங்களே கூட எதுவும் செய்யமுடியாது. அதனை அப்படியே கழற்றி மத்திய பண்டகச் சாலையின் குந்தா அலுவலகத்திற்கு அனுப்பி வைப்போம். அவர்கள் கோவையில் உள்ள சிறப்புப் பராமரிப்புப் பிரிவுக்கு அனுப்பி வைப்பார்கள்.
11. பழுதை சரி செய்தோ அல்லது புதிதாகப் பெற்றே மீண்டும் பொறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குந்தாவில் உள்ள மத்திய பண்டகச் சாலையின் பொறுப்பு.
12. எனவே, அரசு உதவி வழக்கறிஞர் கேட்பதுபோல மீண்டும் காவல்துறைப் புலனாய்வுக்கு உத்தரவிட்டால், காணாமல்போன கம்பிச்சுருளை கண்டுபிடித்து தர காவல் துறைக்கு இரண்டு வாய்ப்புகள் மட்டுமே உள்ளன.
அவைகளாவன,
அ) ஏற்கெனவே காணாமல்போன மற்றும் இம்முறையீட்டில் உள்ள தாமிரக்கம்பிச் சுருளை காவல் உதவி ஆய்வாளர் என்.பி. இராமகிருஷ்ணன் அப்போதே கண்டு பிடித்து தன்வசம் வைத்துள்ளதை கொண்டு வந்து தங்களிடம் ஒப்படைக்க முடியும் அல்லது,
ஆ) மீண்டும் மின் வாரியத்தின் மின்மாற்றியில் இருந்து திருடிக்கொண்டு வந்துதான் ஒப்படைக்க முடியும்.
இவ்விரண்டில் அவர்கள் எதைச் செய்வதற்காக மீண்டும் புலனாய்வுக்கு உத்தரவிட காவல்துறை சார்பாக அரசு உதவி வழக்கறிஞர் கோருகிறார் என்பதை எழுத்து மூலமாக அறிவிக்கை கேட்டும், அதன் நகலை எனக்கு வழங்கிடவும் பணிவுடன் கோருகிறேன்.
13. குற்றவியல் நீதி விசாரணையில் காவல்துறை தாக்கல் செய்யப்படும் எந்தவொரு எழுத்து மூலமான செய்தியும், அரசுத்தரப்பு குற்றவியல் உதவி வழக்கறிஞரின் பார்வைக்கு வைக்கப்பட்டு, அவரின் ஒப்புதலைப் பெற்ற பிறகே தாக்கல் செய்வார்கள் என்பது நீங்கள் அறியாதது அல்ல.
அ) இப்படி இருக்கும்போது, குற்ற விசாரணை முறை விதிகளில் இல்லவே இல்லாத மற்றும் சட்டத்துக்குப் புறம்பாக ‘‘பிழையுள்ள குற்றம்’’ என காவல்துறை தயாரித்த அறிக்கைக்கு, அரசுத்தரப்பு உதவி வழக்கறிஞர் எப்படி ஒப்புதல் வழங்கினார்?
ஆ) ஒப்புதல் வழங்கியவர் மீண்டும் புலனாய்வுக்கு உத்தரவிடும்படி எப்படி கேட்கமுடியும்?!
இ) அல்லது அரசு உதவி வழக்கறிஞரின் ஒப்புதலைப் பெறாமலேயே காவல்துறை ‘‘பிழையுள்ள குற்றம்’’ என அவர்களாகவே அறிக்கை அளித்தார்களா?
ஈ) இப்படித்தான் அனுமதி பெறாமல் அளித்தார்கள் என்றால், அதிலெப்படி அரசு உதவி வழக்கறிஞர் தற்போது தலையிட முடியும்?
உ) மீண்டும் புலனாய்வுக்கு உத்தரவிடும்படி, உங்களை எப்படி கேட்க முடியும்?
14. எனது முறையீட்டின்மீது, காவல் உதவி ஆய்வாளர் திரு. பி.என். இராமகிருஷ்ணன் ‘‘சட்டப்படி என்னென்ன செய்திருக்க வேண்டும் என்பதையும், ஆனால் அவற்றையெல்லாம் எப்படி சற்றும் மதிக்காமல், தன் இஷ்டப்படி மீறி செயல்பட்டார்’’ என்பதையும் கடந்த 07&10&2015 அன்று தாக்கல் செய்துள்ள எனது ஐந்து பக்க ஆட்சேபனை உரையில் இரத்தினச் சுருக்க மாகவும், தெளிவுபடவும் எடுத்துரைத்துள்ளேன்.
15. அதில், அப்போழுது அவசியமில்லாததும், தற்போது அரசு உதவி வழக்கறிஞரின் அர்த்தமற்ற கோரிக்கையால் எழுந்துள்ளதுமான, ‘மறு புலனாய்வுக்கு உத்தரவிட முடியுமா’ என்பது குறித்தும், விளக்க அவசியம் உள்ளதுமான ‘புலனாய்வு என்றால் என்ன?’ என்பது குறித்தும், குற்ற விசாரணை முறை விதிகள் அறிவுறுத்துவதென்ன என்பதை விளக்கி மறு பலனாய்வுக்கு உத்தரவிடக்கூடாது என்பதை சட்ட விதிப்படி ஆட்சேபிக்க வேண்டிய கடமைப் பொறுப்பு, தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.
16. குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன்விதி 157 இன் அறிவுறுத்தல்படி, கைது செய்வதற்குரிய குற்றத்தை புலனாய்வு செய்யும் கடமையில் உள்ள காவல் அலுவலர், அதுகுறித்த அறிக்கையை உடனே உங்களுக்கு (இவ்விசாரணை மன்றத்துக்கு) அனுப்பி இருக்க வேண்டும்.
17. ஆனால், எனது இம்முறையீட்டை முதலில் 17-04-2009 அன்று பெற்ற உதவி ஆய்வாளர் என்.பி. இராமகிருஷ்ணன், சட்ட விதிப்படி பதிவு செய்ய வேண்டிய முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யாமல், இஷ்டப்படி ரசீது வழங்கினார் என்பது உள்ளிட்ட பல்வேறு உண்மைகளை, அவரது எழுத்து மூலமான ஆதார ஆவணங்களுடன், கடந்த 07-10-2015 அன்று தாக்கல் செய்துள்ள ஐந்து பக்க ஆட்சேபனை உரையில் பத்தி 4 முதல் 5 வரையில் எடுத்துரைத்து உள்ளேன்.
18. மேலும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது தொடர்பாக, எனது உயர்மட்ட அதிகாரிகள் 06-08-2009 அன்று, உதவி ஆய்வாளர் என்.பி. இராமகிருஷ்ணனை தொடர்பு கொண்டு கேட்டபோது, காவல்துறை கண்காணிப்பாளரை கலந்தாலோசித்து முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து தருவதாக சொன்னவர், அவரது உயர்மட்ட அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தலையும் சற்றும் மதிக்காது, எங்களையே திருடர்கள் என்று நேரடியாகச் சொல்லாமல், சம்பந்தப்பட்ட மின் வாரிய ஊழியர்களிடமே விசாரித்து நடவடிக்கை எடுக்க எனக்கு அறிவுறுத்தினார் என்பதையும் கடந்த 07-10-2015 அன்று தாக்கல் செய்துள்ள ஐந்து பக்க ஆட்சேபனை உரையில் பத்தி 6 முதல் 8 வரையில் எடுத்துரைத்து உள்ளேன்.
19. குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன்விதி 157 இன்படி, காவல் உதவி ஆய்வாளர் என்.பி. இராமகிருஷ்ணன் உடனே திருட்டு நடந்த மின்மாற்றி அமைந்துள்ள இடத்திற்குச் சென்று, கைரேகை உள்ளிட்ட தடையங்களை சேகரித்து இருக்க வேண்டும்.
20. இத்தடயங்களை எல்லாம், குற்றவாளிகளை அடையாளம் காணும் சட்டப்படி, ஏற்கெனவே இதுபோன்ற திருட்டுக் குற்றத்தில் தண்டனைக்கு உள்ளான நபர்களின் தடையங்களோடு ஒத்துப்போகிறதா என்பதையெல்லாம் சரிபார்த்து, உண்மையான திருடரை கண்டுபிடித்து, இம்மன்றத்தின் முன்நிறுத்தி குற்ற அறிக்கையை தாக்கல் செய்து, உ(ய)ரிய தண்டனையைப் பெற்றுத் தந்திருக்க வேண்டும்.
21. இப்படி, சுமார் ஏழு வருடங்களாக எதையுமே சட்ட விதிப்படி செய்யாமல், இறுதியாக ‘‘பிழையுள்ள குற்றம்’’ என இம்முறையீட்டின் மீது தாக்கல் செய்தது வெற்று அறிக்கை என்பதை கடந்த 07-10-2015 அன்று தாக்கல் செய்துள்ள ஐந்து பக்க ஆட்சேபனை உரையில் பத்தி 9 முதல் 19 வரையில் எடுத்துரைத்து உள்ளேன்.
எனவே, மீண்டும் புலாய்வுக்கு உத்தரவிட கோருவதற்கு எந்தவித சட்டக் காரணங்களும் இல்லை என்பதையும், அப்படி உத்தரவிட்டால், இந்த ஆட்சேபனை உரையின் பத்தி 12 சொல்லப்பட்டுள்ளபடி தான் நடக்கும் என்பதையும், இவ்விரண்டு காரணத்தில் எதனைச் செய்ய இருக்கிறார்கள் என்பதைக் எழுத்து மூலமாக தாக்கல் செய்யக்கேட்டும், கடந்த 07-10-2015 அன்று தாக்கல் செய்துள்ள ஐந்து பக்க ஆட்சேபனை உரையுடன், இந்த ஆட்சேபனை உரையையும் பரிசீலனை செய்து,
இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன்பிரிவு 19 மற்றும் 20 இன்படி, தெளிவானதொரு தீர்ப்பினை நீதிப்பூர்வமாக உரைக்கும்படி பணிவுடன் கோருகிறேன்.
இதில் சட்டப் பிரச்சினைகள் ஏதுவும் இருப்பதாக தாங்கள் கருதினால், குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன்விதி 395 இன்படி, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பியும், அம்மன்றத்தின் கருத்தை கேட்டறிந்தும், அம்மன்றம் வழங்கும் அறிவுறுத்தலின் அடிப்படையில் உத்தரவை பிறப்பிக்குமாறும் பணிவுடன் கோருகிறேன்.
ஒப்பம்
இரா. செல்வகணபதி (குற்ற முறையீட்டாளர்)
நகல் சமர்ப்பிக்கப்படுகிறது.
1. குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன்விதி 395 இன்கீழ், மறு புலனாய்வுக்கு உத்தரவிட முடியுமா என்ற சட்டப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக, பொதுப் பதிவாளர், சென்னை உயர்நீதிமன்றம், சென்னை – 600104
2. குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன்விதி 404 இன்கீழ், மறு புலனாய்வுக்கு உத்தரவிட்டால், அதுகுறித்த அறிக்கையை சீராய்வு செய்யும் நோக்கில் கேட்பதற்காக, மாவட்ட நீதிபதி, உதக மண்டலம், நீலகிரி மாவட்டம்.
3. மேற்பார்வை பொறியாளர், புனல் மின் உற்பத்தி வட்டம், குந்தா, நீலகிரி மாவட்டம்.
4. செயற்பொறியாளர், மின் நிலையங்கள், மின் நிலையம் – 1, குந்தா, நீலகிரி மாவட்டம்.
5. உதவி செயற்பொறியாளர், சிவில் பிரிவு, எமரால்டு, நீலகிரி மாவட்டம்.
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நியாயந்தான் சட்டம்!

நியாயந்தான் சட்டம்!
வக்கற்றவர்களின் கீழான பட்டம்!

நூல்களின் முகப்பு

Follow by Email

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)