No law no life. Know law, know life! நியாயந்தான் சட்டம்! அதற்கு தேவையில்லை வக்கீழ் பட்டம். வக்கீழ் என்றாலே, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! நீ வாழ, நீயே வாதாடு!

நீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து!

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்!
முக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்!

Wednesday, June 8, 2016

நிதியைத்தேடி அலையும் நீதியைத்தேடி… வாசகர்கள், ஓர் எச்சரிக்கை!கீழ்கண்டவாறு Nanjil K Krishnan என்ற முகநூல் அன்பர், நீதியைத்தேடி… நூல்களைப் பெற தான்பட்ட சிரமம் குறித்தும், தேவையில்லாமல் பத்தாயிரம் ரூபாய் செலவிட்டது குறித்தும் பதிவிட்டுள்ளார். அப்பதிவின் முக்கியப் பகுதி இதுதான்!
******
//கிரி லா புக் ஹவுஸ் , ATC. புக் சென்டர், நண்பர் சிக்கல் சிவபாரதி உள்ளிட்ட. சட்ட புக் விற்பனையாளர்களிடம் இருந்து பல சட்ட நூல்களை வாங்கி படித்தேன்.
நண்பர் ஒருவர் “வாரண்ட் பாலா ” அவர்களின் நீதியைத்தேடி நூலினை எடுத்து வந்து அதில் குறிப்பிட்டுள்ள ஒருசில சட்டப் பிரிவுகளை காட்டினார்.
இந்த புத்தகம் எங்கு வாங்கினீர்கள் என்றேன் ?
சென்னை உயர்நீதிமன்ற வாசலில் வாங்கினேன் என்றார்.
கொடுங்கள் படித்து விட்டு தருகிறேன் என்றேன். அவர் தர மறுத்து விட்டார்.
இன்னொரு நெருங்கிய நண்பர் ஒருவர் மனுக்கள் எழுதும் போது பல சட்டப்பிரிவுகளை குறிப்பிட்டு எழுதுவார்.
ஆனால் வாரண்ட் பாலா அவர்களின் நூலினை பார்த்து தான் எழுதுகிறார் என என்னிடம் தெரிவிக்க வில்லை.
செந்தமிழ் கிழார் அவர்களின் ஒருசில நூல்களும் கிடைத்தது.
ஆனால் வாரண்ட் பாலா அவர்களின் நூல்கள் எங்கு தேடியும் கிடைக்க வில்லை.
இந்நிலையில் ஒரு சட்ட பயிற்சி வகுப்பில் நண்பர் ஒருவர் வாரண்ட் பாலா அவர்களின் நூல்கள் கிடைக்கும் கேர் சொசைட்டி முகவரி கொடுத்தார்கள் .
கேர் சொசைட்டி மூலம் நீதியைத்தேடி ஐந்து புத்தகங்களை வாங்கி படித்தேன்.
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ரூபாய்க்கு மேல் வாங்கி படித்த சட்ட புத்தகங்கள் அனைத்தும் வெறும் 500 ரூபாயில் எப்படி சாத்தியம்?
அனைத்து சட்ட விளக்கங்களுடன் சாமானியனும் புரிந்து கொள்ளும் வகையில் மிகவும் தெள்ளத் தெளிவாக. இப்படி ஒரு நூலா?
அதுவும் குறைந்த விலையிலா?
நீதியைத்தேடி நூல்கள் புத்தக வாசிப்பு சாலைகளிலா?
பல சட்ட பயிற்சியாளர்கள் வாரண்ட் பாலா அவர்களின் நூல்களின் மூலம் தான் தங்களை “சட்ட ஆர்வலர்கள்” என பீற்றி கொள்வது தெரிய வந்துள்ளது.//
******
உண்மைதான். இக்காலத்திலும் நீதியைத்தேடி… நூல்களை வாங்க இவ்வளவு சிரமப்பட்டுள்ளாரா என்பதை அறியும்போது, ‘‘சுயநல முட்டாள்கள் இருக்கும் வரை, எளிதாக கிடைக்கக்கூடிய எது ஒவ்வொன்றுக்காகவும் ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டுதான் ஆக வேண்டும்’’.
இப்படித்தான், எச்சிக்கலும் இல்லாமல் எளிதாக வாழ வேண்டிய வாழ்க்கையை கோடான கோடி மடங்கு சிக்கல்களுக்கு உள்ளாக்கி விட்டனர். இச்சிக்கல்களில் மட்டுமல்லாமல், எச்சிக்கலில் இருந்தும் வெளிவர உங்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையில்தான், எனக்கு நன்றாகத் தெரிந்தவைகளை எல்லாம் நானும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இவரது இப்பதிவால் முகநூல் அன்பர்கள் சிலர் நீதியைத்தேடி… நூல்களை எளிதாக வாங்கி விட்டனர். இப்படி வாங்கியவர்கள், உண்மையில் கொடுத்து வைத்தவர்கள்தான்.
இவர்களும் படித்துவிட்டு, படித்ததில் தங்களுக்குப் பிடித்த முக்கியச் செய்திகளைப் பதிவிட்டால் பலரும் பயனடைவார்கள் என்பதோடு, கீழே விளக்கிச் சொல்ல உள்ளது போன்று பெரும்பணத்தை இழக்க நேரிடாது.
சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல, கைதிகளுக்கு கூட நீதியைத்தேடி… நூல்கள் எளிதாக கிடைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில்தான், மத்திய சட்ட அமைச்சகத்தின் நிதி குறைந்ததாக இருந்தாலும், மேலும் நிதியை திரட்டி போதுமான நூல்களை அச்சடித்து, அனைத்து பொதுநூலகங்களுக்கும், சிறைச்சாலைகளுக்கும் கொடுக்கிறோம்.
இன்னுஞ் சொல்லப்போனால், கைதிகள் யாராவது கேட்டால், அவர்களுக்கு இலவசமாக அனுப்புவதற்கென்றே 2007 ஆம் ஆண்டில் அச்சிட்ட நீதியைத்தேடி… பிணையெடுப்பது எப்படி நூலில் பத்தாயிரம் பிரதிகளை அச்சிட்டோம்.
சட்ட ஆர்வலலர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எல்லோருமே நீதியைத்தேடி… நூல்களைப் படித்தவர்களோ அல்லது எனது சட்டப்பயிற்சி வகுப்புக்களில் கலந்து கொண்டவர்களோ அல்லது இவ்விரண்டையும் ஒறுங்கேப் பெற்றவர்கள்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.
இதில் சிலர் தன் பெயரில் வாங்காமல் தங்களது மனைவி அல்லது வேறொருவரின் பெயரில் திருட்டுதனமாக வாங்கிப் படிப்பது குறித்தும், ‘‘மநு வரையுங்கலை!’’ நூலில் எழுதியுள்ளேன்.
இன்னுஞ் கொஞ்சம் வெளிப்படையாகச் சொல்லப்போனால், ‘‘அண்ணன் எப்போது சாவான், திண்ணை எப்போது காலியாகும்’’ என காத்திருந்தவர்களுக்கு 2010 ஆம் ஆண்டோடு சட்ட ஆராய்ச்சியை முடித்து வெளியேறி விடுவேன் என 2008 ஆம் ஆண்டில் நடந்த நீதியைத்தேடி… சட்ட அறிவுக்களஞ்சியம் வெளியீட்டு விழாவில் வெளிப்படையாக அறிவித்தப் பிறகு, கிளம்பிய அடிமுட்டாள்கள்.
இவர்கள் என்னுடைய தொடர்பில் இருக்கும்போதே, பலரை ஏமாற்றிப் பணம் பறித்திருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் பல உள்ளன. இனியும் யாரும் ஏமாறக்கூடாது என்பதற்காகவே, அவற்றையெல்லாம் ஆதாரப்பூர்வமாக தொகுத்து வெளியிடலாமா என்றே எனத் தோன்றுகிறது.
இத்தறுதலைகள் நமக்குள்ள மதிப்பும், பிழைப்பும் நாறிவிடும் என்பதற்காக, நீதியைத்தேடி… நூல்கள் குறித்து வெளியில் சொல்லுவதே இல்லை என்பதோடு அடிப்படையில் தேவையான சட்ட நூல்கள் குறித்தும் சொல்வதில்லை. நீதியைத்தேடி… நூல்களில் அடிப்படைச் சட்ட நூல்கள் குறித்து தெளிவாகவே எழுதியுள்ளேன்.
மாறாக, பொய்யர்களுக்கு வழக்காளிகளைப் பிடித்துத் தரும் புரோக்கர்களாக மாறியும், இதே புரோக்கர் அடிப்படையில் பொய்யர்கள் தங்களின் பிழைப்புக்காக எழுதிய, ஒவ்வொருவருக்கும் தேவைப்படாத சட்டஞ் சார்ந்த நூல்களையும், சட்டங் குறித்து விவரமறிய வருவோர் தலையில், விவரத்தைச் சொல்லாமலேயே கட்டிவிட்டு விற்க ஆரம்பித்து சம்பாதித்து வருகின்றனர்.
இதன் விளைவாகத்தான் அன்பர் Nanjil K Krishnan அவர்கள் குறிப்பிட்டுள்ளது போல, எதற்குமே உபயோகமில்லாமல் ஆயிரக்கணக்கான ரூபாய்களை, இவரைப்போன்றே ஆயிரக் கணக்கானோர் இழந்துள்ளனர்.
எனவே, சட்ட விழிப்பறிவுணர்வு குறித்து பேசுவோர் யாராக இருந்தாலும், அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது உங்களின் பொறுப்பே!
பகிர்ந்து கொள்ள

வாசகர்களின் கவனத்திற்கு...

இதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.

இக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.

சமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.

0 comments:

Post a Comment

பத்திரிகை செய்திகள்

அறவழி நோட்டா

அறவழி நோட்டா
மகாத்மா போதித்த வாக்குரிமை!

நோட்டா: NOTA

நோட்டா: NOTA
விளக்கம்: EXPLANATION

நூல்களின் முகப்பு

Followers

முக்கியப் பக்கங்கள்

அடிப்படை சட்டங்கள்

  • 1. இந்திய சாசனம் 1950
  • 2. நீதிமன்ற சாசனம் 1872
  • 3. இந்திய தண்டனை சட்டம் 1860
  • 4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • 5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

நம் நூல்களைப் பற்றி

நீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...
1 குற்ற விசாரணைகள்
2 பிணை (ஜாமீன்) எடுப்பது
எப்படி?
3 சட்ட அறிவுக்களஞ்சியம்
4 சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்
5 சாட்சியங்களைச் சேகரிப்பது
எப்படி?
6 கடமையைச் செய்!
பலன் கிடைக்கும்
7 மநு வரையுங்கலை!Recent Posts Widget

இந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக
மத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.

எல்லாப் பதிவுகளும்!

நம் தள வகைகள்

பயின்றோர் (20-08-16)