உடுமலை நீதிமன்ற ஊழியர் நாகராஜ் என்பவர், இன்று 28-07-2016 அன்று மாலை தொடர்புக் கொண்டு‘‘நீதியைத்தேடி… சட்ட அறிவுக்களஞ்சியம்’’ நூலை மட்டும் விலைக்கு கேட்டுள்ளார்.
இப்படி கேட்பது அன்று முதல் இன்று வரை வாடிக்கையான ஒன்றாகி விட்டது.
இந்நூலைப்பற்றி உங்களுக்கு எப்படித் தெரியுமென இவர்கள் கேட்க, ‘எங்க நிதிபதி இரகசியமாக வைத்துக்கொண்டு படிக்கிறார். அவருக்கு தெரியாமல் நானும் படித்துப் பார்த்தேன். சூப்பரா இருந்துச்சு… அதான் கேட்கிறேன்னு’ சொல்லியிருக்கார்.
உண்மையில் 2008 ஆம் ஆண்டு கொடுத்த இந்நூலை, நிதிபதிகள் எட்டு வருடமாக பாதுகாப்பாக வைத்திருந்து படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், இவர்களெல்லாம் எந்தக் காலத்தில் வௌங்குவது?!
நான் எழுதியுள்ள ஒவ்வொரு நூலுக்கும் ஒரு சிறப்புண்டு. இந்த வகையில், இதுவொரு ‘‘சட்ட அறிவுக்களஞ்சியம்’’ஆகும்.
ஆமாம், அடிப்படை உரிமைகள் பற்றி பல்வேறு குழப்பங்கள் இருந்ததாகவும், எந்நூலிலும் இதுகுறித்த தெளிவு கிடைக்காத நிலையில், ‘இச்சட்ட அறிவுக்களஞ்சியம் நூலில் அனைத்தையும் தெளிவுபடுத்தி உள்ளீர்கள்’ என்று, மனித உரிமை மீறல் குறித்த புகார்களில் புலனாய்வு செய்யும் பொறுப்பூழியத்தில் இருந்த மதுரையைச் சேர்ந்த இராஜேந்திரப் பெருமாள் என்ற காவலூழியர் என்னிடமே சொன்னார்.
இந்நூலின் பின்பக்க அட்டையில்தான், பொய்யர்கள் மற்றும் நிதிபதிகளின் தொழில் குறித்து சத்தியவான் காந்தியின் கருத்தையும் தொகுத்துள்ளேன்.
ஆகையால், நம் தொழிலைப்பற்றி நமக்கே தெரியாத சங்கதிகளை எல்லாம் சட்டமே படிக்காத ஒருவன் எழுதியிருக்கிறானே என்ற பிரம்மிப்பு நிதிபதிகளிடம் இருக்காதா என்ன?
இதே நூலை உயர்நீதிமன்ற நிதிபதி ஒருவர் வீட்டில் வைத்துப் படித்ததாகவும், அதனை தானும் படித்ததாகவும் சொல்லி, அந்நிதிபதியின் பெண்ணுடைய தோழி ஒருவர் நம்மிடம் கூறி இந்நூலை சில வருடங்களுக்கு முன்பு வாங்கினார்.
இந்நிதிபதியின் மனைவி யோக்கியமானவராக இருந்து, இந்த நூலைப் படித்திருந்தால், தன் கணவன் நிதிபதியாக இருப்பதுபற்றி என்ன நினைத்திருப்பார்?
நாம் கணக்கிட்டுக் கொடுத்த இந்நூலின் பிரதிகள் போக, கூடுதல் பிரதிகளை கேட்டு கடலூர் மாவட்ட நிதிபதி நமக்கு கடிதமே எழுதியுள்ளார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
இவிங்களுக்கு சட்டம் தெரியாது என்பதை ஞானோதயத்தில் அறிந்துதானே, சட்டத்திற்கு சற்றும் சம்பந்தமே இல்லாத சாதாரண தொழிலாளியான நான், சட்ட ஆராய்ச்சியில் இயற்கையாய் களமிறங்கினேன். ஆகையால், நிதிபதிகள் என்றுமே விளங்கப் போவதில்லை என்பதும் உறுதி!
ஆனாலும், நிதிபதிகளுக்கு ஓர் நல்லெண்ண அறிவுரை,
உங்களுக்கு நாங்கள் நல்லெண்ணத்தோடு கொடுக்கும் நூல்களை, உடுமலை நிதிபதி போன்று சட்டப்படி நீங்கள் நீதிமன்ற அலுவலகத்தில் வைத்துத்தான் படிக்க வேண்டும்.
உங்களைப்பற்றிய இரகசியங்கள், உங்களது ஊழியர்களுக்கு தெரிந்து விடக்கூடாது, கௌரவம் குறைந்து விடும் என்றெண்ணி வீட்டுக்கு கொண்டு சென்றுப்படித்தால், அதனை உங்களது மனைவியும் படித்தால், உங்களின் நிலை வேறுவிதமாக மிகவும் மோசமாகி விடக்கூடும் என்பதை நல்லெண்ணத்துடன் எச்சரிக்கிறேன். எச்சரிக்கை!
பகிர்ந்து கொள்ள
வாசகர்களின் கவனத்திற்கு...
இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.
இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.
சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.
0 comments:
Post a Comment