சத்தியவான் காந்தியவர்கள், நாட்டின் முதுகெலும்பே கிராமங்கள்தான் என்றும், கிராம முன்னேற்றமே, நாட்டின் முன்னேற்றம் என்றும் கூறியுள்ளார்.
நமது நாட்டுப் பணக்காரர்கள் அநேகருக்கு அயோக்கியத்தனமும், ஆணவமும், நாணயக் குறைவும், நாட்டின் நலனுக்கு பொறுப்பற்ற தன்மையாய் நடந்து கொள்ளவும் காரணமே வக்கீல்கள்தாம்.
விவசாயிகள் பெரிதும் கடன்காரர்களாக இருப்பதற்கும் வக்கீல்களே காரணமாவார்கள் என்று பகுத்தறிவுப் பெரியார் குறிப்பிட்டுள்ளார்.
ஆமாம், கிராமத்தின் முன்னேற்றம் கெட்டதற்குகூட, பொய்யர்களே காரணமாவார்கள்!
கிராம நிர்வாக ஊழியரிடம் தீர்க்க வேண்டிய சாதாரண பிரச்சினைகளை கூட, பொய்யர்கள் தங்களின் நாறிய பிழைப்புக்காக உச்சநீதிமன்ற நிதிபதிகள் வரை கொண்டுச் சென்று, வறிய கிராமத்தவர்களின் வயிற்றில் அடித்து விட்டனர்.
இதனை தடுக்கவேண்டுமென்ற எண்ணத்தோடு மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட கிராம நீதிமன்றங்கள் சட்டமும் பொய்யர்களின் புறம்போக்குத்தனமான நடவடிக்கைகளில் சிக்கிக்கொண்டது.
இதுபற்றி, நம் நீதியைத்தேடி… நூல் வெளியீட்டு விழா தொடர்பான இப்பத்திரிகை செய்தியிலும் சொல்லப்பட்டுள்ளது.
எனவே, இதனையெல்லாம் களைந்து, கிராமங்களை மீட்டெடுக்க வேண்டிய கடமை, கிராமப்புற மேம்பாட்டில் கவனஞ் செலுத்தும் ஒவ்வொருவரின் கட்டுப்பாட்டிலுந்தான் இருக்கிறது.
இதனை செயல்படுத்துவதற்கு ஏற்ப, கிராம நிர்வாக ஊழியர்கள் மற்றும் குடிமக்கள் நடைமுறை நூலை, நமது பாணியிலான விளக்கத்தோடு கொண்டு வரலாமா என்ற எண்ணத்தில், அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இதற்கு ஆர்வத்தோடு சிலர், தங்களால் இயன்ற ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர்.
வழக்கம் போலவே வாசகர்களின் பங்களிப்புத் தொகையோடு தான் இந்நூலை வெளிக்கொண்டு வரமுடியும் என்ற நிலையிருக்கிறது.
எது எப்படி இருப்பினும் இந்நூலின் பணி முடியும் வரை அவ்வப்போது, கிராம நிர்வாகத்தின் முக்கிய சங்கதிகள் குறித்து இயன்றவரை சொல்லலாம் என எண்ணுகிறேன்.
இதன் முதற்கட்டமாக, அரசின் சார்பாக ஒவ்வொரு கிராமத்திலும் இருக்க வேண்டிய ஊழியர்கள் பற்றி சொல்கிறேன்.
(1) கிராம நிர்வாக அலுவலர்
(2) கிராமக் காவலர்
(3) கிராமப் பணியாளர்
(4) பாசனக் காவலர்
(2) கிராமக் காவலர்
(3) கிராமப் பணியாளர்
(4) பாசனக் காவலர்
(1) கிராம நிர்வாக அலுவலர்
கிராம நிர்வாக அலுவலர் கிராமத்தில் அரசாங்கத்தின் பிரதிநிதியாயிருக்கிறார். அவர் அரசாங்க நேரப் பணியாளர் ஆவார். அந்தக கிராமத்தில் நில வருவாய் மற்றும் இதர வருமானத்தை வசூல் செய்கிறவராக இருப்பதோடு கூட இந்த நடைமுறை நூலின் 5 ஆம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டிருக்கும் வெவ்வேறு வகையான அலுவல்களைச் செய்ய வேண்டியவராகவும் இருக்கிறார்.
ஒரு கிராம நிர்வாக அலுவலரால் நிர்வகிக்க முடியாத மிகுந்த வருமானம் அல்லது அதிகப்படியான அலுவல்கள் உடைய கிராமங்களுக்காக கூடுதல் கிராம நிர்வாக அலுவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள். கிராமக் காவலர், கிராமப் பணியாளர், பாசனக் காவலர் ஆகியோர் பகுதிநேர பணியாளர்கள் ஆவார்கள்.
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment