No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Wednesday, July 27, 2016

அப்துல்கலாமும் அதிகார துஷ்பிரயோகியே !


ஓர் ஆராய்ச்சியாளன் என்பவன் ஆராய்ச்சியின் பலனாய் தான் அறிந்ததை தயக்கமின்றி எடுத்துச் சொல்லும் தகுதியுடையவனாய் இருத்தல் வேண்டும்.
தான் சொல்லும் கருத்து எப்பேர்பட்ட புகழ்பெற்ற நபருக்கு எதிராக இருந்தாலுங்கூட, தான் ஆராய்ந்தறிந்த கருத்தைச் சொல்வதால், ஏராளமான எதிர்ப்புகள் வரலாம் என்றாலுங்கூட, சொல்ல வேண்டியதை சொல்லும் தகுதி உடையவனாய் இருத்தல் வேண்டும்.
இந்தக் கொள்கையை நீதியைத்தேடி… குற்ற விசாரணை நூலின் என்னுரையிலேயே
‘‘சட்டம் ஒரு இருட்டறை. அதில் பொய்யர்களின் வாதம் ஒரு விளக்கு என்று சட்டத்தில் அறிஞர் இல்லாத, அரசியலில் அறிஞராய் விளங்கிய தலைவர் செய்த தவறான பிரச்சாரங்களை நாம் நம்பியதுதான்’’
என்று சொன்னதன் மூலம் கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டேன்.
இதன் அடிப்படையில், இன்றை தினம் பெரும்பா(லா, ழா)னோர் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் அமரர் அப்துல்கலாம், எனது சட்ட ஆராய்ச்சியில்,‘அதிகார துஷ்பிரயோகியே!’ என்பதை, இதே தலைப்பில் ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலில் ஆதாரச் சம்பவங்களுடன் எழுதியுள்ளேன்.
இப்படியானதொரு கோணத்தில் யாரும் அமரர் அப்துல்கலாமைப் பார்த்திருக்கமாட்(டா, டீ)ர்கள். இன்னுஞ் சொல்லப்போனால், இதைப்பற்றியெல்லாம் தெரியாதவர்கள் குடியரசுத்தலைவர் பதவி வகித்தவர்களிலேயே இவர்தான் அதிகாரத்தை துஷ்பிரயோகஞ் செய்யாதவர் என்றும் சொல்லிக் கொ(ல், ள்)கிறார்கள்.
ஆமாம், எதிர்க்காலத்தில் நம் சந்ததிகளை அடியோடு அழிக்க இருக்கிற கூடங்குளம் அணுமின் திட்டத்தை ஆதரித்து, ‘‘இதுபோன்றதொரு பாதுகாப்பான அணு உலை உலகில் வேறெங்குமில்லை’’ என நற்சான்றிதழ் தந்த அதிகாரத் துஷ்பிரயோகியும் இவர்தான்!
ஆகவே, அதிகாரத்தில் உள்ளவர்களின் உண்மையான கோர முகத்தை அரிய வேண்டுமென்றால், அவர்களின் அதிகாரத்தோடு, நமது சட்ட உரிமை அதிகாரத்தின்படி மோதிப் பார்த்தால்தான் தெரியும்.
இயற்கைக்கு மாறான மனித குலத்தை அழிக்கும் ஏவுகணை உள்ளிட்ட அணு ஆயுதங்களை சுயசார்பு அடிப்படையில் நாமே தயாரித்தால் நாடு வல்லரசாகி விடும் என்பது, அதிகார துஷ்பிரயோகி அப்துல்கலாமின் சிந்தனை.
ஆமாம், ‘நம் அரசு முதலில் நமக்கு நல்லரசாக இருந்தாலே, மற்ற நாடுகளுக்கு வல்லரசுதான்’என்பதே என்கருத்து. இக்கருத்திற்கு உடன்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்றும் நம்புகிறேன்.
இயற்கையின் கட்டமைப்பை ஆராய்ந்தால், எங்கெங்கு எதையெதை செய்ய வேண்டுமோ, அந்தந்த இடங்களில் எல்லாம் அதற்கான ஆட்களை கட்டமைப்பதை காணலாம். காணமுடியாதவர்கள், எனது ஆறாவது நூலான ‘‘கடமையைச் செய்! பலன் கிடைக்கும்’’ நூலை சு-வாசிப்பதன் மூலம் ஓரளவேணும் உணரலாம்.
இந்த வகையில், கட்டமைத்த வேலை முடிந்ததும், அவரவர்களும் இவ்வுலக வாழ்விலிருந்து வெளியேறி விடுவார்கள். இதில், விதிவிலக்கென யாருமேயில்லை.
இப்படி ஒருவர் விட்டுச் சென்ற இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என்பதே பேருண்மை!
ஆகையால், அவரைச் சொல்லி ஆளாளுக்கு ஏதோவொரு வகையில் பிழைப்பு நடத்தலாமே அன்றி, வேறொன்றையும் செய்துவிட முடியாது என்பதையும், இதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிற எதார்த்தம் என்பதையும் அக்கறையோடு ஆராய்ந்தால் அறியலாம்!!
இப்படி, எனது சட்டஞ் சார்ந்த அனைத்து ஆராய்ச்சியின் எல்லாப் புகழிலும் சம்பந்தப்பட்ட எல்லோரும் சிறுசிறு பங்குண்டு.
இந்த வகையில், நம்மோடு இல்லையென்றாலும், என்னிடம் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்த முயற்சித்து, இந்திய சாசனக்கோட்பாடு 361(4) இன்கீழ், சட்டப்பூர்வ அறிவிப்பை அனுப்ப, எனக்கு நல்லதொரு வாய்ப்பை வழங்கிய அதிகாரத் துஷ்பிரயோகி அமரர் அப்துல்கலாம் அவர்களுக்கும் பங்குண்டு.
இப்படியொரு அறிவிப்பை எனக்கு முன்போ அல்லது பின்போ கூட யாரும் அனுப்பியதாக தெரியவில்லை. ஆனால், இப்படியும் அனுப்பலாம் என்ற செய்தி மட்டும், சமூக வலைத்தலங்களில் ஓயாமல் உலாவந்து கொண்டிருக்கிறது. அவ்வளவே!
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)