நீதியைத்தேடி… வாசகர்கள் சிலர், தாங்கள் எழுதும் மனுக்கள் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை சோதிப்பதற்காக எனக்கு அனுப்புகிறார்கள். கருத்து கேட்கிறார்கள்.
‘‘சித்திரமும் கைப்பழக்கம்; செந்தமிழும் நாப்பழக்கம்’’ என்பதுபோல, மனுவும் எழுத எழுதத்தான் பழக்கமாகும் என்பதை விளங்கிக் கொள்ளாமல், பதினைந்தாண்டு காலமாக பல்வேறு விதங்களில் எழுதிக்கொண்டிருக்கும் என்னிடம் கேட்டால், எப்படி குறை சொல்லாமல் இருப்பேன்?!
நமது எழுத்திலுள்ள குற்றங்குறையை கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும் என்பது உங்களது பயமாகவோ அல்லது பக்குவமாகவோ கூட இருக்கலாம். ஆனாலும், உங்களது தன்னம்பிக்கையில் தலையிடக்கூடாது என்பதற்காகவே சொல்வதில்லை.
மனுவை அனுப்பிய பின்னர் ஒருசிலர் இதனை சேர்க்க மறந்து விட்டேன் என்று அவர்களாகவே சொல்லுவார்கள்.
உண்மையில், இப்படித்தான் கொஞ்சங்கொஞ்சமாக மனு வரைவதில் வல்லவர்கள் ஆகிட முடியும். இதனை ஏதோ உங்களை சமாதானம் செய்வதற்காக சொல்லவில்லை.
நானும், இப்படித்தான் வரைவதில் வல்லமைப் பெற்றேன் என்பதை நீதியைத்தேடி… குற்ற விசாரணைகள் மற்றும் மநு வரையுங்கலை! ஆகிய இரண்டு நூல்களிலும் உள்ள ம(னு, நு)க்களை ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் அறியலாம். இதனை மநு வரையுங்கலை! நூலிலும் ஒப்பிட்டுச் சொல்லியுள்ளேன்.
இம்மநு வரையுங்கலை! நூலைப் படித்ததாக சொல்பவர்களுங்கூட, இப்படி கேட்கத்தான் செய்கிறார்கள் என்பது, அவர்கள் நூலின் கருத்துக்களை எந்த அளவிற்கு புரிந்து கொண்டுள்ளார்கள் என்பதை எனக்கு தெளிவுபடுத்தி விடுகிறது.
ஆகையால், இதற்குமேல் நான் அவ்வாசகர்களை தெளிவுபடுத்த மேற்கொள்ளும் எம்முயற்சியும் பயனற்றதே!
ஆனால், பெ(ரு, று)ங்கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்கள் எழுதும் மனுக்களைவிட, நீங்கள் பொறுப்புணர்வோடு எழுதும் மனுக்கள், உங்களது அனுபவத்திற்கு தக்கவாறு சரியாகத்தான் இருக்கும் என்ற ஒன்றை மட்டும் நிச்சயம் சொல்லுவேன்.
இதில், உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், பொய்யர்களின் முகநூல் பக்கங்களுக்குச் சென்று அவர்களின் பதிவுகளைப் படித்துப் பாருங்கள். நாம் எவ்வளவோ பரவாயில்லை என்று உங்களுக்கு நீங்களே பெருமைப்பட்டுக் கொள்வீர்கள்!
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment