‘‘மக்களின் நன்மைக்காக நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டி ருக்கின்றன என்று நினைப்பது தவறு. தங்கள் ஆட்சியை நிரந்தரமாக்கி கொள்ள விரும்பு பவர்கள், இந்த நீதிமன்றங்கள் மூலம் அதைச் செய்து வருகின்றனர்’’ என்று இந்தியத் தன்னாட்சி நூலில் சத்தியவான் காந்தி கூறியுள்ளார்.
சத்தியவான் காந்தியின் இந்நாலு வரிச் செய்தியை விவரித்து சொல்ல வேண்டுமென்றால், எத்தனை எத்தனையோ நூல்களை எழுத வேண்டியிருக்கும்.
இக்கருத்தை மையப்படுத்தும் சில கருத்துக்களை நம் நீதியைத்தேடி… உள்ளிட்ட நூல்களில் சொல்லியுள்ளேன்.
இதன் அடிப்படையில்தான் எனது சட்ட ஆராய்ச்சி மற்றும் விழிப்பறிவுணர்வூட்டும் கடமையும் நடந்து வருகிறது. உண்மையில், இது ஓர் உலக அளவில் செயல்படுத்த வேண்டிய நற்சிந்தனை.
பொய்யர்களின் தொழில் ஒழிந்தால், எல்லாம் சரியாக இருக்கமென்ற சத்தியவான் காந்தியின் புரிதல் தற்போது, பாக்கிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு வந்து விட்டது போலும்.
ஆகையால், பொய்யர்களை குறிவைத்து, தங்களின் பயங்கரவாதச் செயலை செய்து, கொத்து கொத்தாகவும், பிரபலப் பொய்யர்களை படுகொலை செய்து வருகின்றனர்.
இக்கொடுமை நம் பொய்யர்களுக்கு வருவதற்கு முன்னர், அப்பொய்யர்களே உணர்ந்தால் சரி!
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment